அசுவினி
அதிர்ஷ்டம் உங்களுக்கு கைகொடுக்கும் மாதம் இது. சொத்து விஷயமாக சகோதரர்களுடன் கருத்துவேற்றுமை இருப்பவர்களுக்கு இப்போது எல்லோரும் ஏற்று கொள்ளக்கூடிய தீர்வு கிடைக்கும். இளைஞர்களுக்கு பிடித்தமான வேலை கிடைக்கும். மாத பிற்பகுதியில் கிரகநிலைகள் மாறுவதால் எதிலும் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம். அவசரப்பட்டு தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம். அஸ்வினிக்கு ஒரு சிறப்பு பலனாக இந்த மாதம் உங்களை எதிரியாக நினைத்தவர்கள் நண்பராக மாறுவார்கள். பணவரவு நன்றாக இருக்கும்.
பரணி
பரணிக்கு இந்த மாதம் சுப நிகழ்ச்சிகளும், தூர இடங்களில் இருந்து நல்ல செய்திகளும் இருக்கும். நட்சத்திர நாதன் சுக்கிரன் மாதம் முழுவதும் வலுவாக இருப்பது பணவரவிற்கு தடையேதும் இருக்காது என்பதை காட்டுகிறது. ஒரு சிலருக்கு நீண்டகாலமாக நிலுவையில் இழுத்துக் கொண்டிருந்த கடன் தொகையோ சம்பள தொகையோ இந்தமாதம் நல்லபடியாக செட்டிலாகி கைக்கு கிடைத்து ஆச்சரியத்தில் ஆழ்த்தும். சிலருக்கு இந்த மாதம் பெண்கள் விஷயத்தில் விரயங்களையும், செலவுகளையும், மனவருத்தங்களையும் கொடுக்கும்.
கிருத்திகை
கெடுபலன்களைக் கூட சாதகமாக மாற்றிக் கொள்ளும் திறமையும், அதிர்ஷ்டமும் உள்ள கிருத்திகை நட்சத்திரத்தினர் அனைத்தையும் சமாளிக்கும் மாதம் இது. மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். சிலருக்கு அதிகமான பயணங்கள் இருக்கும். பெண்களுக்கு குறைகள் ஏதும் இல்லை. வீடு வாங்குவதற்கான ஆரம்பங்கள் இருக்கும். பழைய வாகனத்தை மாற்றி நல்ல வாகனம் வாங்குவீர்கள். செலவுக்கேற்ற வருமானம் உண்டு. வீட்டில் கலகலப்பும், சிரிப்பும் இருக்கும். சிலருக்கு மறைமுகமான வழியில் வருமானம் உண்டு.
ரோஹிணி
எட்டில் இருக்கும் கிரக நிலைகள் உங்களை கோபக்காரனாக்கி, ஏதாவது சிக்கலை உண்டாக்கும் என்பதால் எதிலும் நிதானமாக நடந்து கொள்வது நல்லது. சொந்தக்காரர்களால் பிரச்னைகள் உண்டு. வீண் வம்புகள் இருக்கும். எதிலும் குறுக்குவழி இப்போது வேண்டாம். நேர்மையை கடைப்பிடிப்பது நல்லது. மாதம் முழுவதும் ஆன்மிக எண்ணங்களும் எதிர்கால முன்னேற்றத்திற்கான திட்டங்கள் மனதில் வருவதும் இருக்கும். சிலர் குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். கவலை வேண்டாம். இந்த நிலை சிறிது நாட்கள்தான்.
