Tuesday, September 30, 2014

Astro Answers - Guruji Pathilkal - குருஜியின் மாலைமலர் பதில்கள் - 6 (30.9.2014)

ஆர். ராமநாதன்,
வில்லிவாக்கம்.


ல,சனி,
சந்
ராகு
சுக்
சூ,குரு
செவ்
ராசி
புத
கேது

கேள்வி:

2002ம் ஆண்டில் ஒரு பெண் மந்திரவாதியின் வசியப்பேச்சில் மயங்கி பில்லி சூனியத்தினை நானே வீட்டில் வரவழைத்துவிட்டேன். அது இன்றுவரை எங்களை விட்டு போகவில்லை. பனிரெண்டு வருடமாகியும் எந்த இடத்திலும் எங்களை தொல்லைப்படுத்துகிறது. காலை மாலை பூஜை செய்யும் பொழுதும், கோவிலுக்கு சென்றாலும், எங்கும் வந்து தொல்லை தருகின்றது. இது எங்களை விட்டு முற்றிலும் எப்போது விலகும்? தகுந்த பரிகாரம் கூற விரும்புகிறேன். வேலையிலும் பிரச்னை, வீட்டிலும் நிம்மதி இல்லை. சாமியாராக விரும்புகிறேன். நடக்குமா?

பதில்:

“பித்தனை தொடர்ந்து வழிபடும் அடியாரை சிலநேரம் பித்தனாக்குவான் அவன்” என்பது உங்கள் விஷயத்தில் சரியாகத்தான் இருக்கிறது.

மீனலக்னம் மீனராசி ரேவதி நட்சத்திரமாகி 2002முதல் மீனலக்னத்திற்கு வரக்கூடாத ஆறுக்குடைய சூரியதசையும், அதனை அடுத்து இன்றுவரை சனியுடன் சேர்ந்து வலுவிழந்த மனோகாரகன் சந்திரனின் தசையும் நடக்கிறது. கடந்த மூன்று வருடங்களாக மீனராசிக்கு அஷ்டமச்சனி வேறு. உங்களின் நிலைமை எனக்கு புரிகிறது.

மயிலாப்பூர் அருள்மிகு வெள்ளீஸ்வரர் ஆலயத்தில் நடக்கும் சூலினி துர்காஹோமத்தில் மூன்று அமாவாசைகள் தொடர்ந்து குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ளுங்கள். இனிமேல் கருப்புநிற பொருட்கள் எதையும் பயன்படுத்த வேண்டாம். பில்லி சூனியம் ஓடியே போய்விடும்.
லக்னமும் ராசியும் குருவின் வீடாகி சனியுடன் இணைந்த சந்திரதசை நடப்பதால் ஆன்மீக எண்ணங்கள் சற்றுத் தூக்கலாக இருக்கும். 2018ல் சந்திரதசை முடிந்ததும் மாறி விடும். இருக்கும் சாமியார்களே போதும். நீங்கள் வேறு எதற்கு?

ஆர். பாலகிருஷ்ணன்,
திருவல்லிக்கேணி.


சூ,புத
கேது
ராசி
குரு
செவ்
சந்,சனி
ராகு
சுக்


கேள்வி:


என் மகனுக்கு சென்ற வருடம் திருமணமாகி பெண் தனக்கு தாம்பத்திய உறவில் ஈடுபாடு இல்லை என்றும் பெற்றோரின் வற்புறுத்தலின் பேரில் திருமணத்திற்கு சம்மதித்ததாகவும் சொல்லி மூன்றே நாட்களில் பிறந்த வீட்டுக்கு போய்விட்டாள். டைவர்ஸ் கேஸ் நடந்து இருவரின் ஒப்புதலின் பேரில் முடிவுக்கு வரவிருக்கிறது. எனது மகனுக்கு மறுதிருமணம் எப்பொழுது நடக்கும்? நல்ல பெண்ணாக அமையுமா?

பதில்:

விருச்சிகலக்னம் சிம்மராசியாகி லக்னாதிபதி செவ்வாய் உச்சம் பெற்று ராசியை உச்சகுரு பார்த்து தர்மகர்மாதிபதி யோகம் அமைந்த யோகஜாதகம். ஆனால் 2012 முதல் ராகுதசை ஆரம்பித்து திருமணத்தில் குழப்படி. ராகுவிற்கு சனி, செவ்வாய் சம்பந்தம் ஏற்பட்டால் யோகம் செய்யமாட்டார்.

இங்கே ராகுவை உச்சசெவ்வாய் பார்த்து சனியுடன் இணைந்திருக்கிறார். செவ்வாய் சுயச்சாரம். சனி சுக்கிரன் சாரம். எனவே ராகு தசை ஆரம்பித்ததும் பெண்ணால் கோர்ட்டுக்கு போகவேண்டிய சூழ்நிலை. குருபுக்தியில் மறுமணமும் அதன் பிறகு நல்லதும் நடக்கும்.


