Saturday, June 26, 2021

விருச்சிகம்: 2021 ஜூலை மாத ராசி பலன்கள்

 

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 8286 99 8888 

விருச்சிகம்:

மாதத்தின் பெரும் பகுதி நாட்கள் ராசிநாதன் செவ்வாய் ஒன்பதாமிடத்தில் நீச்சம் பெற்ற  நிலையில் இருந்தாலும் சுக்கிறனுடன் இணைந்து சுபத்துவமாக இருப்பதால் விருச்சிக ராசிக்கு இது கொரோனா தரும் சாதகமற்ற நிலைகளையும் மீறி நன்மைகளைத் தரும் மாதம்தான். சாப்ட்வேர், கணக்கு, ஊடகம், கலைத்துறை சம்மந்தப்பட்டவருக்கு இனிமேல் முன்னேற்றமான நிலைமைகள் இருக்கும். மூன்றாமிடம் சனியின் இருப்பால் பலம் பெற்று அமைவதால் தொழில், வேலை, வியாபாரம் போன்றவைகள் இனி சிறப்பாக நடைபெறும். அரசுப் பணியாளர்கள், மருத்துவம், விளையாட்டு, காவல்துறையினர், சிகப்பு நிறம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள், ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறையில் இருப்பவர்கள் நன்மைகளைப் பெறுவீர்கள்.

குறிப்பிட்ட ஒரு பலனாக எட்டாமதிபதி புதன் ராகுவுடன் இணைந்து பாபத்துவமாக இருப்பதால் எங்கும் எதிலும் மறைமுகமான எதிர்ப்புகள் இருக்கும். போலியாக சிரித்துப் பேசும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். நண்பனைப் போல சிரித்துப் பழகிய ஒருவர் துரோகியாக மாறலாம். ஜீவனாதிபதி சூரியன் வலுவாக இருப்பதால் ஓரளவு பணவரவு உண்டு. வெளிநாட்டில் இருந்து பணம் வரும். சகோதரர்களால் நன்மை உண்டு. தந்தைவழி உறவினர்கள் உதவுவார்கள். கணவன், மனைவி உறவும், வாழ்க்கைத்துணை வழியில் உதவிகளும் சுமாராகவே இருக்கும். பூர்வீகச் சொத்து சம்பந்தமாக வழக்குகளும், கோர்ட் கேஸ் போன்றவைகள் இருப்பவர்கள் வழக்கை முடிக்குமாறு அவசரப்பட வேண்டாம்.

ராசிநாதன் நேர்வலு இழப்பதால் வீண்பழி வரும் வாய்ப்பு இருக்கிறது. மனம் எப்போதும் ஒருவித குழப்பத்துடன் இருக்கும். வம்பு வழக்கு ஏதேனும் வரலாம் என்பதால் அனைத்து விஷயங்களிலும் யோசித்து செயல் படுவது நல்லது. போட்டி பந்தயங்களில் கலந்து கொள்ள வேண்டாம். அவைகளில் எதிர்பார்த்த பலன் கிடைப்பது கடினம். பங்குச் சந்தை வேண்டவே வேண்டாம். தேவையில்லாமல் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். கூடுமானவரை எல்லோரையும் அனுசரித்து போவது நல்லது. சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்றவைகளால் பாதிக்கப்பட்டவர்கள் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. முக்கியமாக கண் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். வெளிநாடு சம்பந்தமான முயற்சிகள் எடுப்பவர்களுக்கு விசா போன்றவைகள் ஆகஸ்டு மாதத்திற்கு பிறகு கை கொடுக்கும்.

4,6,7,8,12,14,15,24,26,29 ஆகிய நாட்களில் பணம் வரும். 8-ம்தேதி காலை 7.41 மணி முதல் 10 -ம்தேதி மாலை 6.37 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் எவருடனும் வீண் பேச்சுக்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. இந்த நாட்களில் கோபமும், எரிச்சலும் கலந்த உணர்வுகளில் இருப்பீர்கள்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

No comments :

Post a Comment