பதில்கள்
மாணிக்கவள்ளி
திருப்பாலை
மதுரை
கேள்வி:
ராகுதசை நடப்பில் உள்ளது. தலை முதல் கழுத்துவரை ஒரே வலி. இப்படித்தான் இருக்குமா? ராகு எவ்வகையில் நன்மை செய்யும்? யோகம் தரும் தசை எது? பரிகாரம் என்ன? கணவருக்கு என் ஜாதகம் மூலம் எப்போது முன்னேற்றம் வரும்?
பதில்:
நீங்கள் கன்னி லக்னம், கன்னிராசி. தற்போது ராகுதசையில் சுக்கிரபுக்தி நடைபெறுகிறது.
ராகு விரயாதிபதியான சூரியனின் சாரம் பெற்று பனிரெண்டாமிடத்தில் ஆறுக்குடைய சனியுடன் இணைந்திருக்கிறார். ராகுவிற்கு எந்தவித சுப தொடர்புகளும் இல்லை. அதனால்
6, 12 க்குடைய நோய், விரயம் போன்ற பலன்கள்தான் ராகுதசையில் நடைபெறும் .
கேது
|
ராசி
|
குரு
|
|
சனி
ராகு
|
|||
சூ செவ் பு(வ)
|
சுக்
|
லக் சந்
சனி
|
மேலும் கடந்த ஆறு வருடமாக கன்னிராசிக்கு ஏழரைச்சனி நடந்து வருகிறது. ராகுதசையில் ஏழரைச்சனியும் இணைவது கஷ்டங்களைத் தரும்.
ஆனால் அடுத்து நடைபெற இருக்கும் குருதசை யோகத்தை செய்யும். குரு உச்சம் பெற்று எவ்வித கெட்ட தொடர்புகளும் இன்றி இருப்பதால்.
கணவருக்கும் குழந்தைகளுக்கும்
குருதசை மிகுந்த நன்மை தரும். நோயும் குணமாகும்.
உங்கள் ஜாதகப்படி கொடுமுடி சென்று பரிகாரங்களைச் செய்யலாம். கொடுமுடியில் கௌரிசங்கர் குருக்களை (99940 77882) தொடர்பு கொள்ளுங்கள்.
R. ஜானகி
சென்னை.
கேள்வி:
என்னுடைய மகன் காதில் முஸ்லிம் பெண்களின் குரல் எப்போதும் “ஹேப்பி பர்த்டே, ஆல்ரைட் ஆல்ரைட்” என்று கேட்டுக் கொண்டிருக்கிறது என்று சொல்கிறான். 38 வயது.
கல்யாணம், வேலை இல்லை. தூக்கமருந்து சாப்பிட்டுத்தான் தூங்குகிறான். டாக்டர்களிடம் காண்பித்து ஒரு மாற்றமும் இல்லை. அடிக்கடி உடம்புக்கு ஏதாவது வருகிறது.
தயவு செய்து இது என்ன தோஷம் என்பதோடு ஏதாவது தீர்வு சொன்னால் மிகவும் நலமாக இருக்கும்.
பதில்:
மீனம் லக்னமாகி, மூன்றில் சந்திரனுடன் கேது இணைந்து, நான்கில் சனி, ஐந்தில் சூரியன் புதன் சுக்கிரன் சேர்க்கை, ஆறில் செவ்வாய், பனிரெண்டில் குரு அமர்ந்த
ஜாதகம்.
லக்னத்தை சனி செவ்வாய் பார்த்து, ராசியில் ராகு கேது சம்பந்தப்பட்டு, லக்னாதிபதி குரு பனிரெண்டில் மறைந்து ஆறாம் பாவத்தைப் பார்த்து அதனை வலுவாக்கி நோய்
தந்த அமைப்பு உங்கள் மகனுக்கு.
லக்
|
சந் கேது
|
சனி
|
|
குரு
|
ராசி
|
பு சூ சுக்
|
|
செவ்
|
|||
ராகு
|
தற்போது குருவின் தசை நடந்து கொண்டிருக்கிறது. குருதசை ஆரம்பித்ததில் இருந்தே இது போன்ற பிரச்னைகள் இருக்கும். 2013 ஜூலைக்கு மேல் நடைபெற உள்ள
சுக்கிரபுக்தியில் நோயின் கடுமை இன்னும் தீவிரம் ஆகலாம்.
