Tuesday, August 18, 2015

Astro Answers - Guruji Pathilkal - குருஜியின் மாலைமலர் பதில்கள் - 51 (18.8.2015)

தீபப்பிரியன், கல்லகம்.

கேள்வி :


குரு
செவ்
கே
ராசி
சனி
சூ
சுக்
சந்
ரா
பு
ஆதித்யகுருஜி அவர்களுக்கு… இந்த ஜாதகன் தற்காலம் ஜீவிக்கின்றாரா? அல்லது மரித்திருக்கின்றாரா? ஜீவித்திருப்பின் மனோதிடம் மிகுதியாக நிரம்பப் பெற்று இல்லறத்தில் தனித்தன்மையோடு சிறப்புற்றிருக்கிறாரா? அல்லது மணித்துளிக்கு மணித்துளி சிந்தை மாற்றம் அடைந்து எதிலும் திளைக்காமல் துறவறம் மேற்கொண்டிருப்பதற்கு சாத்தியக் கூறுகள் மிகுந்திருக்கின்றனவா? மேற்குறிப்பிட்டவைகளில் எதிலுமே உட்படாது ஒரு பணக்காரரிடம் மருமகனாக ஆட்பட்டு(படவாய்ப்புக்கள் ஏதேனும் மிளிர்கின்றனவா? மொத்தத்தில் இந்த ஜாதகனின் நிலை(மை) தான் என்ன…? உடனடியாக என்ன செய்ய வேண்டும்? தீட்சை... தீர்வுகள்... தீர்க்கதரிசனம் ….


பதில்:

ஜாதகம் பார்க்காமலேயே பதில் சொல்லக்கூடிய எளிமையான கேள்வி. இதை எழுதியவர் உயிரோடு இருக்கிறார். உடனடியாக அருகில் இருக்கும் மனநல மருத்துவரைப் பார்க்கவும்.

எம். நாகமுத்து, மதுரவாயல்.

கேள்வி :

சந்
ரா
சனி
ராசி
குரு
சூ
பு
கே
செவ்
சுக்

13 வயதாகும் எனது பெண் காவல்துறையில் பணிபுரிய வேண்டும் என்று இப்போதே விரும்புகிறார். அது சாத்தியமா என்று அறிய விரும்புகிறேன்.

பதில்:

மகரலக்னம், ரிஷபராசி. ஐந்தில் ராகு. ஆறில் சனி. ஏழில் குரு. பத்தில் சுக், செவ். பனிரெண்டில் சூரி, புத.

லக்னாதிபதி வலுப்பெற்ற ஜாதகங்களில் விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கேற்ப பிற்காலத்தில் என்னவாகப் போகிறார் என்பதற்கான லட்சியவிதை சிறுவயதிலேயே விதைக்கப்பட்டு விடும். சில குழந்தைகள் விளையாடும்போதே கழுத்தில் ஸ்டெதாஸ்கோப் போன்றவைகளை மாட்டிக்கொண்டு பிற குழந்தைகளுக்கு ஊசி போடுவதையோ வீடு முழுவதும் தன்பெயருக்குப் பின்னால் எம்பிபிஎஸ் கலெக்டர் ஐஏஎஸ் என்றோ சுவரில் கிறுக்கி வைப்பதைக் கவனிக்கலாம்.

உங்கள் மகளுக்கு தொழில்ஸ்தானமான பத்தாமிடத்தில் சீருடைப்பணியைக் குறிக்கும் செவ்வாய் திக்பலம் பெற்று பத்துக்குடையவனுடன் இணைந்து லக்னத்தை உச்சகுரு பார்ப்பதாலும் சரியான பருவத்தில் செவ்வாய்தசை வருவதாலும் ராசிக்கட்டத்தில் குருவும், சந்திரனும் உச்சம். நவாம்சத்தில் சனி, புதன், சுக்கிரன், சூரியன் என நான்கு கிரகங்கள் உச்சம் பெற்று ஜாதகம் வலுவாக இருப்பதாலும் காவல்துறையில் உயர்அதிகாரியாக சர்வநிச்சயமாக வருவார்.

