Tuesday, May 19, 2015

Astro Answers - Guruji Pathilkal - குருஜியின் மாலைமலர் பதில்கள் - 38 (19.5.15)

மு. தனலக்ஷ்மி, தஞ்சாவூர் - 1.

கேள்வி:

கல்யாணமாகி பனிரெண்டு வருடமாகிறது. பதினெட்டு பவுன் நகையையும், என்னுடைய தாலியையும் என் மாமியார் அறுத்து எடுத்துக் கொண்டார். பைத்தியம் பிடித்தவர் மாதிரி நடந்து கொள்கிறார். வாழவிடாமல் என் தந்தை வீட்டிற்கு அனுப்பிவிட்டார். கணவர், குழந்தைகளோடு சேர்ந்து வாழ முடியுமா? மனதில் அடிக்கடி பயமும் குழப்பமும் ஏற்படுகிறது. வாழ வழிகாட்டுங்கள்.

பதில்:

உன்னுடைய விருச்சிக ராசிக்கு கடுமையான ஏழரைச்சனி நடந்து வருகிறது அம்மா. உன் வாழ்க்கையில் நடந்த சோதனைகளுக்கு அதுதான் காரணம். சனிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் பழமையான ஈஸ்வரன் கோவிலில் அருள்பாலிக்கும் காலபைரவருக்கு வீட்டிலிருந்து நல்லெண்ணெய் எடுத்துப்போய் மண் அகல் விளக்கில் தீபமேற்றி வா. வரும் ஜூலை மாதத்திற்கு மேல் உன் மாமியார் வீட்டில் மாற்றங்கள் உருவாகும். இன்னும் ஒன்றரை வருடத்தில் 2016ம் ஆண்டு இறுதியில் இடையில் இருக்கும் நந்தி விலகி உன் கணவருடன் சேருவாய்.

கே. பி. நந்தகுமார், வடுகபாளையம் புதூர்.

கேள்வி:

சனி
ரா
ராசி
சூ,பு
குரு
சுக்
செவ்
கே
சந்
ல,சூ
பு,சுக்
சனி
செவ்
ராசி
குரு
ரா
கே
சந்


72 வயதாகும் நான் என் குருவை நமஸ்கரிக்கிறேன். திருமணமே நடக்கவில்லை. வீடு, வாசல் இல்லை. எண்களில் பூ வைத்து அகத்தியர் ஆரூடபலன் சொல்லும் ஜோதிடத் தொழில் செய்கிறேன். நண்பர் டீக்கடையில் நான்கு வருடமாக ஓசியாகத் தங்குகிறேன். நண்பர்களிடம் வாங்கிய கடனை அடைக்க முடியுமா? வேறு தொழில் செய்ய முடியுமா? ஆயுள் எவ்வளவு? வாழ்க்கையில் இதுவரை கேள்விக் குறியைத்தான் சந்தித்துள்ளேன். ஆச்சர்யக் குறியைப் பார்ப்பேனா?

பதில்:

மேஷலக்னம், கன்னிராசி. லக்னத்தில் சூரி, புத, சுக். திருக்கணிதப்படி மூன்றில் செவ், சனி, நான்கில் குரு, ராகு.

லக்ன பாவிகள் வலுவாக லக்னத்தில் அமர்ந்து லக்னாதிபதி செவ்வாய் சனியுடன் இணைந்து பரிவர்த்தனையாகி ராசிக்கோ லக்னத்திற்கோ சுபர் பார்வை கிடைக்காத வலுவிழந்த ஜாதகம். செவ்வாய், சனி இணைவால் தார தோஷமும் குரு, ராகு சேர்க்கையால் புத்திர தோஷமும் ஏற்பட்டதோடு அம்சத்தில் சனியும், புதனும் உச்ச வலுப்பெற்று சரியான பருவத்தில் அவர்கள் இருவரது தசையும் நடப்பது குற்றம்.

