ஆட்டையாம்பட்டி.
ல
|
|||
சுக்
|
ராசி
|
கே
|
|
சூ,பு
வி,ரா
|
சனி
|
||
செவ்
|
சந்
|
கேள்வி:
எங்களின் ஐந்து வயது மகள்வழி பேத்தி பிறந்தது முதல் நடக்க இயலாத ஊனம். அதோடு வாயும் பேச முடியவில்லை. தெய்வவழிபாடு மூலமாக இப்பொழுது நடக்க முயற்சிக்கிறாள்.
ஆனால் வாய் பேசவரவில்லை. ஜாதகப்படி இதற்கு என்ன காரணம்? எந்த கிரகத்தை வழிபட்டால் நிவர்த்தி ஆகும்?
பதில்:
பேத்தி இளவரசிக்கு மீனலக்னம் விருச்சிகராசி கேட்டை நட்சத்திரமாகி, லக்னாதிபதி குருபகவான் நீசம் பெற்று சூரியனுடன் ஒரே டிகிரிக்குள் அஸ்தமனமாகி, ராகுவுடன் ஐந்து
டிகிரிக்குள் கிரகணமாகி முழுக்க வலுவிழந்து இருக்கிறார். ஐந்துக்குடைய உடல்காரகன் சந்திரனும் நீசமாகி தற்போது ஏழரைச்சனியும் நடக்கிறது.
லக்னாதிபதி பூரணமாக வலுவிழந்த நிலையில் ஆறுக்குடைய சூரியன் சனியுடன் பரிவர்த்தனை பெற்று ஆறாமிடத்தில் ஆட்சிநிலை பெறுகிறார். எந்த ஒரு ஜாதகத்திலும் லக்னாதிபதி
வலுவிழந்து ஆறுக்குடையவன் வலுப்பெறக்கூடாது. மேலும் ஆயுள்காரகன் சனி ஆறில் மறைந்து, அஷ்டமாதிபதி சுக்கிரனும் பனிரெண்டில் மறைந்து தற்பொழுது பாதகாதிபதி புதன்
தசையும் அடுத்தடுத்து பாவிகளின் தசையும் நடப்பதும் ஆயுள்குற்றம்.
உங்கள் பேத்தியின் நிலைமைக்கு முன்ஜென்ம கர்மாவே காரணமன்றி வேறு இல்லை. இத்தகைய தோஷத்திற்கு பரம்பொருளே கருணை காட்ட வேண்டும். லக்னாதிபதி குருவை ராகுபகவான்
வலுவிழக்கச் செய்திருப்பதால் எல்லாம் வல்ல இறைவன் காளத்திநாதனை ஸ்ரீகாளஹஸ்தியில் ஜென்ம நட்சத்திரத்திற்கு முதல்நாள் இரவு தங்கி காலையில் ருத்ராபிஷேகம் செய்து
வழிபடுங்கள்.
மற்றொரு ஜென்மநட்சத்திர நாளன்று காலையிலேயே ஆலங்குடி சென்று குருபகவானுக்குரிய வழிபாடுகளை செய்து கோவில் திறந்திருக்கும் நேரம் முழுமையும் குழந்தையை
கோவிலுக்குள் இருக்கச் செய்யுங்கள். அனைத்தையும் ஆதரித்துக் காப்பாற்றும் பரம்பொருள் இந்த சின்னஞ்சிறு பிஞ்சிற்கும் நல்வழி காட்டாமல் போவாரா என்ன?
எம். சதீஷ்குமார் – காயத்ரி,
கறம்பக்குடி.
செ,சு
|
ரா
|
||
சூரி
புத
|
ராசி
|
||
குரு
|
|||
சந்
|
ல,சனி
கேது
|
கேள்வி:
எங்களுக்கு சென்ற தை மாதம் திருமணம் நடந்தது. என் மனைவி மாசமாக இருக்கிறார். எங்களின் எதிர்காலம் எப்படி? எனக்கு பத்து ரூபாய் வருமானம் வந்தாலும் இருபது
ரூபாய் செலவு வருகிறது. கடன் பிரச்னை இருக்கிறது. குருஜி அவர்கள் எங்களின் எதிர்காலம் பற்றி நல்லவாக்கு தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.
பதில்:
சதிஷ்குமாருக்கு துலாம்லக்னம் தனுசுராசியாகி லக்னாதிபதி சுக்கிரன் உச்சம். காயத்ரிக்கு மீனலக்னம் கடகராசியாகி லக்னாதிபதி குரு பத்தில் ஆட்சி. வயிற்றில் உள்ள
குழந்தை ஆண் குழந்தை.
