Friday, March 29, 2019

பாதகாதிபதி எப்போது கெடுதல் செய்வார்...?D-052


ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

மனித வாழ்க்கையின் மிகமுக்கிய
இளமைப் பருவத்தில், வாழ்வின் இன்னொரு பரிமாணத்தை புரிய வைக்கும் சுபக் கிரகமான சுக்கிரனின் பாபத்துவ நிலைகளை பற்றி தற்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

சுக்கிரனின் முதன்மைக் காரகத்துவம், இனவிருத்திக்கு அடிப்படையான காமம் என்பதால், சனி, செவ்வாய், ராகு, அமாவாசைக்கு அருகில் இருக்கும் தேய்பிறைச் சந்திரன் போன்ற பாபக் கிரகங்களின் தொடர்பைப் பெற்று அல்லது பாபச் சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடகம் மற்றும் சனி, செவ்வாயின் வீடுகளில் அமரும் நிலையில் சுக்கிரன் தன்னுடைய முதல் காரகத்துவமான காமத்தின் மூலம் ஒருவருக்கு அவமானங்களை தேடித் தருவார்.

நம்முடைய கலாச்சாரத்தின்படி இளம்பருவத்தில் மிகக் கட்டுப்பாடாக வளர்க்கப்படும் பெண் குழந்தைகள் கூட பதின்பருவத்தில் பாபத்துவ சுக்கிரன் சம்பந்தப்பட்ட தசா,புக்திகள் வரும்போது, மனம் முழுக்க சுக்கிரனின் ஆதிக்கத்தில் சென்று, தான் என்ன செய்கிறோம் என்பதை உணர முடியாத அளவிற்கு பாலியல் ரீதியிலான தவறுகளைச் செய்வார்கள்.

இந்தக் கட்டுரையில் பருவ வயதில் சுக்கிரனால் பாதிக்கப்பட்ட, இரண்டு இளம் பெண்களின் ஜாதகங்களை விளக்கப் போகிறேன். அதில் ஒரு பெண்ணின் ஜாதகத்தை கீழே கொடுத்திருக்கிறேன். 13-3-2002 இல் மதியம் 3-41-க்கு ஈரோட்டில் பிறந்த இந்தப் பெண்ணுக்கு தற்போது 17 வயது ஆகிறது.

இவரது ஜாதகப்படி கடக லக்னம், கும்ப ராசியாகி, லக்னாதிபதி சந்திரன் தேய்பிறைச் சந்திரனாக பூரண அமாவாசை நிலையில் இருக்கிறார். லக்னத்திற்கு எவ்வித சுபத்துவ அமைப்பும் கிடைக்காத நிலையில், லக்னாதிபதிக்கு வலுக் குறைந்த குருவின் பார்வை இருக்கிறது.

இந்தக் குருவின் பார்வை அமாவாசை சந்திரனின் இருள்நிலையை கொஞ்சம் அகற்றவே செய்யும். ஆயினும் இங்கே குரு, பகை நிலையில் இருப்பதால் அவரால் சந்திரனை முழுமையாக சுபத்துவப் படுத்த முடியாது. ஆக முக்கிய கிரகங்களான குருவும், சந்திரனும் இங்கே எட்டு, பனிரெண்டில் மறைவது பலவீன நிலை.

இந்தப் பெண்ணின் 14 வயது முதல் கடக லக்னத்திற்கு வரக்கூடாது என்று நான் சொல்லும் எட்டுக்குடைய சனியின் தசை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவெனில், லக்னாதிபதி சந்திரன் எட்டாமிடமான சனியின் வீட்டில் மறைந்து, அமாவாசை நிலையில் மிகப் பெரிய பலவீன அமைப்பில் இருப்பதுதான்.

அடிக்கடி நான் குறிப்பிடுவது போல எது, எப்படிக் கெட்டாலும் ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி கெடக்கூடாது, பலவீனமாக கூடாது. லக்னாதிபதி வலுத்தவர் தவறு செய்ய மாட்டார் அல்லது தவறு செய்தால் மாட்டிக் கொள்ள மாட்டார்.

சுக்

செவ்

சனி,ராகு

குரு

 

சூரி புத, சந் 

13-3-2002 மதியம்  

3-41 ஈரோடு  

ல/

 

 

 

  

  கேது  

 

 

லக்னாதிபதி பலவீனமாக நிலையில் ஒருவரது மனம் அலைபாயும் தன்மை கொண்டதாக இருக்கும். ஒருவருடைய எண்ணங்கள், செயல்திறன், சிந்தனை போன்றவைகளைக் குறிக்கும் கிரகம் லக்னாதிபதி மட்டுமே என்பதால், லக்னேசன்  பாபத்துவ ஆக்கிரமிப்பில் இருக்கும் அமைப்புள்ள ஜாதகம், சற்றுத் தரம் குறைந்ததாகவே இருக்கும்.

