மீனம்:
மீனத்திற்கு பிறக்க இருக்கின்ற புத்தாண்டு முன்னேற்றங்களையும், விரயங்களையும்
தருகின்ற ஒரு ஆண்டாக இருக்கும்.
குறிப்பாக இந்த புத்தாண்டில் திருமணம், வீடு கட்டுதல், குழந்தைகளுக்கான சுபச்
செலவுகள் போன்ற விஷயங்களில் விரையங்கள் இருக்கும். இதுவரை மகன்-மகளுக்கு
திருமணம் போன்ற சுப காரியங்கள் நடத்த முடியாதவர்கள் இப்போது நல்லவிதமாக அதனை
நடத்தி முடிப்பீர்கள்.
இதுவரை வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் தகுந்த வருமானம்
இன்றியும், உழைப்புக்கு ஏற்ற ஊதியமின்றியும் பொருளாதார பின்னடைவுகளை சந்தித்து
கொண்டிருந்த மீனத்தினர் அவை நீங்கி திருப்தியான வருமானங்களை பெறுவீர்கள். இந்த
வருடம் சம்பாதிக்க இருக்கும் வருமானத்தை சேமிக்கத்தான் முடியாதே தவிர தாராளமாக
செலவு செய்வதற்கான வருமானம் இருக்கும்.
இந்த வருடத்தின் பிற்பகுதி உங்களுக்கு மிகவும் நல்ல பணவரவைத் தரும். ஆகவே
அதற்கேற்ப திட்டங்கள் தீட்டி வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளுங்கள்.
வியாபாரிகளுக்கு கொள்முதல் சம்பந்தமான அலைச்சல்கள் இருக்கும். இந்தவருடம்
யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். யாரையும் நம்ப வேண்டாம். வியாபாரம்
கண்டிப்பாக குறையாது என்றாலும் அதற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.
வேலைக்காரர்கள் மேல் ஒரு கண் எப்போதும் இருக்கட்டும்.
எந்த ஒரு விஷயத்திலும் தனக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்கவில்லை,
தன்னுடைய திறமைக்கு ஏற்ற சந்தர்ப்பங்கள் கிடைக்கவில்லை என்ற மனக்குறையில்
இருந்த மீன ராசியினர் அவை நீங்கப் பெறுவீர்கள். சிலருக்கு இதுவரை இருந்து வந்த
தாழ்வு மனப்பான்மை விலகப் பெற்று தன்னம்பிக்கை கூடுதலாகும்.
மேம்போக்காகப் பார்க்கையில் புத்தாண்டின் ஆரம்பத்தில் உங்கள் ராசிநாதன்
குருபகவான் சாதகமற்ற எட்டாம் வீட்டில் இருப்பது போல தோன்றினாலும் அவர்
தன்னைப்போல இன்னொரு சுபரான சுக்கிரனின் வீட்டில் இருப்பதாலும், உங்களுக்கு
அவரே ஜீவனாதிபதி என்பதாலும் கெடுதல்களைச் செய்ய மாட்டார்.
அதேநேரத்தில் இதன் பலனாக உங்களுக்கு தொழில் விஷயங்களில் அடிக்கடி தூர
இடங்களுக்குப் பயணங்கள் இருக்கும். இன்னும் சிலருக்கு இதுவரை எதிர்பார்த்துக்
காத்திருந்த வெளிநாட்டு வாய்ப்பு இப்போது கிடைக்கும். இன்னும் சிலருக்கு
வெளிமாநில வாய்ப்புகளும், வடக்கு நோக்கிய விஷயங்களும் இருக்கும்.
இளைய பருவத்தினர் சிலருக்கு இதுவரை அமையாத திருமணம், புத்திரபாக்கியம்,
நிரந்தர வேலை, தொழில் பாக்கியங்கள் இந்த வருடம் கிடைக்கும். மிக உன்னத பலனாக
சொல்லப்போனால் ஒரு பத்து வயது குறைந்தது போன்ற உடல்திறனையும்,
புத்துணர்ச்சியையும் இந்தப் புதுவருடம் கொடுக்கும் என்றால் அது மிகையாகாது.
குறிப்பாக முப்பது வயதுக்களில் இருக்கும் இளைய பருவத்தினருக்கு இனிமேல் வேலை,
தொழில் போன்ற ஜீவன அமைப்புகள் நல்லபடியாக அமைந்து இந்த வருடத்திலிருந்து ஒரு
நிரந்தர வருமானம் வரத்தொடங்கும். இனிமேல் பணத்தட்டுப்பாடு என்பது உங்களுக்கு
இருக்காது.
திருமணமாகாமல் இருப்பவர்களுக்கு இந்த வருடம் நல்லபடியாக திருமணம் கூடி வரும்.
