Saturday, September 26, 2020

மகரம்: 2020 அக்டோபர் மாத ராசி பலன்கள்

 

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 8286 99 8888

மகரம்:

அடுத்த மாதம் முதல் உங்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் சனி சுபத்துவம் அடையப் போவதால் இனிமேல் இளைய பருவ மகரத்தினர் வாழ்க்கையில் நல்ல விதமாக செட்டில் ஆகப் போகிறீர்கள். அவரவர்களின் வயது, தகுதி, இருப்பிடத்திற்கு ஏற்றபடி சனியின் கொடுமைகள் விலகும். இனிமேல் புது மனிதன் ஆகப் போகிறீர்கள். கஷ்டங்கள் அனைத்தும் தீரப் போகிறது. மகர ராசி இளைஞர்கள் அதிகமான கெடுபலன்களை சந்தித்து கொண்டிருக்கிறீர்கள். இளம் வயதினர் தன்னம்பிக்கை இழக்கும் அளவிற்கு சோதனைகள் இருக்கின்றன. உங்களில் உத்திரம் மிகுந்த மன அழுத்ததில் இருக்கிறது.  துன்பங்களை அனுபவிக்கும்  அனைவரும் வெகு சீக்கிரம் அதிலிருந்து மீண்டு வருவீர்கள்.

அக்டோபர் மாதம் எவ்வித கெடுபலன்களும் நடக்காத மாதமாக இருக்கும். அடுத்த  மாதம் முதல் ராசியில் குரு அமர்வது அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்கும் வலிமையை தரும். கடந்த ஐந்து வருடங்களாக வாழ்க்கையில் சிக்கல்களையும், பிரச்சனைகளை மட்டுமே சந்தித்துக் கொண்டிருப்பவர்களுக்கு தீர்வுக்கான பாதைகள் தெரிய ஆரம்பிக்கும். நிலையான உத்தியோகம் அமையும். பெண்களுக்கு சிறப்புக்கள் தேடி வரும். நான்குபேர் கூடும் இடத்தில் மரியாதையுடன் நடத்தப் படுவீர்கள் கெடுபலன்கள் இனிமேல் இருக்காது. எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடிய சில விஷயங்களை இப்போது செய்வீர்கள்.

நீண்டநாள் பிரச்னைகள் முடிவுக்கு வரும். எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும். குடும்பத்திலும் சந்தோஷமான நிகழ்வுகள் இருக்கும். இந்த மாதம் முழுவதும் நல்லபலன்கள் மட்டும்தான் இருக்கும். ஒரு சிலரின் கணவருக்கோ மனைவிக்கோ முக்கியமான விஷயங்களில் எதிர்பாராத நன்மைகள் இருக்கும். முயற்சி ஸ்தானம் வலுப் பெறுவதால் இதுவரை இருந்து வந்த தன்னம்பிக்கை இல்லாத நிலை உங்களை விட்டு விலகும். அனைத்து விஷயங்களிலும் விடாமுயற்சியுடன் இறங்கி சாதித்து காட்டுவீர்கள். ஒரு சிலர் எடுத்துக் கொண்ட காரியங்களை நல்ல விதமாக முடித்து பெயர் எடுப்பீர்கள். செவ்வாய் நல்லநிலையில் இருக்கும் அடுத்த சில வாரங்களில் உங்களின் நீண்டநாள் எண்ணங்களையும் லட்சியங்களையும்  நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

1,2,3,10,11,12,20,23 ஆகிய நாட்களில் பணம் வரும். 13-ம் தேதி அதிகாலை 0.29 முதல் 15-ம் தேதி அதிகாலை 2.02 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் எந்த ஒரு ஆரம்பங்களையும் செய்ய வேண்டாம். புதிதாக ஒருவரை அறிமுகப்படுத்தி கொள்வது போன்ற விஷயங்களை இந்த நாட்களில் தள்ளி வைக்கவும்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

No comments :

Post a Comment