(அவிட்டம் 3, 4ம் பாதங்கள், சதயம்,
பூரட்டாதி, 1, 2,
3ம் பாதங்கள் ஆகிய
நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மற்றும் கு,
கே, கோ, ஸ,
ஸி, ஸீ, ஸோ,
த ஆகிய
எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்.)
கும்பத்திற்கு பிறக்க இருக்கின்ற பிலவ
தமிழ்ப் புத்தாண்டு விரயங்களைத் தருகின்ற
ஒரு ஆண்டாக இருக்கும். வருமானம் வந்தாலும் அதை நீங்கள் சேமிக்க முடியாமல் வீணடிப்பீர்கள்.
இந்த புத்தாண்டில் கும்ப ராசிக்காரர்களுக்கு
திருமணம், வீடு கட்டுதல், குழந்தைகளுக்கான சுபச் செலவுகள் போன்ற விஷயங்களில் விரையங்கள் இருக்கும்.
இதுவரை மகன்-மகளுக்கு திருமணம் போன்ற சுப காரியங்கள் நடத்த முடியாதவர்கள் இப்போது
நல்லவிதமாக அதனை நடத்தி முடிப்பீர்கள்.
கடந்த ராகு-கேது பெயர்ச்சியின் மூலம் ஐந்தில்
இருந்து இதுவரை உங்களுடைய பொருளாதார வளர்ச்சியை தடுத்து கொண்டிருந்த ராகு உங்களின்
ராஜ யோகாதிபதியான சுக்கிரனின் நான்காம் இடத்திற்கு மாறியிருப்பது உங்களுக்கு
நன்மையை தரும் விஷயமாக இருக்கும்.
இந்த பெயர்ச்சியின் மூலம் இதுவரை வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் தகுந்த
வருமானம் இன்றியும், உழைப்புக்கு ஏற்ற ஊதியமின்றியும்
பொருளாதார பின்னடைவு சந்தித்து கொண்டிருந்த கும்பத்தினர் அவை நீங்கி திருப்தியான
வருமானங்களை பெறுவீர்கள். இந்த வருடம் சம்பாதிக்க இருக்கும் வருமானத்தை
சேமிக்கத்தான் முடியாதே தவிர தாராளமாக செலவு செய்வதற்கான வருமானம் இருக்கும்.
நான்கு, பத்தில் இருக்கும் சுபத்துவ
ராகுகேதுக்களாலும், அதனையடுத்து நவம்பர் மாதம் ராசிக்கு நிலையாக
மாற இருக்கும் குருபகவானாலும் உங்களுக்கு வேலை,
தொழில் நிலைகளில் இந்த
வருட இறுதியில் நல்ல மாற்றங்கள் இருக்கும்.
அதேநேரத்தில் அடுத்த வருடம் உங்களுக்கு
ஜென்மச் சனி நிலை ஆரம்பிப்பதால் வேலை, தொழில், வியாபாரம் போன்ற
ஜீவன அமைப்புகளில் கண்ணும், கருத்துமாக அனைத்திலும் அக்கறையுடன் இருக்க
வேண்டியதும் அவசியம்.
தற்போது உங்களுக்கு நடப்பது விரயச்சனிதான்
என்பதால் சனியின் பாதிப்புகள் இந்த ஆண்டு பெரிய அளவில் இருக்காது. ஆயினும் “அரசனை
நம்பி புருஷனை கைவிடும்” கதையாக சில விஷயங்கள் கும்ப ராசிக்கு இப்போது நடக்கும்
என்பதால் முப்பது வயதுகளில் இருக்கும் இளைய பருவத்தினர் வேலை விஷயங்களில் கவனமுடன்
இருக்க வேண்டும்.
இளையவர்களின் தெளிவான சிந்தனைகளுக்கு
முட்டுக்கட்டை போட்டு உங்களுடைய மனதை மாற்றி இருக்கும் வேலையை பறிக்க சனி
முயற்சிப்பார் என்பதால் எதிர்காலத் திட்டமிடுதல்களில் கவனமுடன் இருக்கவேண்டியது
அவசியம்.
