Tuesday, August 1, 2017

2017 ஆகஸ்டு மாத நட்சத்திரப் பலன்கள்

அசுவினி:

ஆகஸ்டு மாதம் அஸ்வினி நட்சத்திரக்காரர்களுக்கு எந்த வருத்தங்களையும் தராமல் வசந்த நிலையையும், நல்ல வாய்ப்புகளையும் மட்டுமே தரும் மாதமாக இருக்கும். அலுவலகத்தில் டிரான்ஸ்பர், பதவிஉயர்வுடன் கூடிய இடமாற்றம் போன்றவைகள் இருக்கலாம். சிலருக்கு கம்பெனி சார்பில் வெளிநாடு பயணங்கள் இருக்கும். அதனால் நன்மைகளும் இருக்கும். இளைய பருவத்தினருக்கு இண்டர்வியூ அழைப்பிற்கான கடிதங்கள் வரும். இதுவரை இழுத்தடித்த வேலை கிடைக்கும். தாயார் வழியில் நன்மைகளும், அம்மாவின் ஆசிர்வாதங்களும் கிடைக்கும். குறிப்பிட்ட சிலருக்கு தாய்வழி சீதனம் போன்று ஏதேனும் கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது.

பரணி:

உங்கள் நட்சத்திரநாதன் சுக்கிரன் சனியின் பார்வையில் இருப்பதால் கெடுபலன்கள் எதுவும் நடக்காவிட்டாலும் ஏதேனும் தவறாக நடந்துவிடுமோ என்ற மனக்கலக்கத்தை தரும் மாதமாக ஆகஸ்டு இருக்கும். எட்டில் இருக்கும் சனியால் கணவன் மனைவியிடையே கருத்துவேறுபாடு வருவதற்கு இடமிருக்கிறது என்பதால் இப்போதிலிருந்தே அது வராமல் இருக்கக்கூடிய முயற்சிகளை தம்பதிகள் எடுத்துக் கொள்வது நல்லது.. மனைவியின் பேச்சை கேட்பதனால் ஒன்றும் குறைந்து விடாது என்பதால் முக்கியமான விஷயங்களில் தம்பதிகள் இருவரும் கருத்தொற்றுமையோடு முடிவெடுப்பது நல்லது. இதனால் செலவுகள் குறையும்.

கிருத்திகை:

பெண்களுக்கு நன்மை தரும் மாதம் இது. எதிர்காலத்தில் நீங்கள் வளமான வாழ்க்கை வாழக்கூடிய அமைப்புக்கு அஸ்திவாரம் போடும் மாதமாக இது அமையும். சில புதிய அறிமுகங்கள் இப்போது உங்களுக்கு உண்டு. அதனால் நன்மைகளும் உண்டு. குறிப்பிட்ட சிலருக்கு தந்தைவழி உறவினர்களால் லாபம் கிடைக்கும். அப்பாவின் ஆசிர்வாதத்தால் சில நன்மைகளைப் பெறுவீர்கள். பூர்வீக சொத்தில் வில்லங்கம் இருந்தவர்களுக்கு தீர்வு கிடைக்கும். வழக்குகள் இனிமேல் உங்களுக்கு சாதகமாக திரும்பும். உங்களில் ரிஷப ராசியினருக்கு எட்டில் சனி மாற இருப்பதால் புதிய முயற்சிகள் எதுவும் இப்போது வேண்டாம். இருக்கும் வேலையிலிருந்து மாறுவதிலும் கவனம் வேண்டும்.

ரோஹிணி:

பெண்கள் விஷயத்தில் செலவு இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு இந்த மாதம் நீண்டதூரப் பயணங்கள் அமையும். பயணங்களால் நன்மைகள் உண்டு. வெளியூர் மாறுதல், செக்சன் மாறுதல் இருக்கும். பிள்ளைகளால் பெருமைப்படத்தக்க சம்பவங்களும் செலவுகளும் உண்டு. தாயார்வழியில் நல்ல விஷயங்களும் அம்மாவின் மூலம் ஆதாயங்களும் வரும். வெளிநாடு யோகம் உண்டு. வீட்டிற்கான ஆடம்பர பொருள்கள் வாங்குவீர்கள். இளைய பருவத்தினருக்கு இந்தமாதம் முக்கியமான திருப்புமுனைகள் இருக்கும். அறிவால் எதையும் சாதிப்பீர்கள். மற்றவர்கள் பொறாமையாக பார்க்கும் அளவிற்கு ஊக்கத்துடன் செயல்படுவீர்கள்.

