(புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம் மற்றும் ஹி, ஹீ, ஹ,
ட, டு, டே,
டோ ஆகிய
எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்.)
கடக ராசிக்காரர்களுக்கு பிறக்க இருக்கின்ற பிலவ தமிழ்ப் புத்தாண்டு நன்மைகளை அள்ளித் தரும் வருடமாக இருக்கும்.
புது வருட ஆரம்பத்தில், மறைமுகமான தன லாபங்களைக் கொடுக்கக் கூடிய ராகு பதினோன்றாமிடத்தில் இருப்பது உங்களுக்கு மேன்மைகளைத் தருகின்ற ஒரு
அமைப்பாகும். உங்களின் யோகாதிபதியான குரு வருட பிற்பகுதியான நவம்பர் மாதம் எட்டாமிடத்திற்கு
மாறி இரண்டாம் வீட்டைப் பார்க்கப் போவது பொருளாதார ரீதியில் நல்ல பலன்களைத் தரும்.
எனவே எப்படிப் பார்த்தாலும் பிறக்க இருக்கும் தமிழ்ப் புதுவருடம் கடகத்திற்கு நன்மைகளை
மட்டுமே தரும்.
ராகு நன்மைகளைத் தரும் இடமாக 3, 6, 11-ம் இடங்கள் நம்முடைய கிரந்தங்களில்
குறிப்பிடப்பட்டுள்ளன. இம்முறை ராகு பகவான் உங்கள் ராசிக்கு 11-ம் வீட்டில் இருப்பதால் ராகுவின் சிறப்புக்களான வெளிமாநிலம், வெளிநாடு, இயங்கிக் கொண்டே இருக்கும் பொருட்கள், அந்நியமொழி, இன,
மதம் போன்ற
விஷயங்களில் லாபங்கள் இருக்கும்.
இந்த அமைப்பின் மூலம் இதுவரை வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்பில் செட்டில்
ஆகாத கடக ராசிக்காரர்கள் மேம்பட்ட வருமானங்களைத் தரக்கூடிய வகையில் நிரந்தர
அமைப்புகளை பெறுவீர்கள். மாதம் பிறந்தால் நிரந்தரம் வருமானம் உண்டு என்ற அமைப்பு
இந்த வருடம் ஆரம்பிக்கும்.
உங்களில் சிலருக்கு இதுவரை கை கொடுக்காத
சொந்தத் தொழிலும், வியாபாரமும் இனிமேல் லாபகரமாக நடக்கத்
துவங்கும். வேலை இடங்களில் இதுவரை இருந்து வந்த சிக்கல்களும், எதிர்ப்புகளும் பிறக்க இருக்கும் புத்தாண்டு முதல் விலக துவங்கும்.
ஏழாமிடத்தில் இருக்கும் சனியால் கடந்த ஒரு
வருடமாக குடும்ப விஷயத்தில் தொல்லைகளையும்,
மன அழுத்தங்களையும், துயரங்களையும் அடைந்தவர்களுக்கு விடிவுகாலம் ஏற்பட்டு இனிமேல் குடும்பத்தின்
மூலம் நல்ல விஷயங்கள் இருக்கும்.
ஏற்கனவே நடந்த திருமணத்தின் மூலம்
சிக்கல்களை சந்தித்து நீதிமன்ற வழக்கு போலீஸ் என்று அல்லாடிக்
கொண்டிருப்பவர்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்து வழக்கு ஒரு முடிவுக்கு வரும்.
இந்தக் காலகட்டத்தில் இரண்டாவது திருமணமும்
அமைந்து அந்த வாழ்க்கை நல்லபடியாகவும்,
நீடித்தும்
இருக்கும்.
நவம்பர் மாதம் நடக்க இருக்கும்
குருப்பெயர்ச்சிக்கு பிறகு குரு மறைமுக லாபம் தரும் எட்டாமிடத்திற்கு மாறுவதால்
குருவாலும் புத்தாண்டின் பிற்பகுதியில் உங்களுக்கு நன்மைகள் இருக்கும்.