மிருகசீரிடம்
உங்களில் ரிஷப ராசியினருக்கு இந்த மாதம் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். பழகிய ஒருவர் துரோகியாக மாறலாம். செய்யாத குற்றத்திற்கு வீண்பழி வரும். அனைத்து விஷயங்களிலும் யோசித்து செயல்படுங்கள். இதுவரை சொந்தவீடு இல்லாதவர்களுக்கு வீடு வாங்குவது அல்லது கட்டுவதற்கான ஆரம்ப நிகழ்ச்சிகள் உண்டு. வெளிநாடு, வெளி மாநிலம் சம்மந்தப்பட்ட விஷயங்கள் யோகம் தரும். தடங்கலாகி வந்த சகோதர, சகோதரிகளின் திருமணம் கூடி வரும். வேலை, தொழில், வியாபாரம் போன்ற விஷயங்களில் நிதானம் தேவை.
திருவாதிரை
திருவாதிரை நட்சத்திரத்தினர் இந்த மாதம் அனைத்திலும் துடிப்புடன் செயலாற்றி வெற்றிக்கம்பத்தை தொடுவீர்கள். உங்களில் முதல்வாழ்க்கை கோணலாகி கஷ்டத்திற்கு ஆளானவர்கள் இப்பொழுது நல்ல இரண்டாவது வாழ்க்கையை அடைவார்கள். பெண்களால் இந்த மாதம் செலவுகள் இருக்கும். குறிப்பாக மகள் சகோதரி போன்றவர்களின் சுப காரியங்களுக்கு செலவுகள் செய்ய வேண்டி இருக்கலாம். கேட்கும் இடங்களில் உதவிகள் கிடைக்கும். அரசாங்க ஆதரவு உண்டு. எந்த ஒரு சிக்கலையும் தைரியமாக சமாளிப்பீர்கள்.
புனர்பூசம்
பெண்களால் லாபம் கிடைக்கும் மாதம் இது. அதேநேரம் அவர்களால் செலவும் இருக்கும். சிலருக்கு தூரப் பிரயாணங்கள் உண்டாகும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர் உங்களுடன் இணக்கமாக இருப்பார். நண்பர்களால் லாபம் உண்டு. நடப்பவை அனைத்தும் உங்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும். கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் இந்த மாதம் ஆன்மிக விஷயங்களில் அதிகமாக ஈடுபாடு கொள்வீர்கள். சிலருக்கு ஆலயத் திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்
பூசம்
ஏப்ரல் மாதம் முழுவதும் உங்களுக்கு மனதைரியத்தைத் தரும் நிகழ்வுகளே நடக்கும் என்பது உறுதி. ஏப்ரல் மாதம் உங்களுக்கு ஏற்றம் தரும் மாதம்தான். வியாபாரிகள், ஏஜெண்டுகள், எழுத்துத்துறையினர், கணக்கர்கள், கல்வித்துறையினர் போன்றவர்களுக்கு நல்ல மாற்றங்கள் உண்டு. பொருளாதார சிக்கல்கள் எதுவும் வரப்போவது இல்லை. வேலை, தொழில், அமைப்புகளில் தேக்கமும் முன்னேற்றமில்லாத சூழ்நிலையும் மாறி இனிமேல் விறுவிறுப்பும் சுறுசுறுப்பும் இருக்கும். குழந்தைகளை அக்கறையுடன் பார்த்து கொள்வது நல்லது.
ஆயில்யம்
ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் எப்போதும், எதிலும் துடிப்புடன் செயல்படுவீர்கள். இந்த மாதம் முக்கியமான துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல மாற்றங்கள், பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவைகள் இருக்கும். இதுவரை தடங்கலாகி வந்த சில விஷயங்கள் எண்ணம் போல் நிறைவேறும். இளைய சகோதர சகோதரிகள் உதவுவார்கள். வீட்டில் சுபகாரியம் உண்டு. தாயார் வழியில் நன்மைகளும், சிலருக்கு வாகன மாற்றங்களும் உண்டு. பணவரவிற்குத் தடையேதும் இல்லை. வியாபாரிகளுக்கு நல்ல வருமானம் இருக்கும்.
