தனுசு :
யோகாதிபதி சூரியனும், ஜீவனாதிபதி புதனும் இணைந்து ராசியைப் பார்க்கிறார்கள்
என்பதால் தனுசு ராசிக்கு நன்மைகள் கிடைக்கும் மாதம் இது. குறிப்பாக ஐம்பது
வயதினைக் கடந்த இரண்டாவது சுற்று பொங்கு சனியினைக் கொண்டவர்களுக்கு வேலை,
தொழில், வியாபாரம் போன்ற ஜீவனஅமைப்புகளில் நல்ல வருமானம் இருக்கும். ஜனனகால
ஜாதகப்படி யோக தசா, புக்திகள் நடந்து கொண்டிருப்பவர்களுக்கு இரட்டிப்பு
நன்மைகள் உண்டு.
இளைய பருவத்தினர் புதிதாக தொழில் ஆரம்பிப்பதோ, இருக்கும் தொழிலை விரிவாக்கம்
செய்வதோ ஒரு முறைக்கு நான்கு முறை நன்கு யோசித்து செய்வது நல்லது. ஜென்மச்சனி
முடியும் வரை புதிய முயற்சிகள் எதுவும் கை கொடுக்காது. எவரையும் நம்ப
வேண்டாம். இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்களோ அதையே திறம்பட செய்வது
நல்லது. உங்களில் சிலருக்கு திருத்தலங்களுக்கு செல்லும் பாக்கியம் கிடைக்கும்.
நடுத்தர வயதை தாண்டியவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை வைப்பது நல்லது. சிறிய
விஷயத்திலும் அலட்சியம் வேண்டாம். எட்டாமிடத்தில் சுக்கிரன் ராகுவுடன்
இணைவதால் பெண்கள் விஷயத்தில் மனக்கசப்புக்கள் வரும் என்பதால் எச்சரிக்கையாக
இருங்கள். சகோதரிகளால் செலவு உண்டு. கணவன், மனைவி உறவு சுமாராகத்தான்
இருக்கும். பெண்கள் விஷயத்தில் நினைப்பது நடக்காது.
அலுவலகத்தில் தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்பு இல்லை. உங்களுக்கு கீழே வேலை
செய்பவர்களிடம் இருந்து ஒத்துழைப்பு கிடைக்கும். மேலதிகாரிகள் அனுசரணையாக
இருப்பார்கள். ஏதேனும் ஒரு சிறு காரணத்திற்காக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த
சம்பள உயர்வு பதவி உயர்வு போன்றவைகள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு வியாபாரம்
நல்லபடியாக நடக்கும். போட்டியாளர்களால் தொந்தரவு இருக்காது. கடன் பிரச்னைகள்
கட்டுக்குள் இருக்கும். பணப்பயிர் விளைவிக்கும் விவசாயிகளுக்கு நன்மைகள்
உண்டு. குழந்தைகள் விரும்பும் பள்ளியிலோ, படிப்பிலோ அவர்களை சேர்த்து விட
முடியும். நல்ல காலேஜில் சீட்டு கிடைக்கும். குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு
இப்போது குழந்தை பிறக்கும்.
5,6,7,12,13,19,20,22,30,31 ஆகிய நாட்களில் பணம் வரும். 13-ம்தேதி மதியம் 1.42
மணி முதல் 15-ம்தேதி மதியம் 1.28 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த
நாட்களில் புதிய முயற்சிகள் செய்யவேண்டாம். மனம் ஒரு நிலையில் இருக்காது
என்பதால் எவருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.
No comments :
Post a Comment