Tuesday, May 26, 2015

Astro Answers - Guruji Pathilkal - குருஜியின் மாலைமலர் பதில்கள் - 39 ( 26.5.2015)

என். பழனிமுருகன், பைக்காரா.

கேள்வி:

சனி
கே
செவ்
சுக்
ராசி
ல,பு
சூ
குரு
சந்
ரா


தினமும் கோவிலுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருப்பதைப் போல செவ்வாய், வியாழன் மாலைமலர் குருஜி பதில்கள், விளக்கங்களைப் படிப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளேன். இரண்டுமே மனதிற்கு நிம்மதியையும், நம்பிக்கையையும் தருகிறது. மகளின் ஜாதகம் அனுப்பியுள்ளேன். கேள்வி கேட்கத் தெரியவில்லை. தாங்களே எதிர்காலம் சொல்லுங்கள்.

பதில்:

சிம்மலக்னம், கன்னிராசி, லக்னத்தில் சூரி, புதன். இரண்டில் ராகு. ஐந்தில் குரு. எட்டில் சனி. பதினொன்றில் சுக், செவ்.

மகள் மகாலட்சுமிக்கு லக்னாதிபதி சூரியன் லக்னத்தில் அமர்ந்து லக்னத்தைக் குருபகவான் பார்த்து சுக்கிரனும் செவ்வாயும் இணைந்து தர்மகர்மாதிபதி யோகம் ஏற்பட்ட அருமையான யோக ஜாதகம். தற்போது இந்தப் பருவத்தில் ராகு தசை நடப்பது மட்டுமே பலவீனம். ஆயினும் அவர் கன்னியா ராகு என்பதாலும் லக்னமும், லக்னாதிபதியும் குருபார்வையுடன் வலுவாக உள்ளதாலும் கெடுதல்கள் எதுவும் செய்யாமல் வெளிமாநில, வெளிதேச யோகத்தைச் செய்வார்.

ராகுவிற்கு பிறகு வரும் குருபகவானும் அஷ்டமாதிபதியாகி ஆட்சி பெற்றுள்ளதால் எட்டிற்குடையவன் சுபராகி வலுப்பெற்று தசை நடத்தினால் வெளிநாட்டு யோகம் எனும் விதிப்படி தூர வாழ்க்கையையும், ராஜயோகங்களையும் தருவார். இதனை அடுத்து வரும் சனி தசையும் குருவின் வீட்டில் எட்டாமிடத்தில் இருப்பது உறுதி செய்கிறது.

லக்னத்திற்கு எட்டில் சனி இருந்து அதுவே ராசிக்கு ஏழில் சனி என்ற அமைப்பானதால் திருமண விஷயத்தில் பொறுமையாகத் தேர்ந்தெடுப்பது நல்லது. ஏழரைச்சனி முடிந்துவிட்டதால். 24வயது முதல் சகல யோகங்களையும் குறைவின்றி அனுபவித்து சீரான முறையில் வாழ்க்கை நடத்தப் போகும் யோக ஜாதகம்.

மா. பரிமளா, பேராவூரணி.

கேள்வி:

செவ்
ரா
ராசி
சனி
கே
குரு
சூ
பு
சுக்
சந்


என் மகள் ஜாதகத்தை கணித்து எழுதியுள்ளது சரிதானா? இவள்தான் எங்களுக்கு தலைச்சன் பிள்ளை. இவளுக்கு அடுத்து சகோதரன், சகோதரி உண்டாக வாய்ப்புள்ளதா? எதிர்காலம், கல்வி அறிவு எப்படி உள்ளது?

பதில்:

கடகலக்னம், கன்னிராசி. இரண்டில் சனி, கேது. மூன்றில் சுக். நான்கில் சூரி, புதன். ஐந்தில் குரு. பனிரெண்டில் செவ்.

