Tuesday, June 19, 2018

Astro Answers - Guruji Pathilkal - குருஜியின் மாலைமலர் பதில்கள் - 192 (19.06.18)

எம். மேகநாதன், வேட்டவலம்.

கேள்வி :

எனக்கு ஐந்து வயதாகும் போது என் தந்தை விபத்தில் இறந்து விட்டார். அப்போது என் தங்கை கைக்குழந்தை. தந்தை இறந்த ஒரு வருடத்தில் என் தாய் எங்களை பாட்டன், பாட்டியிட ம் விட்டு விட்டு அம்மா வீட்டிற்கு சென்றவர் அங்கேயே மறுமணம் செய்து கொண்டு போய்விட்டதாக கேள்விப்பட்டேன். பாட்டன், பாட்டி பத்தாம் வகுப்புவரை படிக்க வைத்த நிலையில் பாட்டி இறந்து விட்டதால், இப்போது பெரியப்பா வீட்டில் நல்ல முறையில் வளர்கிறோம். என் எதிர்காலம் எப்படி இருக்கும்? ஆட்டோமொபைல் மெக்கானிக் படித்திருக்கிறேன். சுய தொழில் செய்யலாமா? எப்போது செய்யலாம்?


பதில்:


சனி




கேது



8- 8- 1997. அதிகாலை 
5- 22, வேட்டவலம்

ல,சூ

கு
பு,சுக்
ரா



செவ்

சந்


(கடக லக்னம், கன்னி ராசி. 1ல் சூரி, 2ல் புத, சுக், ராகு. 3ல் சந், 4ல் செவ், 7ல் குரு, 8ல் கேது, 9ல் சனி. 8- 8- 1997. அதிகாலை 5- 22, வேட்டவலம்)

தந்தை, தாயைக் குறிக்கும் ஒன்பதாமிடத்தில் சனியும், நான்காமிடத்தில் செவ்வாயும் அமர்ந்து, 9ஆம் அதிபதி நீசமாகி, மாதாகாரகன் சந்திரனை சனி பார்த்ததால் பெற்றோரை இளம் வயதிலேயே இழந்த ஜாதகம். அதேநேரத்தில் லக்னத்தையும், ராசியையும் குரு பார்த்து, பத்தாம் அதிபதி தன் வீட்டைப் பார்ப்பதால் எதிர்காலத்தில் மிகவும் நன்றாக இருக்கக்கூடிய யோக ஜாதகம்.
செவ்வாய் ஜீவனஸ்தானத்தை பார்ப்பதால் ஆட்டோமொபைல் மெக்கானிக் துறை ஏற்றதுதான். ஆனால் தற்போது ராகு தசையில் சனி புக்தி 2020 வரை நடைபெறுகிறது. சொந்தத்தொழில் செய்வதற்கு இது ஏற்ற காலம் அல்ல. கடக லக்னத்திற்கு சனி அஷ்டமாதிபதி என்பதால் எப்போதும் நன்மைகளைச் செய்ய மாட்டார். உடன்பிறந்த தங்கைக்கும் ரிஷப ராசியாகி அஷ்டமச்சனி நடப்பதால் இன்னும் இரண்டு வருடம் பொறுத்திருக்கவும். 2020 ஆம் ஆண்டு பிற்பகுதி முதல் தெரிந்த தொழிலை செய்யலாம். கண்டிப்பாக முன்னேறி நல்ல நிலைக்கு வருவீர்கள். வாழ்த்துக்கள்.

பி. லோகராஜ், நாகர்கோவில்.

கேள்வி :

20 ஆண்டுகளாக பைனான்ஸ் தொழில் செய்து வருகிறேன். கடந்த மூன்று ஆண்டுகளில் முப்பது லட்சம் கடன் ஏற்பட்டுவிட்டது. தொழிலும் முடங்கி விட்டது. கடனுக்கு வட்டி கட்டவும், குடும்பச் செலவு செய்யவும் மிகவும் கஷ்டப்படுகிறேன். கடன் எப்போது தீரும்? தொழில் எப்போது சிறப்படையும்? ஒரு நல்ல வழி காட்டுங்கள்.

