ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி எண் :8870998888
அசுவினி
அஸ்வினி நட்சத்திரக்காரர்களுக்கு இந்த
மாதம் எதிர்ப்புகளையும், எதிரிகளையும் ஜெயிக்கும் நிகழ்ச்சிகள்
நடக்கும். உங்களுடைய திடீர் சுறுசுறுப்பினால் உங்களைப் புரிந்து கொள்ள முடியாமல்
நண்பர்களும், குடும்பத்தினரும் குழம்பிப் போவார்கள்.
வேலை, தொழில், வியாபாரம் போன்ற
ஜீவன அமைப்புகளில் சிக்கல்கள் இருக்காது. ஆகஸ்டு மாதம் உங்களுக்கு நல்ல மாதம்தான்.
துணிந்து இறங்கினால் எந்த ஒரு விஷயத்தையும் வெற்றியாக முடிக்க முடியும். நல்லநேரம்
பிறந்து விட்டது. அஸ்வினிக்கு இனிமேல்
யோகம் மட்டும்தான்.
பரணி
பரணிக்கு திருப்பங்களைக் கொடுக்கின்ற
மாதம் இது. உங்களை பிடிவாதக்காரர் என்று தவறாகப் புரிந்து கொண்டவர்கள் உங்கள்
மனதைத் தெரிந்து கொண்டு அருகில் வருவார்கள். அனைத்தும் நன்மையாகும் மாதம் இது.
மாதம் முழுவதும் உதவிகள் கிடைக்கும். நீங்களும் பிறருக்கு உதவ முடியும். உதவும்
அளவிற்கு கையிலும் பணம் இருக்கும். கருத்து வேறுபாடுகளை பேசித் தீர்ப்பீர்கள்.
பிள்ளைகளால் நன்மை உண்டு. தூரத்தில் இருக்கும் குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள்
கிடைக்கும். வெற்றி தரும் மாதம் இது.
கிருத்திகை
கிருத்திகை நட்சத்திரத்தின் பின்னடைவுகள்
விலகும் மாதம் இது. உங்களின் வேலை, தொழில், வியாபாரம் போன்ற
ஜீவன அமைப்புகள் அனைத்திலும் இருந்த தடைகள் விலகி விட்டது. சோம்பலை ஒதுக்கி வைத்து
விட்டு முயற்சிகளை செய்பவர்களுக்கு வெற்றி நிச்சயம் உண்டு. சொந்தவீடு
இல்லாதவர்களுக்கு வீடு வாங்குவது அல்லது கட்டுவதற்கான ஆரம்ப நிகழ்ச்சிகள்
இருக்கும். தாயார் வழியில் நல்லவைகளும் அம்மாவின் அன்பும், அவரிடம் கேட்பது கிடைப்பதும் நடக்கும். வெளிநாடு சம்மந்தப்பட்ட விஷயங்கள்
யோகம் தரும்.
ரோஹிணி
இந்த மாதம் அதிர்ஷ்டம் கை கொடுக்கும்.
மாதம் முழுவதும் நல்ல பலன்கள் நடக்கும். பணவரவு திருப்தியாக இருக்கும். நீண்ட நாள்
கனவு ஒன்று இப்போது நனவாகும். கலைத்துறையிலும் பெண்கள் தொடர்பான துறைகளிலும், அழகு, ஆடம்பரம் சொகுசுவாகனம் அலங்காரம் போன்ற
துறைகளிலும் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டு. எவரிடமும் கடன் வாங்க தேவை இருக்காது.
கடன் வாங்கினால் திருப்பி கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. அதிக முயற்சி
இல்லாமலே சுபகாரியங்கள் நடக்கும். ஆன்மீக ஈடுபாடு அதிகமாக இருக்கும்.
மிருகசீரிடம்
உங்களில் பருவவயதினர் எதிர்கால வாழ்க்கைத்
துணைவரை சந்திக்கும் மாதம் இது. சாதகமான கிரக அமைப்பால் எதையும் சாதிப்பீர்கள்.
