கேள்வி:
சனி
|
கேது
|
சுக்,
புத
|
சூரி,
சந்
|
ராசி
|
|||
செவ்
|
|||
குரு
|
ராகு
|
லக்
|
ராகு
|
சனி
|
||
ராசி
|
குரு
|
||
சூ,பு
கேது
|
சந்,ல
சுக்,செ
|
குருஜி அவர்களுக்கு வணக்கம். எனது மகன்களின் ஜாதகத்தை அனுப்பி உள்ளேன். அவர்களின் தெய்வபலம், படிப்பு, கல்வி, செல்வம், ஜீவனம் ஆகியவையும், எதிர்காலத்தில்
பணக்காரர்களாக இருப்பார்களா?அல்லது ஏழையாகத்தான் வாழ்க்கை ஓடுமா? தாய்தந்தைக்கு உதவுவார்களா? என்பதை தெளிவுபடுத்தவேண்டுகிறேன்.
பதில்:
மூத்தமகன் அப்துல்ரகுமானுக்கு கன்னிலக்னம் மிதுனராசியாகி லக்னாதிபதி புதன் சுக்கிரனோடு ஒன்பதாமிடத்தில் தர்மகர்மாதிபதி யோகத்தில் அமர்ந்து லக்னாதிபதியை குரு
பார்க்கும் அமைப்புள்ள யோகஜாதகம். லக்னத்தை ஆறுக்குடைய சனி ஏழில் அமர்ந்து பார்த்து பத்தாமிடத்தில் சூரியனும் சந்திரனும் இணைந்ததால் அரசு வேலை பார்க்கும்
அமைப்பு.
கன்னி லக்னமாகி புதன் வலுப்பெற்றதாலும் 26 வயது முதல் புதன்தசை நடக்க உள்ளதாலும் பரம்பொருளின் ஆசியுடன் அரசு உத்தியோகம் பார்க்கும் யோகமுள்ள ஜாதகம்.
அடுத்தடுத்து யோக தசைகள் நடக்க உள்ளதால் எதிர்காலம் பிரமாதம். இருபத்தி ஆறு வயதுக்கு மேல் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்படும். ஒன்பதுக்குடைய சுக்கிரன் ஆட்சி
பெற்று சூரியன் திக்பலம் பெற்றுள்ளதாலும் சந்திரன் நான்காமிடத்தைப் பார்ப்பதாலும் தாய் தந்தையரை கவனிப்பார். தீர்க்காயுள்.
இளைய மகன் அப்துல்சமதுக்கு துலாம்லக்னம் துலாம் ராசியாகி லக்னாதிபதி லக்னத்தில் செவ்வாயுடன் ஆட்சி. ஒன்பதுக்குடைய பாக்யாதிபதி புதன் லாபாதிபதி சூரியனுடன்
இணைந்து தன வீடான இரண்டாம் வீட்டில் இருப்பது மகாதன யோகம். இரண்டாம் வீட்டுக்கு உச்ச குருவின் பார்வையும் இருக்கிறது. இவருக்கும் ஆறுவயது முதல் துலாம்
லக்னத்தின் யோக தசைகளான சனி புதன் சுக்கிர தசைகள் நடக்க உள்ளன.
இளையவர் அப்துல்சமதின் தொழில் ஸ்தானாதிபதி சந்திரன் லக்னத்தில் உள்ளதாலும், பத்தாம்வீட்டில் உச்சகுரு இருப்பதாலும் இரண்டாம் வீடு வலுப்பெற்றதாலும்
தொழில்துறையில் வருவார். திரவம் அல்லது நீர்நிலை சம்பந்தப்பட்ட தொழில் அமையும். லக்னாதிபதி ஆட்சி என்பதால் தீர்க்காயுள். இளையவர் தாய்,தந்தை பேச்சை
கேட்காவிட்டாலும் மதிப்பும் மரியாதைக்கும் குறைவைக்க மாட்டார். பிள்ளைகள் இருவரும் சகல வசதிகளுடனும் வாழ்வார்கள். பரம் பொருளுக்கு நன்றி செலுத்துங்கள்.
பி
.நந்தகுமார், திருப்பூர்
கேள்வி
:
சுக்
செவ்
|
சந்
|
ரா
|
|
சூ
|
ராசி
|
||
புத
|
|||
கே
|
குரு,ல
|
சனி
|
தொழில் எந்த வயதில் நன்றாக இருக்கும்
? திருமணம் எப்போது?
