Tuesday, November 1, 2016

மேஷம்: 2016 நவம்பர் மாத பலன்கள்

மேஷம்:

நவம்பர் மாத ஆரம்பமே சந்திராஷ்டம தினத்தில் ஆரம்பித்தாலும் ராசிநாதன் செவ்வாய் உச்சபலத்தில் இருப்பதால் உங்களுக்கு நல்லபலன்கள் நடக்கும் மாதமாக இருக்கும். குறிப்பாக ராசிநாதனின் வலுவால் உங்களின் மதிப்புக் கூடும்படியான நிகழ்வுகளும், சந்தோஷம் தரக்கூடிய சம்பவங்களும் இந்தமாதம் உண்டு. அஷ்டமச் சனியின் ஆதிக்கத்தினால் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் மேஷத்தினருக்கு கடல்நடுவே மிதக்கும் போது கைக்கெட்டிய தூரத்தில் படகு நிற்பதை போன்ற மாதம் இது.

பிறந்ததேசத்தை விட்டு வெளிநாட்டில் இருக்கும் மேஷராசிக்காரர்களுக்கு இந்தமாதம் திருப்புமுனையான நல்ல சம்பவங்கள் இருக்கும். ஒரு சிலர் தங்களுடைய எதிர்காலவாழ்க்கைக்கு உதவும் நபர்களை இப்போது சந்திப்பீர்கள். ஆறாமதிபதி வலுப்பெறுவதால் நடுத்தரவயதை தாண்டியவர்கள் உடல்நலத்தில் அக்கறை காட்டுவது நல்லது. சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்ற நீண்டகால குறைபாடு உள்ளவர்கள் அடிக்கடி பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

ராசிநாதன் உச்சபலத்துடன் அமர்ந்து ராசியைப் பார்ப்பதால் இந்தமாதம் குடும்பத்தில் நல்ல நிகழ்ச்சிகளும் பணவரவுகளும் உள்ள மாதமாக இருக்கும். மனைவி மற்றும் பங்குதாரர்கள் வழியில் லாபங்களும் அனுசரணையான போக்குகளும் இருக்கும். குறிப்பாக வேலைக்கு செல்லும் மனைவியால் உதவிகளும் தேவைகளை நிறைவேற்றுதலும் இருக்கும். கலைஞர்கள், விவசாயிகள், வியாபாரிகள் போன்ற துறையினருக்கு இந்த மாதம் நல்ல மாதம் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை.

4,5,6,11,12,13,19,20,22,24 ஆகிய நாட்களில் பணம் வரும். மாத ஆரம்பத்தில் 1-ம் தேதி காலை 8 மணி முதல் 3-ம் தேதி இரவு 9 மணி வரையும், மாதக்கடைசியில் 28-ம்தேதி மதியம் 2 மணி முதல் டிசம்பர் 1-ம் தேதி அதிகாலை 3 மணி வரையும் சந்திராஷ்டம தினங்கள் என்பதால் இந்த நாட்களில் நீண்ட தூர பிரயாணங்களை செய்ய வேண்டாம். சனியும், சந்திரனும் ஒன்று சேர்வதால் மேற்கே போவதை கூடுமானவரை தவிர்க்கவும்.

No comments :

Post a Comment