கணவரின் தனுசுராசிக்கு ஏழரைச்சனி ஆரம்பிக்க உள்ளதால் சனி முடிந்ததும் வாழ்க்கை செட்டில் ஆகும். இருவருக்கும் புத்திரஸ்தானம் வலுவாக உள்ளதால் குழந்தை பிறந்த
பிறகு வாழ்க்கை நல்லமுறையில் இருக்கும். மனைவி ஜாதகம் வலுவாக இருப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் அவரிடம் ஆலோசனை கேட்டு நடப்பது நல்லது.
சி. மகாலிங்கராஜா,
கோட்டூர், சென்னை.
ராசி
|
சந்
|
||
ல
கே
|
செ
|
||
சுக்
|
சூ
|
புத
வி
|
சனி
|
கேள்வி:
கூட்டுக்குடும்பத்தில் வசிக்கிறோம். இப்போது நிறைய பிரச்னை. திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை. தனியாக செல்ல முடிவு எடுத்துள்ளோம். மளிகை
கடை வைக்கலாமா?
பதில்:
கணவருக்கு மகரலக்னமாகி பத்தாமிடத்தில் குருவும், புதனும் இணைந்துள்ளதால் மளிகைக்கடை நல்ல தொழில்தான். ஆனால் தற்பொழுது பனிரெண்டாமிடமான விரயஸ்தானத்தில் உள்ள
சுக்கிரன் திசையில் எட்டுக்குடைய சூரியபுக்தி ஆரம்பிக்க உள்ளது. மகர லக்னதிற்கு சூரியன் சந்திர, செவ்வாய் புக்திகள் நன்மை செய்யாது.
மனைவிக்கு மேஷராசியாகி அஷ்டமச்சனி ஆரம்பிக்க உள்ளதால் தனியாக தொழில் வைக்கவோ, தனிக்குடித்தனம் செல்லவோ இது ஏற்ற நேரமல்ல. அஷ்டமச்சனி முடியட்டும். அனைத்தும்
நல்லபடியாக நடக்கும்.
ஜோதிடர் முருகேச முதலியார்,
அன்னசாகரம், தருமபுரி.
செவ்
சனி
|
|||
சூ,சந்
|
ராசி
|
குரு,
ரா
|
|
புத,சு
கேது
|
|||
லக்
|
கேள்வி:
எழுபது வயதாகிறது. இரண்டு மகன்களும் கஞ்சி ஊற்றவில்லை. ஆனால் என்னிடம் விடுதலை பத்திரம் எழுதி வாங்கி உள்ளார்கள். திருமணதகவல் மையம் நடத்தி பத்து திருமணம்
செய்து வைத்து இருக்கிறேன். ஆனால் பணம் வரவில்லை. எல்லோரும் ஏமாற்றுகிறார்கள். இந்த தொழில் நல்லபடியாக நடக்குமா? நடக்கும் சுக்கிரதசையில் எந்த புக்தி நன்மை
செய்யும்? கைலாச யாத்திரை செல்ல முடியுமா? . உடல் தானம் செய்துள்ளேன். எந்த தசை புக்தியில் மரணம் அடைவேன்?
பதில்:
துலாம் லக்னமாகி லக்னாதிபதி சுக்கிரன் நான்கில் திக்பலம் பெற்று புதனுடன் இணைந்து உச்சகுருவின் பார்வையை பெற்ற ஜாதகம். சந்திரன் அமாவாசை யோகத்தில் சூரியனுடன்
இணைந்து சனியின் பார்வையை பெற்றதால் நீங்கள் யாருடனும் ஒத்துப் போகமாட்டீர்கள். யதார்த்தத்தை உணர முடியாதது உங்களின் பலவீனமாக இருக்கும்.
டிசம்பரில் ஆரம்பிக்கும் சனிபுக்தி அதனையடுத்து வரும் புதன்புக்தி நன்மைகளைத் தரும் யோகபுக்திகள். பத்தில் உச்சபங்கம் பெற்ற குரு ராகுவுடன் இணைந்திருப்பதால்
திருமண தகவல்மையம் சரியான தொழில்தான். அடுத்த வருடத்திலிருந்து தொழில் நல்லமுறையில் நடந்து பணம் வரும். கயிலைநாதன் அழைத்தால் சனிபுக்தியில் கைலாசயாத்திரை
செல்வீர்கள். ஐந்துக்குடையவன் எட்டில் மறைந்ததால் பிள்ளைகளால் லாபம் இருக்காது. சனி எட்டில் உள்ளதால் இப்போதைக்கு மரணமில்லை.
