கைப்பேசி : +91 8286 99 8888
துலாம்:
துலாத்திற்கு குறை சொல்ல முடியாத மாதம் இது. கோட்சார நிலையில் கிரகங்கள் அனைத்தும் அதிர்ஷ்டங்களை தரும் அமைப்பில் இருப்பதால் அடுத்த வருடம் முழுவதும் உங்களுக்கு கிடைக்க இருக்கின்ற நன்மைகளை அடையாளம் காட்டும் விதமாக இந்த டிசம்பர் இருக்கும். கோட்சார நிலைமைகள் இத்தனை சாதகமாக இருந்தும் துலாம் ராசிக்காரர்கள் யாராவது நல்லவை நடக்காமல் கஷ்டங்களை அனுபவித்து கொண்டிருந்தால் அவர்களின் பிறந்த ஜாதகப்படி சரியில்லாத தசா புக்திகள் நடந்து கொண்டிருக்கும் என்பது ஜோதிட விதி. அப்படிப்பட்டவர்கள் முறையான தெய்வ வழிபாடுகளை செய்வது நல்லது.
சுபரான குரு வலுவான நிலையில் ஐந்தாமிடத்தில் அமர்ந்து ராசியைப் பார்ப்பதால் உங்களுக்கு
தொந்தரவுகளை கொடுத்து கொண்டிருந்த எதிரிகளின் கொட்டம் ஒடுங்கும் மாதம் இது.
ஜாதகத்தில் யோக தசாபுக்திகள் நடந்து கொண்டிருப்பவர்கள் கடன் தொல்லை, ஆரோக்கிய குறைவு ஆகியவற்றை சுலபமாக ஜெயிப்பீர்கள். இந்த மாதம் பொருளாதார
சிக்கல்கள் இருக்காது. வேலையில் இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.
வியாபாரம் செழிப்பாக நடக்கும். சொந்தத்தொழில் செய்பவர்களுக்கு வருமானம் கூடும்.
சிலருக்கு இதுவரை தாமதித்து வந்த வேலை வாய்ப்புக்கள் இனிமேல் நல்லபடியாக
கிடைக்கும். பணியில் இருப்போருக்கு இருந்து வரும் சிக்கல்கள் தீரத் தொடங்கும்.
வியாபாரிகளுக்கு கொடுத்த கடன் சிக்கல் இல்லாமல் திரும்பி வரும்.
கணவன்,
மனைவி உறவு சுமாராக இருக்கும். கடன் தொல்லை எல்லை மீறாது.
சிலருக்கு மட்டும் உஷ்ணம் சம்பந்தமான பிரச்னைகள் இருக்கும். ஆன்மீக எண்ணங்கள் தூக்கலாக
இருக்கும். சிலருக்கு பங்குத்துறையில் லாபமும், நீண்டநாட்களாக இழுத்துக் கொண்டிருந்த விஷயம் சாதகமாக முடிவதும், திரும்ப வராது என்று கைவிட்ட பணம் கிடைத்து சந்தோஷப்படுதலும் நடக்கும்.
ஆசைப்பட்ட குழந்தைப்பேறு கிடைக்கும். சிலருக்கு
வீடு,
வாகனம், மாறுதலுக்கு உண்டாகும்.
பெண்களுக்கு சிறப்பான மாதமிது. கணவரும் குழந்தைகளும் உங்களின் பேச்சை கேட்பார்கள்.
வயதானவர்களின் ஆரோக்கியம் மேம்படும். அரசு, தனியார்துறை ஊழியர்கள் நன்மைகளை அடைவார்கள்.
1,2,3,8,9,11,12,14 ஆகிய நாட்களில் பணம் வரும். 16-ம் தேதி மதியம் 2.20 முதல் 19-ம் தேதி அதிகாலை 3.21 வரை சந்திராஷ்டம
நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் செய்ய வேண்டாம். இந்த
நாட்களில் அறிமுகம் ஆகும் நபர்கள் பின் நாட்களில் தொந்தரவுகளை கொடுப்பார்கள்
என்பதால் எதிலும் கவனமுடன் இருக்க வேண்டும்.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
No comments :
Post a Comment