லக்னாதிபதி வலுவிழந்ததும், பாவகச் சக்கரத்தில் சூரியன் ஆறாமிடத்தில் பலம் பெற்றதும் தோஷங்கள். குருபகவானை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களை செய்வது
நல்லது. தொலைபேசியில் கேளுங்கள்.
k.கார்த்திகேயன்
ஊர் பெயர் இல்லை.
கேள்வி:
இந்த ஜாதகத்திற்கு இரண்டாவது திருமணம் உண்டா? உண்டு எனில் நல்ல வாழ்க்கை அமையுமா? சொத்து பிரச்னை தீருமா? (சில காரணங்களுக்காக கணவன் மனைவி பெயர்
குறிப்பிடவில்லை.)
பதில்:
யாருக்கு இரண்டாவது திருமணம்? 1957ல் பிறந்த கணவனுக்கா? 1973 ல் பிறந்த மனைவிக்கா? இருவருக்கும் நீங்கள் யார்? பிறந்த நேரம் வேறு இல்லை.
இப்படி “மொட்டைத்
தாதன் குட்டையில் விழுந்தான்” என்ற கதையாக கேள்விகளை அனுப்பாதீர்கள்.
இல்லாத ஊருக்கு போகாத வழி சொல்ல எனக்குத் தெரியாது.
N.சங்கீதா கோவிந்தராஜூ
ஓமலூர்
சேலம்
கேள்வி:
என் பெயரில் உள்ள தொழில் சரியில்லை. கடன் அதிகமாகி விட்டது. பொக்லைன் இயந்திரம் வாடகைக்கு கொடுக்கிறேன். தொழில் நிலைக்குமா?
கடன் அடையுமா? சொந்த வீடு உண்டா? கணவரின் ஜாதகமும் அனுப்பியுள்ளேன். எனக்கு நல்வழியும் பரிகாரங்களும் சொல்லுங்கள் அய்யா.....
பதில்:
கணவருக்கு மேஷலக்னம், கன்னிராசி உத்திரம் நட்சத்திரம் (14-7-1975 1.42am சேலம் )
லக்னாதிபதி செவ்வாய் லக்னத்தில் அமர்ந்து, நாலுக்குடைய சுபர் வளர்பிறை சந்திரன் ஆறாமிடத்தில் அமர்ந்து, குரு பனிரெண்டில் ஆட்சி பெற்று ஆறாமிடத்தை பார்த்து
ஆறாம் பாவத்தை வலுப்படுத்திய நிலையில் எட்டில் இருக்கும் ராகு தசையில் சந்திரபுக்தி நடக்கிறது
குரு
|
லக் செவ்
|
கேது
|
பு சூ சனி
|
ராசி
|
|||
சுக்
|
|||
ராகு
|
சந்
|
ஆறுக்குடைய ராசிநாதன் புதனும் ஆறாமிடத்திற்கு பத்தாமிடமான மிதுனத்தில் ஆட்சி பெற்று வலுவானதாலும், ராகு செவ்வாயின் வீட்டில் சனியின் நட்சத்திரத்தில்
அமர்ந்து அம்சத்தில் செவ்வாயுடன் இணைந்ததாலும் கடன் இருக்கத்தான் செய்யும். அதோடு கடந்த ஆறு வருடங்களாக நடந்து வரும் ஏழரைச்சனியும் கடன் சிக்கல்,
பொருளாதாரச் சரிவைத்தான் கன்னிராசிக்கு தந்திருக்கும்.
அடுத்த வருடம் ஆரம்பிக்கும் குரூ தசையிலும் கடன்கள் இருக்கும். ஆனால் தொல்லை தராத, வளர்ச்சிக்கு உதவும் கடனாக அமையும். குருதசை முதல் யோக வாழ்வு உண்டு.
உங்கள் கணவரின் ஜாதகப்படி அவருக்கு ஜோதிடம் ஓரளவு தெரியும். அவரே குருதசை யோகதசை என்பதை உணர்வார்.
ராகுதசையும் ஏழரைச்சனியும் முடியப் போவதால் ஜோதிட பரிகாரங்கள் தேவையில்லை. தேவையான ஒரே வாழ்நாள் பரிகாரம் உங்கள் கணவர் கோபத்தை எப்போதும் குறைத்துக்
கொள்வதுதான். குருதசையில் சொந்த வீடு உள்ளிட்ட அனைத்து பாக்கியங்களும் உண்டு. மேஷம் லக்னமாகி லக்னாதிபதி வலுப்பெற்ற நிலையில், பாக்கியாதிபதி குருவை அஸ்தமனம்
பெற்று வலுவிழந்த சனி (குருடாகி) பார்ப்பதால் தொழில் நிலைக்கும்.