கன்னி ராசிக்கு ஏழரைச்சனி முடிந்து விட்டதால் இனிமேல் நிம்மதி கிடைக்கும். புதன் தசை முடிந்த பிறகு வாழ்வின் இறுதியில் வரப்போகும் சூரியனின் சாரமும், குருவின் பார்வையையும் பெற்ற கேதுவின் தசை மட்டுமே வாழ்வின் யோகதசை. கேதுவில் மட்டுமே நிம்மதி கிடைக்கும். கேதுவரை ஆயுளும் நீடிக்கும். தொழில் இதே தொழில்தான்.

எஸ். நாகராஜ், கோவை.

கேள்வி:

கே
குரு
ராசி
செவ்
சனி
சந்
பு
சூ
சு
ரா














மாலை மலரில் வெளிவரும் ஜோதிடம் எனும் தேவரகசியம் தொடரைத் தொடர்ந்து படித்து வருகிறேன், நானும் ஒரு ஜோதிட ஆராய்ச்சியாளன்தான். நகைத்தொழில் செய்கிறேன். இந்த தொழிலில் கடைசிவரை சம்பாத்தியம் கிடைக்குமா? சொந்த வீடு உண்டா? எந்தத் தசை நன்றாக இருக்கும்?

பதில்:

சிம்மலக்னம், விருச்சிகராசி லக்னத்தில் சனி, இரண்டில் ராகு, மூன்றில் சூரி, சுக், நான்கில் புதன், பதினொன்றில் குரு, பனிரெண்டில் செவ்.

பத்துக்குடையவன் சுக்கிரனாகி பத்தாமிடத்திற்கு ஆறில் மறைந்து லக்னாதிபதியுடன் இணைந்திருப்பதால் சுக்கிரனுக்குரிய நகைத் தொழில் செய்வது லாபத்தைத் தரும். கேது தசைக்கு அடுத்து வரும் சுக்கிரதசை நல்லதசைதான். மூன்றாமிடமான உபசய ஸ்தானத்தில் ஆட்சி வலுவுடன் இருக்கும் சுக்கிரனே சொந்த வீட்டையும் தருவார்.

பி. எம். மஞ்சுளா, வேலூர்.

கேள்வி:

குரு
கே
பு,ல
சூ,சு
ராசி
சனி
செவ்
சந்
ரா













தங்களைத் தொடர்பு கொள்ளும் பாக்கியத்தினைக் கொடுத்த மாலைமலர் நாளிதழுக்கு நன்றி. இறைவன் அருளால் நல்ல கணவனும், நல்ல குழந்தைகள் இருந்தும் இரண்டாவது மகள் பிறந்ததிலிருந்து மனமும் உடலும் வேலை முதல் குடும்பம் வரை மிகுந்த அலைச்சலையும், சிரமத்தையும் அனுபவித்து வருகிறேன். மாற்றுத் திறனாளியான என்னால் பஸ்சில் தினமும் சென்று வருவது முடியாமல் இருக்கிறது. பணியிடம் மாறுதல் என் ஊரிலோ, அல்லது பக்கத்திலோ எப்பொழுது கிடைக்கும்? வாடகை வீடு மாறி எப்பொழுது சொந்தவீடு கட்டுவோம்?

பதில்:

மிதுனலக்னம், சிம்மராசி லக்னத்தில் சூரி, புத, சுக். இரண்டில் சனி, மூன்றில் செவ். ஐந்தில் ராகு, பதினொன்றில் குரு.

குழந்தைகள் இருவருக்குமே மீனராசியாகி கடந்த மூன்று வருடமாக அஷ்டமச்சனி நடந்ததால் உங்களுக்கு அனைத்திலும் தொல்லைகள் இருந்தன. அதோடு உங்களுக்கும் தற்பொழுது மிதுனலக்ன பாவியான செவ்வாயின் தசை நடக்கிறது. உங்களின் சிம்ம ராசிக்கு தற்பொழுது பணி இடர்பாடுகள் இருக்கத்தான் செய்யும். அடுத்த ஆண்டுதான் மாற்றம் உண்டு. குழந்தைகள் இருவரின் ஜாதகமும் யோக ஜாதகம் என்பதால் குழந்தைகளின் எதிர்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும்.

