Tuesday, 3 November 2015

Astro Answers - Guruji Pathilkal - குருஜியின் மாலைமலர் பதில்கள் - 62 (3.11.2015)

எஸ். முருகன், ராயபுரம்.

கேள்வி :

ரா
ராசி
செவ்
குரு
சந்
கே
சுக்,ல
சனி
சூ
பு

31வயதாகியும் திருமணம் அமையவில்லை. வேலையில் முன்னேற்றம், சம்பள உயர்வும் இல்லை. சொந்தவீடு, வாகனம் அமையவில்லை. வாழ்க்கையில் எதுவும் இல்லை. தாயரின் உடல்நலனிலும் பாதிப்பு ஏற்படுகிறது. இதுவரை எந்த யோகமும் அமையாமல் கஷ்டப்படுகிறேன். ஜாதகத்தை ஆராய்ந்து பதில் அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.

பதில்:

ஏழரைச்சனி நேரத்தில் ஜாதகத்தில் உள்ள எந்த யோகமும் வேலை செய்யாது. உங்களுக்கு அனுஷநட்சத்திரம் விருச்சிகராசி. சனிபகவான் ஜென்மச்சனி நிலையில் கடந்த ஒரு வருடமாக உங்களின் ஜென்மநட்சத்திரமான அனுஷத்திலேயே சென்று கொண்டிருக்கிறார். வேதஜோதிடத்தின்படி அனுஷ நட்சத்திரக்காரர்கள் அனைவருக்கும் தற்போது அவரவர் வயது, தகுதி, இடம் ஆகியவற்றைப் பொறுத்து பின்னடைவான காலகட்டமே நடந்து வருகிறது.

ஆயினும் ஏழரைச்சனியில் திருமணத்திற்கோ, குழந்தை பாக்கியத்திற்கோ தடையில்லை என்பதாலும் தற்போது கேதுதசையில் ஆட்சிபெற்ற லக்னாதிபதி சுக்கிரனின் புக்தி நடப்பதாலும் அடுத்த வருட ஆரம்பத்தில் திருமணம் உங்களுக்கு நடைபெறும். மற்றயோகங்கள் அனைத்தும் 2017-க்கு பிறகுதான். அதேநேரத்தில் வரும் டிசம்பர்மாதம் 28-ந்தேதி முதல் சனிபகவான் அனுஷத்தில் இருந்து விலகுவதால் இந்த வருடத்தோடு அனுஷநட்சத்திரக்காரர்களின் சிக்கல்களும் தீரத் தொடங்கும்.

எம். குப்பம்மாள், பாண்டிசேரி-14 

கேள்வி :

ரா
செவ்
குரு
ராசி
சந்
சூ,பு
சனி
சுக்
கே


மகன் வீட்டில் என்னிடமும் அவன் அப்பாவிடமும் தினமும் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். வேலை சரியில்லை. செவ்வாய்தோஷம் இருப்பதால் சரியாக பெண் அமையவில்லை. குடும்பத்தில் நிம்மதி இல்லை. மகன் ஜாதகத்தில் உள்ள வேறு தோஷம் என்ன? செவ்வாய்தோஷம் உள்ள பெண்தான் அமைவாளா? திருமணம் எப்போது ?

பதில்:

(கடகலக்னம், மகரராசி. மூன்றில் கேது, நான்கில் சுக் ஐந்தில் சூரி, புதன், சனி. எட்டில் செவ், குரு.)

மகனுக்கு லக்னத்திற்கு எட்டில் செவ்வாய் அமர்ந்து அதுவே ராசிக்கும் இரண்டாகி செவ்வாய்தோஷம் உள்ளது என்றாலும் செவ்வாய் குருவுடன் இணைந்திருப்பதால் தோஷம் நிவர்த்தியாகிறது. ஆனால் புத்திரஸ்தானமான ஐந்தாமிடத்தில் சனி அமர்ந்து ஐந்திற்குடைய செவ்வாய் எட்டில் மறைந்து புத்திரக்காரகன் குருவும் எட்டில் மறைந்தது கடுமையான புத்திரதோஷம் என்பதால் திருமணம் தாமதமாகிறது. ஆயினும் ராசிக்கு ஐந்திற்குடைய சுக்கிரன் ஆட்சி பெற்றதால் புத்திரபாக்கியம் உண்டு. வரும் குருதசை சுக்கிரபுக்தியில் 2017-ம் ஆண்டு மகனுக்கு திருமணம் நடக்கும். முதல் குழந்தை பெண் குழந்தை.

