Friday, May 25, 2018

தனுசு: 2018 ஜூன் மாத பலன்கள்

தனுசு :

தனுசுராசி இளைய பருவத்தினர் ஏழரைச்சனியின் தாக்கத்தை உணர்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதால் எதிலும் அகலக்கால் வைக்காமலும், அடுத்தவர்களை நம்பாமலும், தேவையற்ற கடன் விவகாரங்களில் சிக்காமலும் இருக்க வேண்டிய மாதம் இது. முக்கியமாக காதல் விவகாரங்கள் வேண்டாம். இதனால் கடுமையான மன அழுத்தம் வரும். உங்களில் மூலம் நட்சத்திரக்காரர்கள் சிலருக்கு சனியின் ஆதிக்கத்தினால் வேலை, தொழில் விஷயங்களில் மாற்றங்களும் குறைபாடுகளும் இருக்கும்.

தாய்-தந்தையர் விஷயத்தில் கருத்து வேற்றுமைகளும் மனச்சங்கடங்களும் இருக்கும் என்பதால் பெற்றோர் சொல்படி கேட்டு நடந்து அவர்களின் மனதைக் குளிர வைப்பது நல்லது. வயதான பெற்றோர்களின் உடல்நலத்திலும் அக்கறை தேவைப்படும். இளையவர்கள் சிலருக்கு அலுவலகங்களில் வேலையை விட்டு விடும்படி நிர்ப்பந்தங்கள் இருக்கும் என்பதால் அனைத்து விஷயங்களிலும் கவனமுடன் இருங்கள். அதேநேரத்தில் நடப்பவைகள் அனைத்தும் உங்கள் எதிர்கால நன்மைக்காகவும் சனி முடிந்த பிறகு உங்களை வேலை, தொழில் போன்ற அமைப்புகளில் நல்லவிதமாக நிலை கொள்ள வைக்கும் என்பதாலும் கவலைகளுக்கு இடமில்லை.

பெண்கள் விஷயத்தில் மனக்கசப்புக்கள் வரும் என்பதால் எச்சரிக்கை தேவை. சகோதரிகளால் செலவு உண்டு. கணவன், மனைவி உறவு சுமாராகத்தான் இருக்கும். வயதானவர்கள் காசி கயா போன்ற புனித யாத்திரைகள் செல்வீர்கள். மகான்களின் தரிசனம் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் தொடர்புடையவர்கள், வெளிநாடுகளில் வர்த்தக அமைப்புகளை வைத்திருப்பவர்கள், மாநிலங்களுக்கு இடையே தொழில் செய்பவர்கள் போன்றவர்களுக்கு இந்த மாதம் யோகத்தை தரும். அரசு தனியார் துறை ஊழியர்களுக்கும் வேலைப்பளு அதிகமாக இருக்கும். விருப்பம் இல்லாத ஊருக்கு மாற்றம் அல்லது துறைரீதியான தேவையில்லாத மாற்றங்கள் நடந்து சங்கடப்படுத்தலாம்.

1,4,5,11,12,13,19,20,21,24 ஆகிய தினங்களில் பணம் வரும். 16-ம்தேதி அதிகாலை 3.21 மணி முதல் 18-ம்தேதி அதிகாலை 4.19 மணி வரை சந்திராஷ்டம தினங்கள் என்பதால் இந்த நாட்களில் அலைச்சல் தரும் வேலைகளைச் செய்ய வேண்டாம். வெகுதூர பிரயாணங்களை தவிர்ப்பது நல்லது.

No comments :

Post a Comment