கைப்பேசி : +91 8286 99 8888
மேஷம்:
டிசம்பர் மாதம் முழுவதும் ராசிநாதன் செவ்வாய், எட்டில் மறைந்தாலும் ஆட்சி நிலையில் இருப்பதும் யோகாதிபதி குரு, லாபத்தில் உள்ளதும் மேஷத்திற்கு யோகம் தரும் அமைப்பு. ராசிநாதன் எட்டில் கேதுவுடன் இருப்பதால் மேஷத்தினருக்கு இந்தமாதம் எதிர்பாராத திடீர் பணவரவு இருக்கும். சாதகமான கிரக அமைப்புகள் உங்களுக்கு மன நிறைவைக் கொடுக்கும் என்பதால் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் மாதம் அடுத்த வருடம் கிடைக்க இருக்கும் நன்மைகளுக்கு அச்சாரம் போடுகின்ற ஒரு மாதமாக இருக்கும்.
மேஷத்திற்கு
இது மகிழ்வும் நிறைவும் உள்ள மாதமாக இருக்கும். வீட்டிலும்
வெளியிலும் சுபமான நிகழ்ச்சிகளும், மனதில் உற்சாகமும், எதிர்பாராத லாபங்களும் கிடைக்கும். மேஷராசியின் அனைத்துக் கஷ்டங்களும் நீங்கி
விட்டன. உங்களில் சிலருக்கு கடந்த காலங்களில் இருந்து வந்த பிரச்னைகள் இனி
இருக்காது. வேலை வியாபாரம் தொழில் போன்ற ஜீவன அமைப்புகளில் இருந்து வரும் தடைகள்
தாமதங்கள் நீங்கி நல்லவிதமான செயல்கள் நடைபெறத் துவங்கும். குடும்பத்தில் இருந்து
வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை இருக்கும். வேலை விஷயமாக பிரிந்து
இருக்கும் தம்பதிகள் ஒன்று சேர முடியும். வழக்குகளுக்கு நல்லவித முடிவு இருக்கும்.
சகோதர சகோதரிகளிடம் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும்.
இளைய பருவத்தினருக்கு நல்லவேலை கிடைக்கும். காதலிப்பவர்கள் பெற்றோர்கள் சம்மதம்
பெறுவீர்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. மணவாழ்வில் பிரச்சினைகள்
இருப்பவர்களுக்கு அது தீரும். சிலருக்கு வேலை மாற்றம் நடந்து வெளியூரில் வேலை
அமையும். சுயதொழில் செய்வோருக்கு எடுக்கும் முயற்சிகள் கை கொடுக்கும். தொழிலில்
இருந்த முட்டுக்கட்டைகளும் அதிருப்தியான நிலைமையும் மாறி தொழில் சூடு பிடிக்கும்.
வேலை செய்பவர்களும் பங்குதாரர்களும் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள்.
வியாபாரிகளுக்கு இது மிகுந்த லாபங்கள் வரக்கூடிய ஒரு காலகட்டமாக அமையும்.
எல்லாவிதமான வியாபாரமும் இப்போது கை கொடுக்கும்.
4,5,6,13,14,15,21,22 ஆகிய நாட்களில் பணம் வரும். 3-ம் தேதி காலை 8.27 முதல் 5-ம் தேதி காலை 7.47 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால்
முக்கிய முடிவுகள் எதையும் இந்த நாட்களில் எடுக்க வேண்டாம். மனம் ஒரு நிலையில்
இல்லாமல் சற்று எரிச்சலான ஒரு நிலையில் இருப்பீர்கள் என்பதால் எவரிடமும் வீண்
வாக்குவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.
No comments :
Post a Comment