புலவர் ச.பழனிவேலு பிலிட். எம்.ஏ. பிலிட்.
19/14 மெக்கரிக்கர் சாலை
ஆர் எஸ் புரம்
கோவை-641 002
கேள்வி
71 வயது ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான என் மனதை போட்டு குழப்பிக் கொண்டிருக்கும் விஷயத்தை குருஜி அவர்கள் தெளிவாக்க வேண்டுகிறேன்.
இத்துடன் எனது இரண்டு ஜாதகங்களை அனுப்பியுள்ளேன். இரண்டிலும் லக்னம், நட்சத்திரம், நேரம் காலை – இரவு என வித்தியாசம் உள்ளது. என் தாயார் நான் இரவில்
பிறந்ததாகவும் நேரம் நினைவில்லை என்றும் சொன்னார்கள். தயவு செய்து எது சரியானது என்று தெரியப்படுத்தும்படி பணிவுடன் கேட்கிறேன்.
இந்த வயதில் கேட்கிறேன் என்று நினைக்க வேண்டாம். திருமணமான நாளில் இருந்து எனக்கும் என் மனைவிக்கும் சிறு விஷயத்தில் கூட சண்டை. வெளியில் நிம்மதி
இருந்தாலும் வீட்டில் இல்லை. நாள்தோறும் சண்டை. உங்களை மன்றாடி கேட்கிறேன். எனக்கு நிம்மதி தேவை. ஏன் இப்படி? எந்த ஜாதகம் சரி? எனக்கு என்ன தசை புக்தி
நடக்கிறது? தெளிவுபடுத்துங்கள் குருஜி .......
பதில்:
நீங்கள் அனுப்பியுள்ள ஜாதகத்தில் ஜோதிடர் எழுதியுள்ள 28.12.1941 இரவு 10.30 கோவை என்ற ஜாதகமே சரியானது. அதன்படி சிம்மலக்னம் மேஷராசி பரணி நட்சத்திரம்.
சனிதசை புதன்புக்தி 31-10-12 முதல்.
ஜீவனஸ்தானத்தில் குரு அமர்ந்து வாக்குஸ்தானமான கன்னியை பார்த்ததால் ஆசிரியர் பணி.
சந் செவ் சனி
|
குரு
|
||
கேது
|
ராசி
|
||
சுக்
|
ராகு லக்
|
||
சூ
புத
|
லக்னத்தில் ராகு, ஏழில் கேது. ஏழுக்குடைய சனி செவ்வாயுடன் இணைந்து நீசம். பாவகப்படி எட்டில் செவ்வாய். சுக்கிரன் ஆறில் மறைவு. ராசிக்கு ஏழாமிடத்தை செவ்வாய்
சனி இருவரும் பார்க்கிறார்கள் எனவே பொருந்தா மனைவி. உங்கள் திருமணமும் தாமதமாக 35 வயதிற்கு மேல்தான் நடந்திருக்கும்.
அது சரி....
ஏழாமிடத்திற்கு சனி அதிபதியாகி அவர் நீசவக்ரம் பெற்று வலுவாகி, போகஸ்தானாதிபதி வளர்பிறை சந்திரனுடன் இணைந்து, வீர்ய ஸ்தானமான மூன்றாமிடத்தை இருவரும்
பார்ப்பதால் நீங்களே சற்று மாறுபட்ட ரசனையுடன் தானே இருப்பீர்கள்?
T.ஞானசௌந்தரி
திருப்பூர்
கேள்வி:
தங்களின் கேள்வி–பதில் பகுதி மிகச் சிறப்பாக உள்ளது. தங்களது பதில்கள் துல்லியமான கணிப்பாக உள்ளன. மிகவும் வசதி குறைந்த எனக்கு வரும் கார்த்திகை 11 ம் தேதி
திருமணம் நடைபெற உள்ளது. எனது வருங்கால கணவர் ஜாதகத்தையும் அனுப்பி இருக்கிறேன். எங்களது மணவாழ்வு எப்படி இருக்கும்? முன்னேற்றம் எப்போது? என்ன தொழில்
செய்யலாம்? எதிரிகாலம் எப்படி?
பதில்
முதலில் ஞானசௌந்தரிக்கு என் மனமார்ந்த திருமண வாழ்த்துக்கள். நீங்கள் இருவரும் மனமொத்த தம்பதிகளாய் சகல செல்வங்களும் பெற்று நீடூழி வாழ
பரம்பொருள் அருள் செய்யும்.