ஜாதகம் சரியாகவே கணிக்கப்பட்டுள்ளது. லக்னாதிபதி மூன்றில் அமர்ந்து மூன்றுக்குடையவன் பரிவர்த்தனை ஆனதால் இவளுக்குப் பின் ஒரு சகோதரி உண்டு. நடப்பில் இருக்கும் அனைத்து தசைகளும் யோக தசைகளாகி குருபகவான் லக்னத்தை பார்த்து புதன் பரிவர்த்தனை பெற்றுள்ளதால் படிப்பு நன்றாக வரும். எதிர்காலம் அருமையாக இருக்கும்.

எம். சுப்பிரமணியம், திருப்பூர்.

கேள்வி:

சுக்
சூ
பு
கே
செவ்
சனி
குரு
ராசி
சந்


மகனுக்கு திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டது. மீண்டும் எப்போது திருமணம்? 72 வயதாகிவிட்டது. பேரக் குழந்தைகளைப் பார்க்க முடியுமா? என் ஆயுள் எவ்வளவு என்பதை தெரியப்படுத்த வேண்டுகிறேன்.

பதில்:

தனுசுலக்னம், துலாம்ராசி. மூன்றில் குரு. நான்கில் சுக். ஐந்தில் சூரி, புதன். ஆறில் கேது. ஏழில் செவ்வாய் சனி.

ஏழில் செவ்வாய், சனி அமர்ந்து ஏழுக்குடையவன் வலுவிழந்து இளைய தாரத்தையும் இரண்டாம் திருமணத்தையும் குறிக்கும் பதினோன்றாமிட அதிபதி சுக்கிரன் உச்சமாகி ஏழரைச்சனியும் நடந்ததால் மகனுக்கு விவாகரத்தானது. அடுத்த வருடம் தைமாதம் புதன்தசை, சனிபுக்தியில் நிலையான குடும்பம் அமையும். மகனின் ஜாதகத்தில் சூரியன் உச்சம் என்பதாலும் ஒன்பதாமிடத்தை குரு பார்ப்பதாலும் உங்களுக்கு தீர்க்காயுள். பேரன், பேத்திகளை மடியில் வைத்து கொஞ்சுவதோடு பள்ளிக்குச் செல்லும்வரை அவர்கள் வளர்ந்து நீங்கள் கண் குளிர பார்க்கும் வரை உங்கள் ஆயுள் இருக்கும்.

அப்துல் கனி, கடையநல்லூர்.

கேள்வி:

குரு
கே
ராசி
செவ்
ரா
சூ,சந்,பு
சு,சனி,ல


மகன் பிறந்தது முதல் பல சோதனைகள். என் தகப்பனாரும் இறந்து விட்டார். மகன் கன்னிராசி, கன்னி லக்னத்தில் பிறந்திருக்கிறான். ஜோதிடர்களிடம் கேட்ட போது அவனுக்கு சூரியதசை முடிந்ததும் சிறப்பாக இருக்கும் என்று சொன்னார்கள். முடிந்து ஆறுமாதமாகியும் எனது மகனால் எங்களுக்கு எந்த மன நிம்மதியும் கிடைக்கவில்லை. தங்களின் பதிலை எதிர்பார்க்கிறேன்.

பதில்:

நம்முடைய பூர்வஜென்ம கர்மவினைகளின்படியே இப்பிறவியில் சுக துக்கங்கள் அமைகின்றன. நம்முடைய தவறுகளுக்கு மூன்று வயதுக் குழந்தை பொறுப்பாகாது. நம்முடைய தவறுகளை ஒரு பிஞ்சின் மேல் சுமத்துவதும் சரியாக இருக்காது. பரம்பொருள் ஒரு குழந்தையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை உங்களுக்கு எப்படி கொடுக்கவில்லையோ அதேபோல தாய், தகப்பனை தேர்ந்தெடுக்கும் உரிமையும் ஒரு சிசுவிற்கு கொடுக்கப்படவில்லை.