பதில்:
விருச்சிக லக்னம் ரிஷப ராசியாகி லக்னத்திற்கு எட்டில் ராகுவும், அவரே ராசிக்கு இரண்டிலுமாகி, பனிரெண்டில் அமர்ந்த உச்ச வக்ர சனி குடும்ப வீடான லக்னத்திற்கு
இரண்டாம் பாவத்தைப் பார்த்தும், ஐந்தில் உச்சசுக்கிரனுடன் இணைந்த செவ்வாய் ராசிக்கு இரண்டாம் வீட்டை பார்த்தும் தாரதோஷம் உண்டான ஜாதகம்.
சனியை எட்டாம் பார்வையாக செவ்வாய் பார்ப்பது குற்றம். லக்னத்தில் இருக்கும் குரு சுக்கிரனை பார்க்கிறார். உச்ச சுக்கிரனை குரு பார்ப்பது நல்லதல்ல. 2016-ம் ஆண்டு
குரு தசை சுக்கிர புத்தியில் திருமணம் நடக்கும்.
அடுத்து பத்துக்குடைய சூரியன் பத்தாம் வீட்டை பார்த்து அவனுக்கு கேந்திரத்தில் சந்திரன் உச்சம் பெற்று தொழில்யோகம் உள்ள ஜாதகம் என்பதால் நடைபெறும் குருதசையில்
சூரியபுக்தியில் 2019-ல் இருந்து தொழில் யோகம் செயல்பட ஆரம்பித்து ரிஷபராசிக்கு அடுத்துவர இருக்கும் அஷ்டமச்சனி முடிந்தபிறகு தொழிலில் சிறப்பீர்கள். எதிர்காலம்
நன்றாக இருக்கும். அஷ்டமச்சனிக்கு முன்பு எதிலும் அகலக்கால் வைத்துமாட்டிக் கொள்ளாதீர்கள்.
எம்
.கணேசன், உப்பூரணி, மதுரை.
கேள்வி
:
குரு
|
ல
|
ரா
|
|
ராசி
|
|||
சனி
|
|||
கே,சுக்
பு,செவ்
|
சூ
|
சந்
|
கேர்ஆஃப் பிளாட்பாரத்தில் இருக்கிறேன்
. நம்பிக்கை இழந்துவிட்டேன். வாழ்க்கையின் நிலை என்ன? மனைவி, பிள்ளை திரும்ப வருமா? தங்குவதற்கு இடம் அமையுமா? பெற்றோர், உடன் பிறந்தோர் ஏற்றுக்
கொள்வார்களா? சமுதாயத்தில் நானும் மனிதனாக வாழ்ந்தேன் என்ற கவுரவம் ஏற்படுமா? கணிப்புச்சிகரமே... வழி காட்டுங்கள்.
பதில்:
ரிஷப லக்னம் கன்னி ராசியாகி லக்னாதிபதி சுக்கிரன் புதன் கேது, செவ்வாயுடன் எட்டில் மறைந்து பாதகாதி பத்தியம் பெற்ற ஒன்பதாமிடத்தில் இருக்கும் சனியின் தசை நடந்து
கொண்டிருக்கிறது. கூடவே கன்னி ராசிக்கு கடந்த எட்டு வருடங்களாக ஏழரைச் சனி வேறு.
சனி தசையில் சூரிய சந்திர புக்திகள் கடுமையான கெடுபலன்களை செய்யும் என்பதோடு சனிவலுப் பெற்றால் ஏழரைச்சனியும் கெடுதல்களை செய்யும். சனி உங்களை தெருவிற்கு கொண்டு
வந்துவிட்டது. ஆனாலும் ஜாதகப்படி சனியை குற்றம் சொல்வதைவிட உங்கள் தவறுகளால் தான் இந்த நிலைமை. இப்போது நல்லது எது கெட்டது எது? யார் யார் எப்படி? என்று சனி
பாடம் கற்றுக் கொடுத்திருப்பார்.
ஏழரைச்சனி இன்னும் சில நாட்களில் முடியப்போவதால் வாழ்க்கை இனிமேல் வருத்தப்படும்படி இருக்காது. இரண்டாமிடத்தில் இருந்து புதனின் பார்வையை பெற்ற ராகுபுக்தியில்
மனைவி, குழந்தைகள் ஒன்று சேர்வார்கள். இனிமேல் வாழ்க்கை சோதனைகள் இன்றி சுபிட்சமாகவே இருக்கும். இழந்து போன மதிப்பும் மரியாதையும் படிப்படியாக திரும்ப வரும்.