மகம்
மகத்திற்கு இது நல்ல மாதம்தான். குறிப்பாக வேலை, தொழில் சரியில்லாமல் பொருளாதாரச் சிக்கல்கள் இருந்தவர்கள் அவை இனி தீரத் தொடங்கி பிரச்னைகளில் இருந்து மீண்டு வருவீர்கள். கடன் தொல்லைகள் இருந்தவருக்கு கடனை அடைக்க வழி பிறக்கும். குடும்பத்தில் வாழ்க்கைத் துணையிடம் சச்சரவுகள் இருந்தவருக்கு நல்ல வழி பிறக்கும். இதுவரை வேலை கிடைக்காமல் இருந்தவர்களுக்கு பொருத்தமான வேலை அமையும். எவரையும் நம்பி மனதில் உள்ளதை வெளிப்படையாக பேச வேண்டாம்.
பூரம்
பூரத்திற்கு இது ஆகாத மாதம் இல்லை. தொல்லைகள் இல்லாத மாதம்தான். சிலருக்கு மட்டும் கடன் பிரச்னைகள் கலக்கத்தை கொடுக்கும். கடன் கொடுத்தவரை நேரில் சந்தித்து தவணை வாங்கி கொள்வது நல்லது. நடுத்தர வயதை கடந்தவர்கள் உடல்நலனில் அக்கறை காட்டுங்கள். அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்கள் வீண் அரட்டைகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. இளைய சகோதரத்தால் செலவுகள் உண்டு. சிலருக்கு ஆன்மிக அனுபவங்களும் பயணங்களும் உண்டு. சிலருக்கு புதிய வாகனம் அமையும்.
உத்திரம்
உத்திரத்திற்கு உற்சாக மாதம் இது. மாத பிற்பகுதியில் சூரியன் வலுப்பெறுவதால் எதையும் சமாளிப்பீர்கள். மனதில் தைரியம் வரும். தந்தை வழியில் நன்மைகளும், ஆதரவான விஷயங்களும் நடக்கும். சிலருக்கு வாகன மாற்றம் இருக்கும். இளையோர்களுக்கு புதிய அனுபவங்கள் கிடைக்கும். சிலர் காதலிக்க ஆரம்பிப்பீர்கள். உயர்கல்வி படிக்க இதுவரை இருந்து வந்த தடை நீங்கும். உங்களில் கன்னி ராசியை சேர்ந்தவர்கள் எதிலும் அனுசரித்துச் செல்லுங்கள். வாழ்க்கைத்துணை விஷயங்களில் விட்டுக் கொடுங்கள்.
அஸ்தம்
ஏப்ரல் மாதம் உங்களுக்கு நல்ல மாதம்தான். பணவரவிற்கு தடை எதுவும் இருக்காது. பணப்பிரச்னைகளை சந்தித்துக் கொண்டிருக்கும் இளையபருவத்தினர் அவை நீங்கப் பெற்று நிம்மதி அடைவீர்கள். பெரியவர்களுக்கு தொழில் ரீதியாக கையைக் கடிக்கும் விஷயங்களும் இருக்காது. சிலருக்கு தொழில் ரீதியான நன்மைகள் இருக்கும். அஸ்தத்திற்கு கெடுதல் சொல்வதற்கு எதுவும் இல்லை. சிறுசிறு பிரச்னைகள் வந்தாலும் அனைத்தும் சூரியனைக் கண்ட பனிபோல விலகி ஓடி விடும். தந்தைவழி உறவில் நன்மைகள் இருக்கும்.
சித்திரை
சித்திரைக்கு ஏப்ரல் சிறப்பான மாதமே. ஆரம்பத்தில் சிறிது நம்பிக்கை இழப்பது போல சில விஷயங்கள் நடந்தாலும் உடனடியாக சுதாரித்து கொண்டு அந்த விஷயத்தை ஜெயித்து காட்டுவீர்கள். உங்களுடைய மனோதைரியம் கூடுதலாகும். எத்தகைய பிரச்னைகளையும் சுலபமாக சமாளிப்பீர்கள். சிலருக்கு நீண்டதூரப் பயணங்கள் அமையும். சொந்தவீடு இல்லாதவர்களுக்கு வீடு அமையக்கூடிய ஆரம்ப நிகழ்ச்சிகள் இருக்கும். சிலருக்கு புதிய வாகனம் அமையும். என்ன செலவு வந்தாலும் வருமானம் கண்டிப்பாக குறையாது.