ஜாதகரீதியாக உங்களுடைய கஷ்டங்களுக்கு வேறு காரணங்கள் இருக்கலாம். கன்னிலக்னம், கன்னிராசியாகி ஏழரைச்சனியையும் முடித்துவிட்ட இந்த யோக ஜாதகத்தை கொண்ட குழந்தை உங்கள் கஷ்டங்களுக்கு ஒருபோதும் காரணமாகாது. பெற்ற குழந்தையை இதுபோல நினைப்பதை முதலில் கைவிடுங்கள். இக்குழந்தையே உங்களின் பொக்கிஷம். குழந்தையின் ஜாதகம் யோகஜாதகம் என்பதால் குழந்தை வளர வளர குடும்பத்தில் சிறப்புகள் சேரும் அனைத்துச் செல்வங்களும் பரம்பொருளின் கருணையே.

அம்மா அப்பாவை நன்றாக வைத்துக் கொள்வேனா?

என். பவித்ரா, கோவை - 5.

கேள்வி:

சந்
கே
சனி
ராசி
சுக்
செவ்
ல,சூ
பு,குரு
ரா


என் அம்மா, அப்பா எனக்குக் கிடைத்த பெரும் பாக்கியம். இவர்களுக்கு மகளாக பிறக்க முன்ஜென்மத்தில் பெரும் புண்ணியம் செய்திருக்கிறேன் என்று தோன்றுகிறது. எங்களை வளர்த்து ஆளாக்க என் தாயும், தந்தையும் படாத கஷ்டங்கள் இல்லை. நான்தான் மூத்தபெண். எனக்குச் செல்லம் அதிகம். டாக்டராக ஆசைப்பட்டேன். முடியாததால் பயோடெக்னாலஜி படித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு நல்ல எதிர்காலம் உண்டா? தாய், தந்தை, தம்பி, தங்கைகளை கடைசிவரை நன்றாக பார்த்துக் கொள்வேனா? எங்களை இழிவாக நினைத்தவர்கள் முன் நல்ல நிலைமையில் இருப்போமா? ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளதாக ஜோதிடர்கள் சொல்வதால் பயமாக உள்ளது. திருமண வாழ்க்கை நன்றாக இருக்குமா? எனக்கு வரும் கணவர் என் குடும்பத்தை அவர் குடும்பம் போல் பார்த்துக் கொள்வாரா? தயவு செய்து உங்கள் மகளுக்கு பதில் கொடுங்கள். ப்ளீஸ் ப்ளீஸ்

பதில்:

விருச்சிகலக்னம், மேஷராசி. லக்னத்தில் சூரி, புதன், குரு. இரண்டில் சுக், செவ். நான்கில் சனி. ஆறில் சந், கேது.

விருச்சிக லக்ன, ராசிப்பெண்கள் தன் குடும்பம் முன்னேற வேண்டும் என்ற அதிக அக்கறையுடன் உழைப்பவர்கள். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அது சுயநலம் போன்று தோன்றும். பிறந்ததிலிருந்தே லக்ன யோகாதிபதிகளான சூரிய, சந்திர தசைகள் உனக்கு நடக்கிறது. எனவே நினைத்ததை அடையப் போகும் அதிர்ஷ்டகாரப்பெண் நீ.

லக்னத்தில் குரு சுபத்துவம் பெற்றதால் நல்ல குணவதியாகவும் இருப்பாய். அதே நேரம் லக்னத்தை சனி பார்ப்பதால் மிகுந்த பிடிவாதகாரி. இரண்டாம் வீட்டில் உனக்கு செவ்வாய் தோஷஅமைப்பில் இருந்தாலும் அவர் சுக்கிரனுடன் இணைந்து குருவின் வீட்டில் பரிவர்த்தனையில் இருப்பதால் செவ்வாய் தோஷம் இல்லை.

தற்போத உன் மேஷ ராசிக்கு அஷ்டமச்சனி நடக்கிறது. இன்னும் இரண்டு வருடங்களுக்கு பிறகு சனி முடிந்தவுடன் நீ கேட்பது அனைத்தும் கிடைக்கும். திருமணம் இஷ்ட திருமணமாக இருக்கும். திருமணத்திற்குப்பின் ஆனந்த வாழ்க்கை வாழ்வாய். நான்கு, ஒன்பதாமிடங்கள் வலுப்பெற்றதால் கடைசிவரை தாய், தந்தையரை கவனிப்பாய். அதேநேரத்தில் உன் தந்தை உன்னால் கவனிக்கப்படும் நிலையில் இல்லாமல் அவரே நன்றாகத்தான் இருப்பார்.

