ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : +91 8286 99 8888
மீனம்:
பெரும்பாலான கிரகங்கள் மீனத்திற்கு நல்ல
பலனை தரக்கூடிய அமைப்பில்தான் இருக்கின்றன. லாபாதிபதி சனி எப்போதோ ஒருமுறை மட்டுமே
வரக்கூடிய பதினொன்றாமிடத்தில் இருக்கிறார். ஆனாலும் பெரிய நன்மைகள் எதுவும்
நடக்கவில்லை. சனிக்கு மந்தன் என்று பெயர். ஆகவே சனி மெதுவாகத்தான் நல்ல பலன்களைத்
தருவார். சனியின் நல்ல பலன்கள் கிடைப்பதற்கும் நீங்கள் பொறுத்துத்தான் ஆக
வேண்டும்.
இந்த மாதத்தில் சூரியன் உச்சமாக
இருக்கிறார். செவ்வாயும் குருவின் பார்வையில் வலுவாக இருக்கிறார். எனவே உங்களுக்கு
நல்ல மாதம்தான் இது. இளைய பருவத்தினருக்கு வேலையில் குறைகள் இருக்கும். அலுவலகத்தில் பெண்களின் கீழ் வேலை
பார்ப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். குறைகள் அனைத்தும் தெய்வ அருளால் தீரும்.
நடப்பவை அனைத்தும் உங்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும்
என்பதால் எதையும் முழுமனதுடன் ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கும்.
இதுவரை வாழ்க்கையில் நிலை கொள்ளாத இளைய
பருவத்தினருக்கு திருமணம், வேலை வாய்ப்பு, புத்திர பாக்கியம் போன்ற நல்ல பலன்கள்
நடக்கும். மூன்றில் இருக்கும் ராகுவால் சிலருக்கு வெளிமாநில, வெளிதேச மாற்றங்கள் இருக்கும். சிலர் நீண்ட தூர
பிரயாணங்களை செய்வீர்கள். அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். யோகக் கிரகங்கள் நல்ல
நிலையில் இருப்பதால் ஏற்கனவே நீங்கள் யோசனையின்றி அவசரப்பட்டு செய்த காரியங்கள்
அனைத்தையும் இந்த மாதம் சீர்தூக்கி முறைப்படுத்திக் கொள்ள முடியும். சிலருக்கு
பிள்ளைகள் விஷயத்தில் மனமகிழ்ச்சியான சுபகாரியங்கள் உண்டு சிலருக்கு குலதெய்வ, இஷ்டதெய்வ தரிசனம் கிடைக்கும்.
சொந்தத்தொழில் செய்பவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் சில
நன்மைகளும் எதிர்கால முன்னேற்ற விஷயங்களும் இருக்கும். கணவன்-மனைவிக்குள் இதுவரை
இருந்து வந்த பனிப்போர் விலகி இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொண்டு
ஒத்துழைக்க ஆரம்பிப்பீர்கள். என்றைக்கோ ஒருநாள் பிரதிபலன் பாராமல் நீங்கள்
ஒருவருக்கு செய்த உதவியால் இப்போது அவர் மூலமாக
நல்லபலன்கள் கிடைக்கும்.
2,5,11,13,15,21,22,24,25,28,30 ஆகிய
நாட்களில் பணம் வரும். 23 ம் தேதி இரவு 11.04 மணி முதல் 25 ம் தேதி இரவு 10.55 மணி வரை
சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம்.
யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
No comments :
Post a Comment