Monday, August 11, 2014

குருஜியின் டைரி -5

திரு.ஜோஸ்யம் ராமு அவர்களே... 

பாரம்பரிய முறையில் இதுபோன்ற ஏராளமான சூட்சும விஷயங்கள் விரவிக் கிடக்கின்றன என்பது நீங்கள் உட்பட எல்லோரும் அறிந்ததுதான்.

சிலர் கேபி சிஸ்டத்தில் ஜோதிடம் எளிமையாக்கப் பட்டுவிட்டது. தசா புக்தி பலனை எளிமையாகச் சொல்ல இதோ விதிகள் .. என் சிஸ்டப்படி நாலே பாயிண்டுகளில் நீங்கள் பலன் சொல்ல முடியும் என்று சொல்கிறார்கள்.

உண்மையைச் சொன்னால் ஜோதிடத்தை யாராலும் எளிமையாக்கவே முடியாது..

ஒரு மனிதனின் எதிர்காலம் எனப்படும் இந்த மாபெரும் தேவரகசியம் ஒரு சினிமா தியேட்டரின் இடைவேளையில் கிடைக்கும் பாப்கார்னா என்ன? அவ்வளவு சீப்பாகவா போய் விட்டது? 

ஒவ்வொரு ஜோதிடனுக்கும் தன் வாழ்நாள் முழுவதும் தான் பார்க்கும் ஒவ்வொரு ஜாதகத்திலிருந்தும் ஒரு விஷயம் கிடைத்தே தீரும். 

ஜோதிடத்தை எளிமையாக்குகிறேன் என்று புறப்பட்டவர்கள் இந்த மாபெரும் சமுத்திரத்தை கண்டு பயந்து கரையோரத்திலேயே கால் நனைப்பவர்கள். அவர்களால் ஒருபோதும் இந்த கடலினுள் இறங்கவே முடியாது. 

அதே போல எந்த ஒரு ஜோதிடனாலும் நூறு சதவிகிதம் துல்லியபலன் சொல்லவே முடியாது. அப்படிச் சொன்னால் அவன் ஜோதிடன் என்ற நிலையில் இருந்து மாறி கடவுளுக்கு அருகில் செல்வான்... 

வாழ்நாள் முழுவதும் கற்றாலும் முடிக்க முடியாத விஷயங்கள் பாரம்பரிய ஜோதிடத்தில் இருப்பதால்தான் ஜோதிடத்தை முழுவதும் கற்க ஒரு மனிதனுக்கு இரண்டரை ஆயுள் தேவைப்படும் என்று ஞானிகளால் சொல்லப் பட்டது. அதன் அர்த்தம் எந்த ஒரு மனிதனும் ஜோதிடத்தில் முழுமை அடைய முடியாது என்பதே.

அதேபோல கணிப்புத்தான் ஒரு ஜோதிடனின் பலம். அது ஒவ்வொருவருக்கும் அவரவரின் ஜாதகத்தில் புதனின் பலத்திற்கேற்ப வேறுபடும். இதைத்தான் நம் கிரந்தங்கள் காலம் நேரம் யுக்தி பயன்படுத்தி வருபவருக்கு பலன் உரைக்கக் சொல்லுகின்றன.

சிறுவயதில் நான் கேள்விப்பட்ட ஜோதிடக்கதை ஒன்று ... 

ஒரு ஜோதிடர் கிணற்றில் வாளியில் நீர் இறைத்துக் கொண்டிருந்த போது கிணற்றடிக்கே ஒரு பெண் வந்து தட்சிணை வைத்து "அய்யா... ஐந்து வருடங்களுக்கு முன் காணாமல் போன என் மகன் திரும்பி வருவானா மாட்டானா?உயிரோடு இருக்கிறானா இல்லையா?" என்று கேட்க .. 

அவள் கேட்ட அடுத்த நொடி வாளி அறுந்து கிணற்றுக்குள் விழ கண்மூடி யோசித்த ஜோதிடர் " வீட்டுக்குத் திரும்பப் போ.. உன்மகன் சமையலறையில் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான்"என்று சொன்னார். 

உடனே வீட்டிற்குச் சென்ற பெண்ணும் திரும்பி வந்து சந்தோஷமாக "உண்மைதான்.. நீங்களே ஜோதிடர்" என்று வாழ்த்திச் சென்றாள். 

அருகில் இருந்த சீடன் " சுவாமி.. எப்படி பலன் சொன்னீர்கள்?" என்று கேட்டதற்கு "நீயாக இருந்தால் என்னடா பலன் சொல்வாய்?" என்று குரு கேட்டார். 

"அபசகுனமாய் வாளி அறுந்து கிணற்றில் விழுந்ததே.. மகன் இறந்து விட்டான் என்று பலன் சொல்லியிருப்பேன் " என்று சீடன் சொல்ல குரு சொன்னார்.. "வாளி அறுந்து கிணற்றில் விழுந்தது என்று ஏனடா கணிக்கிறாய்? கிணற்றில் இருந்து வெளியே வந்த தண்ணீர் கிணற்றினுள்ளே போய் விட்டது. குடும்பத்தை விட்டு வெளியேறியவன் திரும்ப குடும்பத்தினுள் வந்து விட்டான்."என்று சொன்னார். 

இதுவே கணிப்பு. இவரே ஜோதிடர்.

7 comments :

  1. athanalathan neenga guru vagavey irukkinga. theva illama sila visha kirimigal facebookla, panjangathula ullatha appadiye type panni, pala noolgalilirunthu copy adichi group aaramichikittu, kalaththa ootranga, thappu thappa panja patchi sathiram eluthurathu, manasula pattatha jothida vithinu solrathu ippadilam evlo per irukanga aaya enna panrathu, ungala pola bold pesura oru guru kidachathu engal baagyam..thank you ayya

    ReplyDelete
  2. abdul kalam irukkurappa avar jathagatha aarachi pannathavanga, avar irantha piragu appadi adukku adukka jothida vithi no1, no2, no3......etc apdinu podurangaa ean ayya ellam ippadi panranga. ulgathula ulla jothidargalil neraya per intha thappa senji kittey irukkanga. sila per group arambichi nalla oru oru aal kittayum 500/- 1000/- bank la deposite pannunganu msgla anuppuranga. kadasiya paththa computerla print out eduththu anuppuranga.

    Ayya neenga sollunga

    Jathagatha mattum vachi vazhakaya eppadi mudivu panrathu iyya. pona kaalam pogattum. nadakkura kalathukku, koachara palan, daily horai, pancha patchi, daily thithi, daily natchathiram, daily gowri panjangaam, chandrastamam, entha kalayila moochi ooduthu sara kalai and pingalai, ithu illama , manthiram, enthiram, kula deivam , manthireegam, astakarmam, pancha bootha vasiya chakkaram, etc..............ippadi evlo topicla neraya irukkula ayya but ippa ullavanga ellarum nuni pul menjikittey poranga, thavi thavi poranga, arasiyalil katchi thavurathu mathiri, onnuththa kooda olunga kaththi kittu athula porathukkana vazhi pakkama intha facebook group onnum solrathukku illa iyyaa. naan oru rasigan theeviramana unga rasigan, but ithellathayum naan vedikka paththu kittu pesa ma utkanthuirukkean silenta ayya

    ReplyDelete
  3. super example ji..
    Any time you will be Positivie thoughts

    ReplyDelete
  4. ஜோதிடக் கதை மிக அருமை. நன்றி குருஜி அவர்களே.

    ReplyDelete