Tuesday, 15 December 2015

Astro Answers - Guruji Pathilkal - குருஜியின் மாலைமலர் பதில்கள் - 66 (15.12.2015)

எஸ். நாகராஜன், வடசேரி

கேள்வி:

பு
சூ 
கே

சுக் 
செவ்
ராசி
சந்
சனி
குரு


57 வயதாகிறது எந்த வியாபாரம் செய்தாலும் தடைப்படுகிறது. ஜோதிட ரீதியாக நல்வாழ்வு வாழ வாய்ப்பு உள்ளதா? ஏன் தடை என்று சொல்ல முடியுமா? சொத்திலும் எனக்குப் பங்கு தராமல் தந்தை மூன்றாவது மகனுக்கும் ஐந்தாவது மகனுக்கு கொடுத்திருக்கிறார். விடிவுகாலம் எப்பொழுது?

பதில்:

(கன்னிலக்னம், கடகராசி. இரண்டில் குரு. நான்கில் சனி. ஆறில் சுக், செவ். ஏழில் புத. எட்டில் சூரி, கேது)

கன்னி’லக்னமாகி லக்னாதிபதி புதனே தொழிலுக்கும் அதிபதியாகி நீசமாகி வலுக்குறைந்து தொழில்ஸ்தானத்தை சனியும் பார்ப்பதால் உங்களால் நிரந்தரமாக நீடித்து ஒரு தொழிலைச் செய்யமுடியாது. மேலும் பிறந்தது முதல் இன்றுவரை எட்டில் இருக்கும் கேது, ஆறில் இருக்கும் சுக்கிரன், எட்டாமிட சூரியன், நீசசாரம் வாங்கிய சந்திரன், தற்பொழுது எட்டுக்குடைய செவ்வாய் தசை என ஆறு எட்டு தசைகளே நடைபெற்றதால் இதுவரை யோகமில்லை.

ஆனால் 61 வயதில் ஆரம்பிக்க இருக்கும் ராகுதசை சுபர் வீட்டில் சுபரோடு அமர்ந்த ராகு என்பதால் உங்களுக்கு யோகம் செய்வார். செவ்வாய்தசை முடியும்வரை இன்னும் நான்கு வருடங்களுக்கு தொழில் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. பூர்வீகச்சொத்தை அனுபவிப்பதைக் குறிக்கும் ஒன்பதுக்குடைய பாக்கியாதிபதி சுக்கிரன் லக்னத்திற்கு ஆறிலும் சந்திரனுக்கு எட்டிலும் அமர்ந்து செவ்வாயுடன் இணைந்து சனியின் பார்வையைப் பெற்றதால் உங்களால் பூர்வீகச் சொத்தை அனுபவிக்க இயலாது.

எம். கங்காதரன், சென்னை – 600 037

கேள்வி:

சுக்

சூ 
பு
ராசி
செவ்
குரு,ரா
சந்
சனி


35 வயதான மகனுக்கு திருமணத்திற்குப் பெண் பார்த்து வருகிறேன். எதுவும் சரியாக அமையவில்லை எப்பொழுது திருமணம் நடைபெறும் என்பதைச் சொல்லுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

பதில்:

(துலாம்லக்னம், தனுசுராசி, மூலநட்சத்திரம். ஐந்தில் சூரி, புத. ஏழில் சுக். பதினொன்றில் செவ், குரு, ராகு. பனிரெண்டில் சனி)

சுக்கிரன் தனித்து ஏழில் அமர்ந்து களத்திரதோஷமும், லக்னத்திற்கு இரண்டு, மற்றும் ராசிக்கு ஏழாம் வீடுகளை சனி பார்த்தும், ஏழுக்குடையவன் ராகுவுடன் இரண்டுடிகிரிக்குள் இணைந்து பலவீனமாகி தாரதோஷமும் உங்கள் மகன் ஜாதகத்தில் உள்ளது. அதைவிட மேலாக புத்திரதோஷம் இருந்தாலே ஒருவருக்கு திருமணம் தாமதமாகும் என்பதை அடிக்கடி எழுதி வருகிறேன்.

இங்கே ஐந்திற்குடையவன் பனிரெண்டில் மறைந்து பாதகாதிபதி ஐந்தில் அமர்ந்து ஐந்தாம் வீட்டோடும் குருவோடும் ராகு, கேதுக்கள் சம்மந்தப்பட்டு கடுமையான புத்திரதோஷம் உள்ளதால்தான் மகனுக்குத் திருமணம் தாமதமாகிறது. ஸ்ரீகாளகஸ்தியில் ருத்ராபிஷேகபூஜையும் சுக்கிரனை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களையும் செய்யுங்கள். அடுத்த சந்திரதசை புதன்புக்தியில் இவர்கள் இருவரும் தர்மகர்மாதிபதிகள் என்பதாலும் ராசிக்குப் புதன் ஏழுக்குடையவன் என்பதாலும் வரும் ஜூன்மாதத்திற்கு மேல் மகனுக்கு நிச்சயம் திருமணம் ஆகும்.

