Friday, August 30, 2019

கன்னி - 2019 செப்டம்பர் மாத ராசி பலன்கள்



ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி


கைப்பேசி : +91 9768 99 8888

கன்னி:

கன்னி நாதன் புதன் மாத ஆரம்பத்தில் தனது அதிநட்பு ஸ்தானத்திலும், பிறகு ராசியில் உச்ச நிலையிலும் இருக்கப் போவதால் இது கன்னிக்கு  நன்மைகள் தரும் மாதமாக இருக்கும். ஒரு சிறப்புபலனாக இனிமேல் கிடைக்காது என்று கை விட்ட ஒரு தொகையோ, ஒரு பொருளோ இன்ப அதிர்ச்சியாக கன்னிக்கு இப்போது கிடைக்கும். பிரிந்து போன ஒருவர் இப்போது சேருவார். ராசிநாதனின் உச்ச வலுவால் உங்கள் தைரியம் பளிச்சிடும். உங்களில் சிலர் ஏதேனும் ஒரு விஷயத்தில் புகழடைவீர்கள். நான்கு பேர் கூடும் இடத்தில் தனித்துத் தெரிவீர்கள். மனம் உற்சாகமாக இருக்கும். உல்லாச பயணம் செல்ல முடியும். ஆரோக்கியக் குறைவு இருந்தவர்கள் குணமடைவீர்கள். மந்தமாக இருந்துவந்த தொழில், வியாபாரம் போன்றவைகள் இனி விறுவிறுப்புடன் நடக்க ஆரம்பிக்கும்.


தாயார் வழியில் நல்ல விஷயங்களும் அம்மாவின் மூலம் ஆதாயங்களும் வரும். நண்பர்கள் உதவுவார்கள். இளைய சகோதரத்தால் செலவுகள் உண்டு. சிலருக்கு ஆன்மிக அனுபவங்களும் தெய்வ தரிசனங்களும் வரும். பணவரவும் உண்டு. அலுவலகங்களில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். உங்களை புரிந்து கொள்ளாமல் வாட்டி எடுத்துக் கொண்டிருந்த மேலதிகாரி டிரான்ஸ்பர் ஆகி உங்களுக்கு அனுசரணையானவர் வருவார். வேலை மாற்றம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பழைய இடத்திற்கு திரும்பி வருவீர்கள். எதிர்ப்புகளும், போட்டியாளர்களும் விலகுவார்கள். பெண்களுக்கு இது நல்ல மாதமாக இருக்கும். இளைஞர்களுக்கு பிடித்தமான வேலை கிடைக்கும். கலைஞர்களுக்கு சிறந்த மாதம் என்பதில் சந்தேகம் இல்லை.  

யோகக்கிரகங்கள் வலுவாக இருப்பதால் வீட்டில் சுபகாரியங்கள் உண்டு. நீண்ட நாட்களாக திருமண ஏற்பாடுகள் தள்ளிப் போயிருந்தவர்களுக்கு திருமணம் உறுதியாகும். இளைய பருவத்தினரை பெற்றோர்கள் அக்கறை எடுத்து கண்காணிக்க வேண்டியது அவசியம். அவர்கள் ஏதாவது வீண் வம்பை இழுத்து கொண்டு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. முக்கியமாக காதல் விவகாரத்தில் பெற்றோர்களின் மனம் வருந்தும்படியான நிகழ்வுகளை இளையோர் செய்வார்கள். தந்தை வழி உறவினருடன்  உரசல்கள் வருவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் வார்த்தைகளில் கவனமாக இருப்பது நல்லது. தேவையற்ற விஷயத்திற்கு கடன் வாங்கக் கூடிய சூழல்கள் உருவாகலாம்.

2,4,6,8,9,10,17,19,20,21,22 ஆகிய நாட்களில் பணம் வரும். 17-ந்தேதி அதிகாலை 4.22 மணி முதல் 19-ந்தேதி மதியம் 3.11 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்றாலும் கெடுதல்கள் எதுவும் நிச்சயமாக நடைபெறாது. ஆயினும் புதிய முயற்சிகள் எதுவும் இந்த நாட்களில் வேண்டாம்.


அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

No comments :

Post a Comment