மற்றவர்கள் பொறாமையாக பார்க்கும் அளவிற்கு ஊக்கத்துடன் செயல்படுவீர்கள். எல்லாத்
துறையைச் சேர்ந்தவர்களுக்கும் நல்ல மாதம் இது. இனிய நிகழ்ச்சிகள் நடக்கும். குடும்பத்தில் சந்தோஷங்கள் உண்டு. நிலம் சம்பந்தப்பட்ட
வில்லங்கங்களில் இருப்பவர்களுக்கு வழக்குகள் சாதகமாகும். மகன், மகள் விஷயங்களில் நல்ல அனுபவங்கள் உண்டு. குழந்தைகள் கேட்பதை வாங்கித் தர
முடியும்.
திருவாதிரை
இந்த மாதம் திருவாதிரை
நட்சத்திரக்காரர்களுக்கு பணவரவிற்கு தடை எதுவும் இருக்காது. கையைக் கடிக்கும்
விஷயங்களும் இருக்காது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அனைத்தையும்
மனைவியின் பொறுப்பில் விடுவதன் மூலம் சிக்கல்கள் எதுவும் வராமல் தப்பிக்கலாம்.
சிலருக்கு தாமதித்து வந்த வாய்ப்புக்கள் நல்லபடியாக கிடைக்கும். இளைஞர்களுக்கு
சிந்தனைகள் திசைமாறும் மாதம் இது. எதிர்பாலினர் மீது ஈர்ப்பு ஏற்படும் காலகட்டம்
நடைபெறுகிறது. காதல் விவகாரங்களில் சிக்குவீர்கள்.
புனர்பூசம்
நட்சத்திரநாதன் குரு நீசனின் வீட்டில்
இருப்பதால் சற்றுக் குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். எதிலும் தெளிவான முடிவு
எடுப்பதற்கு தயங்குவீர்கள். சிலருக்கு இனம் புரியாத தயக்கங்கள், மனக்கலக்கங்கள் இருக்கும். மாத இறுதியில் கிரகநிலைகள் மாறுவதால்
அனைத்துப் பிரச்னைகளும் சூரியனை கண்ட பனிபோல விலகும் என்பது உறுதி. பெண்களால்
செலவுகள் இருக்கும். சகோதரிகளுக்கு உதவுவீர்கள். சிலர் வெளிமாநிலம், வெளிநாடு போக நேரிடும். தூரஇடங்களில் இருப்பவர்களுக்கு சிக்கல்கள்
எதுவும் இருக்காது.
பூசம்
பூசம் நட்சத்திரக்காரர்களின் பிரச்னைகள்
அனைத்தும் நல்லவிதமாகத் தீரப் போவதற்கான மாதம் இது. மாத ஆரம்பத்திலேயே நல்லவை
நடப்பதற்கான அறிகுறிகள் தெரியத் துவங்கும். இனிமேல் உங்களுக்கு ஒரு குறையும்
இல்லை. எதையும் சமாளிப்பீர்கள். கலைஞர்கள்,
தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் நல்ல சந்தர்ப்பங்களை அடைவீர்கள். இதுவரை எந்த
விஷயத்திலும் தடைகளைச் சந்தித்து, முட்டுச்சந்தில் போய் முட்டி நிற்பதைப்
போல் உணர்ந்தவர்கள் அது விலகுவதை
உணருவீர்கள். எதிலும் கை கொடுக்கும் மாதம் இது.
ஆயில்யம்
நட்சத்திர நாதன் புதன் ராகுவிடமிருந்து
விலகி விட்டதால் ஆயில்யத்திற்கு சந்தோஷ மாதம் இது. இனிமேல் நன்றாக இருக்கப்
போகிறீர்கள். இதுவரை எதிலெல்லாம் பிரச்னைகள் இருந்து வந்ததோ அனைத்தும் விலகப்
போகிறது. அவரவர் வயது, இருப்பிடம், தகுதி திறமைக்கு
ஏற்றார்போல நன்மைகள் நடக்கும். இளைய பருவத்தினர் வயதிற்கே உரிய உல்லாச அனுபவங்களை
பெறுவீர்கள். ஒரு சிலருக்கு தோழிகளால் இனிமையான அனுபவங்கள் இருக்கும். எண்ணங்கள்
செயலாகி நினைத்தது நடக்கும். சொன்னது பலிக்கும்.