ஜி. காமாட்சிசுந்தரம், கவுந்தப்பாடி.

கேள்வி:

குரு
சனி
செவ்
சுக்
கே
ராசி
சூ
பு
ரா
சந்














பேஸ்புக்கில் தங்களைப் படிக்கும் லட்சோபலட்சம் வாசகர்களில் நானும் ஒருவன். தங்களின் ஆய்வுக்கட்டுரைகளில் லக்னபாவிகள் தன் தசா புக்தியில் நன்மை செய்வதில்லை என்று கூறியுள்ளீர்கள். என் மகன் வாழ்வில் பெறும்பகுதி லக்ன பாவிகளான சனி, புதன், கேது, சுக்கிரன் தசை வருவது பயமாகவும், வருத்தமாகவும் உள்ளது இந்த தசைகளில் நன்மை கிடைக்க என்ன செய்ய வேண்டும்? மகனின் எதிர்காலம் எவ்வாறு உள்ளது என்று அறிய தவமிருக்கிறேன். ஏற்கனவே இரண்டு முறை கேள்வியை நிராகரித்தது போல தற்பொழுதும் செய்யாமல் பதில் தருமாறு குருவை வணங்கிக் கேட்டு கொள்கிறேன்.

பதில்:

விருச்சிகலக்னம், துலாம்ராசி, ஐந்தில் குரு. ஆறில் சனி. எட்டில் சுக், செவ், ஒன்பதில் சூரி. பத்தில் புதன், ராகு.

எல்லா ஜாதகங்களிலும் நண்பர்களின் தசைகள் நன்மைகளைச் செய்து விடுவதில்லை. அதேபோல லக்னபாவிகள் அனைவரும் கெடுதல்களை மட்டுமே செய்வதில்லை. அனைத்துக் கிரகங்களும் ஒரு ஜாதகரின் பூர்வஜென்ம கர்ம வினைகளின்படி ஜாதகபலன்களை தங்களுடைய ஆதிபத்தியத்தின்படி காரகத்துவங்களின் வழியே செய்கின்றன. இதுவே படைப்பின் ரகசியம்.

ஒரு ஜாதகத்தில் லக்னபாவிகள் மூன்று, ஆறு, பத்து, பதினொன்று எனப்படும் உபசய ஸ்தானங்களில் அதிக வலுப்பெறாமல் நட்பு வலுவோடு இருந்தால் நன்மைகளை செய்வார்கள். உங்கள் மகனின் ஜாதகத்தில் சனிபகவான் ஆறாம் பாவத்தில் நீசமும், சூட்சமவலுவும் அடைந்து சூரிய கேந்திரத்தில் நிற்கும் வளர்பிறை சந்திரனின் பார்வையைப் பெற்று கேதுவின் சாரத்தில் இருக்கிறார். இது நன்மை தரும் அமைப்பு.

அடுத்து நடக்கவிருக்கும் தசாநாதன் புதபகவான் பெருங்கேந்திரமான பத்தாமிடத்தில் அதிநட்புநிலை பெற்று அவரும் கேதுவின் சாரத்தில் இருக்கிறார். புதனையடுத்து கேதுதசையும் நடக்கவுள்ளது. ஆகவே ஏறத்தாழ 53 வயதுவரை உங்கள் மகன் கேதுபகவானின் ஆதிக்கத்தில் இருப்பார். இது நீடித்த வெளிநாட்டு அமைப்பைக் குறிப்பதோடு கேதுபகவான் அவருக்கு பிடித்த கும்பவீட்டில் நான்காமிடத்தில் இருப்பதும் யோகநிலைதான். விருச்சிகலக்னத்திற்கு கேது சுபர்தான். ராகுதான் பாவி.