விருச்சிக லக்னம் மீனராசி பூரட்டாதி நட்சத்திரம் புதன்தசையில் சந்திரபுக்தி நடப்பு. (23-12-1982- 5.45am திருப்பூர்)
சந்
|
ராகு
|
||
ராசி
|
|||
செவ்
|
|||
சூ பு சுக் கேது
|
குரு லக்
|
சனி
|
பொதுவாக பெண்களின் ஜாதகத்தில் சனியும் செவ்வாயும் நேர்வலு அடையக் கூடாது. உங்களுக்கு லக்னாதிபதி செவ்வாய் மூன்றில் உச்சம். சனி 12ல் உச்சம். இருவரும்
மறைந்து பலம் பெற்றது நன்மையைத் தரும்.
மேலும் தற்போது அஷ்டமாதிபதி புதன்தசை நடக்கிறது. உங்களுக்கு லக்னத்திற்கு எட்டில் ராகு, ராசிக்கு எட்டில் சனி இருக்கிறார்கள். முப்பது வயது கடந்து திருமணம்
நடப்பதால் மேற்படி தோஷம் நிவர்த்தி.
அஷ்டமாதிபதி புதனே ராசிக்கு ஏழுக்குடையவன் ஆவதாலும் லக்னத்தில் குரு இருந்து ஏழாமிடத்தை பார்ப்பதாலும் திருமணத்திற்கு
பின்பு வாழ்க்கை நன்றாக இருக்கும்.
ஆனால் உங்கள் மீனராசிக்கு இப்போது அஷ்டமச்சனி நடப்பதால் முதல் இரண்டு வருடம் சுமாராகத்தான் இருக்கும். யோகங்கள் எல்லாம் அஷ்டமச்சனி முடிந்த பிறகுதான்.
T.திருமூர்த்தி
ராஜாநகர் 3வது தெரு
மேலப்பாளையம்
திருநெல்வேலி
கேள்வி
சிறுவயதில் இருந்தே கஷ்டம். எதிலும் வெற்றி இல்லை. இன்னும் திருமணம் ஆகவில்லை. இரும்புத் தொழில் செய்கிறேன். கடன்தான் மிச்சம். மாந்திரீகம் படித்து பாதியில்
விட்டுவிட்டேன். மீண்டும் படிக்கலாமா? இரும்புத் தொழில்தானா? வேறு தொழில் செய்யலாமா? எனது ஜாதகத்தில் குறை இருந்தாலும் தயவுசெய்து முழுமையாகச் சொல்லுங்கள்
அய்யா ......
பதில்
வாக்கியப் பஞ்சாங்கத்தில் மிதுனலக்னம் என்பதோடு மட்டுமின்றி, முழுக்கவும் தவறாக கணிக்கப்பட்ட ஜாதகம். திருக்கணிதப்படி ரிஷபலக்னம் வருகிறது. ரிஷப லக்னம்
என்றால்தான் நீங்கள் சொல்லும் இரும்புத்தொழில், திருமணம் ஆகாதது, மாந்திரீகம் போன்ற கணக்குகள் சரியாக வரும்.
நீங்கள் பிறந்த ஊரை குறிப்பிடாததால் உங்கள் கேள்விகளுக்கு என்னால் முமுமையாக பதிலளிக்க முடியாது. பிறந்த ஊரைக் குறிப்பிட்டு மறுபடியும் கேள்வியை அனுப்பவும்.
R. சுபலட்சுமி
24 அசோக்குமார் நகர்
R.K.புதூர்
கோவை-641008
கேள்வி
எனது சகோதரி கணவரை விட்டு பிரிந்து மகளுடன் தனியாக இருக்கிறார். விவாகரத்து பெறாமல் அவள் கணவர் இரண்டாவது திருமணம் செய்து விட்டார். எனது சகோதரியின் நகை
மற்றும் சீதன பொருட்கள் இன்னும் கணவர் வீட்டில் உள்ளன. அவர் மீது கிரிமினல் வழக்கு தொடரலாமா? பொருட்கள் கிடைக்குமா? கிடைக்க என்ன முயற்சிகள் எடுக்க
வேண்டும்? ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?