பதில்:


பு
சந்,சூ
சுக்

ல,கு,ரா

சனி

2-5-1965
காலை
7- 25
கரூர்

செவ்

கேது

(ரிஷப லக்னம், மேஷ ராசி, 1ல் குரு, ராகு. 4ல் செவ், 7ல் கேது, 10ல் சனி, 11ல் புத, 12ல் சூரி, சுக், சந். 2- 5- 1965 காலை 7- 25 கரூர்)

கடந்த மூன்று வருடங்களாக உங்களுடைய மேஷ ராசிக்கு அஷ்டமச் சனியும், பிறப்பு ஜாதகப்படி அஷ்டமாதிபதி தசையும், அதில் ஆறாமிடத்தைப் பார்த்து வலுப்படுத்தும் ஆறாம் வீட்டோன் புக்தியும் நடந்ததால் தொழில் முற்றிலும் சீர்குலைந்து அளவுக்கு மீறிய கடன் ஏற்பட்டுவிட்டது.

ராசிக்கு பத்தாம் வீட்டை வலுப்பெற்ற குரு பார்ப்பதால் நீங்கள் பைனான்ஸ் தொழில் செய்வது ஏற்றதுதான். அதேநேரத்தில் தற்போது விரய ஸ்தானத்தில் இருக்கும் சூரிய, சந்திர புக்திகள் அடுத்து நடக்க இருப்பதால், இன்னும் இரண்டு வருடங்களுக்கு உங்களுக்கு நல்லபலன் சொல்வதற்கு இல்லை. தற்போது இருக்கும் சிக்கல்களிலும், கடன் தொல்லைகளிலும் இருந்து மீண்டு வருவதற்கு இன்னும் இரண்டு வருடங்கள் ஆகும். ஜாதகம் வலுவாக இருப்பதால் கண்டிப்பாக மீண்டு வருவீர்கள். 2020 ஆம் ஆண்டு முதல் சிக்கலில்லாத நிம்மதியான வாழ்க்கை அமையும். அதுவரை பொறுத்திருங்கள்.

என். பாரதி, சென்னை .

கேள்வி :

குருஜி அவர்களுக்கு வணக்கம். மகளுக்கு திருமணத்திற்காக பார்க்கும் பொழுது ஒரு பையனை விரும்புவதாகச் சொன்னாள். எங்கள் ஜாதி உட்பிரிவு என்றாலும் கணவ ருக்கு இஷ்டமில்லை. பிடிவாதமாக இருக்கிறார். பெண்ணும் பிடிவாதமாக இருக்கிறாள். பையன் வீடு எங்களை விட வசதி குறைந்தது. எனக்குள்ள கவலை எல்லாம் என் பெண் கஷ்டப்படாமல் நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான். நாங்கள் இன்னும் சம்மதம் சொல்லவில்லை. நீங்கள் நன்றாக சொல்கிறீர்கள் என்றும், உங்கள் கணிப்பு மிகவும் சரியாக இருக்கும் என்று பையன் வீட்டில் நம்புவதாகவும் என் பெண் சொன்னாள். தயவு செய்து தாங்கள்தான் இருவரின் ஜாதகத்தை பார்த்து இவளுக்கு இந்த இடம் தானா அல்லது நாங்கள் பார்க்கும் இடமா என்று சொல்லவேண்டும்.  இந்தப் பையனை திருமணம் செய்து கொண்டால் என் பெண் எந்தப் பிரச்சனையும் இன்றி வசதியாக வாழ்வாளா என்பதையும் சொல்ல வேண்டும்.

