ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : +91 8286 99 8888
மிதுனம்:
அக்டோபர் மாதம் பெரும்பகுதி நாட்கள் ராசிநாதன் புதன் தனது நண்பரான சூரியனுடன் இணைந்து நட்பு நிலையிலும் கூடுதலாக பரிவர்த்தனை அமைப்பிலும் இருக்கிறார். இதன் மூலம் புதன் மறைமுக உச்ச நிலையை அடைவதால் மிதுனம் நன்மை பெறும். அக்டோபர் மிதுனத்திற்கு நன்மைகளை தருகின்ற மாதம். அஷ்டமச் சனியால் துன்பப்படும் இளைய பருவத்தினருக்கு இனிமேல் முன்னேற்றங்கள் இருக்கும். ராசிநாதனின் வலுவால் மதிப்புக் கூடும்படியான நிகழ்வுகளும், சந்தோஷம் தரக்கூடிய சம்பவங்களும் உண்டு. அனைத்தும் கிடைக்கும் மாதம் இது. குறிப்பாக வெளிநாட்டில் இருக்கும் மிதுனத்தினருக்கு திருப்புமுனையான சம்பவங்கள் உண்டு. எல்லாவற்றையும் விட மேலாக இன்னும் சில வாரங்களில் குருபகவான் அஷ்டமச் சனியாக இருக்கும் சனியுடன் இணையப் போவது உங்களுக்கு மிகப்பெரிய நிம்மதியை தரும்.
சுக்கிரன் நீச்ச பங்க நிலையில்
இருப்பதால் வாழ்க்கைத் துணை, நண்பர்கள், பங்குதாரர்கள்
விஷயத்தில் லாபங்களும், நன்மைகளும் இருக்கும். அதேநேரம்
கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வரும். மனைவியின் பேச்சை கேட்பதனால்
ஒன்றும் குறைந்து விடாது என்பதால் முக்கியமான விஷயங்களில் தம்பதிகள் இருவரும்
கருத்தொற்றுமையோடு முடிவெடுப்பது நல்லது. சூரியன் நீசமாவதால் தந்தை வழி
உறவினர்களிடம் சற்றுத் தள்ளி இருங்கள். அப்பாவின் ஆதரவு கிடைப்பது கஷ்டம். மனதில்
நினைப்பதை பெரியவர்களிடம் சரியாக வெளிப்படுத்த முடியாமல் அவர்கள் தவறாக புரிந்து
கொண்டு கருத்து வேற்றுமைகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
இதுவரை தொழில் நிலைமை
சரி இல்லாமல் இருந்தவருக்கும், வேலையில் பிரச்னை உள்ளவருக்கும் இனிமேல்
பிரச்னைகள் இல்லாமல் அனைத்தும் நல்லபடியாக நடைபெறும். புதன் வலுப்பெற்று இருப்பதால்
குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். நீண்டநாள் நடக்காமல் இழுத்துக்கொண்டு
இருந்த விஷயங்கள் முடிவுக்கு வரும். சனி குருவால் சுபத்துவம் அடையப் போவதால் சிலருக்கு
வேலைமாற்றம், தொழில் மாற்றம், வீடுமாற்றம்
என நல்ல மாற்றங்கள் நடக்கும். இளைய சகோதர, சகோதரிகள்
விஷயத்தில் நல்லவைகள் நடக்கும். மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஊக்கத்துடன்
செயல்படுவீர்கள். அந்நிய இன,மத,மொழிக்காரர்கள்
உதவுவார்கள். நெருங்கிய சொந்தத்தால் வம்புச் சண்டைகள் உண்டு.
2,4,5,8,9,10,18,19
ஆகிய நாட்களில் பணம் வரும். 23 -ம்தேதி காலை 7.02 முதல் 25-ம் தேதி மதியம் 3.26
வரை சந்திராஷ்டமம் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் அனைத்தையும்
தவிர்ப்பது நல்லது. சந்திரன் எட்டில் இருக்கும் நாட்களில் மனம் ஒரு நிலையில்
இருக்காது என்பதால் இந்த நாட்களில் எவரிடமும் வாக்குவாதம் தவிர்ப்பதும் நல்லது.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
No comments :
Post a Comment