ஜோதிடக்கலைஅரசு
ஆதித்யாகுருஜி
கைபேசி எண் :8870998888
ஆகஸ்ட் மாதம்
உங்களுக்கு மிகவும் நல்ல மாதம்தான். பணவரவிற்கு தடை எதுவும் இருக்காது. கையைக்
கடிக்கும் விஷயங்களும் இருக்காது. இதுவரை வேலை, தொழில் அமையாதவர்களுக்கு
நிரந்தர வருமானம் தரக்கூடிய ஜீவன அமைப்புகள் அமைந்து மாதமானால் ஒரு நிம்மதியான
வருமானம் வரும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். இதுவரை இருந்து
வந்த தயக்கத்தையும், சோம்பலையும் உதறித் தள்ளி எடுத்துக்
கொண்ட காரியங்களில் சிறிதளவு முயற்சி செய்தாலே பெரிய நன்மைகளைத் தருவதற்கு
பரம்பொருள் காத்துக் கொண்டிருக்கிறது என்பதால் மேஷ ராசியினர் எந்த விஷயத்திலும்
இனிமேல் தயக்கத்தை விட்டொழிக்கவும்.
வியாபாரிகளுக்கு
தொழில் சிறக்கும். புதிய கிளைகள் தொடங்கவோ, தொழிலை விரிவாக்கம் செய்யவோ
இது நல்ல நேரம். சிலருக்கு வெளிமாநில, வெளிதேச மாற்றங்கள்
இருக்கும். சிலர் நீண்ட தூர பிரயாணங்கள் செய்வீர்கள். மூன்றாம் மனிதரின்
தலையீட்டினால் குடும்பத்தில் சில கருத்து வேற்றுமைகளும் வீண் பிரச்னைகளும் வரும்.
யாராவது ஒருவர் கோபப்படாமல் பொறுமையையும் நிதானத்தையும் கையாண்டு சிறிய விஷயம்
பெரிதாகாமல் பார்த்துக் கொள்வீர்கள். சிலருக்கு அம்மாவின் வழியில் மனவருத்தங்கள்
மற்றும் செலவுகள் இருக்கும். வயதான தாயாரைக் கொண்டவர்கள் அவரின் உடல்நல விஷயத்தில்
கவனமாக இருப்பது நல்லது. சிலருக்கு வீடு விஷயமான கடன்கள் ஏற்படும்.
கணவன், மனைவி
உறவு அன்யோன்யத்துடன் இருக்கும். இதுவரை இருந்து வந்த அனைத்து தடைகளும் விலகும்.
சிலருக்கு சுபச்செலவுகளும், விரயங்களும் இருக்கும். செலவு
செய்தே ஆக வேண்டும் என்பதால் இந்த மாதம் வருமானமும் நன்றாக இருக்கும்.
எல்லோருக்கும் எல்லோரும் கடன் தரமாட்டார்கள்.
கடன் வாங்குவதற்கும் ஒரு தைரியம் வேண்டும் என்பதால் செலவு செய்வதற்கு கடன்
வாங்காமலேயே வருமானம் வரும். அலுவலகங்களில் சிறப்புக்களைப் பெறுவீர்கள். பொதுவில்
இது சிறப்பான மாதம்தான்.
1,2,3,7,8,9,18,19,21,22
ஆகிய நாட்களில் பணம் வரும். 18-ம் தேதி காலை 10.59 மணி முதல் 20-ம் தேதி இரவு 9.41
மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள், முதலீடுகள்,
ஆரம்பங்கள் எதையும் தவிர்ப்பது நல்லது. எவரிடமும் வாக்குவாதமோ,
வீண் பிரச்சனைகளையோ செய்ய வேண்டாம்.
No comments :
Post a Comment