டி. ரமேஷ், ஈரோடு

கேள்வி:

சந்
ரா
ராசி
சனி
ல,சூ
பு,கே
சுக்,செ
குரு
செவ்
ரா
ராசி
சந்
சனி
கே
சூ
குரு
பு
சுக்

தெய்வாம்சம் பொருந்திய ஜோதிடக்கலையின் விஞ்ஞானியே... மகன், மகள் எதிர்காலம் எப்படி உள்ளது? அவர்களின் ஜாதகம் ராஜயோக ஜாதகமா? தங்களின் மூலம் அறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்.

பதில்:

மகன் திவ்யந்திற்கு துலாம் லக்னமாகி லக்னாதிபதி பனிரெண்டில் நீசமாகி மேம்போக்காக பார்க்கையில் சாதாரணஜாதகம் போலத் தெரிந்தாலும் லக்னத்தில் உள்ள புதனுடன் சுக்கிரன் பரிவர்த்தனை பெற்றதாலும் பிறப்பிலிருந்தே சனி, புதன் கேது, சுக்கிரன் என யோகதசைகள் இறுதிவரை நடப்பில் இருக்கும் என்பதாலும் மகனின் ஜாதகம் யோகஜாதகமே.

மகள் ஜெஸ்ணாஸ்ரீக்கு தனுசுலக்னமாகி லக்னாதிபதி பனிரெண்டில் மறைந்து, செவ்வாய் ஏழில் அமர்ந்து லக்னத்தைப் பார்த்து அண்ணனைப் போலவே புதனும் சுக்கிரனும் பரிவர்த்தனை பெற்ற யோகஜாதகம். இவளுக்கும் பிறப்பு முதல் யோக தசைகள் நடப்பில் உள்ளதால் இவளும் யோகசாலியே. குழந்தைகள் இருவருக்குமே பனிரெண்டாமிடம் வலுப்பெற்று லக்னாதிபதி விரயத்தில் உள்ளதால் பிறந்த இடத்தை விட்டு தூரத்தில் வெளிநாடு, வெளிமாநிலம் என செட்டிலாகி யோகவாழ்வு வாழ்வார்கள்.

எம். ஜோதிராமலிங்கம், மதுரை

கேள்வி:


சந்,சூ 
சுக் 
செவ்
ராசி
பு

ல 
சனி
குரு
கே


ஜோதிடச்சக்கரவர்த்திக்கு இந்த வயதானவன் எழுதும் ஐந்தாவது கடிதம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசுத்துறையில் 35 ஆண்டுகாலம் பணிபுரிந்து ஓய்வுபெற்றும் இதுவரை கஷ்டம், துன்பம், இழப்பு, மரியாதை இல்லாமை, சொத்துபணம் சேர்க்காமை, வீடுவாசல் இல்லாமை ஆகியவற்றை மட்டுமே அனுபவித்து வாழ்கிறேன். ஐந்து மாதங்களுக்கு முன் இருதயக் கோளாறு ஏற்பட்டு கடன்வாங்கி சிகிச்சை பெற்று வருகிறேன். வருங்காலங்களிலும் இதே நிலைமைதானா? என்னுடைய ஆயுள் காலம் எவ்வளவு? மகனுக்கு இரண்டு திருமணம் நடந்தும் இரண்டும் சரியில்லாமல் ஏழு ஆண்டுகளாக என்னுடன் இருந்து வருகிறான். இவனுடைய எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதையும் மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்.

பதில்:

(சிம்மலக்னம், கும்பராசி லக்னத்தில் சனி, மூன்றில் கேது. ஐந்தில் குரு. ஆறில் புத. ஏழில் சூரி, சுக், செவ்)

அரசாங்கத்தைக் குறிக்கும் சிம்மலக்னத்தில் பிறந்து சிம்மத்தை சூரியனும் குருவும் பார்த்து வலுப்படுத்தி சந்திரகேந்திரத்தில் சூரியனும் அமர்ந்ததால் இறுதிவரை அரசுப்பணி அமைந்தது. அதேநேரத்தில் சொத்துச் சேர்ப்பதற்கும் அதை நிலையாக வைத்துக் கொள்வதற்கும் உரிய நான்கு, ஒன்பதிற்குடைய செவ்வாய் அஸ்தமனமாகி சனியின் பார்வையைப் பெற்றதாலும் ஒன்பதில் ராகு அமர்ந்ததாலும் சொத்துச் சேர்க்க முடியவில்லை.