டி
.குமரவேல், திண்டுக்கல்-1
கேள்வி
:
ரா
|
சனி
|
சூ, பு
சு, செ
|
|
குரு
|
|||
ல
|
சந்
|
கே
|
தொழில் சரியாக இல்லை
. பிரச்னைகளில் தள்ளாடிக் கொண்டிருக்கிறேன். எப்போது சரியான தீர்வு கிடைக்கும்?
பதில்:
விருச்சிக லக்னம் துலாம் ராசியாகி லக்னாதிபதி செவ்வாய் சூரியன், புதன், சுக்கினுடன் எட்டில் மறைந்து ஆறில் உள்ள நீசச் சனி லக்னாதிபதியையும், ராசியையும் பார்த்த
ஜாதகம். ஐந்தில் ராகுவும் பத்தில் குருவும் அமர்ந்து தற்போது சனி தசையில் சுக்கிர புக்தியும், ஏழரைச் சனியும் நடந்துக் கொண்டிருக்கிறது.
தசாநாதன் ஆறில் நீசம், புக்திநாதன் எட்டில் மறைவு, ஏழரைச்சனி வேறு நடப்பில் உள்ளது. எப்படி வாழ்க்கையில் நிம்மதி இருக்கும்? பொதுவாக ஒரு ஜாதகத்தில்
பத்திற்குடையவன் எட்டில் மறைந்தாலே தொழிலை சரியாக கையாளும் பொறுமையும், பக்குவமும் இருக்காது. இது போன்றவர்கள் வேலைக்கு செல்வது முன்னேற்றத்தை தரும்.
கடந்த ஐந்து வருடங்களாக சனி தசை நடப்பதால் எவ்விதலாபமும் தொழிலில் இருந்திருக்காது. மேலும் இப்போது நடக்கும் சுக்கிரபுக்தியை அடுத்து வரும் சூரிய சந்திர
செவ்வாய் புக்திகளும் லக்னத்திற்கு எட்டு பனிரெண்டில் உள்ளதால் தொழில் விரயம் ஏற்படும். சனி பகவான் வேலைக்காரனை குறிக்கும் கிரகம் என்பதாலும் அவர்
குருபார்வையில் இருப்பதாலும் 2015 மேமாதத்திற்கு பிறகு நடைபெற இருக்கும் சூரிய புக்தியில் தொழிலில் மாற்றம் உண்டு. அதை உபயோகப்படுத்திக் கொண்டு சனி தசையை
பக்குவமாக கடந்து செல்லுங்கள். அதுவே பிரச்சனைகளுக்கு தீர்வு.
சு
.குமரேஷ், திருநெல்வேலி.
கேள்வி
:
சந்
|
லக்
|
கேது
|
|
ராசி
|
சூ,பு
குரு
|
||
சனி
|
செவ்
சுக்
|
||
ரா
|
2010ம் ஆண்டு பள்ளிப் படிப்பினை முடித்த பின் என் வாழ்க்கையில் படிப்பு என்பதே இல்லையென்றாகி விட்டது. இன்று வரை பல கல்லூரிகளில் விண்ணப்பித்தும் படிப்பு
தடைப்படுகிறது. இப்போது கூட ஒரு கல்லூரியில் சிவில் என்ஜினீயரிங் பிரிவில் விண்ணப்பித்துள்ளேன். நான் என்ஜினீயராக வர வேண்டும் என்பது தான் என் வாழ்க்கையின்
லட்சியம். நிறைவேறுமா? என் ஜாதகம் யோகமானதா? எதிர்காலம் சிறப்பாக அமையுமா? எனது குடும்பம் பல சீரழிவுகளை சந்தித்து வருகிறது. அதற்கு காரணமும் எனது ஜாதகம்
தான் என்ற பயத்தில் வாழ்க்கை வெறுத்து தற்கொலை செய்து கொள்ள எண்ணம் வருகிறது. குருஜியின் வழி காட்டலுக்கு காத்திருக்கிறேன்.
பதில்:
ரிஷப லக்னம் மீன ராசியாகி லக்னாதிபதி சுக்கிரன் திக்பலம் பெற்று நான்காம் இடத்தில் புதன் செவ்வாயுடன் அமர்ந்து ஒன்பதிற்குடைய சனி ஆட்சி பெற்று உச்ச குருவின்
பார்வையை பெற்ற அருமையான யோக ஜாதகம். முப்பது வயதுகளில் இருக்கும் மீன ராசிக்காரர்கள் அனைவருக்கும் கடந்த மூன்று வருடங்களாக அஷ்டமச் சனியால் கெடுபலன்கள் தான்
நடந்து வருகின்றன என்பதை தெளிவாக மாலைமலரிலும் பேஸ்புக்கிலும் நான் தொடர்ந்து எழுதி வருவதற்கு நீங்களும் ஒரு உதாரணம்.