வி. ஆறுமுகம்,
பெருந்துறை.
ல
|
குரு
|
||
சந்
|
ராசி
|
கேது
|
|
சுக்
ராகு
|
|||
புத
சனி
|
சூ
|
செவ்
|
கேள்வி:
மூன்று வருடங்களாக மகளுக்கு வரன் பார்கிறேன். எல்லாமே தடைபடுகிறது. ஏழில் சூரியனும் எட்டில் சனியும் இருக்கிறார்கள். இதில் யாரால் தடை ஏற்படுகிறது?
எப்போது திருமணம்? அரசு வேலைக்கு தேர்வு எழுதுகிறாள். வேலை கிடைக்குமா?
பதில்:
ரிஷபலக்னம் கும்பராசியாகி ஏழுக்குடைய செவ்வாய் ஆறில் மறைந்து எட்டில் சனி. லக்னாதிபதியும் களத்திரகாரகனுமான தாம்பத்யசுகத்தைக் கொடுக்கும் சுக்கிரன்
ராகுவுடன் இணைந்து பலவீனமாகி, இரண்டு எட்டுக்குடைய குருவும், புதனும் பரிவர்த்தனை பெற்ற ஜாதகம்.
ராசியை சனிபார்க்க லக்னத்தையும் லக்னாதிபதியையும் செவ்வாய் பார்க்கிறார். இது போன்ற ஜாதகங்களுக்கு தாமததிருமணமே சரியானது. உங்கள் மகளுக்கு இப்பொழுது 25 வயதாகிறது. நடப்பு குருதசையில் திருமணம் முடிய வாய்ப்பு இல்லை. அடுத்த சனிதசையில்தான் திருமணம் நடக்கும். லக்னத்திற்கு பத்தில் சந்திரனும், ராசிக்கு பத்தில் சூரியனும் இருப்பதால் அதே சனிதசையில் அரசுவேலை கிடைக்கும்.
எஸ். ராஜேந்திரன்,
கோயம்புத்தர் – 2.
ல,ரா
|
|||
ராசி
|
|||
சூ,
பு
|
|||
குரு
|
செவ்,
கே
|
சனி
|
சந்,சுக்
|
கேள்வி:
30 வயதாகும் மகளுக்கு ஐந்து வருடங்களாய் வரன் பார்க்கிறேன். ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நிச்சயமாகி நின்றுவிட்டது. நானும் மனைவியும் போகாத கோவில்
இல்லை. திருமணஞ்சேரி, திருநாகேஸ்வரம், ஸ்ரீரங்கம், கும்பகோணம் கோவில்கள், கேரளா, திருவிலக்குன்று, காடம்புழா, குருவாயூர், கொடுங்காளூர், வல்லசேனாகோவில் ஆகிய
கோவில்களுக்கு வழிபாடு செய்தும் திருமணம் நடக்கவில்லை. எப்பொழுது நடக்கும்? குருஜியின் அருள்வாக்கினை வேண்டுகிறேன்.
பதில்:
மகள் பிந்துவிற்கு ரிஷபலக்னம், கன்னிராசியாகி, லக்னாதிபதியும் களத்திர காரகனுமாகிய சுக்கிரன் ஐந்தில் சந்திரனுடன் இணைந்து நீசம் பெற்றும் ஏழில் செவ்வாய்
ராகுகேதுக்கள் சம்பந்தம் பெற்று தற்பொழுது லக்னத்தில் உள்ள ராகுவின் தசை நடக்கிறது. ராகுவிற்கு வீடு கொடுத்த சுக்கிரன் நீசம் பெற்றுள்ளதால் ராகுதசை நன்மைகளை
செய்யாது.
நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்து கோவில்களிலும் அருள்புரிந்து கொண்டு இருப்பது ஒரே பரம்பொருள்தான். ஆனால் நமது மேலான இந்துமதத்தின் தெய்வாம்சம் பொருந்திய
சித்தர்களும், ஞானிகளும் சில குறிப்பிட்ட கிரக தோஷங்களுக்காக சில குறிப்பிட்ட திருக்கோவில்களை நமக்கு சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.
