Tuesday, December 27, 2016

Astro Answers - Guruji Pathilkal - குருஜியின் மாலைமலர் பதில்கள் - 116 (27.12.2016)

எஸ்.ஏ.நந்தகுமார், கோவை.

பு
ராகு
கு,சுக்சூரி



ராசி
செவ் 

சனி
கேது
சந்

கேள்வி :

திருமணம் எப்போது நடைபெறும். அடுத்து வரும் குரு தசை எப்படி இருக்கும்?

பதில்:

(துலாம் லக்னம். கன்னி ராசி. 2-ல் செவ், சனி. 5-ல் சூரி, சுக், குரு. 6-ல் புத. 7-ல் ராகு. 26.2.1986, இரவு 11.15, கோவை)

குடும்பம் சம்பந்தப்பட்ட பாவங்களில் செவ்வாய், சனி இணைந்தாலே தாமத திருமணம் அல்லது இரண்டு திருமணம் போன்ற அமைப்புகள் இருக்கும். உங்களுடைய ஜாதகப்படி இரண்டில் செவ்வாய், சனி இணைந்துள்ளதால் தாமதமாக திருமணமாவது நல்லது.

மேலும் 7-க்குடைய செவ்வாய் சனியுடன் சேர்ந்து வலுவிழந்த நிலையில் 2-வது திருமணத்தை குறிக்கும் பதினொன்றுக்குடைய சூரியன் தன் வீட்டை தானே பார்த்து குருவும், சுக்கிரனும் பதினொன்றைப் பார்த்து வலுப்படுத்துவது இரண்டு திருமண அமைப்பு. எனவே திருமண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். குரு தசையில்தான் உங்களுக்கு தந்தையாகும் அமைப்பு இருப்பதால் 33 வயதில் ராகு தசை செவ்வாய் புக்தியில் திருமணம் நடக்கும்.

துலாம் லக்னத்திற்கு ஆறுக்குடைய குருவின் தசை நன்மைகளை செய்யாது என்றாலும், உங்கள் ஜாதகத்தில் குருபகவான் ஆறாமிடத்திற்கு பனிரெண்டில் மறைந்து லக்னாதிபதியுடன் இணைந்து தசை நடத்துவதாலும், ராகுவின் சாரம் வாங்கி இருப்பதாலும் கெடுதல்களைச் செய்ய மாட்டார்.

.கே. அம்மாப்பேட்டை, சேலம்.

சனி
சுக்
சந்







ராசி

புத் 

கேது

ல 

ராகு

சூரி 

செவ்

குரு 




கேள்வி :

எளிமையாகவும், இயல்பாகவும் சென்றுக் கொண்டிருந்த வாழ்க்கை கடந்த 3 ஆண்டுகளாக பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கி விட்டது. கடன் சிக்கலில் மாட்டிக் கொண்டு பரிதவிக்கிறேன். சொல்ல முடியாத அவமானங்கள், தேவையில்லாத அவச்சொல். நிம்மதியற்ற வாழ்க்கைச் சூழலினால் துவண்டு போய் இருக்கிறேன். வேலை பார்க்கும் இடத்தில் இருந்த கம்பீரமான நிலைமை மாறி தலை குனிந்து நிற்கும் படியாகிவிட்டது. குடும்பத்திலும் நல்ல பெயர் இல்லை. மரியாதை குறைந்து விட்டது. வெளியே தலை காட்ட முடியவில்லை. பழையபடி மதிப்பு, மரியாதை பெற்று நிம்மதியாக வாழ்வேனா? தீர்வு என்ன? பரிகாரம் என்ன?