அதிலும் இந்தப் பெண்ணிற்கு லக்னாதிபதி சந்திரனே, மனோகாரகனாகவும் அமைவதால் பூரண அமாவாசைக்கு அருகில் இருக்கும் சந்திரன், ஒருவரை மனதைக் கட்டுப்படுத்தும் திறன் இல்லாதவராக இருக்க வைப்பார்.

இவரது ஜாதகப்படி பதினான்கு வயதில் இவருக்கு சனிதசை ஆரம்பமானது. தசாநாதன் சனி ங்கே சுக்கிரனின் பதினொன்றாம் ரிஷப வீட்டில் இருக்கிறார். வீடு கொடுத்த சுக்கிரன் உச்சமாக இருக்கிறார். கடக லக்னத்திற்கு சுக்கிரன் பாதகாதிபதியும் கூட. பாதகாதிபதி வலுக்கக் கூடாது என்பதும் ஒரு விதி.

ஜோதிடர்களுக்கும், ஜோதிடத்தில் ஆர்வமுள்ள பெரும்பாலானவர்களுக்கும் பாதகாதிபதி பற்றிய பலவிதமான சந்தேகங்கள் இருக்கின்றன. இதில் பல்வேறு அபத்தக் கருத்துக்களும் அடங்கும்.

பொதுவாக பாதகாதிபதி என்பவர் மிகப்பெரிய பாதகத்தைச் செய்வார் என்று நம்முடைய கிரந்தங்களில் சொல்லப்பட்டு இருந்தாலும், மிகவும் அரிதான நிலைகளில் மட்டுமே பாதகாதிபதி பாதகத்தைச் செய்வார். எல்லா நிலைகளிலும் பாதகாதிபதி கொடிய பலன்களைச் செய்வது இல்லை.

பாதம் என்ற சொல்லுக்கு மிகப்பெரிய கொடுமை என்று அர்த்தம் கொள்ளலாம். மனிதராகப் பிறந்த அனைவருக்குமே மிகப்பெரிய கொடுமைகள் நடந்து விடுவதில்லை. எங்கோ அத்தி பூத்தார் போல, லட்சத்தில் அல்லது பத்தாயிரத்தில் ஒருவருக்கு மட்டுமே மிகப்பெரிய கொடுஞ்செயல்கள் நடைபெறுகின்றன.

பாதகாதிபதி பற்றிய மிகப்பெரிய உண்மை என்னவெனில், அவர் எந்த ஒரு நிலையிலும்  சுப வலு பெறக்கூடாது என்பதே. அவர் பாதக ஸ்தானத்திலேயே அமர்ந்து அதிகமான சுபவலு பெறுவதே முதல் நிலை கொடுமையான விஷயம். எத்தனைக்கெத்தனை பாதக கிரகம் சுப வலு அடைகிறதோ அந்த அளவிற்கு அதன் தசையில் கடுமையான பாதக பலன்கள் இருக்கும்.

அதாவது பாதகாதிபதி கிரகம், தன்னுடைய வீட்டிலேயே ஆட்சி, உச்சம் போன்ற நிலைகளை அடைந்து, அவருடன் சனி, செவ்வாய், ராகு, அமாவாசைக்கு  ருகிலிருக்கும் தேய்பிறை சந்திரன் போன்ற கிரகங்கள் இணையாமல் இருப்பது அல்லது இவர்களின் தொடர்பை பெறாமல் இருந்தால் மட்டுமே பாதகாதிபதி முழு வலுப்பெற்று அந்த ஜாதகருக்கு பாதகம் தரும் நிலையில் இருக்கிறார் என்று அர்த்தம்.

இதிலும் முக்கியமாக தனித்திருக்கும் பாதகாதிபதி மட்டுமே பாதகச் செயல்களை செய்வதற்கு தகுதி படைத்தவர். மிக மிக முக்கியமாக பாதகாதிபதிக்கு சுபத்துவ தொடர்புகள் கிடைக்கக்கூடாது. பாபர்களின் தொடர்பு கிடைக்கும் நிலையில் பாதகாதிபதி, பாதகம் செய்யும் தகுதியையும், தன்னுடைய வலிமையையும்  இழந்து ஜாதகருக்கு தீமை செய்ய மாட்டார்.

தன் வீட்டில் இருப்பதை விடுத்து, இன்னொரு வீட்டில் பலம் பெறும் பாதகாதிபதி சற்று குறைவான கொடிய செயல்களை செய்யும் தகுதி படைத்தவராக இருப்பார். இதிலும் ஒரு முக்கியமான அமைப்பாக பாதகாதிபதி அங்கு சுபத்தன்மை மட்டும் அடையக் கூடாது.

