Tuesday, July 19, 2016

Astro Answers - Guruji Pathilkal - குருஜியின் மாலைமலர் பதில்கள் - 95 (19.7.2016)

ஜெ. சௌமியா, திருவாரூர்.

கேள்வி :

கணவரைப் பிரிந்து மூன்று ஆண்டுகள் ஆகிறது. மீண்டும் சேர்ந்து வாழ வாய்ப்பு உண்டா? அல்லது மறுமணம் ஏற்படுமா? ஏற்படும் என்றால் எப்போது? ஐந்து வயது மகள் என்னோடு இருப்பாளா?


சந்
குரு
ராசி
பு
சூ
செவ்
சனி
சுக்,கே

பதில் :

(ரிஷப லக்னம், மீனராசி. மூன்றில் புத, நான்கில் சூரி. ஐந்தில் சுக், கேது. ஏழில் சனி. எட்டில் செவ். பத்தில் குரு. 24.8.1986, அதிகாலை 1.05, திருவாரூர்)

இதுபோன்ற கேள்விகளுக்கு கணவனின் ஜாதகத்தையும் அனுப்பியிருந்தால் துல்லியமான பலன் சொல்லத் துணையாக இருக்கும். லக்னத்திற்கு ஏழில் சனி, எட்டில் செவ்வாய். ராசிக்கு ஏழில் கேது, நீச சுக்கிரன் போன்ற ஜாதக அமைப்புள்ள உங்களுக்கு சீக்கிரமாகத் திருமணம் செய்தது தவறு.

உங்களுக்கு மீனராசி, மகளுக்கு விருச்சிக ராசியாகி இருவருக்கும் ஏழரை அஷ்டமச்சனிகள் நடந்ததால் குடும்பம் பிரிந்தது. எனது கணிப்பின்படி உங்கள் கணவருக்கும் ஏழரைச்சனி நடக்கும். ஜாதகப்படி உங்களுக்கு இரண்டு திருமண அமைப்பு இல்லை. 2017-ம் ஆண்டு பிற்பகுதியில் குடும்பம் ஒன்று சேரும்.

. புஷ்பராஜா, ஈரோடு.

கேள்வி :

இதுவரை திருமண வாழ்க்கை அமையவில்லை. வரப்போகிற மனைவி மீதும் அவரது குடும்பத்தார் மீதும் மிகுந்த அன்பும், மரியாதையும் வைத்துள்ளேன். நான் எப்போதும் ஒற்றுமையையே விரும்புவேன். அதிகப்படியான பணத்திற்கு ஆசைப்படமாட்டேன். ஆன்மிகத்தில் அதிக நாட்டமுடையவன். எல்லா கடவுள்கள் மீதும் அதிகக் காதல் உண்டு. வருங்கால மனைவி மீது மிகுந்த அன்பு வைத்துள்ளதால் எனக்கு விரைவில் திருமணம் நடைபெறுமா? அல்லது இறைவன் மீதுள்ள காதலால் ஆன்மீக நாட்டத்தில் ஈடுபட்டு துறவறப்பயணம் மேற்கொள்ளலாமா?

சந்
குரு
செவ்
ராசி
சனி

சுக்,சூ 
பு
ரா

பதில் :

(துலாம் லக்னம், மீனராசி. இரண்டில் ராகு, ஏழில் குரு. எட்டில் செவ். பத்தில் சனி. பதினொன்றில் சுக், சூரி, புதன். 25.8.1975, 10.59 காலை, திருச்சி)

தாம்பத்திய சுகத்திற்கு காரணமான சுக்கிரனே லக்னாதிபதியாகி நான்கு டிகிரிக்குள் சூரியனுடன் இணைந்து, அஸ்தமனமுமாகி, வக்ரமும் பெற்று கேதுவின் சாரத்தில் அமர்ந்து நவாம்சத்தில் ராகுவுடன் இணைந்ததால் ஒரு பெண்ணால் கிடைக்கும் சுகம் உங்களுக்கு கிடைக்காது.

