கே
|
|||
ராசி
|
|||
ல
புத
|
|||
சந்,
சனி
|
சுக்,
ரா
|
சூ,
குரு
|
கேள்வி
:
கடன்கள் எப்போது அடைபடும்? சொந்தவீடு எப்போது? வாழ்க்கை எப்போது சுபிட்சமாக இருக்கும்?
பதில்:
சிம்மலக்னம் விருச்சிகராசியாகி லக்னாதிபதி சூரியன் இரண்டாம் வீட்டில் புதனுடன் பரிவர்த்தனை பெற்று அதே வீட்டில் செவ்வாய் குருவுடனும் இணைந்து அமர்ந்த யோக
ஜாதகம். நான்கில் சனிபகவான் நீசசந்திரனுடன் இணைந்து லக்னத்தை பார்க்கிறார். சுக்கிரன் மூன்றில் ராகுவுடன் மூன்று டிகிரிக்குள் இணைவு.
ஜாதகம் யோகமாக இருந்தாலும் யோகதசைகள் நடப்பில் இருக்க வேண்டும். உங்களுக்கு பிறந்ததிலிருந்து தற்போது 58 வயதுவரை லக்னபாவிகளான சனி, புதன், கேது, சுக்கிர தசைகள்
நடந்து சுக்கிரதசை வரும் ஜூன் மாதம் முடிகிறது. எனவே 58 வயதுவரை யோகம் இல்லை. ஆனால் அடுத்த வருடம் பரிவர்த்தனை பெற்ற லக்னாதிபதி சூரியனின் தசை ஆரம்பிக்க
இருப்பதால் இனிமேல் வாழ்க்கை மிகவும் சந்தோஷமாகவும் சுபிட்சமாகவும் நினைத்தது நிறைவேறும்படியாக இருக்கும்.
ஆறுக்குடைய சனி ஆறாம் வீட்டை பார்ப்பதால் கடன்தொல்லை இருக்கத்தான் செய்யும். அடுத்தவருடம் முதல் படிப்படியாக அடைப்பீர்கள். சொந்தவீட்டை குறிக்கும் நான்காம்
வீட்டில் நீசசந்திரனும், சனியும் இருந்து வீட்டுக்கு காரகன் சுக்கிரனும் ராகுவுடன் மிக நெருங்கி இருப்பதால் உங்கள் பெயரில் வீடு அமைய வாய்ப்பில்லை. மனைவி மக்கள்
ஜாதகம் யோகமாக இருந்தால் அவர்கள் பெயரில் வீடு அமைய வாய்ப்பு உண்டு.
ஜி. பத்மநாபன், திருச்சி - 2.
சூ,
புத
|
கே
|
செவ்
|
|
சுக்
|
ராசி
|
||
ல,
சனி
|
சந்,
ரா
|
குரு
|
கேள்வி
:
எனது ஆயுள் எவ்வளவு? வரவேண்டிய நிலுவைத் தொகைகள் எப்போது கிடைக்கும்? பொருளாதார நிலைமை எப்போது மேம்படும்? வாழ்க்கையில் இனியாவது வசதியுடனும் நிம்மதியாகவும் இருப்பேனா?
பதில்:
விருச்சிகலக்னம் துலாம்ராசியாகி லக்னாதிபதி செவ்வாய் ஏழில் அமர்ந்து லக்னத்தையும் லக்னத்தில் உள்ள சனியையும் பார்த்த ஜாதகம். ஐந்திற்குடைய குரு பதினொன்றில்
அமர்ந்து நீசபுதனுடன் பரிவர்த்தனையாகி நான்கில் சுக்கிரன் ஆறில் கேது அமர்ந்து தற்போது சுக்கிரதசையில் சூரியபுக்தி நடக்கிறது.
ஆயுளைப்பற்றி தெரிந்துக் கொள்வதற்கு இப்போது என்ன அவசரம்? இன்னும் நிறைய காலம் இருப்பீர்கள். ஏழரைச்சனி முடிந்த பிறகு நிலுவைத் தொகைகள் கண்டிப்பாக கிடைக்கும்.
