கன்னி:
கன்னிக்கு கஷ்டங்கள் எதையும் கொடுக்காத மாதம் இது. தனாதிபதி சுக்கிரன் மாத ஆரம்பத்தில் எட்டில் இருந்தாலும், பிற்பகுதியில் பாக்கிய ஸ்தானத்தில் இருக்கிறார். ஒரு நிலையில் அவர் குருபார்வையில் இருப்பதால் ஜூன் மாதம் நீங்கள் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அனுசரித்து போகும் மாதமாக இருக்கும். கன்னிக்கு இந்தமாதம் கெடுதல்கள் எதுவும் இல்லை. மூன்றில் குரு அமர்ந்து ஒன்பதைப் பார்ப்பது தொல்லைகளை நீக்கும் ஒரு அமைப்பு. ஆகவே கன்னியினர் இந்த மாதம் எதையும் துணிந்து ரிஸ்க் எடுத்து சாதித்துக் காட்டுவீர்கள்.
பாக்கிய ஸ்தானம் வலுப் பெறுவதால் இதுவரை வேலை, தொழில் போன்ற அமைப்புகளில் நிலைத்தன்மை பெறாத இளைய பருவ கன்னி ராசிக்காரர்கள் இந்த மாதம் நிரந்தரமான வேலை, மற்றும் தொழில் அமைப்புகளுக்கான ஆர்டர்களைப் பெறுவீர்கள். மாத ஆரம்பத்தில் ராசிநாதன் புதன் சுபத்துவமாக இருப்பதால் வேலை விஷயமாக வெளிநாடு, வெளிமாநிலம் போன்ற தூர இடங்களுக்கு பயணம் செல்லுதலும், அதன் மூலம் நல்லவிதமான வாழ்க்கை மாற்றங்களும் நடக்கும். இதுவரை தடையாகி வந்த சகல பாக்கியங்களும் இப்போது உங்களுக்கு கிடைக்கும். தந்தைவழி தொழில் செய்பவர்களுக்கு அனைத்து நன்மைகளும் உண்டு.
கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். இதுவரை உங்களைப் புரிந்து கொள்ளாதவர்கள் இப்போது உங்களின் உண்மை மனதைப் புரிந்து கொள்வார்கள். குடும்பத்தில் உங்கள் பேச்சிற்கு மதிப்பு இருக்கும். அஸ்தம் நட்சத்திரக்காரர்களுக்கு புதிய தொழில் ஆரம்பம் இருக்கும். குழந்தைகளின் சுப காரிய விஷயமாக சிலருக்கு அலைச்சல்களும், ஒன்றும் சரியாக அமையவில்லையே என்ற ஆதங்கமும் இருக்கும். வியாபாரிகளுக்கு வருமானக் குறைவு இருக்காது. இளைஞர்களுக்கு கெடுதல்கள் நடக்காது. குறைகள் எதுவும் இல்லாத மாதம் இது. சிலருக்கு வீடுமாற்றம், தொழில் இடமாற்றம், தொழில் மாற்றம் போன்றவைகள் நடக்கலாம். விவசாயிகள், கலைஞர்கள் போன்றவர்களுக்கு இதுவரை இருந்து வந்த மந்த நிலைமை முற்றிலும் மாறி அனைத்தும் நல்லவைகளாக நடக்கும்.
4,5,6,8,10,12,16,17,18,24 ஆகிய நாட்களில் பணம் வரும். 27ம் தேதி காலை 7.43 மணி முதல் 29-ம் தேதி மாலை 4.02 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த தினங்களில் நீண்ட தூர பிரயாணங்களை தவிர்ப்பது நல்லது. மேலும் புதிய முயற்சிகள் எதுவும் செய்ய வேண்டாம்.
தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.
No comments :
Post a Comment