அதன்படி தங்கள் மகளின் திருமணத்திற்கு தடை ஏற்படுத்துபவர் நீச சுக்கிரனின் வீட்டில் அமர்ந்த ராகுபகவான்தான். முறையான பரிகாரங்களை தெரிந்து கொள்வதற்கும் சரியான
நேரத்தை பரம்பொருள் அருள வேண்டும். உங்களின் மகளின் ஜாதகப்படி இந்த தோஷத்தை நிவர்த்தி செய்வது ஸ்ரீகாளகஸ்தியில் அருள்புரியும் காளத்தியப்பர் என்பதால் உங்கள்
மகளின் ஜென்மநட்சத்திரத்திற்கு முதல்நாள் இரவு தங்கி அதிகாலை ருத்ராபிஷேக பூஜை செய்யவும். உடனடியாக திருமணம் நடக்கும்.
தனம்,
மேற்கு மாம்பலம்.
சுக்,சூ
புத,சனி
|
கேது
|
||
செவ்
|
ராசி
|
||
சந்,
குரு
|
லக்
|
||
ரா
|
கேள்வி:
41 வயதாகும் எனது மகனுக்கு பரிகாரங்கள் செய்தும் இன்னும் திருமணம் நடக்கவில்லை எப்பொழுது நடக்கும்?
பதில்:
மகன் சுரேஷ்பாலாஜிக்கு சிம்மலக்னம் மகரராசியாகி லக்னத்திற்கு ஏழில் செவ்வாய், ராசிக்கு இரண்டிலும் செவ்வாய். ஏழாமிடத்திற்கும் செவ்வாய்க்கும் சனிபார்வை. இது
கடுமையான தாரதோஷம் என்பதோடு குழந்தையை தருபவனான குருபகவான் லக்னத்திற்கு ஆறில் மறைந்து நீசமானதும் ஐந்தில் ராகு அமர்ந்து, ராசிக்கு ஐந்தில் சனி அமர்ந்ததும்
கடுமையான புத்திர தோஷம். முறையான பரிகாரங்களை செய்தீர்களா என்று தெரியவில்லை. செய்திருந்தால் வரும் ஜூன் மாதத்திற்குள் திருமணம் நடக்கும்.
எல். ஆறுமுகம்,
பாளையங்கோட்டை 627 002.
சந்
கேது
|
சுக்
|
||
ராசி
|
சூ,பு
|
||
சனி
|
|||
ரா
|
ல,செவ்
வி
|
கேள்வி:
தங்களின் மிகத் துல்லிய ஆழ்ந்த ஜோதிட ஞானத்திற்கு என் வணக்கங்கள். என் மகள் பி.இ கம்ப்யூட்டர் சயின்ஸ் அதிகமார்க் பெற்று கேம்பஸ் இண்டர்வியூ மூலமாக சுலபமாக
வேலை கிடைத்து போஸ்டிங் வடமாநிலம் என்பதால் பயிற்சி முடித்து அங்கு செல்ல இஷ்டமில்லாமல் இருக்கிறாள். ஏன் இந்த குழப்பம் தயக்கம்? அவளுக்கு படிப்புத்திறமை
அதிகம் என்பதால் ஐ.ஏ.எஸ் எழுதினால் கலெக்டர் ஆவாள் என்று உள்ளூர் ஜோதிடர் சொல்கிறார். அவளை ஐ.ஏ.எஸ் தேர்வு எழுத வைக்கலாமா? வெற்றி பெறுவாளா?
பதில்:
கன்னிலக்னம் ரிஷபராசியாகி லக்னத்தில் செவ்வாய், குரு அமர்ந்து லக்னாதிபதி புதன் பதினொன்றில் சூரியனுடன் இணைந்து சனிபார்வையைப் பெற்ற ஜாதகம்.
பொதுவாக கன்னிலக்னக்காரர்கள் என்றாலே படிப்பில் புத்திசாலியாக இருப்பார்கள். தற்பொழுது கன்னி லக்னத்திற்கு வரக்கூடாத செவ்வாய்தசை நடக்கிறது. எனவே உங்கள்
மகளுக்கு சோம்பலும் விரக்தியும், தன்னம்பிக்கையின்மையும் வந்துவிட்டது.
உங்கள் மகளின் தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன் இருக்கிறார். ஒருவர் ஐ.ஏ.எஸ் ஆகவேண்டும் என்றால் லக்னாதிபதியும் லக்னமும் சுபத்துவம் பெற்று வலுவாக இருக்க வேண்டும்.
