கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு பிறக்க இருக்கின்ற புத்தாண்டு கூடுதல் நன்மைகளை
தரும் வருடமாக இருக்கும். மொத்தம் 30 வருடங்கள் அடங்கிய தன்னுடைய சுற்றில் சனிபகவான் 3,6,11-ம்
இடங்களில் மட்டுமே நன்மைகளை தருவதற்கு கடமைப்பட்டவர். இந்தப் புது வருடத்தில்,
முப்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே வரும் பதினொன்றாமிடத்தில் சனி இருப்பது
கும்பத்திற்கு மேன்மைகளைத் தருகின்ற ஒரு அமைப்பாகும்.
பாவக்கிரகங்கள் மூன்று ஆறு பதினொன்றில் கோட்சார ரீதியில் அமர்ந்திருப்பது
நன்மைகளைத் தரும் என்று நமது மூலநூல்கள் குறிப்பிடுகின்றன. அதன்படி இந்த
புத்தாண்டில் ராகு ஆறில் இருப்பதும், சனி பதினொன்றில் இருப்பதும் உங்களுக்கு
தொழில் அமைப்புகளில் யோகம் தரும். அதேபோல குருபகவானும் ஏறத்தாழ வருடம்
முழுவதும் ஒன்பதாமிடத்தில் அமர்ந்து ராசியைப் பார்க்கும் நிலையில் இருப்பதால்
கும்பத்தின் முன்னேற்றத்திற்கு தடைகள் எதுவும் இல்லை.
தொழில் செய்பவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் திருப்புமுனையான நல்ல சம்பவங்கள்
இந்த வருடம் நடக்க இருக்கிறது. தொழிலை விரிவுபடுத்தும் எண்ணங்கள் ஈடேறும்.
தொழில், வியாபாரம் போன்றவைகள் முன்னேற்ற வழியில் இருக்கும்.
குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவி உறவு நல்லபடியாக
மாறும். கருத்து வேறுபாடு, குடும்ப பிரச்னைகள் அல்லது வேலை விஷயமாக பிரிந்து
இருந்த தம்பதியினர் ஒன்று சேர்வார்கள். கணவன் ஓரிடம், மனைவி வேறிடம் என்று
வேறு வேறு இடங்களில் பணிபுரிந்தவர்களுக்கு ஒரே இடத்தில் பணிமாறுதல் கிடைத்து
குடும்பம் ஒன்று சேரும்.
அரசு, தனியார்துறை பணியாளர்கள், இரும்பு சம்பந்தப்பட்ட துறையினர்,
உழைப்பாளிகள் போன்றவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும், மாணவர்களுக்கு பள்ளி
கல்லூரிகளில் இனிய சம்பவங்கள் நிகழும். படிப்பது மனதில் பதியும். தேர்வுகளை
நன்றாக எழுத முடியும்.
இதுவரை மனதில் இருந்து வந்த எதிர்மறை எண்ணங்கள், தாழ்வு மனப்பான்மைகள் இனிமேல்
இருக்காது. சுயதொழில் செய்வோருக்கு முயற்சிகள் கை கொடுக்கும். பொருளாதார நிலை
மிகவும் மேம்பாடானதாகவும் சரளமான பணவரவு இருந்து கொண்டே இருப்பதாகவும்
அமையும். தொட்டது துலங்கும். சரியான வருமானம் இன்றி பற்றாக்குறையால்
அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல வருமானம் இருக்கும்.
தொழிலதிபர்களுக்கு இதுவரை இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். அரசாங்க
ஆதரவு உண்டு. இடைத்தரகர்களை நீக்கி நேரடியாக அமைச்சர்களையோ அதிகாரிகளையோ
பார்த்து காரியங்களை வெற்றியாக்க முடியும். எந்த ஒரு காரியத்திலும் எடுக்கும்
முயற்சிகள் இப்போது பலிதமாகும். தொழிலை விரிவுபடுத்தலாம். புதிய சோதனை
முயற்சிகளை இப்போது செய்யலாம்.
மத்திய மாநில நிர்வாகப் பதவிகளுக்கான ஐ. ஏ. எஸ், குரூப்ஒன் தேர்வுகளுக்கு
படிப்பவர்களுக்கும் ஏற்கனவே எழுதி முடிவுகளுக்கு காத்துக்
கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல செய்திகள் கிடைக்கும். இதுவரை வெளிமாநில
வேலைக்குச் செல்ல இருந்த தடைகள் விலகும்.
பிற, இன, மொழி மதக்காரர்கள் உங்களிடம் நேசமாக இருப்பார்கள். வெளி
மாநிலத்தவர்கள் நண்பர்களாகக் கிடைப்பார்கள். அவர்களால் நன்மைகள் உண்டாகும்.