மிருகசீரிடம்:

குறிப்பிட்ட சிலருக்கு தந்தை வழி உறவில் கசப்புகளும், கருத்து வேற்றுமைகளும் ஏற்படுவதோடு உங்களுடைய பிடிவாத குணத்தால் மற்றவர்களுடன் நீங்கள் ஒத்துப்போக முடியாத சூழ்நிலை உள்ள மாதமாகவும் இருக்கும். ஆன்மிக விஷயங்களில் அதிகமாக ஈடுபாடு கொள்வீர்கள். சிலருக்கு ஆலயத் திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். தாயார் விஷயத்தில் சொல்லிக் கொள்ளும்படியான நன்மைகள் இருக்கும். தாயார்வழி உறவினர்கள் உதவுவார்கள். உயர்கல்வி கற்க விரும்பும் சிலருக்கு அதற்கான ஆரம்பங்கள் இருக்கும். இதுவரை சொந்தவீடு அமையாதவர்கள் இப்போது செய்யும் முயற்சிகள் பலன் அளிக்கும். வெளிநாடு யோகம் உண்டு. வீட்டிற்கான ஆடம்பர பொருள்கள் வாங்குவீர்கள்.

திருவாதிரை:

தாராளமான பணவரவு இப்போது உண்டு. நீண்டநாட்களாக எதிர்பார்த்திருந்த ஒரு பெரியதொகை கிடைக்கும். குழந்தைகள் விஷயத்தில் செலவுகளோ, விரயங்களோ வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக, பெண் குழந்தைகளை சற்று அக்கறையுடன் பார்த்து கொள்வது நல்லது. பத்தாமிடம் வலுப்பெற்று இருப்பதால் வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் தொழில் வைத்திருப்பவர்கள் வேலை செய்பவர்களுக்கு இந்த மாதம் மிகவும் நன்மைகளைத் தரும். உற்சாகமாக இருப்பீர்கள். நண்பர்கள் உதவி கிடைக்கும். பெண்களால் செலவுகள் உண்டு. அன்னிய இன, மத, மொழிக்காரர்கள் உதவுவார்கள். வாழ்க்கைத் துணையால் வரவுகளும் ஆதாயங்களும் இருக்கும்.

புனர்பூசம்:


தந்தைவழி உறவினர்களால் சங்கடங்கள் உண்டு. சிலருக்கு பெண்களால் பிரச்சினைகள் இருக்கும். வருமானத்தை விட அதிக செலவு வரும். எதிலும் சிக்கனமாக இருங்கள். இந்த மாதம் தந்தையைப் பற்றிய கவலைகள் வரும். வயதான தந்தையை கொண்டவர்கள் அவருடைய ஆரோக்கியத்தில் அக்கறை வைக்க வேண்டும். சிலருக்கு பூர்வீகச் சொத்துகள் சம்பந்தமான வில்லங்கங்கள் கிளம்பும். ஆறாம் பாவம் வலுப்பெறுவதால் நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களின் உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டியது இருக்கும். சிலருக்கு தொழில்மாற்றம், ஊர்மாற்றம், வீடுமாற்றம் போன்றவை ஏற்படும்.

