Wednesday, February 1, 2017

மேஷம்: 2017- பிப்ரவரி மாத ராசிபலன்கள்

மேஷம்:

ராசிநாதன் செவ்வாய் பனிரெண்டாமிடத்தில் மறைவது மேஷ ராசிக்கு சாதகமற்ற நிலை என்றாலும் ராசிநாதனே எட்டிற்கும் உடையவனாகி மறைவதாலும், சுக்கிரனுடன் இணைந்து குருவின் பார்வையில் இருப்பதாலும் இந்த மாதம் உங்கள் செயல்களின் மூலம் எதிரிகளையும் எதிர்ப்புகளையும் நீங்கள் வெற்றி கொள்ளும் வாரமாக இருக்கும். பிரச்னைகளை சமாளிக்கும் தைரியம் உண்டாகும்.

கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். கடந்த காலங்களில் இருந்து வந்த பிரச்னைகள் மேஷராசி இளையவர்களுக்கு இனிமேல் இருக்காது. புதியதாக எந்தப் பிரச்னையும் வராது. இருக்கும் பிரச்னைகளும் தீருவதற்கான வழிகள் தெரிய ஆரம்பிக்கும். சிலருக்கு வழி திறக்கும். மேஷத்திற்கு இனிமேல் கஷ்டங்கள் வர காரணங்கள் இல்லை. குறிப்பிட்ட சிலருக்கு இந்த மாதம் கைக்கெட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற நிலை உண்டாகி எதிலும் தாமதத்தை தரும் மாதமாகவும் இருக்கும். தாய்வழி உறவு, பங்காளிகள் போன்ற உறவுகளால் நிம்மதியற்ற நிலைமையும், பெண்கள் மற்றும் பெண்கள் உபயோகப்படுத்தும் விஷயங்களில் செலவுகளும் இருக்கும்.

செவ்வாய் சுபவலு அடைவதால் இதுவரை கருத்து வேற்றுமைகளால் மனச்சங்கடத்தில் இருந்து வந்த தம்பதிகள் ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசி சண்டை நீங்கும் மாதமாக இது இருக்கும். அதே நேரத்தில் எதிர்பார்க்கும் இடத்தில் இருந்து பணம் கிடைப்பதில் தடைகள் இருக்கலாம். சிலருக்கு கடன் வாங்க வேண்டிய நெருக்கடிகள் இருக்கும். கடன்காரர்களுக்கு சொல்லும் தேதியில் பணம் தரமுடியாமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது. தந்தை வழியில் நன்மைகளும், பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகளும் கிடைக்கும்.

1,2,4,5,6,8,9,10,17,18 ஆகிய நாட்களில் பணம் வரும். 18-ம் தேதி மதியம் 12 மணி முதல் 21-ம் தேதி அதிகாலை 1 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகள் எதையும் இந்த நாட்களில் செய்ய வேண்டாம். வேலை, தொழில், வியாபாரம் போன்ற தொழில் விஷயங்களிலும் கவனமாக இருக்க வேண்டும்.

No comments :

Post a Comment