தூரத்தில் பணியிடம் அமையும். பிரயாணங்களால் உற்சாகமாக இருப்பீர்கள்.
வருடத்தின் பிற்பகுதியில் மிகவும் நல்ல பலன்கள் உங்களுக்கு நடக்கும்.
இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் வருட முற்பகுதியில் மிகவும் யோகமான நிகழ்ச்சிகளை
சந்திப்பீர்கள். எதிர்கால வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போடும் காலம் இது.
எதிர்காலத்தில் நீங்கள் எந்தத் துறையில் இருக்கப் போகிறீர்கள் என்பதை இந்த
வருடம் நிர்ணயிக்கும் என்பதால் மிகவும் பயனுள்ள வருடமாகும் இது.
கூட்டுத் தொழிலில் இதுவரை இருந்த வந்த கருத்து வேறுபாடுகளும், மந்தமான
நிலைமையும் மாறி தொழில் நல்லபடியாக நடக்கும். நண்பர்களும், பங்குதாரர்களும்
உதவிகரமாக இருப்பார்கள். தந்தையின் ஆதரவு கிடைக்கும். தந்தை வழி உதவிகள்
நன்றாக இருக்கும். அப்பா வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டு. தர்ம காரியங்கள்
செய்ய முடியும். அறப்பணிகளில் ஈடுபட்டு நல்ல பெயர் வாங்குவீர்கள்.
விவாகரத்து வழக்குகளுக்கு நல்லவித முடிவு இருக்கும். சகோதர சகோதரிகளிடம்
இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கி சுமுக நிலைமை பிறக்கும். கலைஞர்கள்
வாய்ப்புக்கள் கிடைக்கப் பெறுவீர்கள். இது வரை வராமல் இருந்த சம்பளப் பாக்கி
இப்போது வரும். தொழிலாளர்களுக்கு நிர்வாகத்துடன் இருந்து வந்த கசப்புகள்
நீங்கி புது வழி பிறக்கும்.
இளைஞர்களின் மனம் சந்தோஷப்படும்படியான நிகழ்ச்சிகளும், பணவரவும், உங்களால்
வீட்டிற்கு புதிதாக ஏதேனும் பொருள் சேர்க்கையும் இருக்கும். இதுவரை திருமணம்
ஆகாதவர்களுக்கு கல்யாணம் உறுதியாகும். நல்லவேலை கிடைக்காமல் அவதிப்பட்டுக்
கொண்டிருந்த இளைய பருவத்தினருக்கு நல்ல இடத்தில் வேலை கிடைத்து செட்டில்
ஆவீர்கள். நீண்டநாட்களாக எதிர்பார்த்திருந்த ஒரு தொகை வரும். சிரமங்கள்
அனைத்தும் தீரும்.
புனித யாத்திரைகள் இப்போது செல்ல முடியும். வயதானவர்கள் காசி, கயா யாத்திரைகள்
செல்வீர்கள். இஸ்லாமியர்களுக்கு புனித ஹஜ் பயணம் செல்லும் வாய்ப்பை இறைவன்
அருளுவார். பெரிய மகான்களின் தரிசனம் கிடைக்கும். ஞானிகளின் ஜீவ சமாதிக்கு
சென்று அவர்களின் அருளாசி பெறும் பாக்கியம் கிடைக்கும்.
வெளிநாட்டு விஷயங்கள் நல்லபலன் அளிக்கும் என்பதால் இப்போது வெளிநாட்டு
வேலைக்கோ அல்லது வெளி தேசத்தில் மேற்படிப்பு படிக்கவோ செல்ல முடியும். அதனால்
நன்மைகளும் இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு இப்போது இருக்கும் வாகனத்தை விட
நல்ல வாகனம் அமையும். வாகன மாற்றம் செய்வீர்கள். பங்குச்சந்தை யூகவணிகம்
போட்டி பந்தயங்களில் லாபம் கிடைக்கும்.
இதுவரை இழுபறியில் இருந்து வந்த பேச்சு வார்த்தைகள், நடவடிக்கைகள் உங்களுக்கு
சாதகமாக முடிவுக்கு வரும். இனிமேல் வராது என்று கை விடப்பட்ட பணம் கிடைக்கும்.
வயதான பெற்றோரைக் கொண்டவர்கள் அவர்களுடைய உடல் நலத்தில் சிறு பிரச்னை
இருந்தாலும் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்வது நல்லது.
பெற்றோரால் விரயங்கள் இருக்கக் கூடும்.
பொருளாதார சிக்கல்கள் தீரும். பூர்வீகச் சொத்தில் இதுவரை இருந்து வந்த
வில்லங்கம் தீர்ந்து உங்கள் பங்கு உடனே கிடைக்கும். பங்காளித் தகராறுகள்
சுமுகமாகத் தீர்த்து வைக்கப்படும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த
பிரச்னைகள் தீரும். பதவி உயர்வு உண்டு. இடமாற்றம், கேட்டபடியே கேட்கும்
இடத்தில் கிடைக்கும். கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் தனிக்குடித்தனம்
போக வேண்டிய சூழ்நிலை வரலாம்.