பதில்:

பெண்ணின் ஜாதகப்படி அவளது திருமண வாழ்க்கையில் கெடுதல்கள் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை. அதேநேரத்தில் அவளது விருப்பப்படி நடக்கும் திருமணமாகத்தான் இருக்கும். பையனின் ரிஷப ராசிக்கு தற்போது அஷ்டமச்சனி நடந்து வருவதால், அவனது ஜாதகப்படி இன்னும் இரண்டு வருட காலத்திற்கு திருமணம் நடைபெற வாய்ப்பில்லை. 2020ம் ஆண்டு தான் திருமணம் நடைபெறும். சிலரின் மனம் மாறுவதற்கு பொறுமை தேவை.

பி .சேமராஜ், கோவை .

கேள்வி :

பல குடும்பங்களின் வேதனைக்கு வழிகாட்டும் நீங்கள், எங்கள் குடும்பத்தின் கண்ணீருக்கும் வழிகாட்டுவீர்கள் என்று நம்புகிறேன். சொந்தமாக கடை வைக்கலாம் என்று ஆசைப்படுகிறேன். அதுவே எனது வாழ்நாள் லட்சியம் வீட்டில் விஷயத்தைச் சொன்னதற்கு மூத்த தங்கைக்கு திருமணம் முடிந்த உடன் தாராளமாக வைத்துக்கொள் என்று சொல்கிறார்கள் . பத்து வருடமாக தங்கைக்கு வரன் பார்த்து வருகிறோம். ஒன்றும் அமையவில்லை. எங்கள் ஜோதிடர் தங்கையின் ஜாதகத்தில் இரண்டு திருமண அமைப்பு உள்ளது என்றும், பார்க்கும் மாப்பிள்ளை ஜாதகத்தில் இரண்டரை தோஷமாவது இருக்க வேண்டும் என்றும், இலையென்றால் வாழ்க்கை பாதிக்கும் என்றும் சொல்கிறார். மேலும் மாப்பிள்ளை ஜாதகத்தில் ஏழாமிடத்தில் செவ்வாயும், சந்திரனுக்குஏழா மி டத்தில் ஒரு பாபகிரகமும், சுக்கிரனுக்கு இரண்டு பக்கத்திலும் இரண்டு பா கிரகமும் இருக்க வேண்டும் என்கிறார். இப்படி உள்ள வரன் தான் பார்க்க வேண்டுமா? வழிகாட்ட வேண்டும்.

பதில்:

சூ,பு,சு
குரு

செவ்

ரா

26-5-1989 மாலை
7-04 கோவை

சந்

கேது

சனி


(விருச்சிக லக்னம், மகர ராசி. 2ல் சனி, 3ல் சந், 4ல் ராகு, 7ல் சூரி, புத, சுக், குரு. 8ல் செவ், 10ல் கேது, 26- 5- 1989 மாலை 7-04 கோவை)

தங்கையின் ஜாதகப்படி ஏழாமிடம் சுபத்துவமாக இருப்பதால் இரண்டு திருமண அமைப்பு இல்லை. அதேநேரத்தில் ராசிக்கு இரண்டில் ராகுவும், லக்னத்திற்கு இரண்டில் சனியும் அமர்ந்திருப்பது குற்றம். உங்கள் ஜோதிடர் சொல்வதைப் போல கண்டிஷன்களை போட்டு ஜாதகம் தேடினால் வரன் அமைவது மிகவும் கடினம்.

இரண்டு, எட்டில் சனி, செவ்வாய் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருப்பதால் தங்கைக்கு திருமணம் தாமதமாகிறது. ஒருமுறை தங்கையின் ஜென்ம நட்சத்திரத்திற்கு முதல் நாள் தங்கையை அழைத்துக் கொண்டு ஸ்ரீ காளஹஸ்தி சென்று வாருங்கள். இன்னொரு ஜென்ம நட்சத்திரம் அன்று கும்பகோணம் வைத்தீஸ்வரன் கோவிலுக்குச் சென்று வழிபடுங்கள். தடை விலகும்.