மேலும் ஒரு பெண்ணைப் புரிந்து கொண்டு அவள் நினைக்கும் வாழ்க்கையை உங்களால் கொடுக்க முடியாது. இரண்டில் ராகு, எட்டில் செவ்வாய். ஆறுக்குடையவன் ஏழில் அமர்வு என்ற நிலையோடு லக்னமும் ராகுவின் நட்சத்திரத்தில் அமர்ந்திருப்பதால் ஆன்மீகவழிப் பயணமே உங்களுக்கு ஏற்றது.

பி. பழனிச்சாமி, பள்ளிப்பாளையம்.

கேள்வி :

திருமணம் தடைப்பட்டுக் கொண்டே இருக்கிறது. பரிகாரம் தேவையா? ஜாதகத்தில் தடை இருக்கிறதா என்பதை தயவுசெய்து சொல்லும்படி பாதம் வணங்கி கேட்டுக் கொள்கிறேன்.

ராசி

சந்,செ 
வி,ரா
சுக்
சூ,பு
சனி

பதில் :

(கடகலக்னம், சிம்மராசி. இரண்டில் செவ், குரு, ராகு. மூன்றில் சனி. ஐந்தில் சூரி, புத. ஆறில் சுக்.. 11.12.1979, இரவு 10 மணி, ஈரோடு)

லக்னத்திற்கு இரண்டில் செவ்வாய், ராசிக்கு இரண்டில் சனி என்பது குடும்பம் அமைவதற்குத் தடை ஏற்படுத்தினாலும் புத்திரஸ்தானாதிபதியான செவ்வாயும், புத்திரக்காரகன் குருவும் ஆறுடிகிரிக்குள் ராகுவுடன் இணைந்து கடுமையான புத்திரதோஷம் ஏற்பட்டதால்தான் இதுவரை திருமணம் ஆகவில்லை.

ஆயினும் செவ்வாயும், சூரியனும் பரிவர்த்தனை பெற்றதால் நிச்சயமாக திருமணமும், குழந்தைபாக்கியமும் உண்டு. ராகுவிற்கான முறையான பரிகாரங்களைச் செய்யவும். தற்போது நடக்கும் ராகுதசை சுக்கிரபுக்தியில் அடுத்த வருடம் ஏப்ரலுக்குள் திருமணம் நடக்கும்.

எம். சண்முகதுரை, பாவூர் சத்திரம்.

கேள்வி :

தென்மாவட்டங்களில் இருந்துவரும் ஜாதகங்கள் யாவும் வாக்கியப் பஞ்சாங்கப்படியே உள்ளன. திருக்கணிதமே சிறந்தது என்று அடிக்கடி எழுதுகிறீர்கள். நானும் வாக்கியப் பஞ்சாங்க ஜாதகத்தையே அனுப்பியுள்ளேன். இங்கு திருக்கணிதப்படி எழுத யாரும் இல்லை. மகன் பி. . முடித்து முதல் வகுப்பில் வெற்றிபெற்று நான்கு வருடங்கள் ஆகியும் வேலை கிடைக்கவில்லை. அரசுத்தேர்வுகளும் எழுதி வருகிறார். நாங்கள்தான் மாதாமாதம் பணம் அனுப்பி வருகிறோம். எப்போது வேலை கிடைக்கும்?

சுக்
செவ்
சந்
சூ,பு
ராசி
குரு,கே

ல,ரா 
சனி

பதில் :

(மகர லக்னம், மிதுனராசி. லக்னத்தில் சனி, ராகு. இரண்டில் சூரி, புதன். மூன்றில் சுக். ஐந்தில் செவ். ஏழில் குரு, கேது. 24.2.1991, 5.35 காலை, நெல்லை)

