விருச்சிகம் :
சனிபகவான் இறுதிப்பகுதியான பாதச் சனியாக வந்து விட்டதால் இனிமேல் உங்களுக்கு
கொடுமையான பலன்களைத் தராமல் இரக்கம் காட்டுவார். நிஜமாகவே விருச்சிக ராசிக்கு
சோதனைகள் விலகும் மாதம் இது. குறிப்பாக கேட்டை நட்சத்திரக் காரர்களின் மன
அழுத்தங்கள் நீங்கும். அதோ இதோ என்று ராசிபலனில் நான் போக்குக் காட்டிக்
கொண்டிருந்தாலும் இந்த மாதம் உண்மையான திருப்பங்கள் வருவதை உங்களில் சிலர்
உணருவீர்கள். சிலர் ஏற்கனவே பிரச்னைகள் தீர ஆரம்பித்திருப்பதை உணர்ந்து கொண்டிருக்கிறீர்கள்.
முக்கியமாக இளையபருவத்தினர் சோம்பலை விட்டு ஒழியுங்கள்.
அதிகாலையில் எழுந்து வீட்டை விட்டு வெளியே வந்து வேலையை பார்க்க வந்து
விட்டாலே பாதி வேலை முடிந்து விட்டதாக அர்த்தம். சுறுசுறுப்பாக ஆக்டிவாக
இருங்கள். விருச்சிகத்தின் திறமைகள் வெளிவரும் மாதம் இது. அதிர்ஷ்டம் இந்த மாதம் கை
கொடுக்கும். முக்கியமான சில பிரச்னைகள் இந்த மாதம் நீங்கி நிம்மதியாக
உணர்வீர்கள்.
என்னதான் ஒருவரை இறைவன் கடுமையாக சோதித்தாலும் கடைசி நேரத்தில்
அவரைக் கைவிட மாட்டார் என்பது இப்போது உங்கள் விஷயத்தில் நடக்கும். இதுவரை
இருந்து வந்த எதிர்ப்புகளும், எதிர்த்து வந்தவர்களும் மனம் மாறி உங்களையும்,
உங்கள் கருத்துகளையும் ஆதரிக்கும் மாதம் இது. சிறிய விஷயங்களால் பிரிந்து
இருந்தவர்கள் அதை மறந்து ஒன்று கூடுவீர்கள். கடன் தொல்லைகளைத் தவிர்க்க கடன்
கொடுத்தவரை நேரில் சந்தித்து தவணை வாங்கி கொள்வது நல்லது.
வீண்செலவுகளும், தேவையற்ற விரயங்களும் இருக்கும் என்றாலும் செலவு செய்வதற்கு
ஏற்ப தேவையான வருமானமும், பணவரவும் நிச்சயம் இருக்கும் என்பதால் எதற்கும் கவலை
வேண்டாம். வேலை வாங்கித் தருவதாக எவராவது சொன்னால் முன்னாலேயே நம்பி பணம் தர
வேண்டாம். ஏமாறுவதற்கு சந்தர்ப்பம் இருக்கிறது. மாத முற்பகுதியில் பேச்சில்
கவனமாக இருங்கள். நிதானம் இழந்து எவரையும் பேசிவிட வேண்டாம். குடும்பத்தில்
ஏற்படும் பிரச்னைகளை ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேசி தீர்த்துக்கொள்வது
நல்லது.
1,2,3,6,7,15,17,20,22,24 ஆகிய நாட்களில் பணம் வரும். 11-ம்தேதி மதியம் 2.02
மணி முதல் 13-ம்தேதி மதியம் 1.42 மணி வரை சந்திரன் எட்டில் மறையும்
சந்திராஷ்டம நாட்கள் என்பதால் உங்களுக்கு தெளிவற்ற மனநிலை இருக்கும். இந்த
நாட்களில் எவ்வித புதிய ஆரம்பங்களும், முயற்சிகளும் செய்ய வேண்டாம்.
Konjamachum unmaya sollunga sir..
ReplyDeletePothum.. Mudila