அஷ்டமச் சனியால் தடைப்பட்ட கல்வியை மீண்டும் தொடர்ந்து நல்ல படியாக முடிப்பீர்கள். பத்தாம் வீடு சனியின் வீடாகி செவ்வாய் பார்வையில் இருப்பதால் சிவில்
என்ஜினீயராக வருவீர்கள். ரிஷப லக்னகாரர்களுக்கு சுக்கிர தசை முதல் பத்து வருடம் ஆறுக்குடைய கெட்ட பலன்களைத் தான் தரும். அதன்படி 2005 முதல் கஷ்டபட்ட நீங்கள்
அடுத்த வருடத்தில் இருந்து நிலைமாறி வாழ்க்கையில் சந்தோஷத்தை அனுபவிப்பீர்கள்.
மூன்றுக்குடைய சந்திரன் குருவுடன் பரிவர்த்தனை பெற்றதால் எதிர்காலத்தில் பிரபலமானவராக செல்வச் செழிப்புடன் இருப்பீர்கள். இது போன்ற எண்ணங்களை மாற்றிக் கொண்டு
படிக்க ஆரம்பியுங்கள். அஷ்டமச்சனி இன்னும் சில நாட்களில் முடிவதால் இனி உங்கள் வாழ்க்கையில் தொல்லைகள் என்பதே இல்லை.
டி
.சாத்தப்பன், காரைக்குடி.
கேள்வி
:
கடந்த பனிரெண்டு வருடமாக பூர்வீக சொத்தில் என் பங்கை விற்க முடியாமல் சித்தப்பா
, அக்கா வீட்டாருடன் பிரச்னையாக உள்ளது. எப்போது விற்க முடியும்? தற்போது ஒரு கொரியரில் வேலை செய்கிறேன். இந்த வேலையாவது இடையூறு இல்லாமல் இருக்குமா? நீண்ட
காலமாக மறுமணத்திற்கு ஏற்பாடு செய்தும் எதுவும் அமையவில்லை. மறுமண வாழ்க்கை எப்போது?
பதில்:
வரிசைப்படி முக்கியமான கேள்விகளுக்கு பதில் தந்து கொண்டு தான் இருக்கிறேன். இப்படி வாரா வாரம் தபால் அனுப்பத் தேவை இல்லை. ரிஷப லக்னம் ரிஷப ராசியாகி லக்னாதிபதி
இரண்டில் அமர்ந்து குடும்பாதிபதி புதன் எட்டிற்குடைய குருவுடன் நான்கில் அமர்ந்து ஏழில் இருக்கும் சனியும், பத்தில் இருக்கும் செவ்வாயும் லக்னத்தை பார்த்த
ஜாதகம். சனியுடன் ராகு இணைந்து சனி தசையில் குரு புக்தி நடக்கிறது.
கடந்த பதினெட்டு வருடங்களாக செவ்வாயின் வீட்டில் ராகுவுடன் இணைந்து உச்ச சந்திரனின் பார்வையை பெற்ற சனி தசையில் மணவாழ்வில் சிக்கல்கள், உறவினர் விரோதம்,
சகோதரப்பகை போன்ற பலன்கள் தான் நடந்திருக்கும். சனி செவ்வாயின் லக்னப் பார்வையால் உங்கள் குணம் தான் இதற்கு காரணமாகவும் இருந்திருக்கும். பத்தாம் வீட்டை புதன்
பார்த்து புதன் தசை அடுத்த வருடம் அக்டோபரில் நடக்க இருப்பதால் பார்த்துக் கொண்டிருக்கும் கொரியர் வேலை கடைசி வரை இருக்கும். குடும்பாதிபதி புதன் தசையில் 2016ல்
துணை ஒன்று அமையும். அதே வருடத்தில் சொத்துச் சிக்கலும் தீரும்.
முத்துக்குமார்
, தேனி
கேள்வி
:
கே
|
குரு
|
||
செவ்
சந்,பு
|
ராசி
|
||
ல,சுக்
சூ
|
|||
ரா
சனி
|
சென்ற வருடம் பிறந்த என் மகன் ஜாதகப்படி அவனது கல்வி
, உடல்நிலை, ஆயுள், தாய் தந்தை நிலை, ஆரோக்கியம், குடும்ப முன்னேற்றம் ஆகியவற்றை சொல்லும்படி வேண்டுகிறேன். இவன் ஜாதகப்படி அடுத்த குழந்தை உண்டா? நல்ல
மனிதனாக வருவானா? சளித் தொந்தரவு இருக்கிறது பாதிப்பு வருமா? என் மகனுக்கு குருஜி அவர்கள் ஆசி வழங்க வேண்டுகிறேன்.