பூசம்:

பெண்களுக்கு அலுவலகத்திலும் வீட்டிலும் மதிப்புக் கூடும்படியான சம்பவங்கள் இருக்கும். தொழில், வேலை, வியாபாரம் போன்றவைகளில் நல்லவைகள் நடக்கும். அலுவலகத்தில் உங்களுக்கு சாதகமான மாற்றங்கள் இருக்கும். அரசு ஊழியர்களுக்கு இதரவருமானங்கள் சிறப்பாக இருக்கும். தனியார் துறையினருக்கு கூடுதல் வருமானம் உண்டு. ஆறாமிடம் வலுப்பெறுவதால் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். நண்பனைப் போல உங்களுடன் சிரித்துப் பழகிய ஒருவர் துரோகியாக மாறலாம். செய்யாத குற்றத்திற்கு வீண்பழி வரும் வாய்ப்பு இருக்கிறது. வம்பு வழக்கு ஏதேனும் வரலாம் என்பதால் அனைத்து விஷயங்களிலும் யோசித்து செயல் படுவது நல்லது.

ஆயில்யம்:

குறைகள் எதுவும் இல்லாத மாதமாக இது இருக்கும். இதுவரை மந்தமாக இருந்து வந்த தொழில், வியாபாரம் போன்றவைகள் இனிமேல் விறுவிறுப்புடன் நடக்க ஆரம்பிக்கும். கடன் தொல்லைகளால் அவதிப்பட்டவர்களுக்கு கடன் பிரச்னைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். தாயார்வழியில் நல்ல விஷயங்களும் அம்மாவின் மூலம் ஆதாயங்களும் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. சிலருக்கு இதுவரை தாமதித்து வந்த வேலை வாய்ப்புக்கள் இனிமேல் நல்லபடியாக கிடைக்கும். பணியில் இருப்போருக்கு இருந்து வரும் சிக்கல்கள் தீரத் தொடங்கும். அலுவலகங்களில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். உங்களின் ஆலோசனையும், அறிவுரையும் ஏற்கப்படும். கலைஞர்கள் சிறப்பு பெறுவார்கள்.

மகம்:

மகத்திற்கு அனைத்து விஷயங்களிலும் தடைகள் ஏற்பட்டு சுலபமாக நடக்கக்கூடிய விஷயங்கள் கூட கிணற்றில் போட்ட கல்லாக கிடக்கும் மாதமாக இது இருக்கும். அதே நேரத்தில் எட்டாமிடம் வலுப்பெறுவதால் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டமாக ஒரு நல்ல பணவரவும் இந்தமாதம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வந்த எதிர்ப்புகள் விலகும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். நீண்ட நாட்கள் உடல் நலம் இல்லாமல் இருந்தவர்கள் இப்பொழுது குணம் அடைவார்கள். வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் இருக்கும். சிலருக்கு ஊரை விட்டு டிரான்ஸ்பர் ஆகுதல், வெளிமாநிலம், வெளிநாடு போன்றவைகளில் வேலை கிடைத்தல், வீடு மாற்றுதல் போன்ற பலன்கள் இப்போது நடக்கும்

பூரம்:

வெகுநாட்களுக்கு பிறகு பூரம் நட்சத்திரத்தைச் சேர்ந்த இளைய பருவத்தினருக்கு பொருளாதார நிலைமை மேம்படும். உங்கள் கையில் பணம் இல்லாமல் இருந்த நிலை மாறும். செலவிற்கு அடுத்தவர் கையை நம்பியிருந்த நிலைமை மாறி சொந்தமாக இனிமேல் சம்பாதிப்பீர்கள். மனஅழுத்தத்திலிருந்தும் விடுபடுவீர்கள். முப்பது வயதுக்குட்பட்டவர்களுக்கு வேலை விஷயத்தில் நல்ல தகவல்கள் இனிமேல் உண்டு. தன்னுடைய திறமையை முதலீடாக வைத்து சம்பாதிப்பவர்களுக்கு நல்ல பணவரவு இருக்கும். அரசு தனியார் துறை ஊழியர்களுக்கு இருந்து வரும் வேலை நெருக்கடிகள் பணிச்சுமை போன்றவைகள் இப்போது விலகும். அர்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கத்தில் இருக்கும் உங்களுக்கு இந்த மாதம் நல்ல பலன்கள்தான்.

