Tuesday, February 17, 2015

Astro Answers - Guruji Pathilkal - குருஜியின் மாலைமலர் பதில்கள் - 25 (17.2.15)

கிருஷ்ண பிரதாப்சிங், அரகண்ட நல்லூர்.

கேள்வி:

2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான ஒன்பது மாதங்களுக்குள் எனக்கு விபத்தினால் மரணம் வரும் என்று ஜோதிட அன்பர்கள் சிலர் தெரிவிக்கின்றனர். மரணம் குறித்து அச்சம் இல்லை. ஆனால், அது இயற்கையான முடிவாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். பரிகாரம் வழிபாடு ஏதேனும் இருப்பின் தெரிவித்து உதவுங்கள்.

பதில்:

கொடுக்கப்பட்ட 04. 01. 1956 பகல் 2.22 என்ற விபரப்படி திருக்கணிதப் படியும், வாக்கியப்படியும் ஒத்துவராத தவறாக கணிக்கப்பட்ட ஜாதகம். இதை வைத்து ஜோதிட அன்பர்கள் எப்படி ஆயுளைக் கணித்தார்கள்? சரியான ஜாதகம் அல்லது பிறந்த நாள், நேரம், இடத்தை சரியாகக் குறிப்பிட்டு கேள்வியை அனுப்புங்கள். பதில் சொல்கிறேன். ஆனால், ஒன்று உங்கள் குழந்தைகளின் ஜாதகப்படி இந்த காலக்கட்டத்தில் அவர்கள் தகப்பனை இழக்கும் அமைப்பு இல்லை.

. யமுனா, சென்னை.

கேள்வி:


ரா
சூ,பு
ராசி
சுக்
குரு
சந்
கே
ல,சனி
செவ்

என்ன எழுதுவது என்றே புரியவில்லை. இளம் வயதில் ஆயிரத்தெட்டு பிரச்சினை. ஏன் பிறந்தோம் என்று தோன்றுகிறது. ஏமாற்றம், வேதனை, சோதனை, ஒற்றுமையின்மை என்று மொத்தமாக அமைந்து விட்டது. விடிவு என்ன என்று அலைகிறேன். என் வாழ்க்கையில் மட்டும் ஏன் இப்படி? ஏமாறும் ஜாதகமா? நான் கேட்பதெல்லாம் ஒரு நிரந்தர வேலை. எப்போது கிடைக்கும்? அது ஒன்று போதும் வாழ்க்கையை அமைத்துக் கொள்வேன்.

பதில்:

24-2-1984, 8.10pm, சென்னை.

கன்னி லக்னம், விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரமாகி பதினேழு வயது முதல் உனக்கு நடக்கும் சுக்கிர தசை நீ சொல்லாவிட்டாலும் எனக்கு நிறைய விஷயங்களைச் சொல்கிறதம்மா. அதிலும் கடந்த 2012 முதல் 2014 வரை நடந்த குருபுக்தி உனக்கு நடந்த ஏமாற்றங்களை எனக்குத் தெளிவாகக் காட்டுகிறது. யாரையும் நம்பாதே. இந்த உலகமே ஒரு அப்பாவி பெண்ணை ஏமாற்றி இன்பம் அனுபவிக்கும் உலகம்.

முப்பது வயதுகளில் நடக்கும் ஏழரைச்சனி கடுமையான வழிகளில் வாழ்க்கையைக் கற்றுக் கொடுக்கும். இப்போது அதுதான் உனக்கு நடக்கிறது. இப்போதுதான் நல்லவர் யார்? கெட்டவர் யார்? நல்லது எது, கெட்டது எது என்று அனுபவத்தில் தெரிந்து கொண்டு வருகிறாய். எதிலும் விழிப்புடன் இரு.

இன்னும் இரண்டு வருடங்களுக்கு உனக்கு நிரந்தர வேலைவாய்ப்பு சரியாக அமையாது என்பதால் கிடைக்கும் எந்த வேலைக்கும் செல்வது புத்திசாலித்தனம். உன்னுடைய ஜாதகம் யோகஜாதகம் என்பதால் சனி முடிந்த பிறகு வாழ்க்கையில் நல்லவிதமாக செட்டிலாகி ஒரு குறையும் இல்லாமல் நிச்சயமாக சந்தோஷ வாழ்க்கை வாழ்வாய்.

தா.சு. கணேசன், கழனிக்கோட்டை.