திருக்கணிதப்படி ஜாதகம் எழுதுவதற்கு ஆளில்லை என்றால் அருகில் இருக்கும் பெரியநகரங்களில் உள்ள கம்ப்யூட்டர் சென்டர்களில் ஜாதகம் கணித்து வாங்கிக் கொள்ளலாம். மகன் ஜாதகப்படி லக்னாதிபதி சனி ராகுவுடன் இணைந்து வலுவிழந்து இருப்பதும், உச்சசுக்கிரனை உச்சகுரு பார்ப்பதும் இதுவரை வேலை கிடைக்காததற்கான காரணங்கள். அதேநேரத்தில் ஜாதகம் யோகமாக இருப்பதாலும், சிம்மம் வலுவாக இருப்பதாலும் 2017 பிற்பகுதியில் அரசுவேலை கிடைக்கும். அதற்கு முன்னதாக வரும் ஆகஸ்ட்மாதம் தனியார் வேலைக்குச் செல்வார். லக்னாதிபதி சனிபகவானை சூட்சுமவலுப்படுத்தும் முறையான பரிகாரங்களைச் செய்து கொள்ளவும்.

ஆர். ரேவதி, ஆயிக்கவுண்டன்பாளையம்.

கேள்வி :

என்னுடைய சின்னமாமாவுக்கு 37 வயதாகியும் திருமணம் ஆகவில்லை. நாங்கள் கூட்டுக் குடும்பமாக உள்ளதால் வருத்தமாக இருக்கிறது. மாமாவுக்கு ஏன் திருமணம் தாமதம் ஆகிறது? எப்போது திருமணம் நடக்கும்?


சந்
ராசி
செவ்

சனி,ரா 
குரு
பு,சுக்
சூ

பதில் :

(மிதுனலக்னம், கும்பராசி. இரண்டில் செவ். மூன்றில் சனி, குரு, ராகு. ஐந்தில் சூரி. ஆறில் புத, சுக். 30.10.1979, 10.55 இரவு, பெருந்துறை)

நான் அடிக்கடி எழுதி வருவதைப் போல உங்கள் மாமாவின் ஜாதகத்தில் லக்னத்திற்கு இரண்டில் செவ்வாய். ராசிக்கு ஏழில் சனி என்ற அமைப்பு உண்டாகி லக்னாதிபதி புதன், நீசனின் வீட்டில் அமர்ந்து, ஆறில் மறைந்து வலுவிழந்ததாலும், களத்திரஸ்தானாதிபதியும், புத்திரகாரகனுமாகிய குருபகவான் ஒரேடிகிரியில் ராகுவுடன் இணைந்து புத்திர, களத்திரதோஷங்கள் உண்டானதாலும் உங்கள் மாமாவிற்கு திருமணம் ஆகவில்லை.

லக்னாதிபதி புதனை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களையும், ஶ்ரீகாளகஸ்தியில் ராகுவிற்குரிய பிரீத்திகளையும் செய்யும் பட்சத்தில் நடக்கும் சனிதசை சுக்கிரபுக்தியிலேயே திருமணம் நடக்கும்.

இளைய மகனுக்கும், விதவை மருமகளுக்கும் திருமணம் செய்யலாமா?

வை. ராஜூ, திருமங்கலம்.

கேள்வி :

ஶ்ரீகுருஜி அவர்களைப் பணிகிறேன். நான் விஸ்வகர்மா சமூகத்தைச் சேர்ந்தவன். கட்டிட காண்ட்ராக்டரும் கூட. வாஸ்து பற்றி தாங்கள் அளித்த விளக்கங்கள் என் போன்றவர்களுக்கு நல்ல தீர்ப்பாக விளங்கியது. பித்ரு தோஷத்திற்கு நீங்கள் சொன்ன அறிவுரை மனதில் பசுமரத்தாணிபோல் பதிந்திருக்கிறது. என் மூத்தமகனுக்கு நான்கு வருடங்களுக்கு முன்பு திருமணமாகி மூன்றுவயதில் குழந்தை உள்ள நிலையில் சென்ற வருடம் அகாலமரணம் அடைந்து விட்டான். இப்போது மருமகளை இரண்டாவது மகனுக்கு மறுமணம் செய்து வைக்க முடிவெடுத்தோம். நல்ல முடிவு என்று சொந்தங்களும், நண்பர்களும் பாராட்டினாலும் சிலர் இருவரின் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு முடிவெடுங்கள் என்கின்றனர். மகனை இழந்த துக்கம் ஒரு புறம், இந்தக் குழப்பம் ஒருபுறம் என்று நானும் மனைவியும் தவித்து நிற்கிறோம். தங்களின் கருத்துகளையும், விளக்கங்களையும் விடாமல் படித்துக் கொண்டிருப்பவன் நான். இவர்கள் இருவரின் ஜாதகத்தை தங்கள் திருவடிகளில் சமர்ப்பிக்கிறேன். என் குழப்பத்தை அகற்றி என் குடும்பத்தில் விளக்கேற்றி ஒளி தரும்படி வேண்டி கேட்டுக் கொள்கிறேன் . பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்றால் எங்கே என்றும் விளக்க வேண்டுகிறேன் .