பதில்:

(மகர லக்னம், கும்ப ராசி. 5-ல் சனி. 6-ல் சுக். 7-ல் புத, கேது. 8-ல் சூரி, செவ். 12-ல் குரு. 24.8.1972, 5.14 மாலை, சேலம்)

ஜாதகத்தில் ஆறாமிடத்தோடு சம்பந்தப்பட்ட கிரகங்களின் தசையோ புக்தியோ நடக்கும் போது கடன் தொல்லைகள் அவமானங்கள் வரும். உங்களுக்கு தற்போது லக்னாதிபதி சனியின் தசை நடந்தாலும் சனிக்கு வீடு கொடுத்த சுக்கிரன் ஆறாம் வீட்டில் அமர்ந்த நிலையில் அவரது புக்தி கடந்த மூன்று வருடங்களாக நடந்து கொண்டிருப்பதால் கடன் தொல்லைகளால் கடுமையான அவமானங்களும் தலைகுனிவுகளும் இருக்கிறது.

லக்னாதிபதி சனி எட்டில் மறைந்த செவ்வாயின் சாரத்தில் உள்ளது கூடுதல் தலைவலிதான். ஆறில் உள்ள சுக்கிர புக்தியை, அடுத்து எட்டுக்குடைய சூரிய புக்தி நடக்க இருப்பதாலும், சனி தசையில் சூரிய, சந்திர புக்திகள் நற்பலன்களை தராது என்பதாலும், உங்களுடைய சிக்கல்கள் இப்போதைக்கு தீர முடியாத அளவிற்கு இடியாப்பச் சிக்கலில் மாட்டி இருப்பீர்கள். சில வருடங்கள் கழித்து வரும் பாக்கியதாதிபதி புதனின் பார்வையைப் பெற்ற ராகு புக்தியில்தான் கடன்கள் தீருகின்ற அமைப்பு இருக்கின்றது. சனிக்கான முறையான பரிகாரங்களை செய்து கொள்ளவும்.

சனிக்கிழமை தோறும் இரவு படுக்கும் போது சிறிது எள்ளைத் தலைக்கடியில் வைத்துப் படுத்து மறுநாள் காலை புதிதாக வடித்த சாதத்தில் அதைக் கலந்து காகத்திற்கு வையுங்கள். ஒரு ஜென்ம நட்சத்திரம் அன்று கும்பகோணம் கஞ்சனூர் சென்று வழிபட்டு கோவிலுக்குள் இரண்டரை மணிநேரம் இருங்கள்.
ஒரு வெள்ளிகிழமை ஸ்ரீரங்கத்தில் வழிபட்டு ஒரு முகூர்த்தம் எனப்படும் நாற்பத்தி எட்டு நிமிடம் உள்ளே இருங்கள். இன்னொரு வெள்ளிகிழமை சென்னை மாங்காட்டில் உள்ள வெள்ளீஸ்வரன் ஆலயத்தில் வழிபட்டு ஒரு நாழிகை எனப்படும் இருபத்தி நான்கு நிமிடம் உள்ளே இருங்கள்.

ஒரு வெள்ளிக்கிழமை இரவு எட்டு மணியிலிருந்து ஒன்பது மணிக்குள் சுக்கிர ஹோரையில் ஒரு பதினைந்து அல்லது பதினாறு வயது இளம் கன்னிப் பெண்ணிற்கு ஒரு எவர்சிவர் தட்டில் ஒரு தூய வெள்ளை நிற பேன்சி டிரஸ், கொஞ்சம் மல்லிகைப் பூ, ஒரு வெள்ளிக்காசு, கொஞ்சம் தயிர், இரு கை நிறைய வெண் மொச்சை, ஒரு சென்ட் பாட்டில் வைத்து தானம் செய்யுங்கள். கடனைத் தீர்ப்பதற்கான வழிகள் உடனே பிறக்கும்.

எஸ். பாலசுப்பிரமணியன், கோயம்பத்தூர்.