புது வருடத்தின் கடைசி மாதங்களிலும்
அடுத்த வருட ஆரம்பத்திலும் சனியின் தாக்கம் கும்பத்திற்கு இருக்கும் என்பதால்
முன்னெச்சரிக்கையாக இந்த வருடமே நீங்கள் புதிய முயற்சிகள் எதையும் தொடங்காமல்
இருப்பது நல்லது.
முப்பது வயதுகளில் இருப்பவர்கள் இந்த
வருடமும் அடுத்த வருடமும் செட்டிலாக விடாமல் அலைக்கழிக்க வைக்கப் படுவீர்கள்.
குறிப்பாக பொருளாதார சிக்கல்கள், பணவரவில் திருப்தியின்மை, பாக்கெட்டில் பணம் வைக்க முடியாத நிலை போன்றவைகள் இருக்கும்.
பிறந்த ஜாதகத்தில் யோகவலுவுள்ள
தசாபுக்திகள் நடப்பவர்களுக்கு சாதகமற்ற
பலன்கள் குறைவாக இருக்கும். ஆயினும் சனி என்பது உங்களுக்கு துன்பங்கள் என்ற
பெயரில் அடுத்தவர்களிடம் எப்படி ஏமாறாமல் இருப்பது மற்றும் எப்படித் தொழில்
நடத்துவது. போன்ற வாழ்க்கை அனுபவங்களை கற்றுத்தரும் என்பதால் இளைய பருவத்தினரைப்
பொருத்தவரை இந்த வருடம் அனுபவங்களைக் கற்றுக் கொள்ளும் வருடமாக இருக்கும்.
தொழில் விரிவாக்கங்கள் மற்றும் புதிய
தொழில் ஆரம்பிப்பதை நன்கு யோசித்து செய்யுங்கள். புதிதாக எந்த ஒரு செயலையும்
ஆரம்பிக்கும் முன் அனைவரையும் கலந்து ஆலோசித்து செய்யவும். புதிய வீடு வாங்குவது
அல்லது இருக்கும் வீட்டை விரிவாக்குவது அல்லது புதிதாக சொத்து வாங்குவது
போன்றவைகளில் மிகுந்த கவனம் தேவைப்படும்.
நேர்மையற்ற செயல்கள் மற்றும் சட்டத்திற்கு
புறம்பான தொழில்கள் போன்றவற்றில் தற்போது ஆர்வம் காட்டாதீர்கள். பங்குச்சந்தை
யூகவணிகம் போன்றவைகளும் இப்போது கை கொடுப்பது கடினம்.
எதிலும் அகலக்கால் வைக்க வேண்டாம்.
புதிதாக எதையும் ஆரம்பிக்காதீர்கள். இருப்பதை கண்ணும் கருத்துமாக கவனிக்க வேண்டிய
வருடம் இது. யாரையும் நம்பாதீர்கள். குறிப்பாக தெரியாத தொழிலில் இறங்க வேண்டாம்.
இனிமேல் கற்றுக்கொண்டு செய்ய வேண்டிய தொழில் இப்போது கை கொடுக்காது.
பிள்ளைகள் விஷயத்தில் செலவுகள் இருக்கும்.
படிப்புச்செலவு மற்றும் அவர்களுடைய எதிர்கால வாழ்க்கைக்கான அடித்தளச்செலவுகள்
போன்றவைகளுக்காக கையில் இருக்கும் சேமிப்பை நீங்கள் செலவிட வேண்டியது இருக்கும்.
அரசியல்வாதிகளுக்கு மறைமுக எதிரிகள்
பின்னால் குழி பறிப்பார்கள் என்பதால் பேசும்போது வார்த்தைகளில் கவனமாக இருங்கள்.
பொது வாழ்க்கையில் உள்ள சிலருக்கு அதிகாரப் பதவிகள் தேடி வரும். கூடவே உங்கள்
விரோதிகளும் உங்களை எதில் சிக்க வைக்கலாம் என்றும் அலைவார்கள்.