எஸ். மாரியப்பன், திருச்சி -3

கேள்வி :

பு
சு
சந், சூரி, ராகு
ராசி
கே
ல,
குரு
செ,
சனி

மகனுக்கு 33 வயது முடிந்தும் இன்னும் திருமணம் ஆகவில்லை. எப்போது திருமணம் என்று தயவு செய்து சொல்லுங்கள்.

பதில்:

துலாலக்னம், மிதுனராசி. லக்னத்தில் குரு. எட்டில் புதன், சுக். ஒன்பதில் சூரி, ராகு. பனிரெண்டில் செவ், சனி.

போகஸ்தானமான பனிரெண்டில் சனி, செவ்வாய் இணைந்ததும் ராசிக்கு ஏழாம் இடத்தையும், லக்னத்திற்கு ஏழாம் இடத்தையும் செவ்வாய் பார்த்ததும் சுக்கிரன் எட்டில் மறைந்து குடும்ப ஸ்தானத்திற்கு சனி பார்வை உள்ளதும் ஏழாம் வீட்டை ஆறுக்குடைய குரு பார்த்ததும் இதுவரை திருமணம் ஆகாததற்கான காரணங்கள். தற்போது நடக்கும் சனிதசையில் சுக்கிரனின் வீட்டில் அமர்ந்துள்ள குருவின் புக்தி நடப்பதால் அடுத்த வருட ஆரம்பத்தில் திருமணம் நடக்கும்.

பத்து வருடமாக பேசாத மகன் பேசுவானா?

கிருஷ்ணன், திருச்சி -18.

கேள்வி :

செவ்
குரு சுக்
ரா
ராசி
சந்
சூ
கே
சனி
பு
சந்

கே
ராசி
குரு
சுக்
சூ,பு
ரா
செவ்
சனி

கலியுகத்தில் தெய்வம் அதுவாகவே முன் வராது. ஒருவர் மூலமாகத்தான் வரும். அந்த ஒருவர் எனக்கு தாங்கள்தான் குருஜி. குடும்பத்தில் எப்போதும் சண்டை, தகராறு. இனிமேலாவது நிம்மதி வருமா? அன்பும், இரக்கமும் இல்லாத மனைவியும், என்னுடன் பத்து வருடங்களுக்கு மேலாக பேசாத என் மகனும் மாறுவார்களா? மூன்று ஆப்ரேஷன்களைச் செய்துள்ள என்னுடைய ஆயுள் எவ்வளவு? ஆரோக்கியமாக இருப்பேனா? மகன் காப்பாற்றுவானா? அவனுடைய எதிர்காலம் நன்றாக இருக்குமா? நினைவு தெரிந்த நாள் முதல் திக்குவாயால் அவமானப்படுவது மாறி நன்றாகப் பேச வருமா?

பதில்:

உங்கள் ஜாதகப்படி நீங்கள் கும்பலக்னத்தில் பிறக்கவில்லை. மகரலக்னத்தில் பிறந்திருக்கிறீர்கள் என்று பதில் சொன்னாலும் ஊருக்குச் சென்று ஒரிஜினல் ஜாதகத்தைத் தேடினேன்.. அதே லக்னம்தான் என்று மறுபடியும் கேள்வி கேட்கிறீர்கள்.

உங்களுடைய பிறந்த நேரத்தில் தவறு இருக்கிறது. அந்தக் காலத்தில் நாழிகையாக மாற்றுவதில் ஜோதிடர் தவறு செய்திருக்கிறார். கும்ப லக்னத்தில் பிறந்திருந்தால் ஆறுக்குடைய சந்திரன் ஆறாமிடத்திற்கு ஆறில் மறைந்து சுபத்துவமாகி ஆறாம் வீட்டில் செவ்வாய் அமர்ந்த ஜாதகத்திற்கு மூன்று முறை ஆபரேஷன் செய்யவும் வாய்ப்பில்லை. திக்குவாய் இருப்பதற்கும் வாய்ப்பில்லை.

அதேநேரம் விருச்சிகலக்னம் மகரராசியில் பிறந்து லக்னத்தையும், ஒன்பதுக்குடைய சந்திரனையும் குரு பார்த்து சூரியன் ஆட்சி பெற்ற ஆவணி மாதத்தில் பிறந்த உங்கள் மகன் ஜாதகப்படி உங்களுக்கு தீர்க்காயுள். மகனுக்கு குருதசை நடப்பதால் இன்னும் பதினைந்து வருடங்களுக்கு உங்களுக்கு மாரகம் சாத்தியமில்லை.