உத்திரம்:

உத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு எவ்விதமான பிரச்னைகளும் இன்றி இந்தமாதம் நல்லமாதமாகவே இருக்கும். அதே நேரத்தில் வாழ்க்கைத்துணை மூலம் லாபங்களும் வரவுகளும் உள்ள மாதமாகவும் இருக்கும். எதிர்பார்க்கும் இடத்தில் இருந்து பணம் கிடைப்பதில் தடைகள் இருக்கலாம். குறிப்பிட்ட சிலருக்கு கடன் வாங்க வேண்டிய நெருக்கடிகள் இருக்கும். கடன்காரர்களுக்கு சொல்லும் தேதியில் பணம் தரமுடியாமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது. இந்த மாதத்தில் செலவுகளும், அலைச்சல்களும் வீண் தொந்தரவுகளும் இருக்கும். என்னதான் தடைகள் என்றாலும் யோகாதிபதிகள் வலுப்பெறுவதால் பிரச்னைகளை சமாளிக்கும் தைரியம் உங்களுக்கு உண்டாகும்.

அஸ்தம்:

உங்களுடைய எண்ணங்கள் யாவும் பலிக்கும் மாதமாக இது இருக்கும். சிலர் வெளிநாடு செல்வீர்கள். பிறந்த நாட்டை விட்டு வேறு நாட்டில் இருப்பவர்களுக்கு நன்மைகள் நடைபெறும். குறிப்பிட்ட சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் இந்த மாதம் உண்டு. கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். சில உல்லாச அனுபவங்கள் உண்டு. அம்மாவின் வழியில் மனவருத்தங்கள் மற்றும் செலவுகள் இருக்கும். வயதான தாயாரைக் கொண்டவர்கள் அவரின் உடல்நல விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. குறிப்பிட்ட சிலருக்கு வீடு விஷயமான கடன்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இளைய பருவத்தினருக்கு இந்த மாதம் முக்கியமான திருப்புமுனைகள் இருக்கும்.

சித்திரை:

சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு அனைத்து விஷயங்களிலும் நல்ல பலன்களையும் நிம்மதியையும் தரக்கூடிய அமைப்பு இருப்பதால் ஆகஸ்டு மாதம் ஆனந்த மாதமாக இருக்கும். இளைய பருவத்தினருக்கு எதிர்கால வாழ்க்கைக்கான திருப்புமுனை சம்பவங்கள் இந்த மாதம் நடக்கும். சிலர் தங்களுடைய வாழ்க்கைத் துணைவரை இப்போது சந்திப்பீர்கள். நட்சத்திரநாதன் நீசபங்க வலு பெற்றதால் எதையும் சமாளிப்பீர்கள். பணவரவிற்கு இந்த மாதம் பஞ்சம் இல்லை. நம் பணம் இல்லையென்றாலும் ஏதாவது ஒருவகையில் பணம் பாக்கெட்டில் இருக்கும். முதல் திருமணம் தோல்வியில் முடிந்தவர்களுக்கு இரண்டாவது வாழ்க்கை நல்லமுறையில் அமைவதற்கான ஆரம்பங்கள் இப்போது இருக்கும்.

சுவாதி:

இந்தமாதம் உங்களுக்கு எரிச்சலூட்டும் சம்பவங்கள் நடக்கும் என்பதால் எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைப்பிடியுங்கள். யாரிடமும் கோபப்பட வேண்டாம். அலுவலகத்தில் வீண் வாக்குவாதங்களைத் தவிருங்கள். இந்த மாதம் உங்களின் நண்பர்களே உங்களின் கோபம் பிடிக்காமல் விலகிப் போக வாய்ப்பு இருக்கிறது. அதிகாரம் செய்யக்கூடிய பதவியில் இருப்பவர்களுக்கு இரண்டுங்கெட்டான் நிலை இருக்கும். சிலர் இரண்டு அதிகார மையத்துடன் போராடுவீர்கள். உங்களைப் புரிந்து கொள்ளாமல் சிலர் உங்களை விட்டு விலகுவார்கள். கணவன் மனைவிக்கு இடையே இதுவரை கருத்து வேறுபாடுகள் நீங்கும். குழந்தைகள் மூலமான நன்மைகள் இருக்கும்.

