ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 9768 99 8888
கோவிந்தராஜ்,
காடையாம்பட்டி.
கேள்வி:
எனக்கு எழுபது வயதாகிறது. முப்பது வருடங்களுக்கு முன்பு ஜாதகம் பார்ப்பது
அரிதாக இருந்தது.
பெயர் பொருத்தம் மட்டுமே பார்த்து திருமணம் செய்தார்கள். ஆனால்
இப்போது ஜாதகத்தில் செவ்வாய்தோஷம்,
நாகதோஷம் என்று பெரும்பாலான ஜோதிடர்கள் சொல்கிறார்கள். பொருத்தம்
பார்க்கும்போது ஆணுக்கும்,
பெண்ணுக்கும் நாகதோஷம், செவ்வாய்தோஷம் இருந்தால் மட்டுமே திருமணம் செய்ய வேண்டும் என்றும்
சொல்கிறார்கள். சுத்த
ஜாதகத்திற்கு சுத்த ஜாதகம்
மட்டும்தான் திருமணம் செய்ய வேண்டும் என்றும், தோஷமுள்ள ஜாதகம் என்றால் அதேபோன்ற ஜாதகத்தை தான் பார்க்க வேண்டும் என்றும் இப்போதைய
ஜோதிடர்கள் சொல்கிறார்கள்.
இப்படித்தான் செய்ய வேண்டுமா?
இது உண்மைதானா?
ராகு-கேதுக்கள் லக்னம், 2, 7,
8-ல் இருந்தால் தோஷம் என்றும், செவ்வாய் 2, 4,
7, 8, 12-ல்
இருந்தால் செவ்வாய் தோஷம் என்றும் சொல்கிறார்கள். நாக தோஷம் என்றால் என்ன? செவ்வாய் தோஷம் என்றால் என்ன என்று தாங்கள் விளக்கம்
அளித்தால் எங்களைப்
போன்ற லட்சக்கணக்கான வாசகர்கள் தெளிவு பெறுவார்கள். இத்துடன் என் மகன் வழிப் பேரன் மற்றும் மகள் வழிப்பேத்தியின் ஜாதகத்தை அனுப்பி இருக்கிறேன். இதில் ஒன்று சுத்த ஜாதகம், இன்னொன்று நாகதோஷமுள்ள ஜாதகம் எனவே திருமணம் செய்யக் கூடாது என்று இங்குள்ள ஜோதிடர்கள் சொல்கிறார்கள். தங்களது மேலான கருத்தை எதிர்பார்க்கிறேன்.
பதில்:
(ஆண் 17-10- 1992 மாலை
4-11 சேலம், பெண் 16-8- 2003 இரவு 11-45 ஈரோடு)
ஜோதிடம் பார்ப்பது சென்ற தலைமுறையில் கொஞ்சம்
எளிதாக இருந்தது என்பது உண்மைதான். நீங்கள்
குறிப்பிடும் செவ்வாய் தோஷம், நாகதோஷம் பற்றிய விளக்கங்களை கடந்த
காலங்களில் மாலைமலரில் “ஜோதிடம் எனும் தேவ ரகசியம்”
எனும் தலைப்பில் கட்டுரைகளில் எழுதி இருக்கிறேன்.
ஆதிகாலத்தில் ஜோதிடத்தை நமக்கு அருளிய ஞானிகள்
எவரும் இந்த செவ்வாய் தோஷம் நாகதோஷம் என்பதை குறிப்பிடவே இல்லை. இடையில்
வந்த ஜோதிடர்களாகிய
நாங்கள்தான், எங்களுடைய
வசதிக்காக இந்த தோஷங்களை உருவாக்கிக் கொண்டோம். அதிலும்
இப்போது இந்த
நாகதோஷம் என்பது லக்னத்தில்
ராகு இருக்கிறதா, அதேபோன்ற லக்னத்தில் ராகு இருக்கும் வரனைத்தான் சேர்க்க வேண்டும் என்கின்ற
அளவிற்கு மிகவும் எளிமையாக விட்டது.