உங்கள் மகன் ஜாதகத்தில் ராசிக்கு ஒன்பதாமிடத்தை சனி பார்ப்பதால் சனி தசையில்தான் அவர் தந்தையை இழப்பார் என்பது விதி. மகனின் ஜாதகத்தில் லக்னத்தையும், ராசியையும் குரு பார்ப்பதால் அவரைக் குறை சொல்ல எதுவுமே இல்லை. மனைவியின் ஜாதகமும் நன்றாகவே இருக்கிறது. ஆனால் நீங்கள் சனியின் லக்னத்தில் பிறந்துள்ளதால் பிரச்னைகளுக்கு முதல் காரணமாக நீங்கள்தான் இருப்பீர்கள்.

பொதுவாக சனியின் லக்னத்தில் பிறந்தவர்கள் யதார்த்தத்தை உணர்ந்து கொள்ளாத பிடிவாதக்காரராக இருப்பார்கள். தாழ்வு மனப்பான்மையும் இருக்கும். நீங்கள்தான் உலகத்தை உணர்ந்து வீட்டில் மனைவி, மகனோடு ஒத்துப்போக வேண்டும். அடுத்தவரைக் குறை சொல்வதை விடுத்து மற்றவர்களிடம் நன்றாகப் பேசும் மகன் பத்துவருடமாக நம்மிடம் பேசாததற்கு என் மீது என்ன தவறு இருக்கின்றது என்பதை உணர்ந்து உங்களைத் திருத்திக் கொண்டால் இனிவரும் வாழ்க்கை நன்றாக இருக்கும்.

ஆனால் ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? உங்களுக்கு 65 வயதாகிவிட்டபடியால் இனிமேல் நீங்கள் உங்களை மாற்றி கொள்வதற்கு சாத்தியம் இல்லை. இறைவழிபாடுகளில் கவனத்தைச் செலுத்தி உங்களைச் சுற்றி நடப்பதை சகித்துக் கொண்டு ரசித்து வாழப் பழகிக் கொள்ளுங்கள்.

இரா. அருள்குமார், உடன்குடி.

கேள்வி :

ரா
ராசி
சுக், செவ்
சூ
சந், குரு, கேது
சனி, ல
பு

எட்டு வயதில் தந்தை மரணம், ஒன்பது வயதில் அண்ணன் மரணம், பதினொறு வயதில் தாய் மரணம், பதிமூன்று வயதில் படிப்பில் தடை, பதினெட்டு வயதில் உடல்நலக்குறைவு, இருபத்தி ஐந்து வயதில் மளிகை கடை நஷ்டம். இப்போது இருபத்தி ஒன்பது வயதில் திருமணத்தில் தடை. பெண்ணைக் கட்டித் தருகிறேன் என்ற தாய்மாமன் திருமணம் செய்து வைக்க மறுத்து விட்டார். இப்படி எல்லாவற்றிலும் தடைகள்தான் என் வாழ்வில் நிற்கிறது. மாமா மகள்களுக்கு படிப்புக்காக செலவு செய்து கடன்காரனாகி இருக்கிறேன். கடனை அடைக்க முடியுமா? சொந்த வீடு உண்டா? திருமணம் எப்போது?

பதில்:

துலாலக்னம், விருச்சிக ராசி. லக்னத்தில் சனி. இரண்டில் குரு, கேது. பத்தில் சுக், செவ். பதினொன்றில் சூரி. பனிரெண்டில் புதன்.

ஒரு வயதிலிருந்து விரைய ஸ்தானத்தில் உச்சமாகி வக்ரம் பெற்று வலுப்பெற்ற பாதகாதிபதியின் நட்சத்திரத்தில் அமர்ந்த புதன் தசை நடத்தியதால் அப்பா, அண்ணன், அம்மா என அனைவரும் விரயம் ஆனார்கள். லக்னாதிபதி சுக்கிரனும் வக்ரம் பெற்று நீசசெவ்வாயுடன் இணைந்திருப்பதால் நீங்களே எதிலும் பிடிப்பு இல்லாமல்தான் இருப்பீர்கள்.