விசாகம்:

அலுவலகத்திலோ அல்லது ஏதேனும் ஒரு அமைப்பிலோ தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு துறைரீதியான நெருக்கடிகள் இருக்கும். நீங்கள் செய்வது தவறாகவே இருந்தாலும் இப்போது அதை ஒத்துக்கொள்ள மாட்டீர்கள். உங்களின் பிடிவாத குணம் அதிகரிக்கும். பணிபுரியும் இடங்களில் உங்களுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த சிலர் முயற்சிப்பார்கள். நடுத்தரவயதை தாண்டியவர்கள் உடல்நலத்தில் அக்கறை காட்ட வேண்டியது அவசியம். தந்தைவழியில் நன்மைகளும், பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகளும் கிடைக்கும். என்னதான் பிரச்னைகள் என்றாலும் பணவரவு எனப்படும் வருமானம் குறையாது என்பதால் ஆகஸ்டு மாதம் உங்களுக்கு நல்லமாதம்தான்.

அனுஷம்:


வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடு வரும் என்பதால் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். அலுவலகங்களில் யாரையும் நம்ப வேண்டாம். மனதில் உள்ளதை எவ்வளவு தெரிந்தவராக இருந்தாலும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். நம்பிக்கைத் துரோகம் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் எந்த ஒரு விஷயத்தைப் பற்றி பேசும் பொழுதும் வார்த்தைகளில் கவனமாக இருங்கள். குறுக்குவழி சிந்தனைகள் இந்த மாதம் வேண்டாம். எதிலும் நேர்மையை கடைப்பிடிப்பது நல்லது. தேவையற்ற வீண்பழி, கைப்பொருள் திருட்டுப் போகுதல், நம்மைப் பிடிக்காதவரின் கை ஓங்குதல் போன்ற பலன்கள் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் எதிலும் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம்.

கேட்டை:

கேட்டைக்கு தேவையற்ற மனக்கலக்கங்களும் சிறிய விஷயங்களை பெரிதாக்கி பார்ப்பதும், எதிர்காலத்தை பற்றிய கவலைகளும் உள்ள மாதமாக இருக்கும். சிலருக்கு இது செலவு செய்யும் மாதமாகவும் இருக்கும். செலவு செய்ய வேண்டும் என்றால் பணவரவும் இருக்கும். எனவே செலவை நினைத்துக் கலங்கத் தேவையில்லை. நீண்ட நாட்களாக வாங்க வேண்டும் என்று நினைத்திருந்த பொருளை வாங்குவீர்கள். தந்தை வழியிலும் செலவுகள் உண்டு. பூர்வீகச்சொத்தில் ஏதாவது மனக்கஷ்டங்கள் வரலாம். வயதான அப்பாவை கொண்டவர்கள் அவருடைய ஆரோக்கியத்தில் அக்கறையுடன் இருங்கள். ஆயினும் எதுவும் எல்லை மீறாது. கடவுள் துணையிருப்பார்.

மூலம்:

உங்களில் சிலருக்கு மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். நண்பனைப் போல உங்களுடன் சிரித்துப் பழகிய ஒருவர் துரோகியாக மாறலாம். செய்யாத குற்றத்திற்கு வீண்பழி வரும் வாய்ப்பு இருக்கிறது. வம்பு வழக்கு ஏதேனும் வரலாம் என்பதால் அனைத்து விஷயங்களிலும் யோசித்து செயல்படுவது நல்லது. நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இது போன்ற கிரகநிலை இருக்கும் நேரங்களில்தான் சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்ற குறைபாடுகள் கண்டுபிடிக்கப்படும். கடன் தொல்லைகளைத் தவிர்க்க கடன் கொடுத்தவரை நேரில் சந்தித்து தவணை வாங்கி கொள்வது நல்லது.