மகம்
இந்தமாதம் மகம் நட்சத்திரத்தில்
பிறந்தவர்களை கோபம் கொள்ள வைத்து, வீண் சண்டையில் தள்ளும் கிரகநிலைகள்
அமைகின்றன. கோபத்தைக் கட்டுப்படுத்திக்
கொள்வது நல்லது. உங்களின் பேச்சின் மூலம் ஏதாவது சிக்கல் உண்டாகும் என்பதால்
பக்குவமாக நடந்துக் கொள்வது நல்லது. அதேநேரம் சமாளிக்க முடியாத அளவிற்கு பெரிய
பிரச்னைகள் எதுவும் இருக்காது. சிறியதாக ஆரம்பிக்கும் பிரச்னை பெரியதாக மாறி
நண்பர்களை விரோதியாக்கும். பேசுவதில் கவனமாக இருங்கள். இந்தமாதம் சிலர் அடையாளம்
காட்டப்படுவார்கள்.
பூரம்
சுக்கிரனின் நீசத்தால் பெண்களால்
சிரமங்களும், செலவுகளும் உள்ள மாதம் இது. 15-ம்
தேதிக்கு பிறகு வருமானம் வரும். எதிர்பார்க்கும் இடத்தில் உதவிகள் கிடைக்கும்.
சகோதர சகோதரிகளின் மூலம் ஆதரவான நிகழ்வுகள் இருக்கும். மனைவிக்கு நகை வாங்கித்
தருவீர்கள். வீட்டில் ஆபரணச் சேர்க்கையும் வீட்டிற்குத் தேவையான பொருட்கள்
வாங்குதலும் நடக்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும்.
பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள். பிள்ளைகளுக்கான கடமைகளை பெற்றோர்கள் சரியாகச்
செய்ய முடியும்.
உத்திரம்
இந்த மாத முற்பகுதியில் உங்களுக்கு
பணவரவுகள் இருக்கும். அதே நேரத்தில் 15-ம் தேதிக்குப் பிறகு வருமானத்தைச் சேமிக்க
முடியாமல் இந்த மாதத்திலேயே செலவும் செய்ய வேண்டி இருக்கும். உங்களில் சிலர்
மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி என்பதைப் போல ஏதேனும் ஒரு விஷயத்தின் நடுவில்
சிக்கிக் கொண்டு அவஸ்தைப்படுவீர்கள். குறிப்பாக வீட்டில் மனைவி, அம்மாவிற்கு நடுவிலும் அலுவலகத்தில் முதலாளிக்கும் மேனேஜருக்கும்
நடுவிலும் மாட்டிக் கொண்டு தலையைப் பிய்த்துக் கொள்வீர்கள்.
அஸ்தம்
உங்களில் இளையபருவத்தினர் சிலருக்கு இந்த
மாதம் பெண்கள் விஷயத்தில் சந்தோஷங்கள் ஏற்படும். குடும்பத்தில் ஒருவருக்கொருவர்
உதவிகரமாக இருப்பீர்கள். வாழ்க்கைத் துணையால்
லாபம் உண்டு. சிலருக்கு மட்டும் கடன் பிரச்னைகள் கலக்கத்தை கொடுக்கும்.
தொல்லைகளைத் தவிர்க்க கடன் கொடுத்தவரை நேரில் சந்தித்து தவணை வாங்கி கொள்வது
நல்லது. நடுத்தர வயதை கடந்தவர்கள் உடல்நலனில் அக்கறை காட்டுங்கள். சிலருக்கு
வி.ஐ.பி.க்கள் அறிமுகம் உண்டு. மூத்தவர்களிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள்.
சித்திரை
சித்திரை நட்சத்தினரின் கனவு ஒன்று நனவாகும் மாதம் இது. உங்களுக்கு இதுவரை தொல்லை
கொடுத்த அனைத்துப் பிரச்னைகளும் தீரப் போகின்றன. புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.