உன்னுடைய 24-க்கு வயதிற்குப் பிறகு ஆரம்பிக்க இருக்கும் ராகுதசை சுபர் வீடான சுக்கிரனின் வீட்டில் அமர்ந்து லக்னாதிபதி சாரம் வாங்கி பாக்கியாதிபதியின் பார்வை பெற்றதால் 24 வயது முதல் உன் வாழ்க்கையில் நல்லநிலைகள் தொடங்க ஆரம்பிக்கும். ராகுதசை உனக்கு அனைத்து பாக்கியங்களையும் தரும். இறுதிவரை சுகவாழ்க்கை வாழும் ஜாதகம் உன்னுடையது. வாழ்த்துக்கள் மகளே.

நஜீப்மீரான், திருநெல்வேலி.

கேள்வி:

ரா
சுக்,
செவ்
ராசி
குரு
சந்
சூ
பு
சனி
கே


மகனுக்குத் திருமணம் எப்போது? நல்ல வரன் அமையுமா? நிரந்தரமான வேலை, வெளிநாட்டு வாய்ப்பு உண்டா? யோகமான ஜாதகமா? ராகுதசை சுயபுக்தி, அர்த்தாஷ்டம சனி, நீசகுரு என அவன் ஜாதக நிலை பயமாக இருக்கிறது. தங்களின் பதில் பார்த்து திருப்தி அடைவேன். இறைவனை வேண்டி பதிலுக்கு காத்திருக்கிறேன்.

பதில்:

மேஷலக்னம், சிம்மராசி. இரண்டில் ராகு. எட்டில் சனி. ஒன்பதில் சூரி, புதன். பதில் குரு. பதினொன்றில் சுக், செவ்.

லக்னாதிபதி செவ்வாய் பதினொன்றில் அமர்ந்து சந்திரனின் பார்வை பெற்று வலுவாகி பாக்கியாதிபதி குரு நீச வர்கோத்தமம் அடைந்து நான்குக்குடையவன் ஐந்திலும், ஐந்திற்குடையவன் ஒன்பதிலும் அதிநட்பு வலுப்பெற்று பிறந்ததில் இருந்தே யோக தசைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் யோக ஜாதகம் உங்கள் மகனுடையது.

ஒருவருக்கு ராகுதசை சுயமாக நன்மை செய்ய வேண்டுமென்றால் அந்த ராகு மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய ஐந்து இடங்களில் மட்டுமே இருக்க வேண்டும். அதிலும் ரிஷப ராகு மிகவும் நன்மைகளை தருபவர். கெடுதல்கள் செய்யும் அமைப்பில் இருந்தால் கூட ரிஷப ராகு கெடுதல்கள் செய்யமாட்டார்.

அடுத்து நீசகுரு வர்க்கோத்தமம் பெற்றதால் ஆட்சிபலம் பெற்று அவரும் வலுவாகவே இருக்கிறார். ராகுதசை யோகதசை என்பதால் கோச்சார அர்த்தாஷ்டம சனி ஒன்றும் செய்யாது. சிறிதளவே ஜோதிட ஞானத்தை வைத்துக் கொண்டு ஜோதிடத்தை தவறாக புரிந்து கொள்வது அபத்தம். உங்கள் மகனுக்கு திருமணம் ராகு தசை சுயபுக்தியிலும், நிரந்த வேலைவாய்ப்பு வெளி நாட்டில் எட்டில் இருக்கும் சனியின் பார்வை பெற்ற குரு புக்தியிலும் கிடைக்கும். ராகுதசை யோகதசை என்பதால் மகனின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.

No comments :

Post a Comment