1, 2, 7, 8 ஆகிய
இடங்களில் ராகு-கேதுக்கள்
இருந்தால் அதே போன்ற வரனைத்தான்
சேர்க்க வேண்டும் என்று சொல்பவர் ஜோதிடர்
அல்ல. அவருக்கு ஜோதிடம் முழுமையாகத் தெரியாது.
அவருக்கு தெரிந்தது எல்லாம் வெறும் ஒன்று, இரண்டு கணக்கு
மட்டும்தான். அவருக்கு ராகுவையும் தெரியாது, செவ்வாயையும் தெரியாது. அந்த ராகுவும் செவ்வாயும்
ஜாதகருக்கு என்ன செய்வார்கள் என்றும் தெரியாது. அவருக்கு வெறும் எண்கள்
மட்டும்தான் தெரியும்.
துரதிர்ஷ்டவசமாக
இன்றைய 90 சதவீத ஜோதிடர்கள் இதுபோன்ற ஒரு
மாயையில்தான் சிக்கிக்
கொண்டிருக்கிறார்கள். செவ்வாய்
தோஷம் என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. ஜோதிடருக்கு உபயோகப்படும் பரிகாரங்களைச் செய்ய
மட்டுமே அது பயன்படுகிறது. இதில் பரிகாரச் செவ்வாய் என்பது வேறு. செவ்வாய்
எந்த நிலையில் இருந்தால் ஒருவருக்கு திருமண வாழ்வில் துன்பங்களைக் கொடுக்கும் என்பதைக் கணிக்கத் தெரியாத
ஜோதிடர்தான் இரண்டில் செவ்வாய், எட்டில்
செவ்வாய், ஏழில் செவ்வாய் என்பதோடு சுருக்கமாக முடித்துக் கொள்கிறார்.
எத்தனையோ செவ்வாய்தோஷம், நாக தோஷம் உள்ள பெண்கள்
அது இல்லாத ஆண்களைத் திருமணம் செய்து கொண்டு, சந்தோஷமாக
குடித்தனம் நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். முதலில் தோஷம் உள்ள பெண்ணிற்கு அதே
போன்ற ஆணைத்தான் சேர்க்க வேண்டும் என்கின்ற சொல்லும் ஜோதிடருக்கு
அது தோஷம்தானா என்பதைக் கணிக்கவே தெரியாது.
ஆகவே அவர் சுருக்கமாக இதற்கு இதுதான் சரி என்பதோடு விஷயத்தை முடித்துக் கொள்கிறார்.
ஜோதிடத்தை இங்கே ஆய்வு மனப்பான்மையோடு
அணுகுபவர்கள் மிகவும் குறைவு. எல்லா ஜோதிடர்களும்
ஜோதிடர்கள் அல்ல ஒருவரின் ஜோதிட ஞானம் இன்னொருவருக்கு இருக்கும் என்பதை நாம்
எதிர்பார்க்க முடியாது. எதிர்பார்க்கவும் கூடாது.
அனுபவமுள்ள ஜோதிடர் யாரென்பதை நீங்கள்தான் அறிந்து அவரிடம் செல்ல வேண்டும்.
மூன்றே நாட்களில் ஜோதிடர் ஆகி விடலாம்.
மூன்று மணிநேரத்தில் ஜோதிடம் சொல்லித் தருகிறேன் என்று புற்றீசல்கள் போல
ஜோதிடப்பயிற்சி பள்ளிகள் பெருகி விட்ட நிலையில்,
கலிகாலத்தில் அனைத்தும் கெடும்
என்பதைப்போல ஜோதிடமும் அதற்கு விதிவிலக்கு அல்ல.
