Tuesday, March 6, 2018

Astro Answers - Guruji Pathilkal - குருஜியின் மாலைமலர் பதில்கள் - 177 (6.3.18)


ஒரு வாசகர், கொடுமுடி.

கேள்வி:

எனது மகன் சொந்த வியாபாரம் செய்து, போட்ட முதல் அனைத்தையும் இழந்து பெரும் கடனாளி ஆகிவிட்டார். இதிலிருந்து அவர் மீண்டும் வருவாரா என்று வேதனையாக உள்ளது. கடன் கொடுத்தவர்கள் பலவகையிலும் நெருக்குகிறார்கள். இதனால் அவர் சிறை செல்ல நேருமோ என்று அஞ்சுகிறேன். எனக்கு மிகுந்த அவமானமாக உள்ளது. மகனின் நிலை பற்றி அருள்கூர்ந்து தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.


பதில்:


சூ,பு

சு

கேது

25-5-1980 மாலை 5.35 சங்ககிரி
செ,சனி
குரு,ரா


சந்

(துலா லக்னம், கன்னி ராசி. 5-ல் கேது. 8-ல் சூரி, புத. 9-ல் சுக். 11-ல் செவ், குரு, சனி, ராகு. 12-ல் சந். 25-5-1980, மாலை 5.35, சங்ககிரி)

துலாம் லக்னத்திற்கு கடன், நோய், வம்பு, வழக்கு போன்றவைகளை தரக்கூடிய குருதசையில் மகனை சொந்த வியாபாரம் செய்ய வைத்தது தவறு. துலாத்திற்கு குரு நன்மைகளை செய்ய மாட்டார் என்பதை மாலைமலரில் அடிக்கடி எழுதி கொண்டுதான் இருக்கிறேன்.

இங்கே மகன் விஷயத்தில் ராசிக்கட்டத்தில் குரு பதினொன்றாமிடத்தில் இருந்தாலும் பாவக சக்கரத்தில் ஜீவன ஸ்தானமான பத்தாம் வீட்டில் இருப்பதால் தனது தசையில் தொழில் மூலமான கடன்களை கொடுத்தே தீருவார். இந்த தசை முழுக்க கடன்தொல்லைகளும், அவமானங்களும் இருக்கத்தான் செய்யும். இன்னும் நான்கு வருடங்களுக்கு பிறகு ஆரம்பிக்க இருக்கும் சனி தசையில்தான் அவர் கடன் தொல்லைகளில் இருந்து விடுபட முடியும்.

வரும் மே மாதம் பனிரெண்டாம் இடத்தில் அமர்ந்து ஆறாமிடத்தை பார்க்கும் சந்திரனின் புக்தி ஆரம்பிக்க உள்ளதால், பிரச்சினைகள் காவல்நிலையம், கோர்ட்டு என்று மாறும். அதற்காக நிரந்தரமாக உங்கள் மகன் சிறைத்தண்டனை பெறுவார் என்று பயப்பட வேண்டாம். அதுபோன்ற அமைப்பு ஜாதகத்தில் இல்லை. குரு தசைக்கு பின்னரே அனைத்து நல்லவைகளும் நடக்கும். சுக்கிரனை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களை செய்து கொள்ளுங்கள்.

ஆர்.ராஜா, கோவை-33.

கேள்வி:

வேத ஜோதிட ஒளிவிளக்கின் பக்தன் நான். என் குடும்ப ஜாதகங்களை இணைத்திருக்கிறேன். கடந்த 3 வருடங்களாக தொழில் தடை, வருமானத் தடை, குடும்பத்தில் சின்னச்சின்ன சச்சரவு ஆகிய பலன்களே நடந்து வருகின்றன. அடுத்து வரும் தசைகள் எப்படி இருக்கும் மற்றும் என் எதிர்காலம் எப்படி என்பதை விளக்கிச் சொல்லப் பணிகிறேன்.

பதில்:

கடந்த சில வாரங்களாக தனுசுராசி இளைஞர்கள் ஜோதிடம் பார்க்க வர ஆரம்பித்து விட்டீர்கள். அதிலும் மூல நட்சத்திரக்காரர்கள் இப்போது அதிகமாக பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். 40 வயதிற்குட்பட்ட தனுசு ராசிக்காரர்களுக்கு பணம் என்றால் என்ன? உறவுகளும், நட்புகளும் எப்படிப்பட்டது என்பதை விளக்கும் சம்பவங்கள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன.