கேள்வி:

கே,சுக்
செவ்,
பு
சூ
குரு
சந்
ராசி
சனி
ரா

பத்து வருடங்களுக்கு முன் மகளுக்கு திருமணம் நடந்த அன்றே வரதட்சணை பிரச்னையால் பிரிவினையாகி தற்போது விவாகரத்தும் ஆகிவிட்டது. 38 வயதான மகளுக்கு எத்தனையோ முயற்சிகள் செய்தும் தடையாகிறது. திருமணம் நடக்குமா? நடக்காதா? அவரது எதிர்காலம் குறித்து சொல்லமுடியாத கவலையில் குருஜியிடம் பதில் கேட்கிறேன்.

பதில்:

21-5-1977, 8-07pm, தஞ்சாவூர்.

விருச்சிக லக்னம், மிதுன ராசி. ஐந்தில் சுக்கிரன், செவ்வாய், கேது. ஆறில் புதன். ஏழில் சூரியன், குரு. ஒன்பதில் சனி.

விருச்சிக லக்னத்திற்கு புதன் சம்பந்தப்பட்ட தசாபுக்திகளில் எந்த நன்மைகள் நடந்தாலும் அது வில்லங்கத்தில் போய் முடியும். உங்கள் மகளுக்கு ராசிக்கு இரண்டில் இருக்கும் சனிபகவான் புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் இருந்து தசை நடத்துகிறார். மேலும் சுக்கிரன் உச்சமாகி அவருடன் செவ்வாய் இணைந்து இருவரும் ஒரேடிகிரியில் புதனின் ரேவதி நட்சத்திரத்தில் இருக்கிறார்கள். ஆகவே சனி தசை முழுக்க தொல்லைகள்தான்.

தற்போது நடைபெறும் பதினொன்றில் இருக்கும் கன்னியா ராகுவை செவ்வாயும் சனியும் பார்ப்பது சரியல்ல என்றாலும் உச்ச சுக்கிரனும் பரிவர்த்தனை பெற்ற குருவும் ராகுவைப் பார்ப்பதால் நடைபெறும் சனி தசை ராகுபுக்தி சுக்கிர அந்திரத்தில் 4.9.2015 முதல் 25.2.2016-க்குள் நிச்சயம் திருமணம் நடைபெறும். பெண்ணின் ஜென்ம நட்சத்திரம் அன்று ஸ்ரீகாளஹஸ்தியில் ஒரு இரவு தங்கி ருத்ராபிஷேகம் செய்யுங்கள்.

தா. ராமமூர்த்தி, விருதாச்சலம்.

கேள்வி:

கே
குரு
ராசி
சனி
சூ
ரா
சந்
ல,பு
செ,சுக்

குழந்தை பாக்கியம் இல்லை. எப்போது? மனைவியின் ஜாதகத்தில் இரண்டில் சூரியன், செவ்வாய். ஏழில் சனி, ராகு சேர்க்கை எனக்கு பாதிப்பு ஏற்படுத்துமா?

பதில்:

29-8-76, 9-15pm, விழுப்புரம்.

கணவனுக்கு கன்னி லக்னம், துலாம் ராசி. லக்னத்தில் புதன், சுக்கிரன், செவ்வாய். இரண்டில் ராகு. ஒன்பதில் குரு. பதினொன்றில் சனி. பனிரெண்டில் சூரியன்.

மனைவிக்கு கும்ப லக்னம், துலாம் ராசி. லக்னத்தில் சுக்கிரன். இரண்டில் சூரியன், புதன் செவ்வாய். ஆறில் குரு. ஏழில் சனி, ராகு.

இருவருக்கும் துலாம் ராசியாகி ஏழரைச்சனி நடப்பதால் புத்திர பாக்கியம் தாமதம். மனைவியின் சனி தசையில் குருபுத்தியில் 2018ல் கையில் குழந்தை இருக்கும். ஏழில் இருக்கும் சனி, ராகுவை யோகாதிபதி சுக்கிரன் பார்ப்பதால் உங்களுக்கு பாதிப்பு இருக்காது.

ஜி. மூர்த்தி, மதுரை.

கேள்வி:

சுக்
செவ்
சனி
சூ
ராசி
கே
ரா
பு,சந்
குரு

வாரம் தவறாமல் செவ்வாய்க்கிழமை மாலைமலரில் உங்களின் பதில்களைப் படிக்கிறேன். உண்மையும், எதார்த்தமும் அதில் உள்ளதால் உங்கள் மீது மரியாதையும், பற்றும் ஏற்படுகிறது. தொழில் வளர்ச்சி எப்போது? கடன் பிரச்னை எப்போது தீரும்? வாழ்க்கை முடியும்போது என்ன நிலையில் இருப்பேன்?

பதில்:

14-2-72, 9.00am, மதுரை.

மீன லக்னம், மகர ராசி. லக்னத்தில் சுக்கிரன். இரண்டில் செவ்வாய். மூன்றில் சனி. பத்தில் குரு. பதினொன்றில் சந்திரன், புதன், ராகு. பனிரெண்டில் சூரியன்.