பதில்
ரேவதிக்கு மேஷலக்னம் மேஷராசி அசுவினி நட்சத்திரம் (திருக்கணிதப்படி)
ராகுதசை சுயபுக்தி நடப்பு. ( 24.07.1962 - 0.30 AM நெல்லை)
களத்திரகாரகனும், ஏழுக்குடையவனுமான சுக்கிரன் ஐந்தில் பகை பெற்று அம்சத்தில் நீசம் பெற்று, அவரின் பகைவர்களான குரு, செவ்வாயின் பார்வையையும் பெற்று
முழுவதும் வலுவிழந்ததால் கணவனால் சுகம் இல்லை. கணவன் என்ற பெயரில் ஒரு கயவன் அமைந்திருப்பான்.
லக் சந்
|
செவ்
|
||
குரு
|
ராசி
|
சூ பு ராகு
|
|
சனி கேது
|
சுக்
|
||
மேலும் செவ்வாய் இரண்டில் அமர்ந்து குடும்ப ஸ்தானத்தை கெடுத்து தன் எட்டாம் வீட்டை தானே பார்த்ததால் கடந்த செவ்வாய் தசை முழுவதும் குடும்பத்தில் வழக்கு,
வம்பு, அசிங்கம், கேவலம் போன்ற அஷ்டமாதிபதி பலனைத்தான் செய்திருப்பார்.
தற்போது வழக்கு ஸ்தானாதிபதியான புதனுடன் இணைந்து நான்காமிடத்தில் அமர்ந்த கடகராகுவின் தசை நடக்கிறது. அவரை வழக்கைத் தீர்க்கும் பதினொன்றாமிட அதிபதி சனி
பத்தில் கேதுவுடன் இணைந்து பார்ப்பதாலும் ராகு சனியின் சாரத்தில் உள்ளதாலும் நீங்கள் கோர்ட் கேஸ் என்று போகத்தான் செய்வீர்கள்.
ராகுதசை சனி புக்தியில் உங்களுக்கு சாதகமான பலன்கள் நடக்கும். பொருட்களும் அதற்கிடையில் கிடைக்கும். ராகுவிற்கு கண்டிப்பாக பரிகாரங்கள் செய்ய வேண்டும்.
தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள்.
R.அனந்த பத்மநாபன்
கோவை.08
கேள்வி:
வங்கியிலிருந்து ஓய்வு பெற்று விட்டேன். நீரிழிவு நோய் இருக்கிறது. மனதில் ஒரு இனம் புரியாத பயம் இருக்கிறது. தூக்கமும் இல்லை. என்ன பயம் என்று தெளிவாக
சொல்ல முடியவில்லை. ஒரே குழப்பம். எதனால் இந்த நிலை? எப்போது மாறும்? பரிகாரம் உண்டா?
பதில்
வயதாகி விட்டாலே சர்க்கரை நோய் வரும். தூக்கம் வராது. தற்போது அஷ்டமாதிபதி தசை நடக்கிறது. எட்டுக்குடையவன் தசையில் இப்படித்தான் இருக்கும். நேரம்தான்
இருக்கிறதே... எந்நேரமும் பரம்பொருளை தியானியுங்கள். அவனின் திருவடிகளை மட்டுமே நினையுங்கள். பஞ்சாய் பறந்து போகும் எல்லா குழப்பங்களும். இதுதான் பரிகாரம்.
வேறு எதுவும் தேவையில்லை.
V.விமலா
நாரங்கி பிளாட்ஸ்
வீராசாமி தெரு
மேற்கு மாம்பலம் சென்னை -33
கேள்வி:
என் மகள் B.E படித்து மூன்று வருடம் ஆகியும் வேலை கிடைக்கவில்லை. கிடைக்குமா? திருமணம் எப்போது? திருமண வாழ்க்கை நன்றாக இருக்குமா?
பதில்:
மிதுனலக்னம், சிம்மராசி, பூரம். (24.5.1988 – 8.10AM சென்னை) சூரிய தசையில் சுக்கிர புக்தி.
லக்னாதிபதி லக்னத்தில் ஐந்துக்குடையவனுடன் அமர்ந்து, ஒன்பதுக்குடையவன் லக்னத்தைப் பார்த்தும், ராசியைக் குருவும் பார்த்த ஒரு புத்திசாலிப் பெண்ணின் அருமையான
யோக ஜாதகம். பத்துக்குடைய குரு லாபத்தில் அமர்ந்து ஏழில் அமர்ந்த சனியைப் பார்ப்பதும் நல்ல வேலை கிடைக்கும் அமைப்பு.