பூராடம்:

உங்கள் செயல்கள் அனைத்திலும் பதற்றமும், படபடப்பும் காணப்பட்டாலும் உங்களுடைய மனோதைரியம் கூடுதலாகும். எட்டில் மாற இருக்கும் ராகுவால் சிலருக்கு சூதாட்டம், பங்குச்சந்தை, லாட்டரி போன்றவைகளில் திடீர் ஆர்வம் வரும். அதனால் நஷ்டங்கள் இருக்கும் என்பதால் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் தற்போது ஸ்பெகுலேஷன் துறைகளில் ஈடுபடவேண்டாம். பணத்தையும் முதலீடு செய்ய வேண்டாம். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். கணவன், மனைவி உறவு அன்யோன்யத்துடன் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இதுவரை இருந்து வந்த அனைத்து தடைகளும் விலகும். மொத்தத்தில் பூராடம் நட்சத்திரக்காரர்களுக்கு முன் எச்சரிக்கை தேவைப்படும் மாதம் இது.

உத்திராடம்:

கிரக நிலைகள் சாதகமாக இருப்பதால் இந்த மாதம் உத்திராடம் நட்சத்திரக்காரர்களுக்கு நல்லபலன்கள் மட்டுமே உண்டு. முதல் திருமணம் கசப்பில் முடிந்து விவாகரத்து ஆனவர்களுக்கு இப்போது இரண்டாவது வாழ்க்கையின் தொடக்கத்திற்கான சம்பவங்கள் இருக்கும். சிலருக்கு ஆன்மீக சம்பந்தப்பட்ட பயணங்கள் உண்டு. வெளிநாடு செல்ல விண்ணப்பித்தவர்களுக்கு நல்ல தகவல்கள் வரும். சிலருக்கு வேற்றுமொழி கற்றுக்கொள்ளும் வாய்ப்பு இப்போது உண்டு. ஏதேனும் ஒரு நல்ல காரியத்துக்கு கடன் வாங்க வேண்டியிருக்கும். ஆறுக்குடையவன் வலுப்பெறுவதால் பிடிக்காத ஒருவரிடம் சந்தர்ப்பவசத்தால் பேசியாக வேண்டி இருக்கும்.

திருவோணம்:

ஆகஸ்டு மாதம் திருவோணம் நட்சத்திரக்காரர்களுக்கு எல்லாவிதமான நன்மைகளையும் தரும் மாதமாக இருக்கும். அதேநேரத்தில் வீடு, வாகனம், தாயார் போன்ற அமைப்புகளில் எதிர்பாராத செலவுகள் வரும் மாதமாகவும் இருக்கும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அனைத்து விஷயங்களையும் மனைவியின் பொறுப்பில் விட்டுவிடுவதன் மூலம் சிக்கல்கள் எதுவும் வராமல் தப்பிக்கலாம். நீண்டநாட்களாக முடியாமல் இழுத்துக் கொண்டிருந்த விஷயத்தை இந்த மாதம் முடித்துக் காட்டி லாபம் பெறுவீர்கள். மூத்த அண்ணன், அக்காக்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். இதுவரை நல்லவேலை கிடைக்காத இளையவர்களுக்கு இந்தமாதம் அந்தக்குறை நீங்கும்.

அவிட்டம்:

எதிலும் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம். அவசரப்பட்டு தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம். கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வீண்வாக்குவாதங்களை தவிருங்கள். அலுவலகங்களில் யாரையும் நம்ப வேண்டாம். மனதில் உள்ளதை எவ்வளவு தெரிந்தவராக இருந்தாலும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். எந்த ஒரு விஷயத்தைப் பற்றி பேசும் பொழுதும் வார்த்தைகளில் கவனமாக இருங்கள். எதிர்பார்க்கும் இடத்தில் இருந்து பணம் கிடைப்பதில் தடைகள் இருக்கலாம். குறிப்பிட்ட சிலருக்கு கடன் வாங்க வேண்டிய நெருக்கடிகள் இருக்கும். கடன்காரர்களுக்கு சொல்லும் தேதியில் பணம் தரமுடியாமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது.