தொழில் செய்பவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் திருப்புமுனையான நல்ல சம்பவங்கள் இந்த வருடம் நடக்க
இருக்கிறது. தொழிலை விரிவுபடுத்தும் எண்ணங்கள் ஈடேறும். தொழில்,
வியாபாரம்
போன்றவைகள் முன்னேற்ற வழியில் இருக்கும். அதேநேரத்தில் வேலைப்பளுவும் அதிகமாக இருக்கும்.
காவல்துறை, வனத்துறை போன்ற
சீருடை அணிந்து வேலை செய்யும் துறையினருக்கு இந்த வருடம் பதவிஉயர்வு கிடைக்கும். சம்பள உயர்வு, இதர படிகள் போன்றவைகளும் இருக்கும். அரசு தனியார்துறை ஊழியர்களுக்கு ‘இதர
வருமானங்கள்’ சிறப்பாக சொல்லிக் கொள்ளும்படி இருக்கும். தொழிலாளர்களுக்கு வேலைப்பளு
குறைந்து சம்பளஉயர்வு, பதவி உயர்வு போன்றவைகள் கிடைக்கும்.
தொழிற்சங்கங்களில் பதவியில் இருப்பவர்கள் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள்
தீரும். கணவன் மனைவி உறவு நல்லபடியாக மாறும். கருத்து வேறுபாடு, குடும்ப பிரச்னைகள் அல்லது வேலை விஷயமாக பிரிந்து இருந்த தம்பதியினர்
ஒன்று சேர்வார்கள். கணவன் ஓரிடம், மனைவி வேறிடம் என்று வேறு வேறு இடங்களில்
பணிபுரிந்தவர்களுக்கு ஒரே இடத்தில் பணிமாறுதல் கிடைத்து குடும்பம் ஒன்று சேரும்.
கூட்டுத்தொழில் ஆரம்பிக்க உகந்த நேரம்
இது. தொழில் விரிவாக்கங்கள் பலன் தரும். சுயதொழில் செய்வோருக்கு எடுக்கும்
முயற்சிகள் கை கொடுக்கும். பொருளாதார நிலை மிகவும் மேம்பாடானதாகவும் சரளமான பணவரவு
இருந்து கொண்டே இருப்பதாகவும் அமையும். தொட்டது துலங்கும். சரியான வருமானம் இன்றி
பற்றாக்குறையால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல வருமானம் இருக்கும்.
மத்திய மாநில நிர்வாகப் பதவிகளுக்கான ஐ.
ஏ. எஸ், குரூப்ஒன் தேர்வுகளுக்கு படிப்பவர்களுக்கும்
ஏற்கனவே எழுதி முடிவுகளுக்கு காத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல செய்திகள்
கிடைக்கும். இதுவரை வெளிமாநில வேலைக்குச் செல்ல இருந்த தடைகள் விலகும்.
பிற,
இன, மொழி மதக்காரர்கள் உங்களிடம் நேசமாக இருப்பார்கள். வெளி மாநிலத்தவர்கள்
நண்பர்களாகக் கிடைப்பார்கள். அவர்களால் நன்மைகள் உண்டாகும். தூரத்தில் பணியிடம் அமையும். பிரயாணங்களால்
உற்சாகமாக இருப்பீர்கள். வருடத்தின் பிற்பகுதியில் மிகவும் நல்ல பலன்கள்
உங்களுக்கு நடக்கும்.
இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் வருட முற்பகுதியில்
மிகவும் யோகமான நிகழ்ச்சிகளை சந்திப்பீர்கள். எதிர்கால வாழ்க்கைக்கு அஸ்திவாரம்
போடும் காலம் இது. எதிர்காலத்தில் நீங்கள்
எந்தத் துறையில் இருக்கப் போகிறீர்கள் என்பதை இந்த வருடம் நிர்ணயிக்கும் என்பதால்
மிகவும் பயனுள்ள வருடமாகும் இது.
கூட்டுத் தொழிலில் இதுவரை இருந்த வந்த
கருத்து வேறுபாடுகளும், மந்தமான நிலைமையும் மாறி தொழில்
நல்லபடியாக நடக்கும். நண்பர்களும், பங்குதாரர்களும் உதவிகரமாக இருப்பார்கள்.