ஜென்மச்சனி நடக்கும்போது ஒருவருக்கு தொழிலில் நல்லவைகள் நடக்க வாய்ப்பு இல்லை. எதிர்காலத்தில் வாழ்க்கையில் நிலை கொள்ளுவதற்கான அமைப்புகள் மட்டும் போராட்டத்துடன் அடையாளம் காட்டப்படும். இரண்டு வருடங்கள் பொறுங்கள். அனைத்தும் சரியாகும். ஜாதகம் வலுவாக இருப்பதாலும், யோக தசைகள் நடைபெற உள்ளதாலும் எதிர்காலம் சிறப்பாகவே இருக்கும். சனிக்கிழமை தோறும் அருகில் இருக்கும் பழமையான ஈஸ்வரன் கோவிலில் அருள்பாலிக்கும் காலபைரைவருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். சனியின் கடுமை குறையும்.

எம்.மணியரசன், ஆத்தூர்.

கேள்வி:

மானசீக குருநாதரின் பாதம் பணிகிறேன். வயது 30 ஆகிறது. எதிர்காலத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது. திருமணமும் நடக்கவில்லை. பெரிய முன்னேற்றம் எதுவும் இல்லை. நான்குவருடமாக உடல்நலமும் நன்றாக இல்லை. மனதிலும் தைரியம் இல்லை. எப்போதும் தற்கொலை எண்ணம் வருகிறது. நிரந்தரவேலை எப்போது கிடைக்கும்? சில ஜோதிடர்கள் என் திருமண வாழ்க்கை சந்தோஷத்தை தராது என்று சொல்கிறார்கள். நான் விரும்பும் பெண்ணை திருமணம் செய்ய முடியுமா?

பதில்:

குரு
ராகு

22-12-1987 அதிகாலை 12.15, ஆத்தூர் சேலம்

சு
சந்,சூ
பு,சனி

செவ்
கே,ல


(கன்னி லக்னம், தனுசு ராசி. 1-ல் கேது. 2-ல் செவ். 4-ல் சூரி, புத, சனி, சந். 5-ல் சுக். 7-ல் குரு, ராகு. 22-12-1987, அதிகாலை 12.15, ஆத்தூர், சேலம்).

மேலே உள்ள கோவை ஆர். ராஜாவிற்கு கொடுத்த பதில் உங்களுக்கும் பொருந்தும். தனுசுராசி இளைஞர்களுக்கு இப்போது சாதகமற்ற பலன்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதனை தெய்வ அருள் கொண்டு சமாளிக்க முடியும்.

ஏழரைச்சனி நடக்கும்போது பிறந்த ஜாதகத்தில் ஆறு, எட்டுக்குடைய தசா, புக்தி நடக்குமாயின் கடுமையான சோதனைகள் இருக்கும். உங்களுக்கு கடந்த நான்கு வருடங்களாக கன்னி லக்னத்திற்கு வரக்கூடாத அஷ்டமாதிபதி செவ்வாயின் தசை நடந்து கொண்டிருக்கின்றது. இன்னும் மூன்று வருடங்களுக்கு இது நீடிக்கும். செவ்வாய் தசை முடியும்வரை உங்களுக்கு நல்ல பலன்கள் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை.

லக்னத்திற்கு இரண்டில் செவ்வாய், ராசிக்கு ஏழாமிடத்திற்கு சனிபார்வை, லக்னத்திற்கு ஏழில் ராகு என உள்ளதால் உங்களுக்கு தாமத திருமண அமைப்புதான். இன்னும் இரண்டு வருடங்கள் பொறுங்கள். அனைத்தும் நல்லபடியாக கூடி வரும். அடுத்து நடக்க இருக்கும் ராகுதசை சுபரின் வீட்டில் சுபரோடு இருப்பதால் நிம்மதியான வாழ்க்கையைத் தரும். ஏழாம் அதிபதியும், சுக்கிரனும் வலுத்திருப்பதால் திருமண வாழ்க்கை மிகவும் நன்றாக இருக்கும். திருமணத்திற்கு பிறகுதான் வாழ்க்கையில் செட்டில் ஆவீர்கள்.

அஷ்டமாதிபதி தசையும், ஏழரைச்சனியும் இணைந்து நடக்கும்போது ஒருவர் தைரியம் இழப்பதும் தற்கொலை எண்ணங்கள் மனதில் வருவதும் இயல்புதான். நினைப்பவர்கள் எல்லோரும் அதுபோல செய்து கொள்வது இல்லை. நீங்களும் செய்ய மாட்டீர்கள். 33 வயதிற்குப் பிறகு நல்ல வாழ்க்கை அமையும். அதுவரை இறைவழிபாட்டில் மனதை செலுத்துங்கள்.

கே.மோகன்ராஜ், தஞ்சாவூர்.