பதில்:
மகர லக்னம் கும்ப ராசியாகி லக்னாதிபதியும் ராசிநாதனுமான சனி உச்சம் பெற்றும் லக்னத்தை ஐந்தில் அமர்ந்த குரு பார்த்தும் ஒன்று பத்திற்குடையவர்கள் பரிவர்த்தனையும்
பெற்ற நல்ல யோக ஜாதகத்துடன் மகன் பிறந்திருக்கிறான். குழந்தைக்கு பரம்பொருளின் ஆசிகள் பரிபூரணமாக இருக்கிறது.
ஒன்றரை வயது குழந்தைக்கு சளித் தொந்தரவு கூட இருக்காதா அய்யா? நீங்கள் தான் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். லக்னாதிபதி உச்சம் பெற்று லக்னத்தை
குருபார்ப்பதால் தீர்க்காயுள். புதன் வலுப்பெற்றதால் நல்ல கல்வி உண்டு. பதிமூன்றுவயதிற்கு பிறகு சனி, புதன், சுக்கிரன் என யோக தசைகள் வாழ்நாள் முழுவதும்
நடப்பதால் வாழ்க்கையில் நல்லவனாகவும் வல்லவனாகவும் இருப்பான்.
ஜீவனாபதியின் பரிவர்த்தனையால் சிறந்த தொழில் உண்டு. நடப்பது குருதசை என்பதால் அவனது சுக்கிர புக்தியில் தங்கை பிறப்பாள். யோக ஜாதகம் என்பதால் குழந்தை வளர வளர
அவன் யோகமாக வாழவேண்டும் என்பதற்காக பெற்றோர்கள் உயர்நிலை பெறுவார்கள்.
கோ
.ரங்கையன், தஞ்சாவூர்
கேள்வி
:
76 வயதில் பிள்ளைகள் என்னை ஒதுக்கி வைக்கின்றனர். மிகவும் கஷ்டப்பட்டு குடும்பத்தை உருவாக்கினேன். என்ன செய்வது என்று தெரியவில்லை. குடும்பத்தில் ஏற்பட்ட
கடன் சுமையாலும், சொத்துகளை இழந்ததாலும் மனச் சோர்வுடன் உள்ளேன். மாற்றம் வருமா?
பதில்:
உங்களுக்கு விருச்சிக ராசியாகி ஏழரைச் சனியில் மூன்றாவது சுற்று தற்போது நடந்து வருவதால் சோதனைகள் நடக்கின்றன. ஏழரைச் சனி முடியும் நேரத்தில் நிம்மதி
கிடைக்கும். மாற்றம் வரும். கவலை வேண்டாம்.
வணக்கம். தங்களின் கேள்வி பதிலில், திரு டி. சாத்தப்பன், காரைக்குடி என்பவரின் சாதகக் கட்டம் தவறாக இருப்பதாகத் தெரிகிறது. தங்களின் பதிலைப் பார்க்கும்போது, லக்கனத்தை ரிசபத்தில் போடவும். ராகு மற்றும் சனியை விருச்சிகத்தில் போடவும். தாங்கள் பதிலளிக்கும்போது சாதகரின் பிறந்த தேதியையும் நேரத்தையும் பதிவு செய்தீர்களானால், என் போன்றவர்களுக்கு, அம்சம் மற்றும் தசா புத்திகளை ஆராய்வதற்கு எளிதாக இருக்கும். உங்கள் பதிலைப் படிப்பதற்கு முன்பு நான் என் அளவில் கொஞ்சம் கணித்துக் கொண்டு, பின்னர் உங்கள் பதிலுடன் ஒப்பிட்டு பார்த்து வருகிறேன். என் சாதகக் கல்விக்கு அது உறுதுணையாக இருக்கிறது. நன்றி. நிமித்திகன். nimiththigan.blogspot.in
ReplyDeleteஜோதிடம் தெரியாத உதவியாளர்களின் தவறு இது. அதிகமான வேலைப் பளு காரணமாக எல்லாவற்றையும் கவனிக்க முடியவில்லை. திருத்த சொல்கிறேன். பிறந்த விபரங்களையும் பதிவு செய்ய சொல்கிறேன்
Deleteமிக்க நன்றி
Delete