தற்பொழுது மூன்றாமிடத்தில் அமர்ந்து லக்னத்தில் உள்ள சனியின் பார்வையைப் பெற்ற கேது ஆறாமிடத்து சனியின் பலன்களைத் தருவார் என்ற விதிப்படியும் ஆறுக்குடைய சனி லக்னாதிபதி சூரியனை பார்ப்பதாலும் இருதயக்கோளாறு ஏற்பட்டு சிகிச்சையில் இருக்கிறீர்கள். லக்னத்தோடும் லக்னாதிபதியோடும் சனி செவ்வாய் சம்மந்தப்பட்டதால் நீங்களே புரிந்து கொள்ள முடியாத சிக்கலான கோபக்காரனாக இருப்பீர்கள். எட்டுக்குடைய குருபகவான் ஆட்சியாக இருப்பதாலும் லக்னத்தை லக்னாதிபதியும் குருவும் பார்ப்பதாலும் எண்பது வயது தாண்டி தீர்க்காயுளுடன் இருப்பீர்கள்.

மகனுக்கு மகரலக்னமாகி ஏழில் சனி எட்டில் செவ்வாய் என்ற அமைப்பு உள்ளதால் அவரும் குழப்பவாதியாக தெளிவான முடிவெடுக்க முடியாதவராகத்தான் இருப்பார். இந்த அமைப்பு மண வாழ்க்கைக்குத் தடைகளை தரும் அமைப்பு என்பதால்தான் இரண்டுமுறை திருமணமாகியும் நீடிக்கவில்லை. மகனின் பிறந்தநேரம் இல்லாததால் எதிர்காலத்தைப் பற்றித் துல்லியமாகச் சொல்ல முடியவில்லை.

மனைவி தடம் மாறி விட்டாளா?

ஒரு வாசகர், திருச்சி

கேள்வி:

பிறந்ததிலேருந்தே ஒன்றும் சரியாக வாய்க்காத இழிபிறவி நான். ஆறு மாதத்தில் தாயை இழந்த எனக்கு மாதா அமிர்தானந்தமயிதான் அம்மா. என்னைப் போலவே தாயை இழந்து ஆசிரமத்தில் வளர்ந்த ஒரு பெண்ணை காதலித்து மணந்தேன். இப்பொழுது ஆணும் பெண்ணுமாக இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். திருமணமாகி எட்டு வருடத்தில் எனக்கு ஆன்மிகத்தில் அதிக நாட்டம் வந்துவிட்டது. இரண்டாவது குழந்தைக்குப் பிறகு தாம்பத்யஉறவு வெறுத்துவிட்டது. இப்பொழுது என் மனைவி உடன் வேலை செய்யும் தன்னைவிட சிறியபையனுடன் பழகுவதாக அறிகிறேன். இரவு முழுக்க எஸ்.எம்.எஸ் செய்கிறாள், எனக்குத் தெரியாமல் அடிக்கடி போன் பேசுகிறாள். சென்றமாதம் இருவரும் உரசிக்கொண்டே பேசி நடந்து போவதை பார்த்து வீட்டுக்கு வந்ததும் ஆஸ்பத்திரியில் சேர்க்கும் அளவிற்கு அடி வெளுத்துவிட்டேன். அக்கம்பக்கத்தவர்கள் என்னைக் கட்டி வைத்து போலீசில் ஒப்படைத்து போலீஸ் என்னைப் பின்னி எடுத்துவிட்டது. குழந்தைகளை கூட்டிக்கொண்டு மனைவி எங்கோ போய்விட்டாள். பைத்தியமாகத் திரிகிறேன். எந்தப் பழக்கமும் இல்லாத எனக்கு ஏன் இந்த சோதனை? கண்ணுக்கு கண்ணான பிள்ளைகளைப் பார்க்க முடியவில்லை. சாப்பிடாமல், தூங்காமல், பசிக்காமல் திரிகிறேன். எல்லாம் அறிந்த குருஜி அவர்களே.. என் மனைவி தடம் மாறிவிட்டளா? நான் உயிரோடு இருப்பேனா?