ஒருவரின் ஜாதகத்தில் லக்னம், 2, 7, 8 போன்ற இடங்களில் ராகு, சனி,
செவ்வாய் போன்ற கிரகங்கள் பாபத்துவமாக இருந்து அவைகளின்
தசைகளும் நடைபெறுமாயின்,
ஒருவருக்கு திருமண வாழ்வில் சிக்கல்கள் தோன்றலாம். அதேநேரத்தில் மேற்கண்ட கிரகங்கள் சுபத்துவம்
மற்றும் சூட்சுமவலுவோடு இருக்கையில் சிக்கல்களைச் செய்யாது. ஆனால்
இந்தக் கோள்கள்
எந்த நிலையில்,
எப்படிப்பட்ட அமைப்பில் இருக்கின்றன என்பதைக்
கணிக்கத் தெரியாத ஜோதிடர்தான் இரண்டில் ராகு, எட்டில் செவ்வாய், இது நாகதோஷம், செவ்வாய் தோஷம் என்றும், அதேபோன்ற இன்னொரு ஜாதகத்தை இணைக்க வேண்டும் என்று
பொத்தாம் பொதுவாகச் சொல்லுகிறார்.
செவ்வாய் தோஷம், நாகதோஷம், பத்துப்
பொருத்தம் போன்றவைகளை ஞானத்தோடு கணிக்கத் தேவையில்லை, இவை எந்த இடத்தில்
இருக்கின்றன என்பதை மட்டும் பார்த்தால் போதும் என்ற நிலை வந்து விட்டதால்தான்
ஜோதிடரின் வேலையை திருமண தகவல் நிலையங்களே எடுத்துக் கொண்டு, இது போன்ற ஜாதகங்களை கழித்துக் கட்டி ஒரேமாதிரியான ராகு-கேது, செவ்வாய்
அமைப்புள்ள ஜாதகங்களை வாடிக்கையாளருக்குத் தருகின்றன. ஆக ஒரு திருமண தகவல் அமைப்பாளர் கூட இன்றைக்கு தேர்ந்த
ஜோதிடராக இருக்கின்ற அளவிற்கு ஜோதிடத்தின் நிலை
வந்து விட்டது.
உங்களுடைய விஷயத்தில் முறைப்பையனுக்கும், பெண்ணுக்கும் திருமணம் செய்து வைக்கும்பொழுது பொருத்தம் பார்க்க
தேவையில்லை என்கிற ஒரு ஜோதிடக் கருத்து
உள்ளது. அதேபோல தாத்தாவைப் போன்ற ஒரு பெரியவர் இருவருக்கும் திருமணம் நடத்திப் பார்க்க விரும்பும் பொழுது, பத்துப் பொருத்தம் இல்லை என்றாலும் செய்து வைக்கலாம். திருமணம் செய்து கொள்ளப்
போகும் இருவருக்கும் மனப்பொருத்தம் இருக்குமாயின் தாராளமாக திருமணம் செய்து
வைக்கலாம்.
உங்கள் பேரனுக்கு
கும்ப லக்னம், மிதுன ராசியாகி, தற்போது ஆறுக்குடைய சந்திரனின் புத்தி
2020 முழுக்க அவருக்கு நடைபெறுகிறது. அதோடு உங்கள்
பேரனுக்கு இன்னும் சில வாரங்களில் அஷ்டமச்சனி ஆரம்பிக்கும். உங்கள் பேத்திக்கு தற்போதுதான் 16
வயது நிறைவடைந்திருக்கிறது. எனவே
இன்னும் ஒன்றரை வருடங்களுக்கு இவர்களுக்கு திருமணம் செய்விப்பது நல்லதாக இருக்காது. இவர்கள் இருவரையும் 2021
ஆம் ஆண்டு பிற்பகுதியில் பேத்தியின் 18
வயதிற்கு பிறகு இணைத்து வைக்கலாம். வாழ்த்துக்கள்.
(03.09.2019 அன்று மாலைமலரில் வெளி வருகிறது)
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.
நல்ல விளக்கம் குருஜி ஐயா.
ReplyDelete