குறிப்பிட்ட சிலர் விரும்பிய வாழ்க்கைத்துணையை அடைவீர்கள். வீட்டிற்குப்
பயந்து காதலை மனதிற்குள் பூட்டி ஒளித்து வைத்திருந்தவர்கள் தைரியம் வந்து
பெற்றோரிடம் சொல்லி அவர்களின் சம்மதத்தையும் பெறுவீர்கள்.
தொழில் செய்பவர்கள் இப்போது அகலக்கால் வைக்க வேண்டாம். தொழிலை கண்ணும்
கருத்துமாக கவனிக்க வேண்டிய வருடம் இது. தொழில் விஷயங்களில் யாரையும்
நம்பாதீர்கள். குறிப்பாக தெரியாத தொழிலில் இறங்க வேண்டாம். இனிமேல்
கற்றுக்கொண்டு செய்ய வேண்டிய தொழில் இப்போது கை கொடுக்காது.
பிள்ளைகள் விஷயத்தில் செலவுகள் இருக்கும். படிப்புச்செலவு மற்றும் அவர்களுடைய
எதிர்கால வாழ்க்கைக்கான அடித்தளச்செலவுகள் போன்றவைகளுக்காக கையில் இருக்கும்
சேமிப்பை நீங்கள் செலவிட வேண்டியது இருக்கும்.
பத்திரிக்கை, ஊடகங்கள் போன்ற துறையில் இருப்பவருக்கு அலைச்சலும்,
வேலைப்பளுவும் இருக்கும். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்க சிரமங்கள்
இருக்கும். கலைஞர்கள் வேலை செய்த பணத்தை பெற போராட வேண்டி இருக்கும்.
பெண்களுக்கு பணிச்சுமை அதிகமாகும். அலுவலகத்திலும் வேலை செய்து வீட்டிலும்
நீங்களே வேலை செய்ய வேண்டி இருக்கும். உங்களை புரிந்து கொள்ளாத மேலதிகாரி
மாற்றலாகி வந்து தொல்லைகளை கொடுப்பார். ஆனாலும் வீட்டில் பிரச்னை எதுவும்
இருக்காது. எல்லாவற்றிலும் இப்போது உங்களுக்கு சலிப்பு வரும் என்பதால்
யாரையும் நம்பி உங்கள் மனதில் உள்ளவைகளையோ குடும்ப விஷயங்களையோ பகிர்ந்து
கொள்ள வேண்டாம்.
அதே நேரத்தில் கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். ஒருவருக்கு ஒருவர்
உதவியாக இருப்பீர்கள். குழந்தைகளால் படிப்புச் செலவுகள் போன்றவைகள்
இருந்தாலும் அவர்களைப் பற்றிய கவலை இருக்காது. குடும்பத்தில் பொருட் சேர்க்கை
இருக்கும். வீட்டிற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவீர்கள்.
கணவன்-மனைவிக்குள் இதுவரை இருந்து வந்த பனிப்போர் விலகி இருவரும் ஒருவரை
ஒருவர் நன்றாகப் புரிந்து கொண்டு ஒத்துழைக்க ஆரம்பிப்பீர்கள். வீட்டில்
குழந்தையின் கொலுசுச் சப்தம் கேட்கும் காலம் பிறந்து விட்டது.
பள்ளி, கல்லூரி செல்லும் வயதில் பிள்ளைகளை வைத்திருப்பவர்கள் மக்களின் மேல்
சற்றுக் கவனம் செலுத்த வேண்டிய வருடம் இது. பிள்ளைகளின் கவனம் படிப்பிலிருந்து
விலகி காதல், கத்திரிக்காய் என்று வேறு பக்கம் திரும்புவதற்கு
வாய்ப்பிருக்கிறது. வேறு ஏதாவது வம்புகளில் சிக்கி உங்களை மனக்கஷ்டத்திற்கு
ஆளாக்குவார்கள் என்பதால் அவர்களை கண்காணிப்பது நல்லது.
சிலர் வெளிநாட்டு தொடர்பால் நன்மை அடைவீர்கள். வெளிநாடு போகவும் வாய்ப்பு
இருக்கிறது. வேற்று மதத்தினர் உங்களுக்கு உதவுவார்கள். தந்தைவழி உறவில்
மிகவும் நல்ல பலன்கள் இருக்கும். கணிதம் சாப்ட்வேர் தொடர்பான துறைகளில்
இருப்பவர்கள் வேலையில் பாராட்டப் படுவீர்கள். மறைமுகமான வழிகளில் சிலருக்கு
வருமானம் உண்டு. குறிப்பாக ரியல் எஸ்டேட் மற்றும் வீடு கட்டித் தரும்
புரமோட்டர்கள் போன்றவர்களுக்கு தொழிலில் நல்ல மாற்றங்கள் இருக்கும்.