சுவாதி
சுவாதியினர் எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் இந்த மாதம் வெற்றியாக அமையும். உங்களின் நல்ல உள்ளத்தை புரிந்து கொள்ளாதவர்கள் இனிமேல் புரிந்து கொள்வார்கள். நாற்பது வயதுக்குட்பட்ட இளையவர்களுக்கு திருப்பு முனையான மாதமிது. முயற்சி அளவில் இருந்து வந்த காரியங்கள் இந்த மாதம் எண்ணம் போல நிறைவேறும். சிலர் ஏதேனும் ஒரு சாதனைச் செயல் புரிந்து மற்றவர்களால் புகழப்படுவீர்கள். மனம் உற்சாகமாக இருக்கும். வீட்டில் சுப காரியங்களுக்கான முன்னோட்டம் இருக்கும்.
விசாகம்
உங்களில் துலாம் ராசிக்காரர்களுக்கு யோக மாதம் இது. பிரச்னைகள் எது வந்தாலும் சுலபமாக எதிர்கொள்வீர்கள். சிலருக்கு பெண்களால் நன்மைகளும், சிலரின் வீட்டில் பெண்களுக்கான சுப நிகழ்ச்சிகளும் நடந்து சந்தோஷம் உண்டு. தொழில் ஸ்தானம் வலுப்பெறுவதால் பணிபுரியும் இடங்களில் நல்ல சம்பவங்களும், பாராட்டுக்களும் இருக்கும். மாதத்தின் பிற்பகுதியில் வரப் போகும் பணவரவால் கடன் பிரச்சினைகளையும் சமாளிப்பீர்கள். கோட்சார அமைப்புப்படி யோககாலம் என்பதால் தொழில் விரிவாக்கம் இனிமேல் கைகொடுக்கும்.
அனுஷம்
அனுஷத்தின் சோதனைகள் அத்தனையும் விலகி விட்டது. உங்களில் சிலர் அதை இன்னும் உணராமல் இருக்கிறீர்கள் அவ்வளவுதான். கூடிய சீக்கிரம் அவர்களும் உணரும் வண்ணம் நல்லவைகள் மட்டுமே இனி உங்களுக்கு நடக்கும். வேலை, தொழில் அமையாதவர்களுக்கு இனிமேல் மாதமானால் ஒரு நிம்மதியான வருமானம் வரக்கூடிய சூழல் உண்டாகும். அதிர்ஷ்டம் செயல்பட ஆரம்பித்து இனி உங்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றியாக முடியும். பொருளாதார சிக்கல்கள் இருக்காது. இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.
கேட்டை
கேட்டை கோட்டை கட்டி ஆளும் காலம் துவங்கி விட்டது. எந்த சோதனைகளும் இனி உங்களுக்கு வரப் போவது இல்லை. தற்போது இருக்கும் சிக்கல்களும் தீரும் மாதம் இது. இனிமேல் எதையும் சமாளிக்கும் தைரியம் உண்டாகும். எதையும் சாதிப்பீர்கள். மற்றவர்கள் பொறாமையாக பார்க்கும் அளவிற்கு ஊக்கத்துடன் செயல்படுவீர்கள். வேதனைகள் விலகி விட்டன. உங்கள் வாழ்க்கையை இனி நீங்கள்தான் நல்லபடியாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும். சாதிக்கும் நேரம் வந்து விட்டதால் இனி கவலை ஒன்றும் இல்லை.
