Tuesday, November 1, 2016

மீனம்: 2016 நவம்பர் மாத பலன்கள்

மீனம்:

நீண்டநாட்களாக கோட்சாரநிலைமைகள் நன்கு அமையாத மீனராசிக்காரர்களுக்கு “வராது வந்த மாமணி போல” நவம்பர்மாதம் முழுவதும் ராசிநாதன் குருபகவான் ராசியையும் பார்த்து, உச்சம்பெற்ற இரண்டு, ஒன்பதுக்குடைய செவ்வாயையும் பார்ப்பது நல்லஅமைப்பு என்பதால் இந்தமாதம் எந்த ஒரு வாய்ப்பையும் நீங்கள் வீணடிக்காமல் முன்னேற வேண்டிய மாதமாக இருக்கும். மாதம் முழுவதும் சாதகமான கிரகஅமைப்புகள் இருப்பதால் எந்த ஒரு தயக்கமும், சோம்பலுமின்றி பரம்பொருளைப் பிரார்த்தித்து நீங்கள் எந்த முயற்சிகள் எடுத்தாலும் அனைத்தும் வெற்றியாகும் மாதம் இது.

மீன ராசிக்காரர்களுக்கு தொழில்துறையில் இதுவரை இருந்து வந்த தேக்க நிலை மாறும். இடமாற்றம், வேலைமாற்றம், ஊர் மாற்றம், வீடுமாற்றம் ஆகிய நல்ல மாற்றங்கள் ஏற்படும். எதிர்ப்புகள் எது வந்தாலும் எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். வெற்றி உங்களுக்கே. பொதுவாக மீனத்தினர் நேர்மையானவர்களாக, தன்னம்பிக்கை உள்ளவர்களாக, அடுத்தவர்களை வாழ வைப்பவர்களாக இருப்பீர்கள். இதுவே உங்களுக்கு மிகப் பெரிய கண் திருஷ்டியாக அமையும்.

கணவன்-மனைவி உறவில் இனிமேல் ஒருவருக்கு ஒருவர் புரிந்துணர்வு ஏற்படும். இதுவரை மற்றவரை புரிந்து கொள்ளாதவர்கள். அடுத்தவரின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பணவரவு நன்றாகவே இருக்கும். என்ன பிரச்னை ஏற்பட்டாலும் அடிப்படை தேவைகள் நிறைவேறிவிடும். அரசியல்வாதிகளுக்கு நல்லநேரம் இது. மேலிடத்தின் பார்வையில் உங்களின் உழைப்பு தென்பட்டு பதவிகள் கிடைக்கும். திருப்தியான மாதம் இது. எண்ணியது எண்ணியபடி நடக்கும். குடும்பத்தில் சுபிட்ஷம் நிலவும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள். வியாபாரிகளுக்கு எதிர்பாராத லாபம் உண்டு.

1,2,3,6,8,10,11,16,17,22,24 ஆகிய நாட்களில் பணம் வரும். 26-ம் தேதி அதிகாலை 2 மணி முதல் 28-ம் தேதி மதியம் 2 மணிவரை சந்திராஷ்டமநாட்கள் என்பதால் மேற்கண்ட நாட்களில் புதியஆரம்பங்கள், தொழில்மாற்றங்கள், வேலை முயற்சிகள் எதையும் செய்ய வேண்டாம். யாருடனும் சண்டை போடாமல் இருப்பது நன்மையை தரும்.

No comments :

Post a Comment