ஏழில் சுக்கிரனின் வீட்டில் இருக்கும் குரு தசை நடப்பதாலும். மூன்றாம் அதிபதி சனியின் புத்தி மார்ச் மாதம் முதல் ஆரம்பித்திருப்பதாலும் வரும் அக்டோபர் மாதத்திற்கு பிறகு 30 வயதில் திருமணம் நடைபெறும். தசாநாதன் குரு அம்சத்தில் உச்சம் பெற்று, லக்னாதிபதி செவ்வாய் அம்சத்தில் ஆட்சி பெற்று இருப்பதாலும், லக்னத்திற்கும், ராசிக்கும் குருவின் பார்வை இருப்பதாலும் தங்கையின் வாழ்க்கை நன்றாகவே இருக்கும்.

குடித்தால் மனைவி சண்டை போடுகிறாள்...!

ராஜ்குமார் , சேலம்.

கேள்வி :

செவ்வாய்க் கிழமையன்று மாலைமலர் முதலில் வாங்கும் நபர் நான்தான். ஒரு மணிக்கே போய் கடையில் நின்று விடுவேன். 2013ல் திருமணம் நடந்து 2014ல் மகன் பிறந்தான். அவன் பிறந்து மூன்று மாதத்தில் மனைவி தேவையில்லாமல் சண்டை போட்டுக் கொண்டு பிறந்த வீட்டுக்குப் போய் விட்டாள் பெரியவர்கள் சமாதானம் செய்து சேர்த்து வைத்தார்கள். இன்றுவரை வேண்டாவெறுப்பாகத்தான் குடும்பம் நடத்துகிறேன். நான் குடிப்பேன். தரம் தாழ்ந்து போய் எல்லாம் குடிக்க மாட்டேன். குடித்தால் யாருக்கும் தெரியாமல் வீட்டுக்குப் போய் தூங்கி விடுவேன். இதைப் போய் ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொண்டு மனைவி சண்டை போடுகிறாள். அவளுக்கு புத்தி சுவாதீனம் குறைவு என்று நினைக்கிறேன். இது உண்மையா என்று மனைவி ஜாதகத்தை பார்த்து நீங்களே சொல்லுங்கள். மகனுக்காகவே எல்லா பிரச்சினைகளையும் உள்ளே போட்டு மூடி வைத்து இருக்கிறேன். என் நண்பர், பெற்றோரிடம் கூட இதைச் சொன்னது இல்லை. மகனுக்கு அடிக்கடி அடிபடுகிறது. சென்றவாரம் கூட மண்டை உடைந்து தையல் போட்டு இருக்கிறேன். ஏன் இப்படி? எனக்கு இரண்டாவது வாரிசு இருக்கிறதா? சனி தசை என்ன செய்யும் ?

பதில்:


கேது

17-11-1979 அதிகாலை
5-45
திருச்சி
செ,கு
ரா

சூ,பு,சு

சந்,
சனி

(துலாம் லக்னம், கன்னி ராசி, 2ல் சூரி, புத, சுக். 5ல் கேது, 11ல் செவ், குரு, ராகு. 12ல் சந், சனி. 17-11-1979. அதிகாலை 5-45 திருச்சி)