பி. முருகேசன்,
நம்பியூர்.


செவ்,
புத
குரு,
ரா
சூ
சனி
ராசி
சுக்
சந்
கேது


கேள்வி:

ஜோதிடம் படித்து வருகிறேன். ஜோதிடராக முடியுமா? கடன் எப்பொழுது அடையும்? வாழ்நாள் முழுக்க கடன் இருக்குமா?

பதில்:

மிதுனலக்னம் தனுசுராசியாகி தற்பொழுது பத்தில் திக்பலம் பெற்ற கடன்ஸ்தானாதிபதி செவ்வாயின் தசை நடக்கிறது. மிதுனலக்னத்திற்கு செவ்வாய்தசை அதிகமான கடன் தொல்லைகளை தரும். லக்னாதிபதி புதன் நீசமாகி செவ்வாயுடன் ஒரே டிகிரியில் இணைந்ததால் வாழ்நாள் முழுவதும் கடன் தொல்லை இருக்கும்.

சந்திரகேந்திரத்தில் புதன் நீசபங்கம் பெற்றுள்ளதாலும் வாக்கு ஸ்தானத்தை சுக்கிரன் பார்த்து வாக்குஸ்தானாதிபதி கேந்திரத்தில் உள்ளதாலும் ராகுதசை சுயபுக்தி முடிந்ததும் 2017 ல் ஜோதிடராக தொழிலில் பிரகாசிப்பீர்கள்.

எம். முத்துக்குமார்,
தேனி.


சந்
ரா
சுக்,
செவ்
ராசி
சூ,
குரு
கே,பு
சனி


கேள்வி :

பெட்டிக் கடை வைத்திருக்கிறேன். அஷ்டமச் சனி ஆரம்பித்த பிறகு கடன் கடன் கடன் தான். மனைவி நகையெல்லாம் அடகுக்கடையில் உள்ளது. வேறு தொழில் செய்யலாமா? சினிமா அரசியல் மீது ஆர்வம். ஒத்துவருமா ? உயர்ந்த நிலைக்கு வருவேனா? எப்போது? ராகுவை பற்றிய உங்களது கட்டுரைகளை உங்களின் இணையதளத்தில் படித்து பிரமித்திருக்கிறேன். என் மனைவிக்கு ராகுதசை ஆரம்பிக்க உள்ளது. எப்படி இருக்கும்? நல்வாக்கு சொல்லுங்கள்.

பதில்:

சிம்ம லக்னம் மீன ராசியாகி லக்னத்தைகுரு, சுக்கிரன், செவ்வாய், சனி பார்க்கும் ஜாதகம். சுக்கிரதசை நடப்பதால் சினிமா பற்றிய ஆசை. பத்தாம் வீட்டில் ராகு அமர்ந்து அவரை சனி, செவ்வாய் பார்ப்பதால் சுக்கிர தசையில் செய்யும் தொழில் முயற்சிகள் சுமாராகத்தான் இருக்கும். அடுத்து நடைபெறவுள்ள சனி, புதன் புக்திகள் புதிய முயற்சிகளுக்கு கைகொடுக்காது என்பதால் சினிமா உங்களுக்கு இப்போது சரிவராது.

ஆனால் லக்னாதிபதி சூரியன் ஐந்தில் குருவுடன் அமர்ந்து அம்சத்தில் ஆட்சியாகி ராசிக்கு பத்தாமிடத்திலும் இருப்பதால் அரசியல் உங்களுக்கு ஒத்துவரும். 2023ல் ஆரம்பிக்கும் சூரிய தசையில் அரசியல் ஆர்வம் வெற்றி தரும். உங்களுக்கு இளம்வயது என்பதாலும் சூரியதசைக்கு அடுத்து சந்திர செவ்வாய் ராகுகுரு எனயோக தசைகள் வர இருப்பதாலும் அரசியலில் ஒருரவுண்டு வருவீர்கள். சுக்கிரதசை முடியும்வரை பொறுத்திருக்கவும். மனைவிக்கு கன்னி லக்னமாகி சுக்கிரனின் வீட்டில்ராகு இருப்பதால் ராகுதசை கெடுதல்கள் செய்யாது.

எஸ் . ரமேஷ்,
நாகர்கோவில்.


சந்
கேது
 குரு
சுக்,
பு,சூ
ராசி
சனி,
செவ்
ராகு
லக்


கேள்வி :

38 வயதாகியும் திருமணம் இல்லை. என் வயதைத் தொட்டவர்கள் எல்லாம் மனைவி குழந்தையுடன் மகிழ்ச்சியாக இருக்கும் போது எனக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை? நிரந்தர வேலையும் இல்லை. திருமணம் நடக்குமா? எப்போது? மனைவியால் வாழ்க்கை மேம்பாடு அடையுமா? அரசு வேலைசெய்யும் மனைவி கிடைப்பாளா?