புதிய அறிமுகங்கள் கிடைக்கும். உங்களைப் புரிந்து கொள்ளாமல் விலகி இருந்தவர்கள் பக்கத்தில் வருவார்கள்.
வாழ்க்கை முன்னேற்றப் பாதையில் செல்லத் துவங்கும். மனைவிக்கு நகை வாங்கித்
தருவீர்கள். வீட்டில் ஆபரணச் சேர்க்கையும் வீட்டிற்குத் தேவையான பொருட்கள்
வாங்குதலும் நடக்கும். சிலர் தூரப் பயணங்கள் செய்வீர்கள்.
சுவாதி
சுவாதிக்கு இது நல்ல மாதம்தான்.
பின்னடைவுகள் இல்லாத மேன்மையான மாதமாகவே இது இருக்கும். பணவிஷயத்தில் குறைப்பட்டுக்
கொள்ள எதுவும் இல்லை. கொடுக்கும் வாக்கைக் காப்பாற்ற முடியும். சிலருக்கு வீடு
வாங்குவதற்கு இருந்த தடைகள் நீங்கி கட்டிய வீடோ அல்லது காலிமனையோ, வாங்க இப்போது ஆரம்பங்கள் இருக்கும். இளைய பருவத்தினருக்கு அவர்கள்
படிப்புக்குத் தகுந்த நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி
உயர்வு, சம்பள உயர்வு, நிலுவைத்தொகை கைக்கு வரும்.
விசாகம்
விசாகத்தினருக்கு இந்த மாத பிற்பகுதியில்
பணவரவும், சந்தோஷமும் இருக்கும். அலுவலகத்தில்
தொந்தரவுகள் ஏற்படாது. கீழே வேலை செய்பவர்களிடம் இருந்து ஒத்துழைப்பு கிடைக்கும். மேலதிகாரிகள்
அனுசரணையாக இருப்பார்கள். ஏதேனும் ஒரு சிறு காரணத்திற்காக நிறுத்தி வைக்கப்
பட்டிருந்த சம்பள உயர்வு பதவி உயர்வு போன்றவைகள்
கிடைக்கும். வியாபாரிகளுக்கு வியாபாரம் நல்லபடியாக நடக்கும்.
போட்டியாளர்களால் தொந்தரவு இருக்காது. கடன் பிரச்னைகள் கட்டுக்குள் இருக்கும்.
விவசாயிகளுக்கு நன்மைகள் உண்டு.
அனுஷம்
அனுஷத்தினரின் அவதிகள் நீங்கும் மாதம்
இது. உங்களின் மன அழுத்தம் விலகும். தொழில் இனி சிறப்பாக நடைபெறும். சரியான
வருமானம் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இனிமேல் நிலையான ஒரு
தொழில் அமைப்பு உருவாகி மாதாமாதம் நிரந்தர வருமானம் வரும். எதிலும் கேட்ட உதவி
கிடைக்கும். சுய தொழில் வைத்திருப்பவர்கள் மேன்மைகளை அடைவீர்கள். மகான்களின்
தரிசனம் கிடைக்கும். பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும் என்பதால்
நஷ்டங்கள் ஏற்படலாம். கவனத்துடன் இருங்கள்.
கேட்டை
கேட்டைக்கு இனிமேல் எதிலும் கெடுதல்கள்
இல்லை. இருக்கும் பிரச்னைகள் படிப்படியாக விலகும். இன்னும் மூன்று மாதம் கழித்து
பிரச்னைகள் என்றால் என்னவென்று கேட்பீர்கள். இனி நல்லது மட்டுமே நடக்கும்.
குடும்பத்தில் நிம்மதி இருக்கும். இதுவரை விழிப்புடனும், மனக் கட்டுப்பாடுடனும் இருந்ததன்
மூலம் கஷ்டமான ஏழரைச்சனி காலத்தை சமாளித்து விட்டீர்கள். இனிமேல்
சந்தோஷம்தான். சோதனைகள் முடிந்து விட்ட காலம் இது. ஒரு போதும் மனதைத் தளர
விடவேண்டாம். இனி நன்றாக இருப்பீர்கள்.