சந் 


வி 

கே
சு







ராசி
சனி
சூ

பு 

செவ்
ராகு


கேள்வி :

நகரின் முக்கிய பகுதியில் ஜெராக்ஸ் கடை வைத்திருக்கிறேன். போதுமான திருப்தி இல்லை. வரவுக்கு மீறின கடனாக இருக்கிறது. அன்றாட வீட்டு தேவைகள் மட்டும் பூர்த்தியாகிறது. பிறந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு கிராமம். அங்கே சென்று விவசாயம் செய்யலாம் என்றாலும் அங்குள்ளவர்கள் படும் பாட்டை பார்க்கும் போது ஊருக்கு செல்லவும் தயக்கமாக இருக்கிறது. எப்போது தீரும் என்னுடைய கவலை? நான் செய்யும் தொழில் சரியானது தானா? ஒரு நல்லநிலையை என்னால் அடைய முடியவில்லையே, ஏன்? எதனால் இப்படி இருக்கிறேன் என்பதைக் கூறுங்கள் குருஜி அவர்களே...

பதில்:

(மீன லக்னம், மீன ராசி. 2-ல் குரு, கேது. 5-ல் சனி. 10-ல் புத, செவ். 11-ல் சூரி. 12-ல் சுக். 24.1.1977, 11.12 காலை, எட்டையப்புரம்)

வாழ்க்கையில் முன்னேற்றமான ஒருவர் நிலையை அடைய வேண்டுமானால் யோகமான தசா,புக்திகள் நடைபெற வேண்டும் என்பது ஜோதிடவிதி. உங்களுக்கு மீன லக்னம், மீன ராசியாகி லக்னாதிபதி குரு இரண்டில் கேதுவுடன் கேள யோகத்தில் அமர்ந்து வலுவாகி, ஐந்துக்குடையவன் லக்னத்தில் அமர்ந்து ஒன்பதுக்குடையவன் பத்தில் இருப்பது மிகவும் சிறப்பு.

ஜாதகம் யோகமாக இருந்தாலும் அந்த யோகர்களின் தசை நடப்பில் வந்தால்தான் யோகங்கள் செயல்படும். முன்னேற்றமும் இருக்கும். உங்களுக்குப் பிறந்ததில் இருந்தே மீன லக்னத்தின் அவயோகிகளான சனி, புதன், சுக்கிரன் தசைகள் நடந்து வருகின்றன. அதிலும் கடந்த மூன்று வருடாங்களாக நடந்து வரும் சுக்கிர தசையில் உங்களுடைய குழப்பங்கள் அதிகமாகித்தான் இருக்கும்.

அடிப்படை வலுவுள்ள ஜாதகம் என்பதால் எதுவும் எல்லை மீறாமல் கட்டுக்குள்ளேயே இருக்கும். மனைவி, மகனுக்குரிய கடமைகளை கண்டிப்பாக செய்ய முடியும். பத்தாம் வீட்டில் புதனும் செவ்வாய் அமர்ந்த நிலையில் அவர்களை பத்துக்குடைய குரு பார்த்ததால் நீங்கள் வைத்திருக்கும் ஜெராக்ஸ் கடை சரியான தொழில்தான். தசாநாதன் சுக்கிரன் பனிரெண்டில் இருப்பதால் சொந்த ஊருக்குச் சென்று பிழைக்க முடியாது. வெளியூரில்தான் இருப்பீர்கள்.

2018 மார்ச் மாதம் ஆரம்பிக்க இருக்கும் சந்திர புக்தி முதல் அனைத்து நிலைமைகளும் சீராகும். ஓரளவிற்கு வருமானமும் இருக்கும். சுக்கிர தசையின் பிற்பகுதி நன்மைகளை செய்யும். வயதான காலத்தில் நிம்மதியாக இருக்கக் கூடிய அமைப்பு ஜாதகத்தில் இருப்பதால் எதிர்காலம் கவலைப் படும்படியாக இருக்காது.

வி.கீதா, வேலூர் – 1.