சரக்கு வாகனங்கள் இயக்குவோர், கூலியாட்களை வைத்து வேலை வாங்குவோர்,
மாற்றுத்திறனாளிகளை பராமரிப்போர், பெட்ரோல்பங்க், அநாதை விடுதிகளை நடத்துவோர்,
மதுபானத் தொழில் சம்பந்தப்பட்டோர், விவசாயிகள், நிலத்தரகர்கள், காலிமனை
விற்கும் ரியல் எஸ்டேட்காரர்கள், மருத்துவமனையினர், கடைநிலை ஊழியர்கள்,
காவல்பணி செய்வோர், துப்புரவு தொழிலாளர்கள், ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சித்
தலைவர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்டவர்கள் மிகவும் வளம் பெறுவார்கள்.
வருமானமும் சிறப்பாக இருக்கும்.
இதுவரை சொந்தவீடு இல்லாதவர்களுக்கு இப்போது கடன் வாங்கியோ ஹவுசிங் லோன்
போட்டோ, சொந்த வீடு அமையும். பெருநகரங்களில் உள்ளவர்கள் சொந்த பிளாட்
வாங்குவீர்கள். இருக்கும் வாகனத்தை விட நல்ல சொகுசு வாகனம் வாங்குவீர்கள்.
சிலருக்கு இருக்கும் வாடகை வீட்டை மாற்றி புதிதாக ஒத்திக்கு எடுத்தல்
நடக்கும். இதுவரை இருந்ததைவிட நல்லவீட்டிற்கு இப்போது மாறுவீர்கள். எதை
வாங்கினாலும் வில்லங்கம் இருக்கிறதா என்று தீர விசாரியுங்கள்.
ரியல்எஸ்டேட், வீடு கட்டி விற்போர், திரவம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள்,
காய்கறி மொத்த வியாபாரம், வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதி, சிகப்பு மற்றும்
வெள்ளை நிறம் சம்பந்தப் பட்ட தொழில் செய்பவர்களுக்கு பட்ஜெட்டை மீறி
செலவுகளும் விரயங்களும் இருக்கும் என்றாலும் நல்ல வருமானம் வந்து அனைத்தையும்
ஈடு கட்டும்.
விவசாயிகளுக்கு இது மிகவும் நல்ல வருடம். விளைந்த பயிருக்கு நியாயமான விலை
கிடைக்கும். பணப்பயிர் மற்றும் எண்ணை வித்துகள் போன்றவை பயிரிட்டவர்களுக்கு
இந்த வருடம் லாபம் வரும். கலைஞர்கள் பொதுவாழ்வில் உள்ளவர்கள் மாணவர்கள்
உள்ளிட்ட சகலருக்கும் நன்மை தரும் வருடம் இது.
வருடம் பிறந்ததிலிருந்தே உங்களின் மனவலிமை நன்றாக இருக்கும். எதையும்
சமாளிக்கலாம் என்ற தைரியம் பிறக்கும். மருத்துவம், ஆன்மிகம், எலக்டிரிகல்
எலக்ட்ரானிக்ஸ், அன்றாடம் அழியும் பொருட்கள் போன்ற துறைகளில் இருப்பவர்கள்
மிகப்பெரிய லாபம் அடைவீர்கள். பெண்கள் தொடர்பான துறைகளிலும், அழகு, ஆடம்பரம்,
கலைகள் போன்ற துறைகளிலும் இருப்பவர்களுக்கும் விசேஷமான நல்ல பலன்கள் நடக்கும்.
பெண்களுக்கு குடும்பத்தில் நற்பெயரும், கௌரவமும் கிடைக்கும். உங்களின் ஆலோசனை
குடும்பத்தில் உள்ள ஆண்களால் ஏற்கப்படும். வேலைக்குச் செல்லும் மகளிருக்கு
பதவிஉயர்வு கூடுதல்சம்பளம் போன்ற நல்ல பலன்கள் இருக்கும். நீண்டநாட்களாக
நினைத்திருந்த காரியம் நிறைவேறும். அனைவரிடமும் பாராட்டுப் பெறுவீர்கள்.
கேட்டது கேட்ட இடத்தில் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்திலும்
அலுவலகத்திலும் கௌரவமாக நடத்தப் படுவீர்கள்.
மொத்தத்தில் கும்பத்திற்கு அனைத்து விஷயங்களிலும் நன்மைகளை மட்டுமே தரக்கூடிய
வருடமாக இந்த வருடம் அமையும்.
No comments :
Post a Comment