சதயம்:

சதயம் நட்சத்திரக்காரர்களுக்கு குறிப்பிடத் தக்க நற்பலன்கள் தரும் மாதமாக ஆகஸ்டு மாதம் இருக்கும். அதேநேரத்தில் குழந்தைகள் வழியில் செலவு உண்டு. கல்லூரி, பள்ளி செல்லும் பிள்ளைகளை வைத்திருப்பவர்களுக்கு தேவையற்ற விரயங்கள் இருக்கும். நீண்டநாட்கள் சந்திக்காமல் இருந்த நண்பரையோ, மனைவி வழி தூரத்து உறவினரையோ இந்த மாதம் சந்திப்பீர்கள். மாணவர்கள், கலைஞர்கள், அரசு, தனியார்துறை ஊழியர்கள், தொழிலதிபர்கள், மக்கள் பிரதிநிதிகள் போன்ற அனைத்து தரப்பினருக்கும் சிறப்பான மாதம் இது. குறிப்பாக பெண்களுக்கு மிக நல்ல பலன்கள் இந்த மாதம் நடக்கும். சிலருக்கு வேலைவிஷயமாக தூரப்பயணங்கள் அமையும். வடமாநிலங்களுக்குச் செல்வீர்கள்.

பூரட்டாதி:

வாழ்க்கைத்துணை விஷயத்தில் இந்த மாதம் நல்ல அனுபவங்கள் இருக்கும். அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்கள் வீண் அரட்டைகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. நடுத்தர வயதை தாண்டியவர்கள் உடல்நலத்தில் அக்கறை காட்ட வேண்டியது அவசியம். முக்கியத் தேவைக்காக கடன் வாங்க வேண்டியது வரலாம். பெண்கள் விஷயத்தில் செலவு இருக்கும். தேவையற்ற விஷயங்களில் இந்த மாதம் மூக்கை நீட்ட வேண்டாம். அதனால் பிரச்சனைகள் வர வாய்ப்பு இருக்கிறது. ரியல் எஸ்டேட்காரர்கள், பில்டர்ஸ் போன்ற துறையினருக்கு இதுவரை இருந்து வந்த தடைகள் நீங்கி, தொழில் முன்னேற்ற பாதையில் செல்லும். அரசு, தனியார்துறை ஊழியர்கள் நன்மைகளை அடைவார்கள்.

உத்திராட்டாதி:

நட்சத்திரநாதன் சனி நல்லநிலையில் இருப்பதால் இந்தமாதம் உங்களுக்கு யோகமாதமே. அதேநேரத்தில் பஞ்சமஸ்தானத்தில் செவ்வாய் நீச வலுப்பெற்று உள்ளதால் பூர்விக ஊரிலோ, சொத்திலோ மனவருத்தங்கள் தரும் சம்பவங்கள் நடக்கும் மாதமாகவும் இருக்கும். ஏழாமிடம் வலுப்பெறுவதால் திருமணமாகாத இளைய பருவத்தினருக்கு இந்த மாதம் நல்ல செய்திகள் இருக்கும். குறிப்பாக இளம் பருவத்தினர் தங்களுடைய எதிர்கால வாழ்க்கைத் துணைவரை தேர்ந்தெடுக்கக் கூடிய சம்பவங்கள் ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷமான நிகழ்ச்சிகளும் ஒரு சிலருக்கு வீட்டுப்பொருள் சேர்க்கையும் இருக்கும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் உதவிகரமாக இருப்பீர்கள்.

ரேவதி:

ஆகஸ்டு மாதம் ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு செலவுகளைத் தந்தாலும் அதற்கேற்ப பணவரவுகளையும் சுபச்செலவுகள் மூலமாக குடும்ப சந்தோஷங்களையும் தரும் மாதமாக இருக்கும். இதுவரை மந்தமாக இருந்து வந்த வேலை தொழில், வியாபாரம் போன்றவைகள் இனிமேல் விறுவிறுப்புடன் நடக்க ஆரம்பிக்கும். கடன் தொல்லைகளால் அவதிப்பட்டவர்களுக்கு கடன் பிரச்னைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். தாயார்வழியில் நல்ல விஷயங்களும் அம்மாவின் மூலம் ஆதாயங்களும் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. முப்பது வயதுகளில் இருக்கும் இளைஞர்கள் தன்னம்பிக்கையுடன் எதையும் சாதிப்பீர்கள்.

No comments :

Post a Comment