கன்னி :
ஜூலை மாத முற்பகுதியில் கன்னி நாதன் புதன் பத்தாமிடத்தில் ஆட்சிபெற்ற நிலையில்
தனது நண்பரான சூரியனுடன் வலுவான நிலையில் இருப்பதால் கன்னிக்கு ஜூலை நன்மைகளை
தரும் மாதம்தான். குருபகவான் இரண்டில் இருப்பதால் ஆசிரியர்கள்,
வழக்குரைஞர்கள், பேச்சை நம்பி தொழில் செய்பவர்கள், மார்க்கெட்டிங் துறையினர்
போன்றவர்களுக்கு இந்த மாதம் நல்லபலன்கள் இருக்கும். குடும்பத்தில்
சுபநிகழ்ச்சிகள் நடைபெற ஆரம்பங்கள் உண்டு. பேரன், பேத்திகளைப் பற்றிய நல்ல
செய்திகள் கிடைக்கும். நவகிரக சுற்றுலா போவீர்கள்.
கன்னிக்கு அந்தஸ்து, மதிப்பு கிடைக்கும் நிலையும் தாராளமான பணவரவும் உள்ள
மாதம் இது. தந்தை வழி உறவினருடன் உரசல்கள், கருத்து வேற்றுமை ஏற்படும்
என்பதால் வார்த்தைகளில் கவனமாக இருப்பது நல்லது. கலைஞர்கள், விவசாயிகள்,
வியாபாரிகள் போன்ற துறையினருக்கு இது சிறந்த மாதம் என்பதில் சந்தேகம் எதுவும்
இல்லை. பழைய கடன்களை அடைக்க புதிய கடன் வாங்க வேண்டி இருக்கலாம். தேவையின்றி
யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். குடும்பத்தில் உற்சாகமும், செல்வச்
செழிப்பும் இருக்கும். பனிரெண்டாமதிபதி சூரியனுடன் ராசிநாதன் பத்தாமிடத்தில்
இருப்பதால் சில கன்னி ராசிக்காரர்களுக்கு தூர தேசங்களில் இருந்தும் தொலைவான
இடங்களில் இருந்தும் நல்ல தகவல்களும், தொடர்புகளும் ஏற்படும்
என்ன பிரச்னை என்றாலும் கொடுக்கும் வாக்கை காப்பாற்ற முடியும். இழுபறியில்
இருந்து வந்த விஷயங்கள் செட்டில் ஆகி லாபம் வரும். சிலருக்கு வெளிநாடு
தொடர்பான காண்ட்ராக்ட் விஷயங்கள், இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பெட்ரோல் போன்ற
விஷயங்கள் குறிப்பாக அரபு நாடுகள் தொடர்பான விஷயங்களில் வெற்றிகளும்,
லாபங்களும் இருக்கும். கன்னி என்றாலே வெற்றிதான் என்பதை இந்த மாதம் உங்கள்
செயல்களால் மற்றவர்களுக்கு புரிய வைப்பீர்கள். நீண்ட நாட்களாக முயற்சி
செய்தும் கிடைக்காத சில விஷயங்கள் இப்போது சுலபமாக கிடைக்கும். எதிர்ப்புகள்
விலகும். உங்களைப் பிடிக்காதவர்கள் உங்களைக் கண்டாலே ஒளிந்து ஓடுவார்கள்.
1,4,12,13,14,20,22,23,26,28 ஆகிய நாட்களில் பணம் வரும். 7-ம்தேதி காலை 7.39
மணி முதல் 9-ம்தேதி மதியம் 12.31 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் நீண்ட
தூர பிரயாணங்களை தள்ளி வையுங்கள். இந்த நாட்களில் மனம் ஒரு நிலையில் இருக்காது
என்பதால் எதிலும் அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம்.
No comments :
Post a Comment