மூலம்
சனி இப்போது உங்கள் நட்சத்திரத்தில்
சென்று கொண்டிருக்கிறார். இளைய பருவத்தினர் ஏழரைச்சனி காலத்தில்தான் சில கஷ்டங்களை
அனுபவிப்பீர்கள். வேலையில் நிம்மதி இருக்காது. அல்லது வேலையே இருக்காது. காதல்
வேண்டவே வேண்டாம். சில மாதங்களில் அழ வைக்கும். நடுத்தர வயதினருக்கு நல்ல பலன்கள்
உண்டு. எதிலும் நேர்வழியிலேயே செல்லுங்கள். குறுக்குவழி வேண்டாம். உயர் அதிகாரிகள்
மேல்வருமானத்திற்கு ஆசைப்பட்டு விதிகளை மீறி யாருக்கும் சலுகை காட்ட வேண்டாம்.
பிரச்னை வரும்.
பூராடம்
சனி தற்போது உங்கள் ராசியில் இருப்பதால்
பணவரவை தடுப்பார். கவனமாக இருப்பது நல்லது. தொழிலை விரிவாக்கம் செய்யவோ, மேற்கொண்டு அதிகமான முதலீடு செய்யவோ வேண்டாம். இளைஞர்கள் காதல், கீதல் என்று உங்கள் சக்தியை விரயம் செய்யாமல் படிப்பிலும், வேலையிலும் கவனத்தை செலுத்துங்கள். தொழிலை அக்கறையுடன் பார்த்துக் கொள்ள
வேண்டும். சனிக்குப் பரிகாரமாக பழமையான ஈஸ்வரன் கோவிலில் உள்ள காலபைரவருக்கு
சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது நன்மைகளை தரும்.
உத்திராடம்
உங்களில் குரு தசை நடப்பவர்களுக்கு அதிக
நன்மைகள் இருக்கும். சிலருக்கு எப்படி வருமானம் வந்தது என்று வெளியில் சொல்ல
முடியாத அளவிற்கு மறைமுகமான வழிகளில் தனலாபம் இந்த மாதம் உண்டு. லயசனிங் எனப்படும்
பணத்திற்காக வேலை முடித்துக் கொடுப்பவர்களுக்கு காரியங்கள் சுலபமாக முடியும்.
அரசாங்க ஆதரவு கிடைக்கும். உங்களின் நீண்டகால பிரச்னைகளை தற்போது வெற்றி
கொள்வீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த எதிர்ப்புகள் விலகும். கடன் விவகாரங்கள்
கட்டுக்குள் இருக்கும்.
திருவோணம்
எந்த ஒரு விஷயத்திலும் இருந்து வந்த
மனக்கவலைகள் குழப்பங்கள், எதிர்மறை எண்ணங்கள் தடைகள் போன்றவைகள்
தீரும். உடலிலும் மனதிலும் புதுத் தெம்பு பிறக்கும். உற்சாகமாக இருப்பீர்கள்..
எந்த ஒரு செயலையும் உடனுக்கு உடன் நிறைவேற்ற முடியும். வாக்குப் பலிதம் ஏற்படும்.
உங்களுடைய பேச்சை அனைவரும் கேட்பார்கள். தந்தைவழி உறவில் நல்லபலன்கள் இருக்கும்.
கணிதம் சாப்ட்வேர் தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டு. கடன்
தொல்லையில் அவதிப் பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு விடிவுகாலம் பிறக்கும்.
அவிட்டம்
உங்களில் மகரத்தினர் தங்களுடைய தொழில்
விரிவாக்கத்தினை கவனமுடன் செயல்படுத்துவது நல்லது. வேலைக்காரர்களை நம்ப வேண்டாம்.