மகள் ஜாதகப்படி லக்னத்தில் செவ்வாய் இருக்க லக்னாதிபதியை சனி பார்க்கிறார். பத்தாமிடத்திற்கு அதிகாரம் செய்யக்கூடிய கிரகங்களின் தொடர்பு இல்லை. மேலும் அடுத்து
நடைபெற இருக்கும் தசாநாதன் ராகுவும் விருச்சிகத்தில் சுபர் பார்வையில்லாமல் இருக்கிறார். எனவே ராகுதசை ஆரம்பித்ததும் உங்கள் மகள் வடமாநிலத்தில் சாப்ட்வேர்
கம்பெனியில் வேலை செய்வார்.
கே. சுப்ரமணி,
பவானி – 638 301.
சந்,புத
|
சூ
|
ல
|
செவ்,
சுக்,கே
|
ராசி
|
குரு
|
||
சனி
|
|||
ராகு
|
கேள்வி:
தாங்கள் மாலைமலரில் எழுதும் ஜோதிடக்கருத்துக்களை தவறாமல் படிக்கிறேன். ஒரு ஜாதகத்தில் ராசிசக்கரம் பார்த்து பலன் சொல்வது துல்லியமாக இருக்குமா? அல்லது
பாவகசக்கரம் பார்த்து சொல்வது துல்லியமா? இதைப்பற்றி நீங்கள் மாலைமலரில் விரிவாக எழுதினால் என்னைப் போன்றவர்களுக்கும், ஜோதிடர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக
இருக்கும். என் பேத்திக்கு ராசிசக்கரத்தில் உள்ள கிரகங்கள் பாவக சக்கரத்தில் இடம்மாறி உள்ளது. இஞ்சினியரிங் படித்துள்ள அவளுக்கு எப்பொழுது வேலை கிடைக்கும்?
திருமணம் எப்பொழுது? எதிர்காலம் எப்படி? தோஷங்கள் இருந்தால் பரிகாரங்கள் சொல்லவும். ஆயுள் எவ்வளவு?
பதில்:
ராசியை விட பாவகசக்கரமே துல்லியமானது. ஒரு ஜாதகத்தில் ராசிச் சக்கரத்தில் ஒரு கிரகம் இருக்கும் ஆட்சி உச்சநிலை, பார்வை சேர்க்கை போன்ற பலன்களை நிர்ணயித்து
விட்டு பாவகசக்கரத்தில் அது இருக்கும் இடத்தின் பலனை தனது தசையில் செய்யும் என்று பலன் சொல்ல வேண்டும்.
உதாரணமாக ஒரு மிதுனலக்ன ஜாதகத்தில் ராசியில் ஏழில் குரு ஆட்சியாக இருந்து பாவகத்தின்படி எட்டில் மகரத்தில் நீசமாக இருந்தால் தனது தசையில் எட்டில் குரு ஆட்சியாக
இருக்கும் பலனைச் செய்வார். நேரம் கிடைக்கும் பொழுது இதுபற்றி விரிவாக எழுதுகிறேன்.
உங்கள் பேத்திக்கு ரிஷபலக்னம் மீன ராசியாகி இரண்டில் செவ்வாய், எட்டில் ராகு என்பதால் தாமதத்திருமணம் நல்லது. தற்பொழுதய புதன்தசையில் சுக்கிர புக்தியில் 2017 ல்
திருமணம் நடக்கும். ராசிக்குப் பத்துக்குடையவன் உச்சமாகி சூரியனும் உச்சமானதால் அரசுவேலை உண்டு. அடுத்தடுத்து யோகதசைகள் நடைபெற உள்ளதால் எதிர்காலம் சிறப்பாக
இருக்கும். அஷ்டமாதிபதி உச்சம் ஆயுள்காரகன் சனி ஆட்சி என்பதால் தீர்க்காயுள். பரிகாரங்கள் எழுத இங்கு இடம் போதாது.
திரு ஆதித்ய குருஜி அவர்களுக்கு,
ReplyDeleteஜோதிடர் முருகேச முதலியாரின் ஜாதகக் கேள்விக்குறிய பதிலில், தாங்கள் பத்தில் "உச்சபங்க" குரு என்று குறிப்பிட்டீர்கள். "உச்சபங்கம்" பற்றி தயை கூர்ந்து விளக்கவும்.
உச்சத்தில் வக்கிரம் உச்சபங்கம்
Deleteதிரு ஆதித்ய குருஜி அவர்களுக்கு,
ReplyDeleteசி மகாலிங்கராஜாவின் ஜாதக ராசிக்கட்டத்தில், கடக ராகு விடுபட்டிருக்கிறது.