என். அழகர்சாமி, அயனாவரம்.

கேள்வி :

கே
பு
சூ
சந்,ல
சுக்
குரு
ராசி
செவ்
சனி
ரா


மகன் பதினைந்து வருடங்களாக சினிமாவில் உதவி இயக்குனராக இருக்கிறான். தனியாக படம் இயக்க எல்லா முயற்சியும் நடந்தும் ஏதாவது ஒரு தடங்கலினால் நின்று விடுகிறது. திருமணமும் ஆகவில்லை. எதனால் இப்படி நடக்கிறது? திருமணம் எப்போது? கிரகங்கள் சரியில்லை என்றால் என்ன பரிகாரங்கள் செய்ய வேண்டும்? தங்கள் அருள்வாக்கிற்காக நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்.

பதில்:

(ரிஷபலக்னம், ரிஷபராசி. இரண்டில் குரு. மூன்றில் செவ். நான்கில் சனி. பதினொன்றில் புதன், கேது. பனிரெண்டில் சூரி.)

மகனுக்கு லக்னமும், ராசியும் ஒன்றாகி குடும்பாதிபதியும், புத்திர ஸ்தானாதிபதியுமான புதன் நீசமும், பரிவர்த்தனையும் பெற்று மனைவியைக் குறிக்கும் ஏழுக்குடையவனும் நீசம்பெற்று எட்டுக்குடைய குரு குடும்ப வீட்டில் அமர்ந்து கடுமையான தோஷ அமைப்புகள் உள்ள ஜாதகம்.

கடந்த பதினேழு வருடங்களாக நீசனின் வீட்டில் அமர்ந்த ராகுதசை நடந்ததால் தவறாக வழிநடத்தப்பட்டு சினிமாவில் வருடங்களைத் தொலைத்தார். அடுத்த வருடம் ரிஷப லக்னபாவியான இரண்டாம் வீட்டில் அமர்ந்த குருவின் தசை நடக்க இருக்கிறது. குருவும் நீசனின் வீட்டில் அமர்ந்ததால் முதல்பகுதி யோகம் செய்யாமல் பரிவர்த்தனையின் காரணமாக பிற்பகுதி யோகம் செய்யும். லக்னாதிபதி வலுப்பெற்றதால் வாழ்வின் பிற்பகுதியில் யோகமாக வாழ்வார். சனி தசை மட்டுமே இவருக்கு யோகதசை. சனிக்கு வீடு கொடுத்த சூரியன் உச்சம் என்பதால் சனிதசையில் சிக்கல் இல்லாமல் வாழ்வார். கடுமையான தோஷங்கள் என்பதால் சுக்கிரனுக்குரிய முறையான பரிகாரங்களை செய்யவும்.

. கல்யாணசுந்தரம், சென்னை -1.

கேள்வி :

சுக்
ரா
சந்
ராசி
சூ
பு
செவ்
குரு
சனி


ஒரே மகனுக்கு திருமணம் முடிக்க முடியவில்லை. முடிவது போல் வந்து தட்டிப் போகிறது. எப்போது திருமணம்? வேதனையை தீர்த்து வையுங்கள்.

பதில்:

(மீனலக்னம், கும்பராசி. நான்கில் சுக், ராகு. ஐந்தில் சூரி. ஆறில் புதன். ஏழில் சனி. எட்டில் செவ், குரு.)

லக்னத்திற்கு ஏழில் சனி, எட்டில் செவ்வாய் என்றாகி அதுவே ராசிக்கு எட்டில் சனி என அமைந்து ஏழுக்குடையவன் ஆறில் அமர்ந்து தாம்பத்திய சுகத்திற்கு காரணமான சுக்கிரன் ராகுவுடன் நெருங்கி இணைந்து சனிபார்வையும் பெற்று கடுமையான தாரதோஷமும், புத்திரஸ்தானாதிபதியான சந்திரன் பனிரெண்டில் மறைந்து புத்திரஸ்தானத்தில் ஆறுக்குடைய பாவி அமர்ந்து புத்திரக்காரகன் குருவும் எட்டில் மறைந்து கடுமையான புத்திரதோஷ அமைப்புகளும் உங்கள் மகன் ஜாதகத்தில் இருக்கிறது.