மூலம்
இந்த மாதம் உங்களுக்கு சில வித்தியாசமான அனுபவங்கள் இருக்கும். சனி, கேது, குரு இணைவால் மனதிற்குப் பிடிக்காத ஒரு செயலை செய்ய வேண்டியிருக்கும். உங்களுக்கு பிடிக்கவே பிடிக்காத, ஒருவருடன் வேலை செய்யவோ, பயணம் செய்யவோ, கூடவே இருந்தே தீர வேண்டிய நிலையோ இருக்கும். நம்பிக்கைத் துரோகம் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் பேசும் பொழுது வார்த்தைகளில் கவனமாக இருங்கள். யாரையும் நம்ப வேண்டாம். மனதில் உள்ளதை எவ்வளவு தெரிந்தவராக இருந்தாலும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
பூராடம்
பூராடத்திற்கு அலைச்சல்கள் அதிகமாக இருக்கும் மாதம் இது. பிரயோஜனம் இல்லாமல் வெட்டியாக அலைய வேண்டியிருக்கும். கையில் உணவு இருந்தாலும் சாப்பிடுவதற்கு நேரம் இருக்காது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் வரும். எந்த விஷயத்திலும் நீங்களே சுயமாக முடிவெடுக்க வேண்டாம். பெரியவர்களிடம் பிரச்னைகளை சொல்லி ஆலோசனை பெற்று அதன்படி நடங்கள். வேகமாக போய்க் கொண்டிருக்கும் கார் வேகத்தடையை பார்த்ததும் வேகம் குறைவதைப் போல இந்த மாதம் சற்று நிதானமான பலன்களே நடைபெறும்.
உத்திராடம்
உங்களில் மகர ராசியினருக்கு மறைமுக எதிர்ப்புகள் மற்றும் நண்பர்களாக இருப்பவர்கள் விரோதிகளாக மாறுவது போன்ற பலன்கள் நடக்கும். எதிரி என்றும் தெரிந்தும் ஒன்றும் செய்ய முடியாமல் அவருடனேயே இருக்க வேண்டிய சூழ்நிலை போன்றவை உருவாகும். ஈகோவை தவிர்ப்பதால் குடும்பத்தில் பிரச்னைகள் வராமல் தடுக்கலாம். எந்த ஒரு விஷயத்திலும் அவசரம் வேண்டாம். பணியிடங்களில் வாக்குவாதம் வேண்டாம். அனைத்து விஷயங்களையும் வீட்டில் இருக்கும் பெரியவர்களிடம் கலந்து ஆலோசித்துச் செய்வது நல்லது.
திருவோணம்
ஏப்ரல் மாதக் கிரகநிலைகளின்படி சமாளிக்க முடியாத பிரச்னைகள் எதுவும் திருவோணத்திற்கு இல்லை. எதையும் உங்களால் சமாளிக்க முடியும். கௌரவக் குறைச்சல் ஏற்படாது. தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் நன்றாக இருக்கும். நீண்டநாட்களாக நினைத்திருந்த ஒரு காரியம் உங்கள் மனம் போல் நடக்கும். கோர்ட்கேஸ், போலிஸ் என்று அலைந்தவர்களுக்கு வழக்கு சாதகமாக முடிவுக்கு வரும். அல்லது இனிமேல் போலிஸ், கோர்ட் என்று போகாமல் சமரசம் ஆவீர்கள். வேலையில் சிக்கல்கள் தீரும்.
அவிட்டம்
உங்களில் கும்ப ராசிக்காரர்களுக்கு தொல்லைகள் எதுவும் இருக்காது. அரசுத் துறையில் பணிபுரிபவர்கள் மற்றும் அதிகாரம் செய்யும் அமைப்பில் இருப்பவர்கள் எதிலும் ரகசியம் காப்பது நல்லது. குடும்பத்தில் வாழ்க்கைத் துணையிடம் சச்சரவுகள் இருந்தவருக்கு நல்ல வழி பிறக்கும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். நட்சத்திரநாதன் செவ்வாய் நல்ல நிலையில் இருப்பதால் சந்தோஷப்படும்படியான நிகழ்ச்சிகள் இந்த மாதம் இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு கல்யாண உறுதி நிகழ்ச்சிகள் உண்டு. இளையவர்களுக்கு அதிர்ஷ்டம் செய்யும் மாதம் இது.
