Saturday, November 28, 2020

கடகம்: 2020 டிசம்பர் மாத ராசி பலன்கள்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 8286 99 8888

கடகம்:

டிசம்பர் மாதம் சனி,குரு இருவரும் ராசியைப் பார்க்கும் நிலையில் ஏழாமிடத்தில் இருக்கிறார்கள். இது கடகத்திற்கு நன்மைகளை தருகின்ற மாதம். ஏழாமிட சனியால் பாதிக்கப்பட்ட இளைய பருவத்தினருக்கு இனிமேல் முன்னேற்றங்கள் இருக்கும். யோகாதிபதி குருவின் நீச்ச பங்க வலுவால் மதிப்புக் கூடும்படியான நிகழ்வுகளும், சந்தோஷம் தரக்கூடிய சம்பவங்களும் உண்டு. அனைத்தும் கிடைக்கும் மாதம் இது. குறிப்பாக வெளிநாட்டில் இருக்கும் கடகத்தினருக்கு திருப்புமுனையான சம்பவங்கள் உண்டு. ஏழில் உள்ள சனி சுபத்துவம் அடைவது மிகப்பெரிய நிம்மதியை உங்களுக்குத் தரும்.

ஏழாமிடத்தில் உள்ள கிரகங்களால் வாழ்க்கைத் துணை, நண்பர்கள், பங்குதாரர்கள் விஷயத்தில் லாபங்களும், நன்மைகளும் இருக்கும். அதேநேரம் கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வரும். மனைவியின் பேச்சை கேட்பதனால் ஒன்றும் குறைந்து விடாது என்பதால் முக்கியமான விஷயங்களில் தம்பதிகள் இருவரும் கருத்தொற்றுமையோடு முடிவெடுப்பது நல்லது. குரு நீசமாவதால் தந்தை வழி உறவினர்களிடம் சற்றுத் தள்ளி இருங்கள். அப்பாவின் ஆதரவு கிடைப்பது கஷ்டம். மனதில் நினைப்பதை பெரியவர்களிடம் சரியாக வெளிப்படுத்த முடியாமல் அவர்கள் தவறாக புரிந்து கொண்டு கருத்து வேற்றுமைகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

இதுவரை தொழில் நிலைமை சரி இல்லாமல் இருந்தவருக்கும், வேலையில் பிரச்னை உள்ளவருக்கும் இனிமேல் பிரச்னைகள் இல்லாமல் அனைத்தும் நல்லபடியாக நடைபெறும். குடும்பாதிபதி வலுப்பெற்று இருப்பதால் குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். நீண்டநாள் நடக்காமல் இழுத்துக்கொண்டு இருந்த விஷயங்கள் முடிவுக்கு வரும். சிலருக்கு வேலைமாற்றம், தொழில் மாற்றம், வீடுமாற்றம் என நல்ல மாற்றங்கள் நடக்கும். இளைய சகோதர, சகோதரிகள் விஷயத்தில் நல்லவைகள் நடக்கும். மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஊக்கத்துடன் செயல்படுவீர்கள். அந்நிய இன,மத,மொழிக்காரர்கள் உதவுவார்கள். நெருங்கிய சொந்தத்தால் வம்புச் சண்டைகள் உண்டு.

2,3,8,9,12,13,18,19 ஆகிய நாட்களில் பணம் வரும். 19-ம் தேதி காலை 7.16 முதல் 21-ம் தேதி மாலை 4.29 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட தினங்களில் புதிய முயற்சிகள் எதையும் துவங்காமல் இருப்பது நல்லது. இந்த நாட்களில் மனம் அலைபாய்ந்து கொண்டிருக்கும் என்பதால் வாழ்க்கையை பாதிக்கும் முக்கிய முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

No comments :

Post a Comment