அரசு ஊழியர்களுக்கு இதுவரை மேலதிகாரிகளால் இருந்து வந்த மன உளைச்சல்களும்
வேலைப்பளுவும் இனிமேல் நீங்கி உங்களைப் புரிந்து கொள்ளாமல் உங்களிடம் ‘கடுகடு’
வென இருந்த மேலதிகாரி மாறுதல் பெற்று அந்த இடத்திற்கு உங்களுக்கு
அனுசரணையானவர் வருவார்.
வேலையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேருவார்கள்.
வேலையை விட்டு விடலாமா என்று யோசனையில் இருந்தவர்களுக்கு சூழ்நிலைகள் நல்ல
விதமாக அமைந்து வேலையை விட வேண்டிய நிலை நீங்கும். தற்காலிகப் பணியாளர்களுக்கு
வேலை நிரந்தரமாகும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு இனிமேல்
முயற்சி பலிதமாகும்.
அரசு ஊழியர்களுக்கு இந்தப் புத்தாண்டால் நல்ல நன்மைகள் உண்டு. குறிப்பாக
அதிகாரமிக்க காவல்துறை மற்றும் நீதித்துறையில் இருப்பவர்களுக்கும்,
அமைச்சர்கள், நீதியரசர்கள், உயர் அதிகாரிகளின் அலுவலகங்களில் பணி
புரிபவர்களுக்கும் மிகவும் நல்ல பலன்கள் நடக்கும்.
பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள், பொதுவாழ்வில் இருக்கும்
அரசியல்வாதிகள் ஆகியோருக்கு இது கூடுதல் நன்மைகளைத் தரும் காலகட்டமாக
இருக்கும். அரசியல்வாதிகளுக்கு அதிகாரப்பதவிகள் தேடி வரும்.
நீண்ட நாட்களாக போக முடியாமல் இருந்த குலதெய்வக் கோவிலுக்கு குடும்பத்துடன்
சென்று நேர்த்திக்கடன் செலுத்த முடியும். புனிதயாத்திரை செல்வீர்கள். ஞானிகள்
மகான்களின் திருப்பாதம் பதிந்த இடங்களுக்கு சென்று தரிசித்து உங்களை
புனிதப்படுத்திக் கொள்வீர்கள்.
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல பலன்கள் உண்டு. வெகுநாட்களாக
எதிர்பார்க்கும் குடியுரிமை கிடைக்கும். தாய் தந்தையை பார்க்க தாய்நாடு வந்து
திரும்பலாம். இருக்கும் நாட்டில் சுமுக நிலை இருக்கும். பூர்வீகச் சொத்தில்
இதுவரை இருந்து வந்த வில்லங்கம் தீர்ந்து உங்கள் பங்கு கிடைக்கும். பங்காளித்
தகராறுகள் சுமுகமாகத் தீர்த்து வைக்கப்படும்.
கூட்டுத் தொழிலில் இதுவரை இருந்த வந்த கருத்து வேறுபாடுகளும், மந்தமான
நிலைமையும் மாறி தொழில் நல்லபடியாக நடக்கும். நண்பர்களும், பங்குதாரர்களும்
உதவிகரமாக இருப்பார்கள். தந்தையின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில்
சொத்துச்சேர்க்கை, வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்குதல் நகைகள்
வாங்குதல், சேமிப்புகளில் முதலீடு செய்தல், குழந்தைகளின் எதிர்காலத்திற்கான
திட்டங்கள் போன்றவைகளை இந்தவருடம் செய்ய முடியும்.
தொலைக்காட்சி, சினிமாத்துறை போன்ற ஊடகங்களில் இருக்கும் கலைஞர்கள்,
பத்திரிகைத்துறையினர், வாகனங்களை இயக்குபவர்கள், அன்றாடம் சம்பளம்
வாங்குபவர்கள், தொழில் அதிபர்கள், வெளிநாட்டுத் தொடர்புடையவர்கள், கணிப்பொறி
சம்பந்தப்பட்டோர், சொல்லிக்கொடுப்போர் போன்ற அனைத்துத் தரப்பினருக்கும் இந்த
வருடம் நல்ல பலன்களையே தரும்.
சுருக்கமாக சொல்லப்போனால் இந்த வருடம் கிடைக்கும் மாற்றங்களைக் கொண்டும், மற்ற
அனுபவங்களைக் கொண்டும் உங்கள் எதிர்காலத்தை நீங்கள் முன்னேற்றமானதாக
மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால் எதிர்வரும் புத்தாண்டை நீங்கள்
வரவேற்கவே செய்வீர்கள்.
No comments :
Post a Comment