பத்தாம் வீட்டில் ராகு இருப்பது வெளிதேச ஜீவனத்தைக் குறிக்கும். லக்னாதிபதி எட்டாம் வீட்டில் மறைந்து எட்டில் சுபரோடு இணைந்திருப்பதாலும் அந்திம காலத்தில் நடக்கவிருக்கும் சுக்கிரனின் தசையும் நட்பு ஸ்தானத்தில் எட்டாம் வீட்டில் இருப்பதாலும் உங்கள் மகன் வெளிநாட்டில் செல்வச்செழிப்புடன் இருப்பார். லக்னத்தைப் பார்க்கும் ஆட்சி பெற்ற குருவும் இதை உறுதி செய்கிறது. எனவே மகனின் எதிர்காலத்தைப் பற்றி எவ்வித கவலையும் உங்களுக்குத் தேவையில்லை.

அவளைத் திருமணம் செய்தால் எப்படி இருப்பேன்?

எஸ். முருகேஷ் , தண்டையார்பேட்டை.

கேள்வி:




ரா
ராசி
சந்
சூ,பு
குரு,கே
சனி
சுக்
செவ்












சந் கே
ராசி
சனி
சுக்
குரு
ரா சூ,பு
செவ்















நாங்கள் காதலிக்கிறோம். இருவீட்டாரும் சம்மதித்தார்கள். பொருத்தம் பார்க்கப் போன இடத்தில் பையனின் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம். பாவஜாதகம். வர இருக்கும் சுக்கிரதசை கெட்டது. பெண்ணைக் கொடுக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். ஆனால் அந்தப் பெண் என்ன ஆனாலும் என்னைத்தான் கல்யாணம் செய்வேன் என்று சொல்கிறாள். நாங்கள் திருமணம் செய்தால் உயிர்ப்பலி வாங்குமாம். எனக்கு அவளை ரொம்பப் பிடிக்கும். என் ஜாதகத்தில் அப்படி என்ன இருக்கிறது? சில ஜோதிடர்கள் எனக்கு செவ்வாய் தோஷம் இருக்கிறது என்றும், சிலர் இல்லை என்றும் சொல்கிறார்கள். நான் என்ன செய்ய வேண்டும்? அவளைத் திருமணம் செய்தால் எங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்? குருஜியின் நல்ல பதிலை எதிர்பார்க்கிறோம்.

பதில்:

பையனுக்கு மீனலக்னம், கடகராசி. மூன்றில் ராகு. ஏழில் சுக், செவ். எட்டில் சனி. ஒன்பதில் சூரி, புதன், குரு.

பெண்ணிற்கு மேஷலக்னம், ரிஷப ராசி. மூன்றில் கேது. ஐந்தில் சுக், குரு. ஆறில் சூரி, புதன், செவ். பத்தில் சனி.

கேள்வி கேட்கும் எல்லோருக்கும் நல்ல பதிலைச் சொல்ல முடியுமா என்ன? ஜாதகத்தில் உள்ளதைத்தான் சொல்லமுடியும். சீதாதேவியும் ஸ்ரீ ராமபிரானும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட அந்த நொடியில் “அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்” என்று கம்பர் வர்ணிக்கும் அந்த தூயகாதலுக்கு இருவரின் லக்னமோ ராசியோ ஒன்றாகவோ சமசப்தமமாகவோ இருக்க வேண்டும்.

பெண்ணைக் கொடுக்க வேண்டாம் என்று பல ஜோதிடர்கள் சொல்கிறார்கள் என்றால் அர்த்தமில்லாமல் யாரும் சொல்லமாட்டார்கள். உனக்கு மீன லக்னமாகி நீச சுக்கிரனும் செவ்வாயும் ஏழாமிடத்தில் இணைந்து சுக்கிரனின் தசை தற்பொழுதுதான் ஆரம்பித்திருக்கிறது. ஜாதகப்படி உன்னுடைய காதல் மேம்போக்கானது. இதில் அர்ப்பணிப்பு உணர்வோ, பிரதிபலன் கருதாத அன்போ இல்லாமல் வெறும் உடல் கவர்ச்சி மட்டுமே இருக்கும்.

