Saturday, July 20, 2019

மகரம்-2019 ஆகஸ்ட் மாத ராசி பலன்கள்



ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888


மகரம்:

மகரராசி இளைஞர்களுக்கு முயற்சிகளுக்குப் பிறகுதான் இந்தமாதம் நல்லவைகள் நடக்கும். கிரக அமைப்புகள் சாதகமற்ற நிலையில் இருப்பதால் புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது. ஜென்மராசிக்கு வரப்போகும் சனியால் மனம் சற்று அலைபாய்ந்து, முடிவெடுக்கும் திறன் குறைவாக இருக்கும். எதிலும் நிதானமாக செயல்படுங்கள். குறிப்பாக உத்திராடம்  நட்சத்திரக்காரர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். சனி இப்போது பூராட நட்சத்திரத்தில் சென்று கொண்டிருப்பதால் உங்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிய கவலைகள், வேலையில் நெருக்கடிகள், மன அழுத்தம் தரும் சம்பவங்கள், காதல் தோல்வி போன்றவைகள் இருக்கும். எதிலும் நிதானமும், தைரியமும் தேவைப்படும்.


பழைய கடன்களை அடைக்க புதிய கடன் வாங்க வேண்டி இருக்கும். தேவையின்றி யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைப்பிடியுங்கள்.  என்ன பிரச்சனைகள் இருந்தாலும் வருமானத்திற்கு குறைவு இருக்காது. வியாபாரிகள், விவசாயிகள், பத்திரிக்கை துறையினர், கலைஞர்கள், அரசு, தனியார் துறை ஊழியர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்டவர்களுக்கு இந்த மாதம் சுமாரான மாதமாகத்தான் இருக்கும். ஏழாமிடத்திற்கு பாபகிரக தொடர்பு இருப்பதால் கணவன், மனைவி உறவுகள் பெரிதாக சொல்வதற்கில்லை. யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்துப் போவதால் பிரச்னைகள் பெரிதாகாமல் தடுக்கலாம். பங்குதாரர்களை எதற்கெடுத்தாலும் நம்ப வேண்டாம். எவரையும் நம்பி ஜாமீன் கையெழுத்து போடுவதோ, அடுத்தவர் விஷயத்திற்காக போய் முன்னே நிற்பதோ கூடவே கூடாது.

உங்களை கோபப்படுத்தி எரிச்சலூட்டும் சம்பவங்கள் நடக்கும் என்பதால் எதிலும் நிதானத்தை கடைப்பிடியுங்கள். யாரிடமும் கோபப்பட வேண்டாம். அலுவலகத்தில் வீண் வாக்குவாதங்களைத் தவிருங்கள். நண்பர்களே உங்களின் கோபத்தால் பாதிக்கப்பட்டு எதிரியாகும் வாய்ப்பு இருக்கிறது. சிலருக்கு அலுவலகத்தில் டிரான்ஸ்பர், பதவிஉயர்வுடன் கூடிய இடமாற்றம் போன்றவைகள் இருக்கலாம். வேறு சிலருக்கு கம்பெனி சார்பில் வெளிநாடு பயணங்கள் இருக்கும். அதனால் நன்மைகளும் இருக்கும். பொதுவில் இளையவர்களுக்கு நிதானமான பலன்களும், பெரியவர்களுக்கு நல்ல பலன்களும் நடக்கும் மாதம் இது.   

1,2,4,10,11,12,21,24,25,28 ஆகிய நாட்களில் பணம் வரும். மாத ஆரம்பத்தில் 2-ம் தேதி காலை 9.29 மணி முதல் 4-ம் தேதி காலை 9.28 மணி வரையும், மாத பிற்பகுதியில் 29-ம் தேதி இரவு 8.11 மணி முதல், 31-ம் தேதி இரவு 7.22 மணி வரையிலும் சந்திராஷ்டம நாட்கள் என்பதால், எதிலும் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. ஆயினும் கெடுபலன்கள் எதுவும் இருக்காது.

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.


குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.


No comments :

Post a Comment