சதயம்
சதயத்திற்கு சிறப்பான மாதம் இது. அலுவலகங்களில் சிக்கல்கள் தீரும். எதிர்ப்புகளும், போட்டியாளர்களும் விலகுவார்கள். பெண்களுக்கு இது நல்லமாதம். இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும். சஸ்பெண்டு ஆனவர்கள் மீண்டும் பணியில் சேருவீர்கள். ஆன்மிகத்துறை, கோவிலுக்கு அருகில் வசிப்பவர்கள் லாபங்களை அடைவீர்கள். சுறுசுறுப்பும், புத்துணர்ச்சியும், தைரியமும் தேடி வந்து ஒட்டிக் கொள்ளும். அதிக முயற்சி இல்லாமலே அதிர்ஷ்டத்தால் எல்லா வேலைகளையும் சுலபமாக முடிப்பீர்கள்.
பூரட்டாதி
உங்களில் கும்ப ராசியினருக்கு பெண்களால் விரயங்கள் இந்த மாதம் உண்டு. மற்றவர்களுக்கு வாழ்க்கைத் துணை மற்றும் பங்குதாரர்கள் நண்பர்கள் மூலம் நன்மைகள் கிடைக்கும். மீனத்தினர் விடாமுயற்சியுடன் எதையும் சாதிப்பீர்கள். ஏப்ரல் மாதம் உங்களுக்கு ஏற்றத்தை மட்டும் தரும் மாதமே. எதிர்காலத்திற்கு அஸ்திவாரம் போடுகின்ற நல்ல வேலை, தொழில் போன்றவைகள் இப்போது அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு சுபச்செலவுகளும், விரயங்களும் உண்டு. சிலர் அலுவலகங்களில் சிறப்புக்களைப் பெறுவீர்கள்.
உத்திராட்டாதி
இந்த மாதம் எதிர்பாராமல் நடக்கும் சில விஷயங்களால் எரிச்சல் அடைவீர்கள். உங்களில் சிலர் பணம் வருவதற்கு பொய் சொல்ல வேண்டி இருக்கும். வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பதவிஉயர்வு கூடுதல்சம்பளம் போன்ற நல்ல பலன்கள் இருக்கும். அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். உடன் பணிபுரியும் ஆண்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இளைய பருவத்தினருக்கு திருமண வாய்ப்புகள் உருவாகும். இளைஞர்களுக்கு வேலைமாற்றங்கள், மாணவர்களுக்கு படிப்பில் கவனக்குறைவு, மனத்தடுமாற்றம் போன்றவைகள் உண்டு.
ரேவதி
ஏப்ரல் மாத ஆரம்பத்தில் செய்யும் முயற்சிகள் ஏமாற்றத்தைத் தந்தாலும் மாத பிற்பகுதியில் அவை அனைத்தும் வெற்றி பெறும். சிலருக்கு மனைவி, நண்பர்கள், பங்குதாரர்கள் போன்றவர்களிடம் கருத்து வேறுபாடுகளும் வீண் மனஸ்தாபமும் இருக்கும். நண்பர்களிடம் விலகியே இருங்கள். பெண்கள் விஷயத்தில் கருத்து வேறுபாடுகளும், சச்சரவுகளும் வீண் விரயங்கள் உண்டு. குறிப்பிட்ட பலனாக எங்கே உங்களை கவிழ்க்கலாம் என தொழில் எதிரிகள் திரிவார்கள் என்பதால் வேலையில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டியது அவசியம்.
தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888. குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.
தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888. குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.
அய்யா உத்திராடம் 1 ம் பாதம் என்று ஒன்று உள்ளது என்பதை நினைவில் கொண்டு பலன் தாருங்கள் சாமி.
ReplyDelete