குரு
|
சூ
|
லக் பு சுக்(வ)
|
|
ராகு செவ்
|
ராசி
|
||
கேது சந்
|
|||
சனி(வ)
|
ஒன்பதாமிடத்தில் செவ்வாய் மற்றும் ராகு அமர்ந்து, தசாநாதன் சூரியன் பனிரெண்டில் மறைந்து, செவ்வாயின் பார்வையை பெற்றதால் தகப்பன் ஆதரவும் இருக்காது. தசையும்
நல்லது செய்யாது. ஆனால் ஜூலைக்கு பிறகு வரும் குடும்பாதிபதி சந்திரதசை சுக்கிரனின் சாரம் வாங்கி குருவின் பார்வையை பெற்றதால் குடும்பத்தையும், வேலையையும்
அமைத்துத் தரும்.
பொதுவாக எனது அனுபவத்தில் சுக்கிரன் வக்கிரம் பெற்றவர்களுக்கு எதிர்பார்க்கும் மணவாழ்வு அமைவதில்லை. உங்கள் மகளுக்கு ஏழில் வக்ரச்சனி இருந்து லக்ன சுக்ரனையும்,
ஒன்பதாமிடத்து செவ்வாயையும் பார்ப்பதால் பொருத்தம் பார்ப்பதில் கவனம் தேவை.
லக்னாதிபதி லக்னத்தில் ஆட்சி பெற்றதால் உங்கள் மகள் எதையும் சமாளிப்பார். தேவையற்ற வீண் பிடிவாதத்தை குறைத்துக் கொள்வது நல்லது.
(பிப்ர-மார்ச் 2013 மாத இதழில் வெளிவந்தது.)
Dear Sir Mr.Adhithya guruji,
ReplyDeleteMy date of birth:20th August 1976 (today is my birth day).
As per vakiyam, mithuna rasi (thiru - rishabam). varum sani dasayil Onsite, land or Veedu vanga mudiyuma.
Foriegn opp?unda.
viruchiga lagnam(vakiyam), 6th kethu, 7il Guru, 8il Moon, 9il Satun(Poosham 3il-vakiyam), 10il Suriyan,bhudhan, Sukkiran, 11il sevvai(mars) with Mandhi, 12il Rahu.
Please reply Sir.
Thanks & Regards
Arul Kumar Rajaraman
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎன்னுடன் தொலைபேசியில் நீங்கள் பேசி தெளிவு பெற்று விட்டர்கள் என்று நம்புகிறேன்.
Dear Adhithya guruji,
ReplyDeleteEnathu,
DOB: 6th Dec 1974.
TOB: 12.30PM,
Place: Mannargudi
Tharpothu nadappu Ragu dasa evvaru amaiyum? kadan thillaiyil irunthu vidupada, varumaanam pera vaaippu ullatha? Miguntha panivudan vendukiren...
தனிப்பட்ட ஜாதக கேள்விகளை இந்த பிளாக்கில் கேட்காதீர்கள்...அதற்கு நான் பத்திரிகைகளில் பதிலளிக்கும் சந்தர்ப்பங்களை உபயோகப் படுத்திக் கொள்ளுங்கள்....இங்கே சில பொதுவான முக்கியமான சந்தேகங்களுக்கு மட்டும் எனக்கு நேரம் இருப்பின் பதில் தருவேன்....
DeleteSir,
DeleteThula Lagnathil , Sani (Vakkram) + Raghu amarthu
Meshathil ula ucha Suriyanai Paarthal. Uchhanai Uchhan Parthal Pichai Edukkum yogam engirargale? It is in my daughter Horoscope.she is born on 22/04/2013, Erode, 6.40 p.m. For this any parigaram? Pls let us know Sir.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteவணக்கம் குருஜி தங்கள் தர்மகர்மாதிபதி யோகதிற்கான கட்டுரையை சமீபத்தில் தான் படித்தேன் அதில் கும்ப லகினதிற்கு யோகிதிபதிகளான நண்பர்களே ( புதுனும் சுக்கிரனும் ) பவதிகளாக எப்படி மாறுகிறார்கள் என அருமையாக சொல்லிருகிற்கல்.
ReplyDeleteகும்ப லக்கினம் என்றால் நிறைந்த பரிபூரண என்றுதானே பொருள் பின் எப்படி இது சனி பகவானின் லகினதிற்கு பொருத்தம் ஆகிறது
Dear sir
ReplyDeleteHow will be my Sukra Dasa
Own business is possible?
What business I can do?
25/01/76 4.10pm Erode