லக்னாதிபதி குருவை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களும், தாம்பத்திய சுகத்தைத் தடுக்கும் ராகுபகவானுக்குரிய பரிகாரங்களும் செய்யும் பட்சத்தில் அடுத்த வருடம் திருமணம் நடக்கும்.

வி. லோகநாதன், கோபிசெட்டிபாளையம்.

கேள்வி :


சந்
குரு
ராசி
சுக்,செ
கே
ரா
சூ
பு
சனி


அரசுப்பணியில் இருந்து ஓய்வு பெறும்போது கிடைத்த பணம் முழுவதையும் எனது உறவினர் என்னிடம் கடனாகப் பெற்றுச் சென்றார். சுமார் இரண்டு வருடங்களாக பணத்தைத் திரும்பத் தரவில்லை. கேட்கும்போது சாக்குபோக்கு சொல்கிறார். வட்டியும் தரவில்லை. பணம் முழுவதும் கிடைக்க வழி கூறி பரிகாரம் கூறவும்.

பதில்:

தற்போது உங்கள் மேஷராசிக்கு அஷ்டமச்சனி நடப்பதால் 2016-ம் வருடம் வரை பணம் திரும்பக் கிடைக்க வாய்ப்பு இல்லை. ஆனால் பாக்கியாதிபதி குருவின் தசை நடப்பதால் சிறிதுசிறிதாக பணம் முழுவதுமாக உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும்.

பி. நிர்மலா பால்ராஜ், பாலக்கரை.

கேள்வி : 

பேஸ்புக்கில் உங்கள் பதிவுகளை ஒன்று விடாமல் படித்து வருகிறேன். மகளுக்கு திருமணம், நிரந்த வேலை எப்போது? வெளிநாடு செல்ல இயலுமா?

பதில்:

முகநூலில் என்னுடைய நண்பர் என்கிறீர்கள் பிறந்த நாள், தேதி, இடம், பிறந்த ஆஸ்பத்திரி எல்லாம் குறிப்பிட்டு பிறந்த நேரத்தை சொல்லாமல் விட்டுவிட்டால் நான் எப்படி பதில் சொல்வது.

தற்கொலை செய்துகொள் என்று மனம் சொல்கிறது....

மூ. சந்தானகுமார், பாளையங்கோட்டை.

கேள்வி :

குரு
ராசி
கே
ல,சூ
ரா,சுக்
பு
சனி
செவ்
சந்


மாலைமலரில் உங்களின் எழுத்துக்களை வாரந்தோறும் தவறாமல் படித்து வருகிறேன். கடந்த வருடம் எனக்கு ஒரு பெண் போலீசுடன் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகு காவலரான என் மனைவி கொடுத்த பொய்ப் புகாரினால் போலீஸ், கோர்ட்டு, மருத்துவமனை என்று என் வாழ்க்கை ஓடுகிறது. இடையில் தற்கொலை முயற்சி செய்து காப்பாற்றப்பட்டேன். ஒவ்வொரு காவல் நிலையமாக அழைக்கப்பட்டு கேவலப்படுகிறேன். என்னால் எனது பெற்றோரும், உடன் பிறந்தவர்களும் கஷ்டப்படுகிறார்கள். வழக்கு இப்போது கோர்ட்டில் இருக்கிறது. பொய்வழக்கு, பொய்சாட்சி என்று எல்லாம் எங்களுக்கு சாதகமாக இருந்தாலும் கேஸ் முடிந்தபாடு இல்லை. இதனால் மனவேதனையும், விரயமும்தான் ஆகிறது. எல்லோருக்கும் கஷ்டமாக இருக்கிறேன். தற்கொலை செய்துகொள் என்று மீண்டும் மீண்டும் மனம் சொல்கிறது. எனது ஜாதகம் எப்படி? இனி வாழ்க்கை எப்படி? நான் என்ன செய்யலாம்? வழக்கு எப்போது முடியும்? விவாகரத்து எப்போது கிடைக்கும்? என் ஆயுள் எப்படி?

பதில்:

(மகரலக்னம், துலாம்ராசி. லக்னத்தில் சூரி, சுக், ராகு. ஆறில் குரு. பதினொன்றில் செவ். பனிரெண்டில் புதன், சனி.)

