Friday, May 25, 2018

விருச்சிகம்: 2018 ஜூன் மாத பலன்கள்


விருச்சிகம் :

விருச்சிக ராசிக்கு நல்லவைகள் நடக்கும் மாதம் இது. அனுஷ நட்சத்திரக்காரர்களுக்கு நடந்து வந்த கெடுதலான அமைப்புகள் விலகி துன்பங்களைத் தீர்க்கும் வழிமுறைகள் துவங்கி விட்டன. கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் சனிபகவான் விட்ட குறை தொட்ட குறையாக இன்னும் மன உளைச்சல்களைத் தந்து கொண்டிருக்கிறார். எதுவாக இருந்தாலும் தற்போது பறித்துக் கொண்டிருக்கும் நிம்மதி உட்பட அனைத்தையும் சனிபகவான் இரட்டிப்பாகத் தருவார் என்பதால் எவ்விதமான கலக்கத்திற்கும் இடம் கொடாமல் தன்னம்பிக்கையுடன் நீங்கள் இருக்க வேண்டிய மாதம் இது.


ஜென்மச்சனியின் போது கிடைத்த கடுமையான அனுபவங்களினால் சிலர் சில விஷயங்களில் என்ன முடிவு எடுப்பது என்ற தடுமாற்றத்தில் இருப்பீர்கள். பக்கத்தில் வைத்திருந்தால் ஆபத்துத்தான் என்று தெரிந்தும் ஒருவரை விலக்க முடியாத அவஸ்தையிலும் இருப்பீர்கள். இது போன்றவர்களுக்கு நல்ல தீர்வுகள் ஜூன் மாதம் இருக்கும் என்பதால் விருச்சிகத்திற்கு துன்பங்கள் தீரும் மாதம் இது. இதுவரை தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த சில விஷயங்களுக்கு ஒரு நல்ல முடிவு வரும். 

சிலருக்கு மறைமுகமான வழிகளில் இந்த மாதம் வருமானம் கிடைக்கும். குறிப்பாக ரியல் எஸ்டேட் மற்றும் வீடு கட்டித் தரும் புரமோட்டர்கள் போன்றவர்களுக்கு தொழிலில் நல்ல மாற்றங்கள் இருக்கும். கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். நிறைய செலவுகளும் விரயங்களும் இருப்பதை கிரகங்கள் காட்டுகின்றன. வருமானத்தை சேமிக்க முயற்சி செய்யுங்கள். வெளிநாட்டு தொடர்பால் இந்த மாதம் நன்மை அடைவீர்கள். வேற்று மதத்தினர் உதவுவார்கள். தந்தைவழி உறவில் நல்ல பலன்கள் இருக்கும். 

கணிதம் சாப்ட்வேர் தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு ஏதேனும் பரிசு அல்லது விருது கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. வேலையில் பாராட்டப் படுவீர்கள். டைவர்ஸ் கேஸ், அடிதடி, போலீஸ் கோர்ட் என்று அலைந்து கொண்டிருந்தவர்களின் வழக்கு சாதகமாய் முடிவுக்கு வரும். எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைப்பிடியுங்கள். ராசிநாதன் உச்சமாக இருப்பதால் கெடுபலன்கள் எதுவும் உங்களுக்கு வரப்போவது இல்லை.

1,2,3,9,11,12,19,20,21,26 ஆகிய நாட்களில் பணம் வரும். 14-ம் தேதி அதிகாலை 3.24 மணி முதல் 16-ம்தேதி அதிகாலை 3.21 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த தினங்களில் நீண்ட தூர பயணங்களை தள்ளி வைப்பது நல்லது. புதிய முயற்சிகள் எதுவும் செய்ய வேண்டாம்.

No comments :

Post a Comment