பதில்:

பெண் நல்ல குணவதியா? என் தாய் தந்தையரோடு ஒத்துப்போவாளா? என் அண்ணன் தம்பிகளை பிரிக்காமல் இருப்பாளா? என்று பார்க்காமல் 38 வயதிலும் அரசு வேலை பார்க்கும் மனைவி கிடைப்பாளா என்று கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்வது? மனைவி குழந்தையோடு சந்தோஷமாக இருக்கும் உங்கள் வயதைத் தொட்டவர்களின் மனைவிகள் அரசு வேலைதான் பார்க்கிறார்களா?

உங்களுக்கு கன்னி லக்னம் மீன ராசியாகி லக்னாதிபதி புதனும் சுக்கிரனும் ஒன்பதாம் வீட்டில் இருந்தாலும் சூரியனுடன் ஒரே டிகிரியில் இணைந்து அஸ்தமனமாகி வலுவிழந்த ஜாதகம். லக்னத்தையும் ஏழுக்குடைய குருவையும் ராசிக்கு ஏழாம் வீட்டையும் சனி பார்க்கிறார். ஏழுக்குடைய குரு எட்டில் மறைந்து ராகு கேதுக்களுடன் இணைந்ததும், ஏழில் சந்திரன் அமர்ந்து, கடகத்தில் சனி நீச செவ்வாய் கூடியதும் இருதாரம் அல்லது ஏற்கனவே மணமாகி கணவனில்லாத பெண்ணை மணக்கும் அமைப்பு.

லக்னத்தை சனி பார்த்து லக்னாதிபதி பலமிழந்து வக்ரமானதால் தன்னம்பிக்கையின்றி வரப்போகும் மனைவி கைதூக்கி விடுவாளா என்று நினைக்கிறீர்கள். கடுமையான தோஷம் இருப்பதால் லக்னாதிபதியை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களை செய்தால் வரும் புதன்புக்தியில் திருமணம் நடக்கும். இல்லையெனில் குருவோடு சேர்ந்த கேது புக்தியில் 2017ல்தான் திருமணம்.

எ. மனோகரன்,
நிலகோட்டை.

கே
சந்
செவ், குரு
ராசி
சுக்,
சனி
சூ,
புத
ரா


கேள்வி:

37 வயதாகியும் எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. எதிலும் முன்னேற்றமும் இல்லை. எதிர்காலம் எப்படி இருக்கும்?

பதில்:

மீனலக்னம் ரிஷபராசியாகி குருவும் செவ்வாயும் இணைந்து தர்மகர்மாதிபதி யோகம் உண்டானாலும் இயற்கைச் சுபரான குருபகவான் கேந்திரத்தில் பகை வீட்டில் அமர்ந்தும் செவ்வாய் திக்பலம் இழந்தும் இருவரும் ஒரே டிகிரியில் ராகு சாரத்தில் அமர்ந்தும் வலுவிழந்தார்கள்.

மனைவி ஸ்தானாதிபதி புதன் ஆறில் மறைந்து, ஏழில் ராகு அமர்ந்து, ஏழாமிடத்தை சனி செவ்வாய் பார்த்து, சுக்கிரன் சனியுடன் இணைந்து, ராசிக்கு இரண்டில் செவ்வாய் அமர்ந்து கடுமையான தாரதோஷமும் உண்டானது. 

தற்பொழுது குருதசையில் சுக்கிர புக்தி நடப்பதால் லக்னாதிபதி குருவை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களையும் ஏழில் உள்ள ராகுவிற்கு சர்ப்பசாந்தி பூஜையையும் செய்வதன்மூலம் 2015 கார்த்திகை அல்லது 2016 தைமாதம் திருமணம் நடக்கும். திருமணத்திற்கு பின்னர் வாழ்க்கை நன்றாக இருக்கும்.


1 comment :

  1. திரு ஆதித்ய குருஜி அவர்களுக்கு,

    1) இரண்டாவது பாலகிருஷ்ணனின் ஜாதகப் பதிலில், உச்சகுரு ராசியைப் பார்ப்பதாக உள்ளது, அது லக்னாதிபதியைப் பார்ப்பதாக உள்ளது.
    2) 5-வது ரமேஷ் ஜாதகப்படி, லக்னாதிபதி புதன் 8-ல் கேது, குருவோடு இணைந்து மறைவு பெருகிறார். பதிலில், லக்னாதிபதி புதன் சுக்க்ரனோடு 9-ல், சூரியனின் அணைப்பில் அஸ்டாங்கம் அடைவதாக இருக்கிறது.

    ReplyDelete