கேள்வி:

கடந்த மூன்றரை வருடங்களாக ஜோதிடம் பற்றிய ஆர்வம் என்னை விடாது துரத்துகிறது. அது ஏன் என்பது தங்களது கட்டுரைகளை படித்த பின்பு தெளிவாகியது. நடைபெறும் ராகு தசையினால்தான் ஜோதிட ஆர்வம் உண்டானது என்பதும் புரிந்தது. என்னால் ஜோதிடர் ஆக முடியுமா? தற்போது கடன், நோயால், அவதிப்பட்டு வருகிறேன். ஆனால் தங்களது கட்டுரைகளின் மூலம் தன்னம்பிக்கை பெற்று அனைத்தையும் எதிர்கொள்கிறேன். கடன், நோய் தொடர்ந்து நீடிக்குமா? ராகு தசை சுயபுக்தி முடிந்ததும் என்ன பலன்களை செய்யும்?

பதில்:

ராகு
குரு

16-11-1987 அதிகாலை 1.25
தஞ்சாவூர்

ல,சந்

சு,சனி
சூ,பு
செவ்

கேது

(சிம்ம லக்னம், சிம்ம ராசி. 1-ல் சந். 2-ல் கேது. 3-ல் சூரி, புத, செவ். 4-ல் சுக், சனி. 8-ல் குரு, ராகு. 16-11-1987, அதிகாலை 1.25, தஞ்சாவூர்)

ஒளி பொருந்திய லக்னமான சிம்மத்திற்கு இருள்கிரகமான ராகுதசை நன்மைகளைச் செய்யாது. அப்படிச் செய்ய வேண்டுமென்றால் ராகு ஒரு இக்கட்டான அமைப்பில் இருக்க வேண்டும். ராகு நன்மைகளைச் செய்யக் கூடிய இடங்களான மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய இடங்களில் இருந்தால் ஓரளவு நன்மைகள் இருக்கும்.

உங்கள் ஜாதகத்தில் எட்டாமிடத்தில் ராகு, ஆட்சி பெற்ற குருவுடன் இணைந்து பத்து டிகிரிக்கு மேல் விலகியிருக்கிறார். ஆறாம் அதிபதியான சனியின் நட்சத்திரத்தில் அமர்ந்திருக்கிறார். ராகு, இருக்கும் வீட்டின் அதிபதியைப் போலவும் தன்னுடன் இணைந்திருப்பவரைப் போலவும் பலன்களைச் செய்பவர் என்பதால் ராகுதசையின் முதல் ஒன்பது வருடங்கள் உங்களுக்கு எட்டாமிடத்தின் பாபத்துவ பலன்களான கடன், நோய் அவமானம் போன்றவைகள் நடக்கும். பிற்பகுதியில் ஐந்தாமிடத்தின் நற்பலன்கள் உண்டு.

தசாநாதன் குருவுடன் இணைந்திருப்பதாலும், எட்டாமிடம் சூட்சும விஷயங்களை அறியும் ஆர்வத்தை தருகின்ற வீடு என்பதாலும் ராகுதசையில் உங்களுக்கு ஜோதிடத்தின் மேல் அதீத ஈடுபாடு வரும். ஜாதக அமைப்புப்படி ஜோதிடர் ஆகவும் முடியும். இன்னும் சில வருடங்கள் முறைப்படி ஜோதிடத்தைக் கற்றுக் கொள்ளுங்கள்.

ராகுதசை சுயபுக்தி முடிந்ததும் கடன்தொல்லைகளும், நோயும் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். குருபுக்தியில் இருக்கும் நிலையில் இருந்து எதிர்கால நன்மைகளுக்கான மாற்றங்கள் இருக்கும். சனிபுக்தி மட்டும் கொஞ்சம் சிக்கல்களைத் தரும். குருவுடன் இணைந்திருப்பதால் சமாளிக்க முடியாத தொல்லைகளை ராகு தராது. கவலை வேண்டாம். ராகுதசை முடியும்வரை வருடம் ஒருமுறை ஸ்ரீ காளஹஸ்தி சென்று காளத்தினாதனை தரிசித்து வாருங்கள்.

வேலையை விட்டுவிட்டு கிராமத்திற்குப் போகலாமா?

ஒரு வாசகி, புதுச்சேரி.