தந்தையின் ஆதரவு கிடைக்கும். தந்தை வழி உதவிகள் நன்றாக இருக்கும். அப்பா வழி
சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டு. தர்ம காரியங்கள் செய்ய முடியும். அறப்பணிகளில்
ஈடுபட்டு நல்ல பெயர் வாங்குவீர்கள்.
புனித யாத்திரைகள் இப்போது செல்ல
முடியும். வயதானவர்கள் காசி, கயா யாத்திரைகள் செல்வீர்கள். இஸ்லாமியர்களுக்கு
புனித ஹஜ் பயணம் செல்லும் வாய்ப்பை இறைவன் அருளுவார். பெரிய மகான்களின் தரிசனம்
கிடைக்கும். ஞானிகளின் ஜீவ சமாதிக்கு சென்று அவர்களின் அருளாசி பெறும் பாக்கியம்
கிடைக்கும்.
பொருளாதார சிக்கல்கள் தீரும். பூர்வீகச்
சொத்தில் இதுவரை இருந்து வந்த வில்லங்கம் தீர்ந்து உங்கள் பங்கு உடனே கிடைக்கும்.
பங்காளித் தகராறுகள் சுமுகமாகத் தீர்த்து வைக்கப்படும். கூட்டுக் குடும்பத்தில்
இருப்பவர்கள் தனிக்குடித்தனம் போக வேண்டிய சூழ்நிலை வரலாம்.
பெண்களுக்கு நல்லபலன்கள்தான் அதிகம் இருக்கும்.
குடும்பத்தலைவியாக இருக்கும் பெண்களுக்கு அதிகமாக நன்மைகள் நடைபெறும்.
குடும்பத்தில் செலவுகள் அதிகமாக இருக்கும்
என்பதால் இருக்கும் சேமிப்பு செலவழிந்து உங்கள் பாடு திண்டாட்டமாகலாம். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு இதுவரை தள்ளிப்
போய் இருந்த பதவிஉயர்வும், சம்பளஉயர்வும் தற்போது கிடைக்கும்.
அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். உங்களுடைய வேலைத்திறன் முதலாளியாலோ
அல்லது மேலதிகாரிகளாலோ மதிக்கப்படும்.
உங்களில் சிலர் தேவையற்ற விஷயங்களில்
மாட்டிக் கொண்டு பெயரைக் கெடுத்துக் கொள்வீர்கள். தேவையற்றவர்களுக்கு ஜாமீன்
போடுவது மற்றும் எவருக்காகவும் கியாரண்டி தருவது இப்போது கூடாது. அதனால்
சிக்கல்கள் வரலாம். பல நாள் சேர்த்து வைத்த நற்பெயர் நிமிட நேரத்தில் கெடக்கூடும் என்பதால்
கவனமாக இருங்கள்.
நிலம் வீடு போன்றவைகளை வாங்கும்போது
பொறுமை தேவை. அவசரம் வேண்டாம். வில்லங்கம் சரியாகப் பார்க்கவும். வில்லங்கம் உள்ள
இடத்தை தெரியாமல் வாங்கிவிட்டு பின்னால் சிரமப்பட வாய்ப்பிருப்பதால் ஆரம்பத்திலேயே
கவனமாக இருங்கள்.
ரியல் எஸ்டேட், வீடு கட்டி விற்போர், திரவம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள், காய்கறி மொத்த வியாபாரம், வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதி, சிகப்பு மற்றும் வெள்ளை நிறம் சம்பந்தப் பட்ட தொழில்
செய்பவர்களுக்கு பட்ஜெட்டை மீறி
செலவுகளும் விரயங்களும் இருக்கும் என்றாலும் நல்ல வருமானம் வந்து அனைத்தையும் ஈடு
கட்டும்.
மொத்தத்தில் கடகத்திற்கு அனைத்து
விஷயங்களிலும் நன்மைகளை மட்டுமே தரக்கூடிய வருடமாக இந்த வருடம் அமையும்.
No comments :
Post a Comment