Wednesday, June 5, 2019

மிதுனம்-2019 ஜூன் மாத ராசி பலன்கள்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

மிதுனம்: 

மிதுன ராசிக்கு அதிர்ஷ்டம் கை கொடுக்கும் மாதம் இது. உங்களின் ராஜயோகாதிபதி சுக்கிரன் மாதம் முழுவதும் நல்லநிலையில் இருக்கிறார். உங்களின் உழைப்பும் முயற்சியும் இப்போது வெற்றியைத் தரும் என்பதால் உண்மையாக உழைத்தால் கண்டிப்பாக வெற்றிதான். நீங்கள் உழைப்பிற்கு அஞ்சாதவர்கள் என்பதால் உங்களால் எதுவும் செய்ய முடியும். ராசியில் செவ்வாய், ராகுவுடன் இணைவதால் முதுகுக்குப் பின்னால் செயல்படும் எதிரிகளிடம் உஷாராக இருங்கள். வேலை, தொழில் செய்யும் இடங்களில் அக்கம்பக்கம் பார்த்துப் பேசுங்கள். மனதில் இருப்பதை வெளிப்படையாக யாரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். 

இளைஞர்களுக்கு கையில் காசு நடமாட்டம் அதிகம் இருக்கப் போவதால் தேவையில்லாத சில பழக்க வழக்கங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. சொந்தத் தொழில் நல்லபடியாக நடக்கும். வியாபாரிகள் ஏற்றம் பெறுவார்கள். பண வரவு நன்றாக இருக்கும். வியாபாரம் கண்டிப்பாக குறையாது என்றாலும் அதற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். உடன் இருப்பவர்கள் மேல் ஒரு கண் எப்போதும் இருக்கட்டும். அரசுவகை உதவிகள் எதிர்பார்ப்போருக்கு சுணக்கம் இருக்கும். அரசு, தனியார் துறை ஊழியர்களுக்கு இடமாற்றம் உண்டு. கூட்டுத்தொழிலில் இதுவரை இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி பங்குதாரர்களிடையே இணக்கமான சூழல்கள் இருக்கும். 

ஏழாமிடத்தில் சனியுடன் இணைந்து கேது இருக்கும் நிலையில் செவ்வாயும் ஏழாமிடத்தைப் பார்ப்பதால் குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படும். வார்த்தைகளில் கவனமாக இருங்கள். வாழ்க்கைத் துணைவர் விஷயத்தில் மன வருத்தங்கள் இருக்கும். மனைவியின் பேச்சை கணவர் கேட்க மாட்டார். அம்மாவைப் பிரிந்து இருப்பவர்கள் இந்த மாதம் அவரை நேரில் சென்று பார்த்து, ஆசிர்வாதங்களைப் பெற்று வருவது உங்களுக்கு இன்னும் சிறப்புகளைச் சேர்க்கும். பெண்கள் விஷயத்தில் நன்மை நடக்கும். பெண்கள் உதவுவார்கள். பெண்கள் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் உண்டு. எந்தக் காரணத்தை முன்னிட்டும் அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். அதனால் பிரச்னைகள் வரும். பணவரவுகள் நன்றாக இருக்கும் என்றாலும் சிக்கனத்தை கடைபிடியுங்கள். தேவையற்ற பொருட்கள் வாங்குவதால் விரயங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. 

3,5,8,9,10,12,13,14,15,19 ஆகிய நாட்களில் பணம் வரும். 19-ம்தேதி இரவு 7.59 மணி முதல் 22-ந்தேதி காலை 7.39 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்றாலும் கெடுதல்கள் எதுவும் நடக்காது. ஆயினும் இந்த தினங்களில் புதிய முயற்சிகளை ஆரம்பிக்க வேண்டாம்.

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

No comments :

Post a Comment