நீச சுக்கிரன் ஏழாமிடத்தில் செவ்வாயுடன் இணைந்ததால் உனக்கு பெண்கள் விஷயத்தில் தேடுதல் இருக்கும். உன் வாழ்வில் ஒருத்தி மட்டும் இல்லை. அதேநேரத்தில் லக்னாதிபதி குரு ஒன்பதாமிடத்தில் அமர்ந்து லக்னத்தை பார்த்ததால் நீ மனசாட்சி உள்ளவன். ஆனால் சுக்கிரதசையில் உன்னால் ஒரு பெண்ணிற்கு மட்டும் உண்மையானவனாக இருக்க முடியாது.

அடுத்து அந்தப் பெண்ணிற்கு மேஷலக்னமாகி சுக்கிரனும் குருவும் எட்டு டிகிரிக்குள் ஐந்தாமிடத்தில் ஒன்றாக இணைந்து ஒன்பதாமிடத்தில் இருக்கும் ராகுவின் தசையில் வலுப்பெற்ற பாதகாதிபதி சனியின் புக்தி நடக்கிறது. இந்தப் புக்தியில் அவளுக்கு பாதகமே நடக்கும். இதையடுத்து மேஷ லக்னத்திற்கு வரக்கூடாத ஆறாமிடத்தில் உச்சம் பெற்ற புதனின் புக்தி நடக்க இருக்கிறது. புதன்புக்தி நேரத்தில் அந்த பெண்ணிற்கு அஷ்டமச்சனியும் நடக்கும்.

ஆகவே, பெண்ணைப் பெற்றவர்கள் நன்கு அனுபவமுள்ள ஜோதிடர்களைத்தான் பார்த்திருக்கிறார்கள். அதேநேரத்தில் கர்மா என்று ஒன்று இருக்கிறதே அதை மாற்ற யாரால் முடியும்? நடக்கப்போவது என்ன என்று உன்னுடைய நீச சுக்கிரதசையும் அந்தப் பெண்ணின் உச்ச புதன்புக்தியும் எனக்குத் தெளிவாகக் காட்டுகிறது. எல்லாம் அவன் செயல்.

3 comments :

  1. மதிப்பிற்குரிய குருஜி ,

    தங்களிடம் இரு பொதுவான கேள்விகளை கேட்க விழைகின்றேன்

    1) ஒரு கிரகம் பொதுவாக ஒரு வீட்டை பார்பதற்கும் 'அந்த வீட்டு' அதிபதியின் நட்சித்திர பாதம் ஏறி அந்த வீட்டை பார்பதற்கும் உள்ள வேறுபாடு என்ன?

    2) 1ம் வீட்டு அதிபதியே 4ம் வீட்டு அதிபதியானால் அதில் சூக்ஷ்ம விதி ஏதாவது உள்ளதா? குறிப்பாக அவரது குடும்பம், பிறப்பு பற்றியன

    நன்றி
    சதீஷ் குமார்

    ReplyDelete
    Replies
    1. விரிவாக பதில்தர வேண்டிய கேள்வி என்பதால் கட்டுரைகளுக்கு நடுவில் இதைப்பற்றி விளக்குகிறேன்

      Delete
    2. மதிப்பிற்குரிய குருஜி அவர்களுக்கு,

      பதில் அளித்தமைக்கு நன்றிகள்.

      தங்களிடம் ஆயுள் பாவம் பற்றிய 'pdf files' தங்கள் வலைபதிவில் 'அப்லோட்' செய்தால் நன்றாக இருக்கும்


      நன்றி
      சதீஷ்

      Delete