பத்தாமிடத்தில் எந்த பாவக் கிரகத்துடனும் சம்பந்தப்படாமல் முழு சுபராக கேந்திராதிபத்திய தோஷத்துடன் இருக்கும் குருபகவான் நன்மைகளையும், நிலையான தொழிலையும் தரமாட்டார். அதனால்தான் நடக்கும் குரு தசையில் உங்களுக்கு நிலையான தொழிலும் இல்லை, கடனும் அமைந்து விட்டது.

ஆனால் ஒரு லக்னத்தின் எதிர்க் கிரகங்கள் மூன்று, ஆறு, பத்து, பதினொன்றாமிடங்களில் ஆட்சி பெறாமல் நட்பு நிலையுடன் இருந்தால் நன்மைகளைச் செய்வார்கள் என்ற விதிப்படி அடுத்து வர இருக்கும் மூன்றில் உள்ள சனி தசையும் பதினொன்றில் இருக்கும் புதன் தசையும் நல்ல யோகம் செய்யும் என்பதால் தொழில் வளர்ச்சி நன்றாக இருக்கும். ஆனால் ஆறுக்குடைய சூரியன் ஆறாம் இடத்தைப் பார்த்து வலுப்படுத்துவதால் கடன் இருக்கத்தான் செய்யும். வாழ்வின் பிற்பகுதி நிம்மதியாக இருக்கும்.

பத்துப் பொருத்தம் பார்த்தால் மட்டும் போதுமா?

. பாலகிருஷ்ணன், தாராபுரம்.

கேள்வி:


ரா
குரு
ராசி
செவ்
சந்
சனி
பு,
சுக்,சூ
கே
செவ்
ல,சந்
குரு
ரா
ராசி
சுக்
கே
சனி
பு,
சூ


என் மகன், மருமகளுக்கு குடும்பஜோதிடர் எட்டுப் பொருத்தம் உள்ளது என்றார். திருமணம் நடந்து இருவரும் பிரிந்துள்ளனர். மருமகள் கர்ப்பமாக இருக்கிறார். ஆனால் எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. இருவரும் சேர்ந்து வாழ்வார்களா?

பதில்:

28-9-87, 12.05am, தாராபுரம். 29-9-1988, 9.00pm, திண்டுக்கல்.

கணவன் மிதுன லக்னம், விருச்சிகராசி. மூன்றில் செவ்வாய். நான்கில் சுக்கிரன், கேது, சூரியன். ஐந்தில் புதன். ஆறில் சனி. பதினொன்றில் குரு.

மனைவிக்கு ரிஷப லக்னம், ரிஷப ராசி. லக்னத்தில் குரு. நான்கில் சுக்கிரன், கேது. ஐந்தில் சூரியன். ஆறில் புதன். எட்டில் சனி. பதினொன்றில் செவ்வாய்.

பத்துப்பொருத்தம் மட்டும் பார்ப்பதற்கு ஜோதிடர் எதற்கு? அதற்கு பொருத்தம் பார்ப்பது எப்படி என்ற பத்து ரூபாய் புத்தகம் போதுமே.

இந்த பத்துப் பொருத்தங்களையும் தாண்டி இரண்டு ஜாதகங்களையும் சேர்க்க அனுகூல பொருத்தங்களைப் பார்ப்பதே சரி. பத்துப் பொருத்தம் என்பது ஒரு வீட்டிற்குள் நுழைய காம்பவுண்டு கேட்டை திறப்பது போல. வீட்டிற்குள் நுழைய வீட்டுக் கதவைத் திறக்க வேண்டுமே? அதுதான் ஜாதக அனுகூலப் பொருத்தம். அதன்படி நடக்கும் கோட்சாரம் இருவரின் ராசி லக்ன சஷ்டாஷ்டகம் தசாசந்தி மற்றும் ராகு செவ்வாய் சனியின் நிலை போன்றவைகளை முக்கியமாகப் பார்க்க வேண்டும்.

உங்கள் மருமகளுக்கு ராகுதசை நடந்து கொண்டிருக்கும் போது ராகுபுக்தி நடக்கும் உங்கள் மகன் ஜாதகத்தை இணைத்தது தவறு. அதோடு உங்கள் மகனுக்கு ஏழரைச்சனியும் நடப்பது குற்றம். இருந்தாலும் அவருக்கு ராகு புக்தி முடிந்து குரு புக்தி வந்துவிட்டதால் இப்போது தந்தை ஆகும் பலன் வந்து விட்டது. மருமகளுக்கு நடக்கும் புதன் புக்தியும் இதை உறுதி செய்வதால் குழந்தை பிறந்த பிறகு இருவரும் ஒன்று சேர்வார்கள்.

டி. கணேசன், மதுரை.

