Wednesday, June 27, 2018

மீனம்: 2018 ஜூலை மாத பலன்கள்

மீனம் :

நவம்பர் மாதம் வரை உங்களின் ராஜ யோகாதிபதி செவ்வாய் பதினொன்றாமிடத்தில் உச்ச வலுவுடன் இருக்கிறார். இந்த அமைப்பு எப்படிப்பட்ட பிரச்னை வந்தாலும் அதை தடுக்கும் கேடயமாக செயல்பட்டு உங்களை அனைத்திலும் காப்பாற்றும். அதன்பிறகு குருபகவான் ஒன்பதுக்கு மாறி விடுகிறார் என்பதால் இனிமேல் மீனத்திற்கு எதிலும் ஜெயம்தான். அஷ்டம குருவின் ஆதிக்கத்தினால் உங்களுக்கு தொழில், குடும்பம் போன்றவைகளில் இருந்து வந்த சங்கடங்களும் சாதகமற்ற விஷயங்களும் இந்த மாதம் விலகும்.


இனிமேல் புத்துணர்ச்சியுடனும், உற்சாகத்துடனும் செயலாற்றுவீர்கள். மீனத்தினர் இந்த மாதம் மனதளவிலும் உடல்நிலையிலும் பத்து வயது குறைந்த புத்துணர்ச்சியையும், சந்தோஷத்தையும் அனுபவிப்பீர்கள் என்பது நிச்சயம். இதுவரை வேலை, வியாபாரம், தொழில் விஷயங்களில் இருந்து வந்த இடைஞ்சல்கள் நீங்கும். வேலை கிடைக்காதவருக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரம் மீண்டும் சூடு பிடிக்கும். எதிரிகளின் தொந்தரவு ஒழியும். உடல்நலம் இல்லாமல் இருந்தவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். 

கோட்சார கிரக நிலைகள் இனிமேல் உங்களுக்கு நல்ல பலன்களை தரும் என்பதல் நாளை நீங்கள் நன்றாக இருக்க போவதற்கான வழிமுறைகள் இப்போதே ஆரம்பிக்கத் துவங்கும். கடன் தொல்லைகள் கட்டுக்குள் இருக்கும். கோர்ட், கேஸ், போலீஸ் விவகாரங்கள் பாதகம் தராது. தொழிலாளர்களுக்கு பணிச்சுமை குறையும். தொழில் அதிபர்களுக்கு சிக்கல்கள் தீரும். வாழ்க்கைத்துணை விஷயத்தில் சற்று கசப்புகள் இருக்கும். பொறுத்துப் போவது நல்லது. 

அனைத்து விஷயங்களிலும் சிறிது தடைகள் இருப்பதாகத் தோன்றினாலும் கடைசியில் உங்களுக்கு சாதகமாக வெற்றியாகவே முடியும். வேலை செய்யும் இடங்களில் சந்தோஷமான நிகழ்ச்சிகள் உண்டு. நிலுவையில் இருந்த பதவி உயர்வு சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். குல தெய்வ வழிபாடு சரிவரச் செய்யாதவர்கள் உடனே அதைச் செய்யும்படி இருக்கும். பெண்கள் மேன்மை அடைவீர்கள். மாமியார் மாமனார் வகையிலும் நல்லபலன்கள் இருக்கும்.

4,6,7,8,12,14,15,24,26,29 ஆகிய நாட்களில் பணம் வரும். 19-ம்தேதி மதியம் 7.56 மணி முதல் 22-ம்தேதி மதியம் 4.16 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் எவருடனும் வீண் பேச்சுக்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. இந்த நாட்களில் கோபமும், எரிச்சலும் கலந்த உணர்வுகளில் இருப்பீர்கள்.

No comments :

Post a Comment