Thursday, September 1, 2016

மேஷம்: 2016 செப்டம்பர் மாத பலன்கள்

மேஷம்:

தனாதிபதி சுக்கிரன் மாத ஆரம்பத்தில் பலவீனமாகி பணவரவுகளில் நெருக்கடி நிலையை தந்தாலும் அதன் பிறகு பலம் பெறுவதால் மாதத்தின் பிற்பகுதியில் உங்களிடம் சரளமான பணப்புழக்கம் இருக்கும். எந்தப் பிரச்னையும் எல்லை மீறி போகாது. அனைத்தையும் உங்களால் சமாளிக்க முடியும் ஐந்தாம் வீட்டில் ராகு இருப்பதால் பிள்ளைகள் விஷயத்தில் மனக்கவலைகள், விரயங்கள், சங்கடங்கள் இருந்தவர்களுக்கு தற்போது ஐந்துக்குடையவன் ஆட்சி பெறுவதால் அவர்கள் மூலம் நல்லவைகளை எதிர்பார்க்கலாம். பிள்ளைகளால் தொந்தரவுகள் இருக்காது.

பொதுவாக இது தொல்லைகள் இல்லாத மாதம்தான். சிலருக்கு மட்டும் கடன் பிரச்னைகள் கலக்கத்தை கொடுக்கும். கடன் தொல்லைகளைத் தவிர்க்க கடன் கொடுத்தவரை நேரில் சந்தித்து தவணை வாங்கி கொள்வது நல்லது. நடுத்தர வயதை கடந்தவர்கள் தங்கள் உடல்நலனில் அக்கறை காட்டுங்கள். அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்கள் வீண் அரட்டைகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. அதனால் சிக்கல்கள் வரலாம். என்ன இருந்தாலும் பணப் பற்றாக்குறை வராது என்பதால் வீட்டிற்குத் தேவையான அனைத்தையும் செய்து விடுவீர்கள். சிலருக்கு நீண்ட தூரப் பிரயாணங்கள் இந்த மாதம் உண்டு.

ராசிநாதன் செவ்வாய் இந்தமாதம் சனியிடமிருந்து விலகுவதால் மேஷராசிக்காரர்கள் இந்தமாதம் தங்களின் ஜென்மநட்சத்திர தினத்திலோ, அல்லது ஒரு செவ்வாய்கிழமையிலோ தமிழ்வேளாம் குமரக்கடவுளின் கோவிலுக்கு சென்று வழிபடுவது நன்மைகளைத் தரும். பத்தொன்பது மிளகை முடிச்சாக கட்டி அந்த முடிச்சை புது மண் அகல்விளக்கில் இட்டு நல்லெண்ணெய் ஊற்றி காலபைரவருக்கு சனிக்கிழமைதோறும் ஏற்றுவதும் சிரமங்களை குறைக்கும்.

1,2,4,5,6,11,18,19,20,26 ஆகிய நாட்களில் பணம் வரும். 7-ந்தேதி இரவு 7 மணி முதல் 10-ந்தேதி காலை 7 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் எந்த ஒரு விஷயத்திலும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மேற்கண்ட நாட்களில் தூரப் பிரயாணங்களை தவிர்க்கலாம். புதிதாக ஒருவரை அறிமுகப்படுத்திக் கொள்வதும் இந்த நாட்களில் வேண்டாம்.

No comments :

Post a Comment