தற்போது உங்கள் விருச்சிக ராசிக்கு நடக்கும் ஏழரைச்சனி எந்த நன்மைகளையும் செய்யாது. 30 வயதிற்குபட்ட விருச்சிகராசிக்காரர்கள் அனைவரும் கடுமையான சோதனைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள். சனி முடிந்ததும் நல்லவை நடக்கும். கடன் தீரும். நடக்கும் சுக்கிரதசை சுய சம்பாத்தியத்தில் சொந்த வீடு தரும். ராகு புக்தியில் 2017-ல் திருமணம் நடக்கும்.

எஸ். ஜெயந்தி, சென்னை.

கேள்வி :

பு, ரா சூரி, சுக், ல
ராசி
சந்
குரு
கேது
செவ், சனி

கடந்த 10 வருடங்களாக மகளுக்கு வரன் பார்த்து கொண்டிருக்கிறேன். மகள் திருமணத்திற்கு ஒத்துழைக்காமல் மவுனமாக இருக்கிறாள். கேட்டால் பிசினஸ் செய்யப் போகிறேன் என்று சொல்லுகிறாள். மிகவும் பயமாக இருக்கிறது. இவளுக்குத் திருமணம் நடக்குமா? எப்போது என்பதை கணித்துக் கூறுங்கள்.

பதில்:

மிதுனலக்னம். மகரராசி. லக்னத்தில் சூரி, சுக். ஐந்தில் செவ், சனி. ஏழில் குரு. பனிரெண்டில் புதன், ராகு.

ஐந்தாமிடத்தில் சனி, செவ்வாய் இணைந்திருப்பதும் ஆட்சி வக்ர குருவை உச்ச வக்ர சனி பார்ப்பதும் ராசிக்கு ஏழையும், லக்னத்திற்கு இரண்டையும் சனி பார்ப்பதுமே தாமததிருமணத்திற்கு காரணம். ஜாதகத்தில் இருக்கும் கடுமையான புத்திரதோஷமும் திருமணத்தை தள்ளிப்போடும் என்பது ஜோதிடவிதி. உங்கள் மகளுக்கு 32 வயது முடிந்து 33-ல் குருதசை சுக்கிரபுக்தியில் திருமணம் நடக்கும் லக்னாதிபதி பரிவர்த்தனை பெற்றதால் நிச்சயம் திருமண அமைப்பும், குழந்தை பாக்கியமும் கண்டிப்பாக உண்டு. கவலைப்பட வேண்டாம்.

எஸ். உலகநாதன் பல்லாவரம்

கேள்வி

இதுவரை மூன்று கடிதங்கள் எழுதியும் எனக்குப் பதில் இல்லை.

பதில்.

மாலைமலர் என்பது எல்லோருக்கும் பொதுவான ஒரு செய்திப்பத்திரிகை. வரும் கடிதங்களுக்கு எல்லாம் நான் பதில் தரவேண்டும் என்றால் ஒரு செவ்வாய்க்கிழமை முழு பத்திரிக்கையிலும் என் பதில்கள்தான் இருக்கும். செய்திகள் இருக்காது.

கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் உங்களின் பத்தொன்பது வயது மகளுக்கு எப்போது கல்யாணம் ஆகும் என்ற கேள்விக்குப் பதில் தருவதை விட முப்பது வயதாகியும் மகளுக்கு திருமணமாகாமல் வேதனையில் இருக்கும் ஒரு தாயின் கடிதத்திற்கே நான் முன்னுரிமை தருவேன். புரிந்து கொள்ளுங்கள்.

4 comments :

  1. Malaimalaril enakku pathil koduththatharku mikka nantri guruji ayya...

    ReplyDelete
  2. 1) முதல் கேள்விக்கு 'ஜாதகம் பார்க்காமலேயே பதில் சொல்ல முடியும்' என்று எப்படி முடிவுக்கு வந்தீர்கள்?

    2) குருஜியின் புத்தகம் எப்போது வெளி வருகிறது?

    நன்றி
    சதீஷ்

    ReplyDelete
    Replies
    1. Read the question again. You will understand. I really appreciate Guruji's
      sense of humour.

      Delete
  3. Iyya nan 1.8.85 2am Ku karur LA poranthen. Yennudaya jathakam path I solluinga

    ReplyDelete