சூ,பு
சுக்
ராசி
சந்
ல,வி
செ,கே
சனி

சந்
ராசி
சனி குரு
சூ,ரா பு,செவ் சுக்

பதில்:

(ஆணுக்கு தனுசுலக்னம், சிம்மராசி. லக்னத்தில் குரு. மூன்றில் சுக். நான்கில் சூரி, புத. பதினொன்றில் சனி. பனிரெண்டில் செவ், கேது. 16.3.1984, அதிகாலை 1.00 மணி, மதுரை), 

(பெண்ணிற்கு கும்பலக்னம், மிதுனராசி. ஏழில் குரு. ஒன்பதில் சுக். பத்தில் புத, செவ். பதினொன்றில் சூரி, ராகு. பனிரெண்டில் சனி. 21.12.1991, 11.50 காலை, மதுரை)

முதலில் உங்களையும், உங்கள் மனைவியையும், கூடவே உங்கள் இளைய மகனையும் மனதாரப் பாராட்டுகிறேன். மருமகள், குழந்தை இருவரின் எதிர்காலத்தை எண்ணிப் பார்த்து சிறந்த முடிவு எடுத்த உங்களை இருகரம் கூப்பித் தொழுகிறேன். இதுபோன்ற விஷயங்களுக்கு ஜோதிடம் குறுக்கே நிற்பதில்லை. அப்படி நிற்குமாயின் இது ஒரு மகாசாஸ்திரமும் அல்ல.

மருமகளுக்கு கும்பலக்னமாகி முதல் கணவனைக் குறிக்கும் சூரியன் பௌர்ணமி யோகத்தில் இருந்தாலும் ராகுவுடன் நெருங்கி கிரகணதோஷத்தில் இருப்பதாலும், இரண்டாவது திருமணத்தை குறிக்கும் பதினொன்றாம் அதிபதி குருபகவான் பரிவர்த்தனையாகி வலுப்பெற்று ஏழாமிடத்தில் இருப்பதாலும் இந்த நிலை ஏற்பட்டது.

இளையமகனுக்கு தனுசுலக்னமாகி ஏழாம்அதிபதி ராசியில் நீசம் பெற்று அம்சத்தில் உச்சம் பெற்றதால் இதுபோன்ற அமைப்புள்ள பெண்ணை மணப்பது முற்றிலும் பொருத்தமானதே. இருவருக்கும் சஷ்டாஷ்க தோஷங்களோ ராகு-கேது போன்ற பெரியதோஷங்களோ இல்லாததால், இருவருமே இந்த வாழ்க்கையில் சிறப்பாக வாழ்வார்கள்.

இருவருக்கும் சந்திராஷ்டமம் இல்லாத ஏதேனும் ஒரு நல்ல நாளைத் தேர்ந்தெடுத்து இவர்களை இணைத்து வையுங்கள். நோய் இருந்தால்தான் மருந்து தரமுடியும். இருவரின் ஜாதகப்படி எவ்வித பரிகாரங்களும் தேவையில்லை. குழந்தைகள் சீரும்சிறப்புடனும், தீர்க்காயுளுடனும் சகலபாக்கியங்களுடனும் வாழ எல்லாம் வல்ல பரம்பொருளைப் பிரார்த்திக்கிறேன். வாழ்வார்கள் என்று வாழ்த்துகிறேன்.

No comments :

Post a Comment