முப்பது வருடங்களுக்கு முன்பு குடிகாரனை எதிரே கண்டால் கேவலமாக பார்த்த நிலை மாறி இன்று குடிப்பதற்கு சமூகத்தில் அங்கீகாரம் கிடைத்து விட்டதால் வந்திருக்கின்ற கேள்வி இது. என்னுடைய இளம் பருவத்தில் எங்கள் கிராமத்தில் யாரோ ஒருவர் அல்லது இருவர் குடிப்பழக்கம் உள்ளவராக இருப்பார். அதுவும் மாலை மங்கிய பிறகு எங்கோ ஒரு புதருக்குள் விற்கும் சாராயத்தைக் குடித்து விட்டு ஊருக்குள் நேரிடையாக வருவதற்கு அஞ்சி ஒரு ஓரமாக யாருக்கும் தெரியாமல் ஊரைச்சுற்றி வீட்டுக்குப் போவார். ஆனால் இன்றைய தலைமுறையில் உங்களைப் போன்றவர்களுக்கு குடிப்பது ஒரு பொழுதுபோக்காக ஆகி விட்ட நிலையில், மதுவிற்கு அங்கீகாரமும் கிடைத்து விட்டது.

குடிப்பதே ஒரு தரம் கெட்ட செயல்தானே அய்யா? பிறகு அதில் என்ன தரம் தாழ்ந்து போய் எல்லாம் குடிக்க மாட்டேன் என்று ஒரு சால்ஜாப்பு? தரம் கெட்ட பிறகு தானே குடி நிலையத்திற்கு உள்ளே நுழைகிறோம். குடித்து விட்டு திரும்புகையில் தரம் திரும்பி வந்து விடுமா என்ன? இதில் குடித்தவுடன் யாருக்கும் தெரியாமல் வீட்டுக்கு போய் தூங்கி விடுவேன் என்று வேறு எழுதியிருக்கிறீர்?

யாருக்கும் தெரியாமல் எப்படி குடிக்க முடியும்? குடிக்கிற கடையை சுடுகாட்டில் கொண்டு போயா வைத்திருக்கிறார்கள்? ஊருக்கு நடுவில்தானே இருக்கிறது? உள்ளே போய் திரும்பும் போது எதற்கு போய் வந்திருக்கிறீர்கள் என்று மற்றவர்களுக்கு தெரியாதா என்ன? இதில் மனைவிக்கு புத்தி சுவாதீனம் இல்லை, ஜாதகத்தைப் பார்த்துச் சொல்லுங்கள் என்று கேள்வி வேறு. மனைவிக்கு புத்தி சுவாதீனம் இல்லையா? அல்லது உங்களுக்கு புத்தி இல்லையா?

மகன் கேட்டை நட்சத்திரம் விருச்சிக ராசியில் பிறந்ததால் கடந்த நான்கு வருடங்களாக பிரச்சினைகள்தான் இருந்திருக்கும். புருஷன் ஒழுங்காக இருந்தால் எந்த மனைவியும் கோபித்துக் கொண்டு பிறந்த வீட்டிற்கு போக மாட்டாள். சண்டையும் போட மாட்டாள். ஜாதகத்தில் லக்னமோ, ராசியோ பாபத்துவ சனியின் தொடர்பில் இருந்தால் ஒருவருக்கு குடிப்பழக்கம் இருக்கும். இந்த அமைப்பு உங்களுக்கு இருக்கிறது. சந்திரனுடன் சனி சேர்ந்து, தற்போது சனி தசையும் ஆரம்பித்து விட்டதால் நீங்கள் குடியை விடுவதற்கு வாய்ப்பு இல்லை.

தற்போது யாருக்கும் தெரியாமல் குடிக்கிறேன் என்று உங்களுக்கு நீங்களே சமாதானம் சொல்லிக் கொள்ளும் இந்த பழக்கம், சனி தசையில் ஊருக்கெல்லாம் தெரியும் அளவிற்கு பெரிய அளவிற்கு குடிப்பதாக மாறும். கடந்த காலங்களில் குருதசை நடந்ததால் குடும்பத்தில் நடந்த பிரச்னைகள் இனிமேல் இருக்காது. சனி தசை பொருளாதார ரதியில் குருவை விட நன்றாகவே இருக்கும். உங்களின் குடிப்பழக்கம்தான் குடும்பத்தில் குறையாக இருக்கும். இரண்டாவது வாரிசு உண்டு.

No comments :

Post a Comment