Saturday, July 20, 2019

தனுசு-2019 ஆகஸ்ட் மாத ராசி பலன்கள்


ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

தனுசு:

ராசியில் சனி இருப்பதால் குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். எதிலும் ஒரு மந்த நிலை இருக்கும். செயல்திறன் குறைவுபடும். சில தனுசு ராசியினர் வாழ்க்கையே வெறுத்துப் போன நிலையில் இருக்கிறீர்கள். நாற்பது வயதுகளில் இருக்கும் தனுசு ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை என்றால் என்ன என்று கற்றுக் கொடுக்கக் கூடிய நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக பணம் என்றால் என்ன என்பதை தெரிந்து கொண்டிருக்கிறீர்கள். ராகுவுடன் சுக்கிரன் தொடர்பு கொள்வதால் பெண்களால் மனக்கஷ்டங்களும் குறிப்பாக சிலருக்கு அந்நிய மத வேற்று மத, இன, மொழி இளம் பெண்களால் மனக்கசப்புகளும், பிரச்சினைகளும் இருக்கும்.


கடன் பிரச்னைகள் எட்டிப் பார்க்கும். வருமானம் போக்குக் காட்டும். உங்கள் தோளில் கை போட்டபடி டீ சாப்பிடும் நண்பர் இன்னொரு கையால் உங்களுக்கு ஆகாதவரின் கையை குலுக்குவார். எதிலும் கவனமாக இருங்கள். அவசியத் தேவைக்காக கடன் வாங்க வேண்டியது வரலாம். ஆடம்பர விஷயத்தில் செலவு இருக்கும். மறைமுக எதிர்ப்புக்கள் மேலோங்கும். வம்பு வழக்கு ஏதேனும் வரலாம். கணவன், மனைவிக்கு இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் வரும். மூன்றாம் மனிதரின் கோள்மூட்டலை நம்பி ஒருவருக்கொருவர் மனச்சங்கடத்திலும் இருப்பீர்கள். வெளிநாடு சம்மந்தப்பட்ட விஷயங்கள் கைகொடுக்கும்.  சிலர் வெளிநாடு செல்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத மறைமுக இலாபம் கிடைக்கும். அடிக்கடி பயணம் இருக்கும். வேலை மாறுதல், இடம் மாற்றங்கள் ஆகியவை உண்டு.  

ராசியில் ராகுகேதுக்கள் சம்பந்தப்பட்டிருப்பதால் எவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். கூடுமான வரையில் சண்டையை தவிர்ப்பது நல்லது. யாரையாவது நீங்கள் திட்டினால் அது பலித்து பெரிய மனஸ்தாபத்தில் கொண்டு போய் விட்டுவிடும். உயிர் நண்பர்கள் என்று தன்னைத்தானே சொல்லிக் கொள்பவர்களிடம் சற்றுத் தள்ளியே நில்லுங்கள். அரசியல்வாதிகள் பேசும் போது கவனம் தேவை. கணவன் மனைவி அனுசரித்துப் போனால் குடும்பத்தில் அமைதி இருக்கும். ஒருமுறை ராகு,கேது பரிகார ஸ்தலங்களான ஸ்ரீகாளகஸ்தி, திருப்பாம்புரம், திருநாகேஸ்வரம், கொடுமுடி போன்ற புனிதத்தலங்களுக்கு சென்று பரிகாரங்களை செய்து வாருங்கள்.

5,6,7,11,12,13,19,24,25,27 ஆகிய நாட்களில் பணம் வரும். 27-ம் தேதி இரவு 7.42 மணி முதல் 29-ம் தேதி இரவு 8.11 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய ஆரம்பங்கள், முயற்சிகள் எதையும் செய்ய வேண்டாம். கூடுமான வரை நீண்ட பிரயாணங்களை தவிர்ப்பதும் நல்லது.


தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.



No comments :

Post a Comment