சுக்கிரன் திக்பலத்துடன் இருப்பதால் வாழ்க்கை வசதியுடனும், நிம்மதியாகவும் இருக்கும்.
எஸ். ராமன், சூளைமேடு, சென்னை.
சந்
புத
|
குரு
|
ல,
ரா
|
|
சூ,சுக்
சனி,
|
ராசி
|
||
செவ்
|
|||
கேது
|
கேள்வி
:
வெளிநாடு சென்று தொழில் செய்யும் யோகம் உள்ளதா? கடன் பிரச்சினை எப்போது தீரும்.
பதில்:
ரிஷபலக்னம் மீனராசியாகி லக்னாதிபதி சுக்கிரன் சூரியன், சனியுடன் இணைந்து பத்தில் அமர்ந்து எட்டிற்குடைய குரு பனிரெண்டிலும் செவ்வாய் நான்கிலும் அமர்ந்த ஜாதகம்.
தற்போது வெளிநாட்டை குறிக்கும் செவ்வாய் தசையில் ராகு புக்தி நடக்கிறது.
எட்டிற்குடையவன் சுபராகி பனிரெண்டில் உள்ளதால் குருபுக்தியில் வெளிநாடு செல்வீர்கள். செவ்வாய் தொழில் ஸ்தானத்தை பார்ப்பதாலும் பத்திற்குடைய சனி செவ்வாயை
பார்ப்பதாலும் வெளிநாடு சென்று தொழில் செய்ய முடியும். ஆனால் செவ்வாய் ஸ்திரராசியில் உள்ளதால் தொழிலில் போராட்டங்கள் இருக்கும். அடுத்து வரும் லக்னராகுவின்
தசையில் வெளிநாட்டில் தொழில் நிலைபெறும். குருவும் பனிரெண்டில் இருப்பதால் நீடித்து வெளிநாட்டில் இருக்க முடியும். செவ்வாய்தசை முடியும்வரை கடன் தொல்லைகள்
இருக்கும்.
எஸ். விஸ்வநாதன், வத்தலகுண்டு.
சூ,பு
|
செவ்,
சுக்
|
ரா
|
|
ராசி
|
ல
|
||
கேது
|
குரு
|
சந்
சனி
|
கேள்வி
:
மகனின் ஜாதகம் அனுப்பியுள்ளோம். திருமணம் எப்போது நடக்கும்? தோஷங்கள் உள்ளதா?
பதில்:
கடகலக்னம் துலாம்ராசியாகி ராசியில் உச்சவக்கிர சனி அமர்ந்து ராசிக்கு ஏழாம் வீட்டையும் அங்கே இருக்கும் செவ்வாய் மற்றும் சுக்கிரனையும் பார்வையிட்ட ஜாதகம்.
செவ்வாயும் சனியும் நேருக்கு நேர் பார்த்துக் கொள்வது கடுமையான தோஷம் என்பதோடு அவர்கள் ராசிக்கு ஏழாம் இடத்திலும் சம்பந்தப்பட்டது குற்றம். தோஷம் விலக
ஜென்மநட்சத்திர நாளன்று கந்தர்வராஜ ஹோமம் செய்து மகனுக்கு கலச அபிஷேகம் செய்து ஈர உடைகளை தானம் செய்வது நல்ல பரிகாரம்.
வி. சோமசுந்தரம், பல்லாவரம்.
ரா
|
|||
ராசி
|
|||
ல,சந்
குரு,
|
|||
சூ
|
சுக்,பு
சனி
|
கே
செவ்
|
கேள்வி
:
ஐ.டி.ஐ. டர்னர் படித்துள்ளேன். அரசுவேலை கிடைக்குமா?