கேள்வி:


ராசி
ரா
செ,சூ,கு
ச,சுகேபு
சந்

முப்பது வருடங்களாக காவல்துறையில் பணிபுரிந்து எஸ் .ஐ. ஆகியும் வாடகை வீட்டில்தான் இருக்கிறேன். பையன் பி.இ. முடித்தும் வேலை இல்லை. பொருளாதாரத்திலும் முன்னேற்றம் இல்லை. தினமும் மீனாட்சி அம்மனை தரிசித்தும் மகான்கள் தரிசனம், பித்ரு வழிபாடு முறையாக செய்து வந்தும் அவமானங்கள்தான் மிச்சம். மனஅமைதி இல்லை. அடுத்து வரும் புதன் தசையில் உத்யோக உயர்வு, பிள்ளைகளால் நிம்மதி உண்டா? ரிட்டயர்டு வரை ஆரோக்கியமாக பணிபுரிவேனா? வி.ஆர்.எஸ். கொடுக்கும் நிலை வருமா? பணபலன்கள் கிடைக்குமா? தங்களின் தீவிர வாசகனான என்னை தங்களின் அருள்வாக்கால் காப்பாற்ற வேண்டுகிறேன்.

பதில்:

27-1-1962, 2.00am, மதுரை.

விருச்சிக லக்னம், துலாம்ராசி. மூன்றில் சூரியன், சனி, செவ்வாய், குரு, புதன், சுக்கிரன், கேது.

அனைத்துக் கிரகங்களும் மூன்றாம் இடத்தில் ஒன்று கூடி யோகங்களையும் யோகபங்கங்களையும் ஏற்படுத்திய 1962ல் ஒரே நேர் கோட்டில் கிரகங்கள் வந்தபோது பிறந்த ஜாதகம். தற்போது ஏழரைச்சனியும் நடக்கிறது. விருச்சிக லக்னத்திற்கு சனியும், புதனும் நன்மை செய்ய மாட்டார்கள். சனி பகவான் மூன்றில் ஆட்சி பெற்று சூரியனின் சாரத்தில் அமர்ந்ததால் கடந்த பதினொட்டு வருடங்களாக உங்களை படுத்தி எடுத்து விட்டார்.

ஆனால் அடுத்து நடக்க இருக்கும் புதன்தசை மூன்றில் நட்பு வலுவுடன் மட்டும் இருந்து அம்சத்தில் உச்சம் பெற்றுள்ளதாலும் லக்னாதிபதியின் உச்ச சாரம் பெற்றுள்ளதாலும் ராசிக்கு அவர் யோகாதிபதி என்பதாலும் ஏழரைச்சனி முடிந்த பிறகு யோகம் செய்வார். உத்தியோக உயர்வும், பிள்ளைகளால் நிம்மதியும் கண்டிப்பாக உண்டு. வி.ஆர்.எஸ். கொடுக்கும் நிலை வராது. ஓய்வுக்கு பிறகு முழு பணபலன்களையும் அடைவீர்கள். ஆரோக்கியமாகவும் இருப்பீர்கள். வாழ்வின் பிற்பகுதியில் அந்திம காலத்தில் சுகப்படும் அமைப்புடைய ஜாதகம். அனைவரையும் காத்தருளும் அன்னை மீனாட்சி உங்களை ஒருபோதும் கை விட மாட்டாள். கவலை வேண்டாம் .

4 comments :

  1. மதிப்பிற்குரிய குருஜி அவர்களுக்கு

    தூமா 'உப க்ரஹம்' அல்லது யோகம் 7ல் இருந்தால் (லக்னம் அல்லது சந்திரனில் இருந்து) அந்த நபருக்கு திருமணமே நடைபெறாதா ??

    குருஜி அவர்கள் விளக்கினால் நன்றாக இருக்கும். ஏனென்றால் எனக்கு அப்படி தான் இருக்கிறது


    நன்றி
    சதீஷ்

    ReplyDelete
  2. Ananth, Date of birth: 14/5/1956 place: Madurai time: 6:34 pm ennudia jodhagappadi mukkiya nalla yogangal enna

    ReplyDelete
  3. Vijayakumaar,Date of birth 9/12/1980,place singapore,Time 04.35pm...ennaku nalla neram eppo sir nadakum..romba problem sir..pls pathu solluingal sir.

    ReplyDelete
  4. சார் எனது பிறந்த ஊர் பாண்டிச்சேரி . நேரம் மாலை 6.07 p.m. Date of birth - 16.12.1972. எனது குலதெய்வம் தெரியவில்லை . எனது ஜாதகத்தை வைத்து கூறுங்கள் சார் ப்ளீஸ். My email id is krk19722005@yahoo.co.in

    ReplyDelete