பத்திரிக்கை, ஊடகங்கள் போன்ற துறையில் இருப்பவருக்கு அலைச்சலும், வேலைப்பளுவும் அதிகமாக இருக்கும். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்க
சிரமங்கள் இருக்கும். கலைஞர்கள் வேலை செய்த பணத்தை பெற போராட வேண்டி இருக்கும்.
பெண்களுக்கு பணிச்சுமை அதிகமாகும்.
அலுவலகத்திலும் வேலை செய்து வீட்டிலும் நீங்களே வேலை செய்ய வேண்டி இருக்கும்.
உங்களை புரிந்து கொள்ளாத மேலதிகாரி மாற்றலாகி வந்து தொல்லைகளை கொடுப்பார். ஆனாலும்
வீட்டில் பிரச்னை எதுவும் இருக்காது.
எல்லாவற்றிலும் இப்போது உங்களுக்கு
சலிப்பு வரும் என்பதால் யாரையும் நம்பி உங்கள் மனதில் உள்ளவைகளையோ குடும்ப
விஷயங்களையோ பகிர்ந்து கொள்ள வேண்டாம். இந்த காலகட்டத்தில் எவருமே உங்கள்
நம்பிக்கைக்கு பாத்திரமாக இருக்க மாட்டார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
பள்ளி,
கல்லூரி செல்லும்
வயதில் பிள்ளைகளை வைத்திருப்பவர்கள் மக்களின் மேல் சற்றுக் கவனம் செலுத்த வேண்டிய
வருடம் இது. பிள்ளைகளின் கவனம் படிப்பிலிருந்து விலகி காதல், கத்திரிக்காய் என்று வேறு பக்கம் திரும்புவதற்கு வாய்ப்பிருக்கிறது. வேறு
ஏதாவது வம்புகளில் சிக்கி உங்களை மனக்கஷ்டத்திற்கு ஆளாக்குவார்கள் என்பதால்
அவர்களை கண்காணிப்பது நல்லது.
மாணவர்கள் படிப்பில் கவனமாக இருங்கள்.
இந்த வருடம் அரியர்ஸ் வரும் வாய்ப்பு இருக்கிறது. காலேஜிற்கு கட் அடிக்காதீர்கள்.
காலேஜ் உங்களைக் கட் அடித்து விடலாம். இளையபருவத்தினர் தங்களின் வாழ்க்கைத்
துணைவரை இந்தவருடம் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கும். காதல் வரும் வருடம் இது.
அந்தக் காதலினால் அழுகையும் வரும் வருடம் இது.
ராகு,
கேதுக்கள் நல்ல
நிலயில் இருப்பதால் சிலர் வெளிநாட்டு தொடர்பால் நன்மை அடைவீர்கள். வெளிநாடு
போகவும் வாய்ப்பு இருக்கிறது. வேற்று மதத்தினர் உங்களுக்கு உதவுவார்கள். தந்தைவழி
உறவில் மிகவும் நல்ல பலன்கள் இருக்கும். கணிதம் சாப்ட்வேர் தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு
ஏதேனும் பரிசு அல்லது விருது கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. வேலையில்
பாராட்டப் படுவீர்கள்.
மறைமுகமான வழிகளில் சிலருக்கு வருமானம்
உண்டு. குறிப்பாக ரியல் எஸ்டேட் மற்றும் வீடு கட்டித் தரும் புரமோட்டர்கள்
போன்றவர்களுக்கு தொழிலில் நல்ல மாற்றங்கள் இருக்கும். கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள்.
நிறைய செலவுகளும் விரயங்களும் இருப்பதை கிரகங்கள் காட்டுகின்றன. வருமானத்தை
சேமிக்க முயற்சி செய்யுங்கள்.
அனைத்து சோதனைகளையும் வெற்றியாக, சாதனைகளாக மாற்றக்கூடியவர் கும்பத்தினர் என்பதாலும் கும்ப ராசிக்கு
சனிபகவானே அதிபதி என்பதாலும் மற்ற ராசிக்காரர்களுக்கு தரும் தொல்லைகளை உங்களுக்கு
சனி தர மாட்டார். கையில் இருக்கும் சேமிப்பை சனி கரைய வைக்கும் அவ்வளவுதான்.
No comments :
Post a Comment