மூலம்:
வருட ஆரம்பத்தில் உங்கள் நட்சத்திரநாதன் கேதுபகவான் சுப வலுவுடன் இருப்பதால் இந்த ஆண்டு உங்களின் பணப்பிரச்னைகள் தீரும். கடன் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. ஒரு சிலர் வெளிநாட்டில் வேலை செய்யப் போக வேண்டியிருக்கும். பூமி லாபம் கிடைக்கும். வீடு, காலிமனை வாங்க முடியும். அதிகாரம் செய்யும் துறைகளில் இருப்போருக்கு நல்ல பலன்கள் உண்டு. எதிர்கால முன்னேற்றத்திற்கான திருப்புமுனைகள் இப்போது இருக்கும்.

யாருக்காவது பரிதாபப்பட்டு உதவி செய்து அதனால் நீங்கள் சிக்கலில் மாட்டிக்
கொள்ளும் அமைப்பு இருப்பதால் யாருக்கும் எதற்காகவும் ஜாமீன் போட வேண்டாம்.
யாருக்கும் எதுவும் செய்து தருவதாக தேவையில்லாத வாக்குறுதி கொடுக்க வேண்டாம்.
சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்யும்படி இருக்கும். சகோதரிகளால் செலவு உண்டு.
என்னதான் செய்தாலும் அண்ணன் எனக்கு ஒன்றுமே செய்யவில்லை என்று தங்கைகள்
கூறுவார்கள்.
வேலையில் இருப்பவர்கள் தங்களின் மேலதிகாரிகளிடம் அனுசரித்துப் போவது நல்லது.
வேலையில் மாற்றம் ஏற்படும் காலம்தான் இது என்றாலும் தேவையில்லாமல் வேலையை விட
வேண்டாம். பிறகு அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதையாக மாறுவதற்கு
வாய்ப்பிருக்கிறது.
புனிதயாத்திரை செல்வீர்கள். ஞானிகள் மகான்களின் திருப்பாதம் பதிந்த
இடங்களுக்கு சென்று தரிசித்து உங்களை புனிதப்படுத்திக் கொள்வீர்கள்.
குறுப்பிட்ட சிலருக்கு காசி கயா ரிஷிகேஷ் போன்ற வடமாநில தீர்த்த யாத்திரைகளும்
ஆன்மிக சுற்றுலாக்களும் உண்டாகும். தெய்வ தரிசனங்களும் கிடைக்கும்.
No comments :
Post a Comment