உதாரணமாக கும்ப லக்னத்திற்கு ஒன்பதாமிடத்தில் தனித்து ஆட்சி பெறும் சுக்கிரனும், இரண்டில் தனித்து உச்சம் பெறும் சுக்கிரனும் பாதக பலன்களைச் செய்வார்கள். அதேநேரத்தில் நான்காவது கேந்திரத்தில் திக்பலம் பெறும் சுக்கிரன் கும்பத்திற்கு பாதக பலன்களை ஒருபோதும் செய்ய மாட்டார்.

ஏனென்றால் அவர் அங்கே தனது பாதக ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கு எட்டாமிடத்தில் மறைகிறார். தன் வீட்டிற்கு ஆறு, எட்டு, பனிரெண்டில் மறையும் ஒரு கிரகம் அந்த பாவக பலனைச் செய்யாது எனும் பாவத் பாவக விதிப்படி கும்பத்திற்கு நான்கில் இருக்கும் சுக்கிரனுக்கு பாதகம் செய்யும் அதிகாரம் கிடையாது

அதேநேரத்தில் கும்பத்தின் இரண்டாம் வீட்டில் தனித்து உச்சமாக இருக்கும் சுக்கிரனால் ஜாதகருக்கு பாதக பலன்கள் இருக்கவே செய்யும். இங்கே சுக்கிரனின் சுபத்துவ, பாபத்துவ வலிமையைக் கணக்கிட்டு, அவர் எந்த நிலையில் எப்படிப்பட்ட பாதக பலன்களைச் செய்வார் அல்லது செய்ய மாட்டார் என்று பார்க்க வேண்டும்.

இதைப் படிப்பவர்களுக்கு சுக்கிரன் இரண்டில் இருந்தாலும், பாதக ஸ்தானத்திற்கு ஆறில்தானே மறைகிறார், எட்டில் மறையும்போது கெடுதல் செய்யும் நிலையை இப்பவர், ஆறில் மறையும் போதும் இழப்பார்தானே என்ற சந்தேகம் எழலாம்.

மறைவு ஸ்தான அமைப்பில் சுக்கிரன் மட்டுமே விதிவிலக்கு உள்ள ஒரு கிரகம். சுக்கிரனுக்கு மட்டும் 6,12-மிடங்கள் மறைவு ஸ்தானங்கள் அல்ல. ஜோதிடத்தில் மறைவிடங்கள் என்று குறிப்பிடப்படும் மூன்று, ஆறு, எட்டு, பனிரெண்டில், மூன்றாமிடமும், எட்டாமிடமும் மட்டுமே சுக்கிரனுக்கு மறைவு ஸ்தானமாக சொல்லப்படுகிறது.

இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவெனில், நான்கில் இரண்டு இடங்கள் மட்டுமே மறைவிடங்கள் என்பதால், இந்த மூன்று, எட்டில் இருக்கும் சுக்கிரன் மிகக் கடுமையாக வலிமை இப்பார். அதாவது தன்னுடைய சுய பலன்களை இந்த இடங்களில் இருக்கும் சுக்கிரன் தர மாட்டார்.

எந்த ஒரு நிலையிலும் சுக்கிரனுக்கு ஆறு, 12-மிடங்கள் மறைவிடங்களாகச் சொல்லப்படவில்லை என்பதனால் இங்கே பாவத் பாவக அமைப்பிலும் கும்ப லக்கினத்திற்கு இரண்டில் அமரும் சுக்கிரன், தன் வீட்டிற்கு 6-ல் மறைகிறார் என்று சொல்லவே கூடாது.

ஆறாமிடம் சுக்கிரனுக்கு மறைவு ஸ்தானம் அல்ல என்பதை எந்த நிலையிலும் ஒரே அமைப்பாகத்தான் பார்க்க வேண்டுமே தவிர சூழல்களுக்கு ஏற்றார்ப் போல மாற்றிக் கொள்ளக் கூடாது.

சுக்கிரனுக்கு மட்டும் இதுபோன்ற விதிவிலக்குகள் இருப்பதற்கான விஞ்ஞான காரணம் என்னவெனில், மற்ற கிரகங்கள் அனைத்தும் கிழக்கு மேற்காக, அல்லது மேற்கு கிழக்காக, அதாவது வலம் இடமாகவோ, அல்லது இடம் வலமாகவோ பம்பரம் போல தன்னைத் தானே சுற்றிக் கொண்டு, சூரியனையும் சுற்றி வரும் நிலையில், சுக்கிரன் மட்டுமே ஒரு கால்பந்தினைப்போல உருண்டு கொண்டே சூரியனைச் சுற்றி வருகிறது.