பதில்:

திருப்பி அடிக்க முடியாத ஜீவனை அடிப்பதைப் போன்ற பாவம் வேறு எதுவுமில்லை. ரோட்டில் போகும் ஒருவனை அடித்தால் உங்களைச் சும்மா விடுவானா? திருப்பி அடிப்பான். மனைவி உங்களை அடிக்கமாட்டாள். எனவே தைரியமாக அடிக்கிறீர்கள்.

பசி, தாகம், வலி, இவைகளைப் போல தாம்பத்யசுகமும் உடலுக்கு தேவைப்படும் ஒரு உணர்வுதான். முப்பது வயதிலேயே உங்களுக்கு தாம்பத்ய ஆர்வம் மரத்துவிட்டால் இருபத்தியெட்டு வயது மனைவி என்ன செய்வாள்? தவறுகின்ற ஒரு பெண்ணிற்கு நான் வக்காலத்து வாங்கவில்லை. ஆனால், நியாயமாக கொடுக்க வேண்டியதை நீங்கள் கொடுத்தே தீரவேண்டும் இல்லையா?

குடும்பத்தில் உள்ள நான்குபேருக்குமே விருச்சிகராசியாகி அனைவருக்கும் ஏழரைச்சனி நடக்கிறது. குதிரை கீழேதள்ளி குழியும் பறித்தகதையாக உங்களுக்கு ராகுதசையும் நடக்கிறது. கடுமையான ஜென்மச்சனி நடக்கும்போது ஒருவரால் சரியான முடிவு எடுக்க முடியாது என்பது அனுபவம். எனவே உங்கள் இருவருக்குமே புத்தி வேலை செய்யவில்லை. குடும்பத்தில் உள்ள நான்குபேருக்குமே சனி நடப்பது பூர்வஜென்ம கர்மவினை.

ஆன்மிகத்தில் அதிகநாட்டம் உள்ள நீங்கள் எதுவுமே தெரியாத என்னிடம் கேட்பதை விடுத்து எல்லாம் தெரிந்த பரம்பொருளிடம் எனக்கு ஏன் இந்த நிலை என்று மனம்விட்டுக் கேளுங்கள். சனிக்கிழமை தோறும் காலபைரவருக்கு தவறாமல் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள். ஒரு அமாவாசை தினத்தன்று முழு இரவு ஸ்ரீகாளகஸ்தியில் தங்கி மறுநாள் அதிகாலை ருத்ராபிஷேகபூஜையில் கலந்துகொண்டு என் அய்யன் காளத்திநாதனை தரிசனம் செய்யுங்கள்.

உங்களின் குடும்பஜாதகப்படியும், நீங்கள் கேள்வி கேட்டதன்படியும் உங்கள் மனைவி உங்கள் ஊரிலிருந்து நாற்பது கிலோமீட்டர் தூரத்திற்குள் ஒரு வயதான பெண்மணியின் பராமரிப்பில் இருக்கிறாள். அனேகமாக அது அவரை வளர்த்த ஆசிரமப்பெண்மணியாக இருக்கலாம். 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு குடும்பம் முழுவதும் ஒன்று சேருவீர்கள்.

அடுத்து மனைவி தடம் மாறிவிட்டாளா என்ற முக்கியமான கேள்விக்கு வருகிறேன். உங்கள் ஜாதகப்படி சந்திரகேந்திரத்தில் புதன் வலுவாக உள்ளதால் உங்களுக்கே ஜோதிடம் ஓரளவுக்குத் தெரியும். உங்கள் மனைவிக்கு சுக்கிர தசையில் ராகுபுக்தி நடக்கிறது. சுக்கிரன் உச்சசனியின் பார்வையில் ரிஷபத்தில் இருக்கும் ராகுவிற்கு பனிரெண்டில் இருக்கிறார். உங்களுக்கு ராகுதசையில் சுக்கிர புக்தி நடக்கிறது. தசாநாதன் ராகு கன்னியில் நீசச்சுக்கிரனுடன் இருக்கிறார். சுக்கிரன் மனைவியைக் குறிப்பவர் எனவே நீச சுக்கிரபுக்தியில் மனைவி நீசம்.

2 comments :

  1. தெளிவான ஆலோசனை தந்து தடம் மாறிபோன என்ற வார்த்தையை பயன்படுத்திய கணவனுக்கு நல்வழி காட்டியுள்ளீர்கள் குருஸி.நன்றி

    ReplyDelete
  2. தெளிவான ஆலோசனை தந்து தடம் மாறிபோன என்ற வார்த்தையை பயன்படுத்திய கணவனுக்கு நல்வழி காட்டியுள்ளீர்கள் குருஸி.நன்றி

    ReplyDelete