சந்

ல 

குரு







ராசி
கேது
சுக்
ராகு
பு
சனி

சூரி 

செவ்


கேள்வி :

இதுவரை பத்துமுறை கடிதம் எழுதியும் பதில் இல்லை. மீண்டும் அனுப்பி இருக்கிறேன். மகளுக்கு திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. எப்போது திருமணம் நடைபெறும். தோஷங்கள் ஏதேனும் இருக்கிறதா? இருந்தால் என்ன பரிகாரங்கள் செய்ய வேண்டும்? வாழ்க்கை எப்படி அமையும்? மனக் குழப்பத்தில் உள்ளவர்களுக்கு ஒளி வழங்கும் ஒளி விளக்கே, பதில் கூறவும்.

பதில்:

(மிதுன லக்னம் ரிஷபராசி 1ல் குரு, 6 ல் சூரி, செவ், 7 ல் புத, சனி, 8 ல் சுக், ராகு 12-12-1989, 7.05 இரவு வேலூர்)

மகளுக்கு லக்னத்திற்கு ஏழில் சனி எட்டில் ராகு என்றாகி அதுவே ராசிக்கு ஏழில் செவ்வாய் எட்டில் சனி என்ற அமைப்பில் உள்ளது. தாம்பத்திய சுகத்தைத் தரும் சுக்கிரனும் ராகுவுடன் இணைந்ததால் தாமத திருமணம் நடக்கும். இதுபோன்ற ஜாதகங்களுக்கு இருபத்தியெட்டு வயது முடிந்த பிறகே திருமணம் செய்ய வேண்டும். முன்னதாக நடந்தால் குழப்பங்கள் வரும்.

தாமதமாக கல்யாணம் நடந்தாலும் வாழ்க்கை நன்றாக இருக்கும். நல்ல கணவர் அமைவார். ரிஷப ராசிக்கு குரு ஏழில் வரும்போது குருதசை புதன் புக்தியில் திருமணம் அமைவதே நல்லது. அவசரப்பட வேண்டாம். இப்போது பரிகாரங்கள் செய்தாலும் பலன் இருக்காது,

. மரியஜோசப், ஆலப்பாக்கம், சென்னை.


கேள்வி :

15 ஆண்டுகளாக அக்கா கணவருடன் சேர்ந்து பழைய இரும்புக்கடை நடத்தி வந்தேன். எனக்கும் அவருக்கும் சச்சரவுகள், சங்கடங்கள் வரும். ஆனாலும் இருவருமே வாய்வார்த்தை பேசி சண்டை போட்டுக் கொள்ள மாட்டோம். 2 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்து சென்ற வருடம் மகன் பிறந்தான். மகன் பிறந்தவுடனேயே மாமா நீ தனியாக கடை வைத்துக் கொள் என்று அனுப்பி விட்டார். முதலில் வேளச்சேரியில் தனியாகக் கடை வைத்தேன். ஓடவில்லை. சொந்த ஊரில் பைனான்ஸ் செய்தேன் சரியாக வரவில்லை. மறுபடியும் சென்னைக்கே வந்து கடை வைத்தும் லட்சக்கணக்கில் கடன் ஆகிவிட்டது. என் மாமாவுடன் சேர்ந்து இருந்தால் நன்றாக இருந்திருப்பேனா? தனியாக இருப்பது சரி வருமா? கடனை கட்ட முடியுமா? தொழில் செய்யலாமா? அரசு வேலைக்கு முயற்சி செய்யலாமா? பையன் புரட்டாசி மாதத்தில் பிறக்கக்கூடாது என்கிறார்கள். அதனால்தான் இப்படியா?

பதில்:

ஒருவருக்கு லக்னாதிபதி நீசமாகி, பின்பு பங்கமானாலே சிறுவயது வாழ்க்கை கடினமாகவும் பிற்பகுதி வாழ்க்கை வளமாகவும் இருக்கும். இருபத்தி ஏழு வயதிலேயே தகப்பனாகி விட்டதால் இன்னும் குழந்தையாகவே இருக்கிறீர்கள். ஒருவேளை இந்திரா காந்தி இறக்காமல் இருந்திருந்தால் இந்தியா வல்லரசாகி இருக்குமோ என்பதெல்லாம் நிஜ வாழ்க்கையில் சாத்தியமில்லை. காரணம் இன்றி காரியங்களில்லை.