சுக்கிரனின் இந்த நிலைக்கு, எப்போதோ வான்வெளியில் சுக்கிரனோடு மோதிய, சுக்கிரனை விட மிகப் பெரிய பொருள் ஒன்று அதனுடைய பம்பரம் போல் சுழலும் தன்மையை மாற்றி, கீழே தள்ளி விட்டு உருள வைத்து விட்டது என்று விஞ்ஞானக் காரணம் சொல்லப்படுகிறது.

ஆகவே ஜோதிடத்தில் எந்த ஒரு நிலையிலும் சில விதிவிலக்குகளை நமது ஞானிகள் தரும்போது அதற்கான விஞ்ஞானக் காரணங்கள் இருக்கவே செய்கின்றன. நாம்தான் எதற்காக, ஏன் இந்த இடத்தில் மட்டும் ந்தக் கிரகத்திற்கும், பாவத்திற்கும் விதிவிலக்கு சொல்லப்பட்டது என்பதை நம்முடைய ஞானத்தின் மூலமாக உணர்ந்து அறிந்து கொள்ள வேண்டும்.

இந்த இரு நிலைகளைத் தவிர்த்து அதாவது பாதகாதிபதி பாதக ஸ்தானத்தில் தனித்து சுபவலு பெற்றிருப்பது அல்லது வேறொரு வீட்டில் தனித்து சுப பலம் பெற்றிருப்பது போன்ற நிலைகளில் மட்டுமே ஒருவருக்கு மிகப்பெரிய பாதகங்கள் நடக்கும்.

இதை விடுத்து பாதகாதிபதி மற்ற பாபக் கிரகங்களுடன் சேர்ந்து அல்லது பார்க்கப்பட்டு இருக்கும் நிலைகளிலும், பாதக கிரகம் முழுமையான பாபத்துவம் அடைந்திருக்கும் நிலையிலும் அல்லது தனக்கு எதிர்த்தன்மையுடைய  மற்ற கிரகங்களுடன் சேர்ந்து, சுய இயல்பை இழக்கும் நிலையிலும் கண்டிப்பாக பாதகமான விஷயங்களை செய்ய மாட்டார்.

சமீபகாலத்தில் நாம் அனைவரும் அறிந்த உதாரணமான, பாதகாதிபதி தசையில்  மரணத்தை தழுவிய தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஜாதகத்தில் பாதகாதிபதியான குரு, தன்னுடைய பாதக ஸ்தானத்தில், சனி, செவ்வாய், ராகு, தேய்பிறைச் சந்திரன் போன்ற எவ்வித பாபக் கிரகங்களின் தொடர்புகள் இன்றி, முழுக்க முழுக்க மூலத்திரிகோண சுபத்துவ நிலையில் வலிமையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய வலிமையான நிலையில், பாதக ஸ்தானத்தில் குரு அமைந்ததால்தான் சகல வசதிகளும், செல்வாக்கு, அதிகாரம் போன்றவைகள் இருந்தும் மருத்துவம் பலனளிக்காத நிலையில் அவருக்கு ஆயுள் பங்கம் எனும் பாதகம் நடந்தது.

இதைப்போன்ற அபூர்வமான, அத்தி பூத்தார் போல சில நிலைகளில் யாரோ ஒருவருக்குத்தான் பாதகம் நடக்குமே தவிர, ஜோதிடம் அறிந்த அல்லது ஜோதிடத்தில் ஆர்வம் உள்ள ஒவ்வொருவரும் பயப்படும் அளவிற்கு பாதகாதிபதி தனது தசையில் தீமைகளைச் செய்து விடுவது இல்லை.

பாதகாதிபதியின் இன்னும் சில நிலைகள் பற்றிய விளக்கங்களை அடுத்த அத்தியாயத்திலும் பார்ப்போம்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

2 comments :

  1. அருமை நன்றி

    ReplyDelete
  2. ஐயா, ஒரு விண்ணப்பம் . ராசி மண்டலங்களின் தனித்துவங்களை (காற்று ராசி, நட்சத்திர கூட்டங்களின் அமைப்பு, ஏன் ஒரு நட்சத்திர கூட்டத்திற்கு ஒரு கிரகம் அதிபதி ஆகியது etc) Cover பண்ணவும். நீங்கள் பெரும்பாலும் கிரகங்களின் தனித்துவம், அவை ஒரு ராசியில் எப்படி ராசி அதிபதி / பாவாதிபதி படி பலன் தரும் என்று Cover பண்ணியிருக்கிறீர்கள்.பலன் சொல்லும் போது ராசியின் properties ஒரு வீட்டை / அதில் அமர்ந்த கிரகத்தை எப்படி பாதிக்கும் என்று விளக்கவும்.

    ReplyDelete