மனிதவாழ்க்கை எல்லா வினாடிகளிலும் மரணத்திற்கு அருகில்தான் உள்ளது. யோசித்துப் பார்த்தால் சாவு ஜம்மென்று நாற்காலி போட்டு நம் பக்கத்தில் எப்போதும் உட்கார்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஒரு மனிதனை மரணம் எந்த முனையிலும் சந்திக்கும்தான்...அதற்காக நாம் அதை தேடிப் போகலாமா? வாழ்ந்து கழிப்பதற்குத்தானே இந்தப்பிறவி? என்றென்றைக்கும் துன்பம் வந்துகொண்டே இருக்க முடியாதே? ஒரு நாள் சந்தோஷம் கிடைத்துதானே ஆகவேண்டும்?

உங்களுக்கு லக்னத்திற்கு இரண்டாம் வீட்டை சனி செவ்வாய் பார்த்து ராசிக்கு இரண்டில் செவ்வாய் பாதகவலுவுடன் அமர்ந்து லக்ன ஏழை அஷ்டமாதிபதி பார்த்து அங்கே ராகுகேதுக்கள் அமர்ந்த ஜாதகம். சுக்கிரனுடன் ராகுவும் இணைவு. ஏழுக்குடையவனும் பாபராகி திக்பலம் இழப்பு. தற்போது ஏழரைச்சனியும் நடக்கிறது.

என்னுடைய கணிப்புப்படி உங்கள் பெற்றோருக்கும் ஏழரைச்சனி நடந்து கொண்டிருக்கும். இப்படிப்பட்ட ஜாதகத்திற்கு இருபத்தி நான்கு வயதில் திருமணம் நடந்தது கர்மவினை. சனிதசை கேது புக்தியில் கேது ஏழாமிடத்தில் இருப்பதால் சந்திரனாக மாறி திருமணத்தையும் கூடவே சிக்கலையும் தந்தார். சுக்கிரன் அஷ்டமாதிபதியுடன் ஒரே டிகிரியில் இணைந்து கெட்டிருப்பதால் சுக்கிர புக்தி முடியும் 2017 வரை பெண்ணால் அசிங்கம் கேவலம் இருக்கும். ராசிக்கு ஆறுக்குடையவனும் லக்னத்திற்கு ஆறுக்குடையவனும் பரிவர்த்தனை பெற்றதும் தவறு.

சனிதசையில் சூரிய சந்திர புக்திகள் மகரலக்னத்திற்கு யோகம் செய்யாது என்பதாலும் முதல் மனைவியைக் குறிக்கும் ஏழுக்குடையவனை விட இரண்டாம் மனைவியைக் குறிக்கும் பதினொன்றுக்குடைய செவ்வாய் ஆட்சி பெற்றதாலும் சுக்கிரனோடு இணைந்த ராகுபுக்தியில் உங்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்கும். அதுதான் முறையானது. வழக்கு செவ்வாய் புக்தியில் முடியும்.

லக்னாதிபதியையும் ராசியையும் குரு பார்ப்பதால் உங்களுக்குத் தீர்க்காயுள். இனிமேல் தற்கொலை முயற்சி செய்ய மாட்டீர்கள். முப்பது வயதிற்கு மேல் நல்ல அமைப்புகள் உருவாவதால் உங்களின் பிற்பகுதி வாழ்க்கை நன்றாக இருக்கும். கவலைப்படாதீர்கள். வாழ்க்கை எல்லா நேரங்களிலும் ஒன்றுபோல இருப்பதில்லை. இருபத்திஐந்து வயதில் ஏற்பட்ட சில அனுபவங்களால் எல்லாவற்றையும் இதுபோலவே நினைத்து விடாதீர்கள். இன்னும் நீங்கள் முழு உலகத்தையும் பார்த்து விடவில்லை.

பிரகாசமான ஒரு உலகம் முப்பது வயதிற்கு மேல் உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. உங்களைப் புரிந்து கொண்ட உங்களுக்கான பெண் இதே உலகில் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறாள். சரியான நேரத்தில் அவள் உங்களுக்கு மனைவியாகக் கிடைப்பாள். அதன்பிறகு எல்லோரையும் போல உங்களின் வாழ்வும் சீராகச் செல்லும். வாழ்த்துக்கள்.

2 comments :

  1. Sir
    Your answer for last question is simply great. Positive and energetic answer to that person.

    ReplyDelete
  2. Sir
    Your answer for last question is simply great. Positive and energetic answer to that person.

    ReplyDelete