ஜாதகப்படி பழைய இரும்புத் தொழிலே உங்களுக்கு சரியானது. அடுத்த வருடம் நிலைமை சரியாகும். அது காரணமோ, இது காரணமோ, பெற்ற பிள்ளை காரணமாக இருக்குமோ என்று நினைப்பதை முதலில் நிறுத்துங்கள். குழந்தை ராஜயோகத்தில் பிறந்திருப்பதால் அவன் வளர வளர நீங்கள் நன்றாக இருப்பீர்கள். அவன் சொகுசாக வளர வேண்டும் என்பதால் நீங்கள் நன்றாக இருந்தே ஆகவேண்டும்.

என் பேரன் எங்கே இருக்கிறான்?

புஷ்பா அம்மாள் , குமாரமங்கலம், ஆம்பூர்.

ராகு







ராசி
சந்
கே
செவ்

குரு 

சனி

சூ 

பு 

சு


கேள்வி :

எனது மகள் வழிப் பேரன் 16 வயதில் 1998-ம் ஆண்டு அவன் அம்மாவுடன் ஏற்பட்ட மனக்கசப்பினால் வீட்டை விட்டு வெளியேறி விட்டான். எங்கு தேடியும் இதுவரை கிடைக்கவில்லை. இரண்டு வருடங்களுக்கு முன் அவனுடைய அம்மாவும் இறந்து விட்டாள். அவளுடைய சாவிற்காவது என் பேரன் வருவான் என்று எதிர்பார்த்து, எதிர்பார்த்து கடைசியில் இளைய மகன்தான் கொள்ளி வைத்தான். என் பேரன் எங்கு இருக்கிறான்? வருவானா? இல்லையா? உயிரோடு இருக்கிறானா? மரணமடைந்து விட்டானா? நான் பார்த்த ஜோதிடர்கள் இவன் உயிரோடு இருக்கிறான் என்று சொல்கிறார்கள். மனோவியாதியால் பீடிக்கப்பட்டோ அல்லது செய்யாத தவறுக்கு சிறையிலோ இருப்பான் என்றும் கூறுகிறார்கள். உங்களின் தீவிர வாசகி நான். எனது பேரனை உயிரோடு பார்க்கும் பாக்கியம் இந்த 72 வயது பாட்டிக்கு கிடைக்குமா? என்று கூறும்படி கேட்டுக் கொள்கிறேன்.

பதில்:

(மீன லக்னம், சிம்மராசி. 4-ல் ராகு. 7-ல் சுரி, புத, சுக். 8-ல் குரு, சனி. 9-ல் செவ். 13.10.1982, 4.30, ஆம்பூர்)

ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி கெட்டு மாரகாதிபதி வலுக்கக் கூடாது. அதேபோல குருவின் லக்னங்களில் பிறப்பவர்களுக்கு குரு பலவீனமாகி சுக்கிரன் வலுக்க கூடாது. உங்கள் பேரனின் ஜாதகத்தில் லக்னாதிபதி குரு எட்டில் பகை பெற்று, சனியுடன் இணைந்து பலவீனமான நிலையில் சுக்கிரன் நீசபங்க நிலை பெற்று உச்சத்திற்கு நிகரான பலம் பெற்றது குற்றம்.

நீங்கள் குறிப்பிட்ட 1998-ம் வருடம் பேரனின் 16 வயதில் அஷ்டமாதிபதி தசையில் மாரகாதிபதி புக்தி நடந்து கொண்டிருந்தது. அதாவது உச்சமான அஷ்டமாதிபதி, உச்சமான மாரகாதிபதி என்ற நிலைமை. மேலும் அவன் காணாமல் போன அன்றைய கோட்சார நிலைகளும் சாதகமாக இல்லை. நல்ல பதில் எதுவும் சொல்ல முடியவில்லை.

No comments :

Post a Comment