பதில்:
மகரலக்னம் மகரராசியாகி பத்தாமிடத்தில் செவ்வாயும், கேதுவும் அமர்ந்து பதினொன்றில் சுக்கிரன், புதன், சனி அமர்ந்து பத்து, பதினொன்றுக் குடையவர்கள் பரிவர்த்தனை
பெற்ற ஜாதகம். சூரியன் பனிரெண்டில் மறைய அவருக்கு வீடு கொடுத்த குரு லக்னத்தில் நீசம். பத்தாமிடத்தோடு ராகு, கேதுக்கள் சம்பந்தப்பட்டு சூரியன் மறைவு பெற்றதாலும்
பத்துக்கு அதிபதி சனியுடன் சம்பந்தப்பட்டதாலும் தனியார் துறையில் வேலை வாய்ப்பு பெறுவீர்கள்.
ஜோதிடர் அண்ணாமலை, அருப்புக்கோட்டை.
சுக்
ரா
|
பு
|
சூ
|
சந்
|
குரு
|
ராசி
|
||
சனி
|
|||
ல
|
செவ்
கே
|
கேள்வி
:
பத்திரிக்கை முதல் டி.வி. வரை எத்தனையோ ஜோதிடர்களை பார்த்துள்ளேன். தங்களைப் போல ஆழ்ந்து சிந்தித்து அனுபவத்தோடு யாரும் பதில் சொல்லவில்லை. வைத்தியருக்கும் நோய் வரும் அல்லவா?
ஆகவே தங்களை நாடியுள்ளேன். வாழ்க்கையில் இதுவரை கண்டதெல்லாம் நோய், கடன், எதிரி தொல்லை, வறுமை, அவமானம். எப்போது விடுதலை? என்ன பரிகாரம் செய்யலாம்.?
பதில்:
துலாலக்னம் மிதுனராசியாகி லக்னாதிபதி சுக்கிரன் ஆறாமிடத்தில் ராகுவுடன் மிக நெருங்கி அமர, லக்னத்தையும் ராசியையும் பதினொன்றில் உள்ள சனியையும் ஐந்தில் இருக்கும்
குருபார்த்த ஜாதகம். ஏழில் புதன் எட்டில் சூரியன்.
மூன்று வயது முதல் ஆறில் அமர்ந்த ராகு தசை. அதன் பிறகு ஆறுக்குடைய குரு தசை. அதனை அடுத்து ஆறுக்குடையவனால் பார்க்கபட்ட சனி தசை என ஏறத்தாழ முழுவாழ்க்கையும்
ஆறாமிடத்துடன் சம்பந்தபட்ட தசைகளே நடந்ததால் உங்களுக்கு வாழ்நாள் முழுக்க கடனும் எதிரிகளும், வறுமையும் தான் இருந்திருக்கும். தற்போது நடக்கும் புதன்தசையும்
பாவகப்படி எட்டில் சூரியனுடன் மறைந்து எட்டில் இருக்கும் சூரியனின் சாரம் பெற்றிருப்பதாலும் அவருக்கு வீடு கொடுத்த செவ்வாய் பனிரெண்டில் மறைந்திருப்பதாலும்
சுமாரான பலன்கள்தான் செய்வார்.
பனிரெண்டில் கேது இருப்பதால் அடுத்த பிறவி உங்களுக்கு இல்லை என்பதால் உங்களுடைய முற்பிறவி கர்மா அனைத்தையும் நீங்கள் இப்பிறவியிலேயே கழித்தாகவேண்டும்.
முற்பிறப்பில் செய்த செயல்களின் விளைவைத்தான் இப்பிறவியில் அனுபவிக்கிறோம் என நமது மேலான மதம் சொல்கிறது என்பது ஒரு ஜோதிடரான தங்களுக்கு தெரியாதது அல்ல.
அனைத்தும் அவன் செயல்தான். நடப்பது அனைத்தையும் ஏற்றுக் கொள்ளுங்கள்.
வரும் சனிப்பெயர்ச்சி முதல் மிதுனராசிக்கு யோககாலம் ஆரம்பிப்பதால் மிகப்பெரிய கஷ்டங்கள் எதுவும் இனிமேல் உங்களுக்கு வராது. அடுத்த ஜூலை முதல் ஆரம்பிக்க
இருக்கும் புதன்தசை ராகுபுக்தியில் அனைத்து பிரச்சினைகளுக்கும் விடிவுகாலம் பிறக்கும்.
No comments :
Post a Comment