Thursday, September 1, 2016

சிம்மம்: 2016 செப்டம்பர் மாத பலன்கள்

சிம்மம்:

இந்தமாதம் பாதிநாள் வரை சிம்மநாதன் சூரியன் ஆட்சி பெற்ற நிலையிலும் அதன்பின் அவரது நண்பரான உச்சபுதனுடன் இணைந்தும் இருக்கிறார். சிம்ம ராசிக்காரர்களுக்கு குருபகவான் சாதகமான நிலையில் தனஸ்தானத்திலும் இருப்பதால் தற்போது உங்களுக்கு தொட்டது துலங்கும் காலம் என்பதால் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி சிம்மத்தினர் தங்கள் எதிர்கால நல்வாழ்க்கைக்கான அடிப்படைகளை இப்போது அமைத்துக் கொள்ளுங்கள்.

ராசிநாதன் வலுவாக இருப்பதால் உங்கள் சிந்தனை, செயல்திறன், ஆக்கம், ஊக்கம் அனைத்தும் மிகச்சிறப்பான நிலையில் இருக்கும். சாதனைகள் புரிய முடியும். அரசு ஊழியர்கள், தனியார் துறையினர், நெருப்பு சம்மந்தப்பட்ட தொழில் புரிவோர், பொதுவாழ்க்கையில் இருப்போர், மக்கள் பிரதிநிதிகள் போன்றவருக்கு இந்த மாதம் மிகச்சிறப்பான பணவரவும், அந்தஸ்தும், கௌரவமும் கிடைக்கும். நீண்ட நாள் நிலுவையில் இருந்த தகப்பனார்வழி பூர்வீகச்சொத்து கிடைக்கும். தந்தையின் அன்பையும், ஆதரவையும் பெற முடியும்.

மாணவர்களுக்கு கல்லூரிகளில் ஜாலியான அனுபவங்கள் இருக்கும். படிப்பைத் தவிர மற்ற எல்லா வேலைகளையும் செய்யவீர்கள். சிம்மராசி பெண்களுக்கு இது அற்புதமான மாதமாகும். ஆண்கள் உங்களுக்கு அடங்கி நடப்பார்கள். இதுநாள் வரை தொந்தரவு கொடுத்த மேலதிகாரி மாறுதலாகி உங்களுக்கு சாதகமானவர் அந்த இடத்திற்கு வருவார். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் பெருமைப்படுவீர்கள். பிள்ளைகள் சம்மந்தப்பட்ட நல்ல செய்தி கிடைக்கும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். செப்டெம்பர் மாதம் சிலருக்கு திருப்பங்களைக் கொடுக்கும் என்பதால் இந்த மாதம் நல்ல மாதமே.

1,4,5,6,7,8,20,21,22,28,29 ஆகிய நாட்களில் பணம் வரும். 17-ந்தேதி அதிகாலை 12.30 மணி முதல் 19-ந்தேதி அதிகாலை 1 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்றாலும் சந்திரன் குருவின் பார்வையில் இருப்பதால் கெடுதல் எதுவும் நடக்காது. இருந்தாலும் நீண்ட தூர பிரயாணங்கள் புதிதாக தொழில் ஆரம்பித்தல், முக்கிய முடிவுகள் எதுவும் எடுத்தல் போன்றவைகளை செய்ய வேண்டாம்.

No comments :

Post a Comment