கேள்வி:

இரண்டு வருடங்களுக்கு முன் என் அப்பா எனக்கு எப்போது திருமணம் நடக்கும் என்று கடிதம் அனுப்பினார். அதற்கு நீங்கள் 2017 இறுதியில் நடக்கும் என்று பதில் கொடுத்தீர்கள். அதன்படியே எனக்கு 2017 நவம்பர் மாதம் திருமணம் நடந்தது. என் கணவர் என்னைவிட குறைவாக படித்தவர். நிரந்தரமில்லாத வேலை செய்கிறார். டிகிரி முடித்த நான் நகரத்தில் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்கிறேன். நிரந்தர வேலை இல்லாமல் ஐந்து லட்ச ரூபாய் கடனும் உள்ள கணவர் இப்போது நான் பார்க்கும் வேலையை விட்டுவிட்டு எந்த வசதியும் இல்லாத கிராமத்தில் கூட்டுக் குடும்பமாக இருக்கச் சொல்லி அழைக்கிறார். நான் எனது பெற்றோருக்கு ஒரே பெண். நகரத்தில் எங்களுக்கு சொந்த வீடு இருக்கிறது. எனது தாய், தந்தையை பார்த்து கொள்ளும் கடமையும் எனக்கு இருக்கிறது. பிறக்கப் போகும் குழந்தைகளை நகரத்தில் படிக்க வைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்கு என் கணவர் ஒத்துழைப்பாரா? வேலையை விட்டு விட்டு கிராமத்திற்கு போகலாமா? எனது எதிர்காலம் எப்படி இருக்கும்?

பதில்:

சந்

ரா

11-8-1982 காலை 11.00 நாகப்பட்டினம்
சூ
சு

பு

கே
செவ் ல

சனி


செவ்
சந்

17-8-1990, அதிகாலை 1.55, பாண்டிசேரி
சூ,சு
கேது
ரா

பு
சனி

(கணவன் 11-8-1982, காலை 11.00, நாகப்பட்டினம், மனைவி 17-8-1990, அதிகாலை 1.55, பாண்டிசேரி)

இன்றைய தலைமுறையில் பெண்கள் அனைவரும் நன்றாகப் படிக்கிறீர்கள். ஆண்கள் உங்களை விட சற்று பின் தங்கித்தான் இருக்கிறார்கள். பள்ளியிறுதி தேர்வு முடிவுகளைப் பார்க்கும் போது மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெறுவதும், மதிப்பெண் பெறுவதும் நன்றாக தெரிகிறது. எனவே கணவன் உண்னைவிட குறைந்த படிப்பு கொண்டவன் என்பதை பற்றி கவலைப்பட தேவையில்லை. கணவன் படித்தவனா? படிக்காதவனா? என்பதை விட அவன் நல்லவனா? ஒரு பெண்ணை புரிந்து நடந்து கொள்பவனா? என்பதுதான் முக்கியம்.

பெற்றோருக்கு ஒரு பெண்ணாக பிறக்கும் அனைவருக்கும் நீ சொன்ன இந்தப் பிரச்னை இருக்கிறது. உண்மையில் ஒரு பெண்ணிற்கு புகுந்த வீடுதான் முக்கியம் என்றாலும் கலாச்சாரமும், சமூகமும் மாறி ஆணுக்கு, பெண் சமம் என்று ஆகிவிட்ட இந்த காலத்தில் ஒரு பெண் தன்னுடைய தாய், தந்தையரை வாழ்நாள் முழுவதும் வைத்துக் காப்பாற்ற வேண்டியதும் ஒரு கடமைதான்.

கணவரின் ஜாதகப்படி அவரது லக்னமும், லக்னாதிபதியும் சுபத்துவ அமைப்பில் இருப்பதால் உன்னுடைய பேச்சை காது கொடுத்து கேட்கும் அளவிற்கே இருப்பார். ஜாதகப்படி உடனடியாக வேலையை விட்டுவிட்டு கிராமத்திற்கு போகும் அமைப்பு உனக்கு இல்லை. அடுத்த வருடம் முடிவில் சனி தசையில் சுயபுக்தி முடிந்ததும் உனக்கு மாற்றங்கள் இருக்கிறது.

உன்னுடைய வருமானம் கடன் அடையும் வரைக்குமாவது தேவைப்படும் என்பதை அவருக்கு விளக்கிச் சொல். பத்தாம் வகுப்பு கூட படிக்காத கணவருக்கு படிப்பின் அவசியத்தை உணர்த்துவதில்தான் உன்னுடைய திறமை அடங்கி இருக்கிறது. கிராமத்தை விட நகரத்தில்தான் குழந்தைகளுக்கான கல்வி வசதி இருக்கிறது என்பதை எவ்வித உள்நோக்கம் இல்லாமல் நீ எடுத்துச் சொன்னாலே அவர் புரிந்து கொள்வார். எதுவாக இருந்தாலும் இருவரும் விட்டுக் கொடுத்து பேசி உங்கள் எதிர்காலத்தை திட்டமிடுங்கள். வாழ்த்துக்கள்.

No comments :

Post a Comment