இந்த மாதம் பணம் செல்போன் தொலைவது போன்ற சம்பவங்கள் நடைபெறும் விலை உயர்ந்த
பொருட்களை கவனமுடன் பாதுகாக்க வேண்டியது அவசியம். உங்களில் கும்ப ராசியினருக்கு
திருமணம், குழந்தை பிறப்பு, வீடுவாங்குதல் போன்ற சுப நிகழ்ச்சிகள் உண்டு. வீடுமாற்றம், தொழில்மாற்றம் போன்றவைகள்
நடக்கும். இப்போதைய அனுபவங்களால் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக்
கொள்வீர்கள்.
சதயம்
சதயத்திற்கு இந்த மாதம் ஸ்பெகுலேஷன்
துறைகள் கை கொடுக்காது. சிறிது லாபம் வருவது போல் ஆசைகாட்டி பிறகு மொத்தமாக
இருப்பதையும் இழக்க வைக்கும் என்பதால் கவனமுடன் இருக்கவும். வேற்று மதத்தினர்
உங்களுக்கு உதவுவார்கள். வேலையில் மாற்றம் ஏற்படும் காலம்தான் இது என்றாலும்
தேவையில்லாமல் வேலையை விட வேண்டாம். அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதை நடப்பதற்கு
வாய்ப்பிருக்கிறது. வேலையில் இருப்பவர்கள் தங்களின் மேலதிகாரிகளிடம் அனுசரித்துப்
போவது நல்லது.
பூரட்டாதி
உங்களில் மீன ராசியினருக்கு நல்ல
நண்பர்களும் சிறு பிரச்னைகளால் எதிரிகளாக மாறுவார் எனபதால் தேவையற்ற பிரச்னைகளில்
தலையிட வேண்டாம். பணியாளர்கள் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். அலுவலகங்களில் உங்களைப் பிடிக்காதவர்கள் கை
ஓங்கும் சூழ்நிலை வரலாம். சில நேரங்களில் சுவர்களுக்கு கூட கண்களும் காதுகளும்
இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். உடன் வேலை செய்பவர்களிடம் வீண் அரட்டை, மேல் அதிகாரியின் செயல் பற்றிய விமரிசனங்கள் போன்ற விஷயங்களை தவிருங்கள்.
உத்திராட்டாதி
உத்திராட்டாதி நட்சத்திர இளைஞர்களுக்கு
இது எதிர்கால முன்னேற்றத்திற்கு அடித்தளம் போடும் மாதமாக அமையும். பணம்
சம்பாதிப்பதில் இது உங்களுக்கு நல்ல மாதம். எதையும் சமாளிக்கும் ஆற்றல் உள்ள
உங்களுக்கு எதிர்கால நல்வாழ்விற்கான அடித்தளங்கள் இப்போது நடக்கும். வேலையில்
பாராட்டப் படுவீர்கள். இன்பச் சுற்றுலா செல்லுவீர்கள். சகோதர,சகோதரிகள் உதவுவார்கள். வீட்டுக்கு தேவையான வாஷிங்மிஷின், குளிர்சாதனபெட்டி, ஏசி போன்றவைகளை வாங்கி குடும்பத்தினரை
மகிழ்ச்சியில் ஆழ்த்துவீர்கள்.
ரேவதி
இந்த மாதம் ரேவதிக்கு செலவுகள் அதிகமாக
இருக்கும். சேமிப்பு என்றால் என்னவென்று கற்றுக் கொடுக்கும் மாதம் இது. யாரிடமும்
தேவையற்ற வீண்வாக்குவாதம் வைத்துக் கொள்ள வேண்டாம். குழந்தைகளால் நல்ல சம்பவங்கள்
இருக்கும். சகோதர விஷயத்தில் நன்மைகளும், சுப நிகழ்ச்சிகளும் இருக்கும். மதிப்பு, மரியாதை, அந்தஸ்து, கௌரவம், தொழில்மேன்மை, தன லாபங்கள், குடும்பத்தில் மகிழ்ச்சி போன்ற நன்மைகள் இந்த மாதம் உண்டு. உங்களில்
சிலருக்கு ஞானிகளின் அருளாசி பெறும் பாக்கியம் கிடைக்கும்.
No comments :
Post a Comment